Saturday, May 10, 2014

Ekadashi Vrat Katha – Mohini Ekadashi - மோகினி ஏகாதசி விரத கதை

Lord Rama asked Vashishta Muni "Swami, I have suffered long enough in separation from My dear Sitā, and so I wish to hear from you about how My suffering can be ended."

The Ekādhaśī that occurs during the light fortnight of the month of Vaisākha (April-May) is the Mohini Ekadhasi.
  • Lord Rāmacandra asked Vasiṣṭha Muni, ‘O great sage, I would like to hear about the best of all fasting days that day which destroys all kinds of sins and sorrows. I have suffered long enough in separation from My dear Sitā, and so I wish to hear from you about how My suffering can be ended.’
  • Sage Vasiṣṭha replied, ‘O Lord Rāma, O You whose intelligence is so keen, simply by remembering Your name one can cross the ocean of the material world. You have questioned me in order to benefit all of humanity and fulfill everyone’s desires. I shall now describe that day of fasting which purifies the whole world.’
  • O Rāma, this day is known as Vaisākha-śukla Ekādaśī, which falls on Dvādaśī. It removes all sins and is famous as Mohinī Ekādaśī. Truly, O dear Rāma, the merit of this Ekādaśī frees the fortunate soul who observes it from the network of illusion. Therefore, if You want to relieve Your suffering(s), observe this auspicious Ekādaśī perfectly, for it removes all obstacles from ones path and relieves the greatest miseries. Kindly listen as I describe its glories, because for one who even just hears about this auspicious Ekādaśī, the greatest sins are nullified.
  • NOTE: If the holy fast falls on Dwadhasi, it is still called Ekadhasi in the Vedik literature. Furthermore, in Garuda Purana (1:125.6), Lord BrahmA states to Narada Muni: “Oh brAhmana, this fast should be observed when there is a full Ekadhasi, a mixture of Ekadhasi and Dwadhasi, or a mixture of three (Ekadhasi, Dwadhasi, and Trayodasi) but never on the day when there is a mixture of Dashami and Ekadhasi.”
Courtesy: http://madhwasaints.wordpress.com


ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹ‌ரே ஹரே

மோகினி ஏகாதசி
வைகாசி மாதம் – சுக்லபட்சம்

மே மாதம், 10ம் தேதி, சனிக்கிழமை, வைகாசி மாதம் ‍ சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை மோகினி ஏகாதசியாக ‌கொண்டாடுவர். மோகினி ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம்.

சுயகட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத்துவத்தை விளக்கும் வரூதினீ ஏகாதசி விரத கதையைக் கேட்ட தனுர்தாரி அர்ஜூனன் பரமாத்மா கிருஷ்ணரிடம்," ஹே கிருஷ்ணா!, வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிப்பதற்கான விதிமுறை, இவற்றைப் பற்றி விரிவாக கூற வேண்டும்." என்று வேண்டினான்.

 ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கையில்," ஹே பாண்டு நந்தனா! , மகரிஷி வசிஷ்டர் ஸ்ரீ ராமனுக்கு கூறிய ஒரு புராதன கதையை உனக்கு கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.

ஒரு சமயம் ஸ்ரீ ராமர் மகரிஷி வசிஷ்டரிடம்," குரு தேவா!, ஜனகநந்தினி ஸ்ரீ சீதையின் பிரிவால் நான் மிகுந்த துயரத்தை அனுபவிக்கிறேன். சொல்லவொண்ணா மனவேதனையில் ஆழ்த்தும் இத்துயரத்தை நீக்குவது எப்படி?  அனைத்து  பாபங்களையும், துக்கங்களையும் அழித்து மகிழ்ச்சியையும், சுகத்தையும் அளிக்கக்கூடிய விரதம் ஏதாவது உண்டென்றால், அதை அனுஷ்டிக்கும் விதிமுறையுடன் எனக்கு கூறி அருளுங்கள்." என்றார்.

மகரிஷி வசிஷ்டர்," ஸ்ரீ ராமா, மிக நல்லதொரு கேள்வி இது. நீ மேன்மை மற்றும் பவித்ர தன்மையுடன் கூடிய ஆழ்ந்த அறிவாற்றலை கொண்டவன். உன் நாமத்தை ஸ்மரணம் (உச்சரித்த) செய்த மாத்திரத்தில் மனிதர்கள் புண்ணியத்தை பெறுவர். இவ்வுலகத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு கேள்வியை கேட்டுள்ளாய். உனக்கு ஒரு ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை கூறுகிறேன். வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை மோகினி ஏகாதசி என அழைப்பர். இவ் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல பாபங்களும், துக்கங்களும் அழிக்கப் படுகிறது. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவர்.

ஸ்ரீ ராமா! துக்கத்தால் வாழ்க்கையில் துன்பப்படும் அனைவரும் இவ் மோகினி ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியது அவசியமானதும். இவ் விரதத்தை மேற்கொள்வதால் ஒருவரது பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறது. இவ் மோகினி ஏகாதசி விரத மஹாத்மிய கதையை கூறுகிறேன். கவனத்துடன் கேள்.

சரஸ்வதி நதியின் கரையில் பத்ராவதி என்னும் பெயர் கொண்ட நகரம் அமைந்திருந்தது. அந்நகரை த்யூதிமான் என்னும் பெயர் கொண்ட அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அந்நகரில் வற்றாத தனம், தான்ய சம்பத்துக்களுடன் தனபால் என்னும் பெயர் கொண்ட ஒரு வியாபாரி வசித்து வந்தான். பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனாக அவன் மிகுந்த தர்ம சிந்தனையுடன் நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள், குடிநீர் பந்தல், குளம், குட்டை, தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தான்.  பாத யாத்ரிகர்களின் நன்மைக்காக சாலையின் இருமருங்கிலும் மாமரம், நாவல்கனி மரம்,  வேப்பமரம் ஆகியவற்றை நட்டு பராமரித்து வந்தான்.

வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவன் கொடிய பாபவினைகளை புரியும் பாபியாகவும், துஷ்டனாகவும் இருந்தான். அவன் துஷ்டர்களுடனும், வேசிகளுடனும் நட்பு கொண்டு நேரத்தை வீணாக கழித்து வந்தான். இவை தவிர கிட்டிய மீதி நேரம் அனைத்தையும் சூதாட்டத்தில் செலவழித்தான்.  அவன் நீசனாகவும், தெய்வம், பித்ருக்கள்  என எவற்றின் மீதும் நம்பிக்கை இல்லாமல் வீணாக  தந்தை ஈட்டும் செல்வத்தை இம்மாதிரியான கெட்ட காரியங்களில் செலவழித்துக் கொண்டிருந்தான். மதுபானம், புலால் உண்பது அவனுடைய தினசரி வாடிக்கையாக இருந்தது. அநேக முறை அறிவுரை கூறியும் திருந்தாமல் தான் செய்வதையே செய்து கொண்டிருந்தான். அவனது செய்கையால் துக்கத்தில் வாடிய வியாபாரி தனபால், அவனது சகோதரர்கள், குடும்பத்தினர் அனைவரும் அவனை கடும் சொற்களால் நிந்தனை செய்து, வீட்டை விட்டு வெளியேற்றினர்.

வீட்டிலிருந்து வெளியேறியவுடன், அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை விற்று கிடைக்கும் பணத்தில் நாட்களை கடத்தி வந்தான். பணம் கரைந்து போனதும் அதுவரை அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும், வேசிகளும் அவனை விட்டு விலகிப் போயினர்.

பசியும், தாகமும் வருத்தி எடுக்க வேதனை தாளாமல் திருடுவது என்னும் முடிவுக்கு வந்தான். இரவு நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் கிட்டிய வருமானத்தால் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் திருடும் வேளையில், நகர காவலரிடம் கையும், களவுமாக பிடிபட்டான். ஆனால் வியாபாரியின் மகன் என்று அறிந்ததும், அவனை தண்டியாமல் திருந்தி வாழுமாறு அறிவுரை கூறி விட்டு விட்டனர். ஆனால் சில நாட்களில் இரண்டாவது முறையாக மீண்டும் அகப்பட்ட போது, அவன் பேச்சை கேளாமல், அவனை இழுத்து சென்று அரசனின் முன் நிறுத்தி, நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர். அரசன் அவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சிறையில் அவன் தண்டனையாக சித்திரவதையை அனுபவித்தான். பிறகு அவனை அந்நகரை விட்டும் வெளியேற்றினர்.

மிகுந்த மனவருத்தத்துடன் நகரை விட்டு வெளியேறி காட்டில் வசிக்கத் தொடங்கினான். அங்கு வாழும் பிராணிகளைக் கொன்று தன் பசியை தணித்துக் கொண்டான்.  நாளடைவில் பிராணிகளை வேட்டையாடும் ஒரு வேடுவனாக மாறி விட்டான். வில் அம்புகளைக் கொண்டு காட்டில் வாழும் பிராணிகளை தன் பசிக்காக மட்டும் அல்லாமல் விற்பதற்காகவும் கொல்லத் தொடங்கினான்.

ஒரு நாள் வேட்டையில் ஏதும் சிக்காமல் போக, வேட்டையாடிய களைப்பில் பசியும், தாகமும் வருத்தி எடுக்க, உணவைத் தேடி அலைந்து அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் கௌடின்ய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அப்போது வைகாசி மாதம் நடந்து கொண்டிருந்தது. கௌடின்ய முனிவர் கங்கையில் நீராடி விட்டு வந்து கொண்டிருந்தார். அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து விழுந்த நீர் துளிகள் அவன் மீது பட்ட மாத்திரத்தில், பாபியான அவனுக்கு நற்சிந்தனையும், நல்லெண்ணமும் உருவாகியது.

அவன் முனிவரின் அருகில் சென்று இருகரம் கூப்பி கண்ணில் நீர்மல்க " முனிசிரேஷ்டரே!, நான் என் வாழ்க்கையில் மன்னிக்க முடியாத அளவு பாபம் புரிந்துள்ளேன். என் பாபவினைகளிலிருந்து நான் முக்தி பெறுவதற்கு ஏதாவது எளிதான, செலவில்லாமல் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு வழியை கூறி அருள வேண்டும்." என்றான்.

முனிவர் அதற்கு," நான் சொல்வதை கவனத்துடன் கேள்.  வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி, மோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அவ் மோகினி ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைப்பிடித்தால் உன் பாபங்கள் எல்லாம் நீங்கி, புது வாழ்வு பெறுவாய் என்று அருளினார். முனிவரின் வார்த்தையைக் கேட்டு அவன் மிகுந்த சந்தோஷமடைந்தான். முனிவர் கூறிய ஏகாதசி விதிப்படி அவ் மோகினி ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தான்.

"ஸ்ரீ ராமா, அவ் மோகினி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அவனது அனைத்து பாபவினைகளும் அகன்று நல்வாழ்க்கை பெற்றான். இறுதியில் விரதத்தின் புண்ணியபலனால், கருட வாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பிராப்தியும் பெற்றான்.  இவ்விரதத்தினால் மோகம் என்னும் மாயை அகன்று, மனிதர் முக்தியை பெறுகிறார். இவ்வுலகில் இவ்விரதத்திற்கு இணையான விரதம் வேறெதுவும் இல்லை. இவ்விரத மஹாத்மிய கதையை கேட்பவரும், படிப்பவரும், ஒராயிரம் கோ (பசு) தானம் செய்த புண்ணியத்திற்கு இணையான புண்ணியத்தை பெறுவர்.

கதாசாரம்
மனிதர்கள் எப்போதும் நற்சிந்தனையுள்ள சான்றோர், சாதுக்கள் ஆகியோரிடம் நட்பு கொண்டிருந்தல் வேண்டும். நற்சிந்தனையுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல்அறிவை மட்டுமல்லாது வாழ்க்கை லட்சியத்தையும் அடைவதற்கும் உதவும். கெட்ட சகவாசம், அதனால் விளையும் பாபவினைகள் ஒருவரை நரகத்திற்கு மட்டுமே இழுத்துச் செல்லும். அத்தகைய நட்பு துன்பம் வரும் காலங்களில் கைவிட்டு விலகி விடுவதால், அனாதையாக தவிக்க நேரிடுகிறது. அப்போதும் கௌடின்ய ரிஷி போன்ற சாது, சான்றோர்கள் ஒருவரை கைவிடாமல்  நன்மார்க்கத்தைக் கூறி அருளுவர்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம

தொடர்புடைய  ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -
  வரூதினீ ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  காமதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  பாபமோசனி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  ஆமலாகீ  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  விஜயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  ஜெயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  சட்-திலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  புத்ரதா  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  சஃபால  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  மோக்ஷ்தா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு
சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
 அஜா – அன்னதா ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி
  ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,
 ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.
     

No comments:

Post a Comment