Tuesday, June 25, 2013

Sri Guruvatha Pureesa Pancharatna Stotra - ஸ்ரீ குருவாதபுரீஸ பஞ்சரத்ன ஸ்தோத்ரம்

ஸ்ரீ குருவாதபுரீஷ பஞ்சரத்ன ஸ்தோத்ரம்.
இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ குருவாயூர் கிருஷ்ணனின் மகிமையை போற்றி, ப்ரஹ்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்களால், குருவாயூரப்பனின் திவ்ய தரிசனத்தின் போது, மனதில் உதிக்க இயற்றப்பட்டது.  இந்த ஸ்தோத்திரத்தை,  பக்தி சிரத்தையுடன் தினமும் பாராயணம் செய்ய இன்னல்கள் யாவும் நீங்கி சகல வளங்களும் கிட்டும் என்று ஸ்தோத்ர பலஸ்ருதி கூறுகிறது.

॥ श्रीगुरुवातपुरीशपञ्‍चरत्नस्तोत्रम् ॥
कल्याणरूपाय कलौ जनानां, कल्याणदात्रे करुणासुधाब्धे ।
कम्ब्वादिदिव्यायुधसत्कराय, वातालयाधीश नमो नमस्ते ॥१॥
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायणेत्यादि जपद्भिरुच्चैः, भक्तैः सदा पूर्णमहालयाय।
स्वतीर्थगाङ्‍गोपमवारिमग्न, निवर्तिताशेषरुजे नमस्ते ॥२॥
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
ब्राह्मे मुहूर्ते परितः स्वभक्तैः, सन्दृष्टसर्वोत्तमविश्वरूप ।
स्वतैलसंसेवकरोगहर्त्रे , वातालयाधीश नमो नमस्ते ॥३॥
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
बालान् स्वकीयान् तव सन्निधाने, दिव्यान्नदानात्परिपालयद्भिः ।
सदा पठद्भिश्च पुराणरत्नं, संसेवितायास्तु नमो हरे ते ॥४॥
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नित्यान्नदात्रे च महीसुरेभ्यः, नित्यं दिविस्थैर्निशि पूजिताय।
मात्रा च पित्रा च तथोद्धवेन, संपूजितायास्तु नमो नमस्ते ॥५॥
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
अनन्तरामाख्यमखिप्रणीतं, स्तोत्रं पठेद्यस्तु नरस्त्रिकालम् ।
वातालयेशस्य कृपाबलेन, लभेत सर्वाणि च मङ्गलानि ॥६॥
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
गुरुवातपुरीशपञ्‍चकाख्यं, स्तुतिरत्नं पठतां सुमङ्गलं स्यात्।
हृदि चापि सिशेत् हरिः स्वयं तु, रतिनाथायुततुल्यदेहकान्तिः ॥७॥
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण

     ||   ஸ்ரீ கு³ருவாதபுரீஸ² பஞ்சரத்ன ஸ்தோத்ரம்  || 

 கல்யாணரூபாய கலௌ ஜனானாம்ʼ
கல்யாணதா³த்ரே கருணாஸுதாப்³தே⁴ |
கம்ப்³வாதி³ தி³வ்யாயுத ஸத்கராய 
வாதாலயாதீ²  நமோ  நமஸ்தே  ||1|| 

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயணேத்யாதி³ ஜபத்³பிருச்சை: 
க்தை: ஸதா³ பூர்ண மஹாலயாய|
ஸ்வதீர்த்த² கா³ங்கோ³பமவாரிமக்³ 
நிவர்த்திதாஸே²ஷருஜே நமஸ்தே || 2|| 

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண


ப்³ராஹ்மே முஹூர்த்தே பரித: ஸ்வபக்தை
ஸந்த்³ருʼஷ்ட ஸர்வோத்தம விஸ்²வரூப |
ஸ்வதைலஸம்ʼஸேவக ரோக³ஹர்த்ரே
வாராலயாதீ² நமோ நமஸ்தே || 3||


நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

பா³லான் ஸ்வகீயான் தவ ஸந்நிதானே 
தி³வ்யான்னதா³னாத் பரிபாலயத்³பி⁴​
ஸதா³ பட²த்³பிஸ்²ச புராணரத்னம்ʼ 
ஸம்ʼஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே || 4 ||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

நித்யான்னதா³த்ரே ச மஹீஸுரேப்: 
நித்யம்ʼ தி³விஸ்தை²ர் நிஸி² பூஜிதாய|
மாத்ரா ச பித்ரா ச ததோ²த்³வேன 
ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே || 5||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

அனந்தராமாக்²யமகி² ப்ரணீதம்ʼ 
ஸ்தோத்ரம்ʼ படே²த்³யஸ்து நரஸ் த்ரிகாலம் |
வாதாலயேஸ²ஸ்ய க்ருʼபாப³லேன 
லபே⁴த ஸர்வாணி ச மங்க³லானி || 6|| 

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

கு³ருவாதபுரீஸ² பஞ்சகாக்²யம்ʼ 
ஸ்துதிரத்னம்ʼ பட²தாம்ʼ ஸுமங்க³லம்ʼ ஸ்யாத் |
ஹ்ருʼதி³ சாபி ஸிஸே²த் ஹரி​: ஸ்வயம்ʼ து 
ரதிநாதா²யுத துல்ய தே³ஹ காந்தி​: || 7||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண


1.  நன்மையை அருளும் மங்கள(கல்யாண) ரூபத்தில், திருக்கரங்களில் சங்கு போன்ற திவ்யாயுதங்களை ஏந்தியவரும், கலியுகத்தில் பக்தர்களுக்கு வற்றாத  நல்வளங்களை வழங்குபவரும், கருணா அமிர்தத்தின் சாகரமானவரும் (சமுத்திரம்) ஆன குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.

2.  "நாராயணா"  "நாராயணா"  என்னும் திவ்ய திருநாமத்தை உரக்க உச்சரிக்கும் பக்தர்கள் திருக்கோயில் எங்கும் நிறைந்திருக்க, புனித கங்கை நதிக்கு நிகரான  உன் திருக்கோயில் புனித தீர்த்தத்தில் (ருத்ர தீர்த்தம்) ஸ்நானம் செய்பவர்களின் சர்வ ரோக இன்னல்களையும் நீக்கும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.

3. அதிகாலை ப்ரஹ்ம முஹூர்த்தத்தில், தரிசனத்திற்காக நாலா பக்கங்களிலும் தன்னை சூழ்ந்து  காத்திருக்கும் பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தில் காட்சி அருள்பவரே, தங்களுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பிரசாதத்தை மருந்தாக உட்கொள்ளுபவருக்கும், உடம்பில் பூசிக் கொள்பவருக்கும் அவர்களது நோயின் பிணியிலிருந்து நிவாரணம் அளிக்கும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.

4. தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் இருக்க, உன் சந்நிதானத்தில் அன்னப்பிராஸ‌னம் (முதல் முறையாக குழந்தைக்கு அன்னம் ஊட்டுதல்) செய்விக்கும் பக்தர்களால் வணங்கப்படும், புராணங்களில் சிறந்த  ரத்னம் போன்ற ஸ்ரீமத் பாகவதத்தை நித்தமும் பாராயணம் செய்யும் பக்தர்கள் ஸேவிக்கும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.

5. மறை ஓதும் வேதியருக்கு நித்தமும் அன்னம் அளிப்பவரே, பிரம்மன் முதலான தேவர்களால் நித்தமும் இரவில் பூஜிக்கப்படுபவரே, தாய் தேவகி, தந்தை வஸூதேவர் மற்றும் உற்ற தோழரும் பக்தருமான உத்தவர் ஆகியோரால் வணங்கப்படும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்று திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.

(கிருஷ்ணாவதார முடிவில் மஹாவிஷ்ணு வைகுண்டம் சென்றதும் துவாரகை சமுத்திரத்தினால் சூழப்பட்டு மூழ்கியது. அவ்வமயம்  ஸ்ரீகிருஷ்ணரது தாய் தேவகி, வஸூதேவர், உத்தவர் இவர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரது திவ்ய விக்ரஹம் மட்டும் சமுத்திர அலைகளால் எடுத்துச் செல்லப்பட்டு மேற்குக் கரையை வந்தடைந்தது. அவ்விக்ரஹத்தை குரு பகவானும், வாயு பகவானும் எடுத்து பூஜித்துப் பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்ற பிரசித்தி பெற்ற கிருஷ்ண க்ஷேத்திரம் ஆனது.)

6.  பிரஹ்மஸ்ரீ அனந்தராம தீட்சிதரால் இயற்றப்பட்ட இந்த உன்னதமான ஸ்தோத்ரத்தை நித்தமும் மூன்று வேளையும் பாராயணம் செய்பவருக்கு அனைத்து சுபமங்களங்களையும் அருளும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்று திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.

7. விலைமதிப்பில்லாத ரத்னமான இந்த குருவாதபுரீஷ பஞ்சரத்னம் என்னும் ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்பவர் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவர். ரதியின் நாதனான மன்மதனை நிகர்த்த‌ சௌந்தர்யமும், தேஜஸூம் கொண்ட ஸ்ரீமன் நாராயணன், பாராயணம் செய்பவரின் ஹ்ருதயத்தில் எழுந்தருளி தரிசனமளிப்பார்

1 comment:

Sivananda Thirumalai said...

usful and best kainmaryam done. blessings in the name of sri guruvayurappan

Post a Comment