Showing posts with label Stotras. Show all posts
Showing posts with label Stotras. Show all posts

Saturday, May 25, 2013

Sri Krishna Kruta Sri Narada Stotram - ஸ்ரீ க்ருஷ்ண க்ருத நாரத ஸ்தோத்ரம்


ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,  
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

நாரத மஹாமுனிவரை பற்றி அறியாதவர்கள் மிகவும் குறைவு.  மிகவும் பிரபலமானவர். திரிலோக சஞ்சாரி. பகவான மஹாவிஷ்ணுவின் மீது அளப்பரிய பக்தி பூண்டவர். சதா சர்வகாலமும் நாராயண நாம ஜபத்தில் ஆழ்ந்திருப்பவர். 

இன்று (25-05-2013) அவரது ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் குறிப்பாக தீவிர வைஷ்ணவர்கள் அதிகமாக வசிக்கும்  இடங்களில் நாரத ஜெயந்தியை மிகவும் பக்தி விமரிசையுடன் கொண்டாடுகிறார்கள். 

நம்மைக் காக்கும் கடவுளை வாழ்த்தி மஹான்களோ அல்லது பக்த ஜனங்களோ துதிப்பது என்பது பொதுவாக நடக்கக் கூடியது. ஆனால் இதற்கு மாறாக கடவுளே மஹானின் அல்லது பக்தனின் பக்தியினால் அளவில்லா ஆனந்தம் அடைந்து அவர்களை துதிப்பது என்பது அசாதாரணமான ஒன்றாகும்.

ஸ்கந்த புராணம், மஹேஸ்வர காண்டம், குமாரிகா காண்டம், நாரத மஹாத்மியம், அத்தியாயம் 54 ல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாரதர் பற்றிய அரசன் உக்ரசேனரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முகமாக நாரதரின் பக்தியை பற்றி வர்ணிப்பதோடு அல்லாமல் அவரை புகழ்ந்தும் துதிக்கிறார்.

துதியின் பலஸ்ருதியில் எவரொருவர் என்னால் அருளப்பட்ட இந்த நாரத ஸ்தோத்ரத்தை நித்தமும் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் எனக்கு மட்டுமல்லாமல் அனைத்து ரிஷி முனிவர்களுக்கும் மிகவும் பிரியமானவர்களாவர் என்று கூறுகிறார்.

நாரத ஜெயந்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணரால் அருளப்பட்ட இந்த நாரத ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்து ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுக்கு பாத்திரமாகும்படி வேண்டுவோம்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,  
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

॥ श्रीनारद स्तोत्रं - श्रीकृष्णः - श्रीस्कन्द पुराणम् ॥
उग्रसेन उवाच -
कृष्ण प्रवक्ष्यामि त्वामेकं संशयं वद तं मम ॥ १॥
योऽयं नाम महाबुद्‍ धिर् नारदो विश्‍व - वन्दितः ।
कस्माद् एषोऽतिचपलो वायुवद् भ्रमते जगत्  ॥२॥
कलिप्रियश् च कस्माद् वा कस्मात् त्वय्यतिप्रितिमान् ॥३॥
श्रीकृष्ण उवाच -
सत्यं राजंस् त्वया पृष्‍ठं एतत् सर्वं वदामि ते ।
दक्षेण तु पुरा शप्‍तो नारदो मुनि सत्तमः ॥४॥
सृष्‍टि मार्गात् सुतान् वीक्ष्य नारदेन विचालितान् ।
नाऽवस्थानं च लोकेषु भ्रमतस्ते भविष्यति ॥५॥
पैशुन्य वक्‍ता च तथा द्वितियानां प्रचालनात् ।
इति शाप - द्वयं प्राप्य द्विविधाऽऽत्मल चालनात् ॥६॥
निराकर्तुं समर्थाऽपि मुनिर्मेने तथैव तत् ।
एतावान् साधुवादो हि यतश् च क्षमते स्वयम् ॥७॥
विनाश - कालं चाऽवेक्ष्य कलिं वर्धयते यतः ।
सत्यं च वक्‍ति तस्मात् स न च पापेन लिप्यते ॥८॥
भ्रमतोऽपि च सर्वत्र नाऽस्य यस्मात् पृथङ् मनः ।
ध्येयाद् भवति नैवस्याद् भ्रमदोषस् ततोऽस्य च ॥९॥
यच् च प्रितिर् मयि तस्य परमा तच् छृणुष्‍व च  ॥१०॥
अहं हि सर्वदा स्तौमि नारदं देव - दर्शनम् 
महेन्द्र गदितेनैव स्तोत्रेण श्रृणु तन् नृप ॥११॥
॥ श्रीनारद स्तोत्रम् ॥
श्रुत चारित्रयोर् जाता यस्याऽहन्ता न विद्यते ।
अगुप्‍त - श्रुत - चारित्रं नारदं तं नमाम्यहम्  ॥१॥
अरति - क्रोध - चापल्ये भयं नैतानि यस्य च ।
अदीर्घ - सूत्रं धीरं च नारदं तं नमाम्यहम्  ॥२॥
कामाद् वा यदि वा लोभाद् वाचं यो नाऽन्यथा वदेत् ।
उपास्यं - सर्व - जन्तूनां नारदं तं नमाम्यहम्  ॥३॥
अध्यात्म - गति - तत्त्वज्ञं  क्षान्तं शक्‍तं जितेन्द्रियम् ।
ऋजुं यथाऽर्थ वक्‍तारं नारदं तं नमाम्यहम्  ॥४॥
तेजसा यशसा बुद्‍ध्या नयेन विनयेन च ।
जन्मना तपसा वृद्‍धं नारदं तं नमाम्यहम्  ॥५॥
सुख - शीलं सुखं वेषं सुभोजं स्वाचरं शुभम् ।
सुचक्षुषं सुवाक्‍यञ् च नारदं तं नमाम्यहम्  ॥६॥
कल्याणं कुरुते गाढं पापं यस्य न विद्यते ।
न प्रीयते परानर्थे योऽसौ तं नौमि नारदम् ॥७॥
वेद स्मृति पुराणोक्‍त धर्मे यो नित्यं आस्थितः ।
प्रियाऽप्रिय - विमुक्‍तं तं नारदं  प्रणमाम्यहम्  ॥८॥
अशनादिष्वलिप्‍तं च पण्डितं नालसं द्विजम् ।
बहुश्रुतं चित्रकथं नारदं  प्रणमाम्यहम्  ॥९॥
नाऽर्थे क्रोधे च कामे च मूतपूर्वोऽस्य विभ्रमः ।
येनैते नाशिता दोषा नारदं तं नमाम्यहम्  ॥१०॥
वीत सम्मोह दोषो यो दृढ - भक्‍तिश् च श्रेयसि ।
सुनयं सत्रपं तं च नारदं  प्रणमाम्यहम् ॥११॥
असक्‍तः सर्व - सङ्‍गेषु यः सक्‍तात्मेति लक्ष्यते ।
अदिर्घ संशयो वाग्मी नारदं तं नमाम्यहम्  ॥१२॥
न त्यजत्यागमं किञ्‍चिद् यस् तपोनोपजीवति ।
अवन्ध्य - कालो यस्यात्मा तमहं नौमि नारदम्  ॥१३॥
कृतश्रमं कृतप्रज्ञं न च तृप्‍तं समाधितः ।
नित्यं यत्‍नात्  प्रमत्तं च नारदं तं नमाम्यहम्  ॥१४॥
न हृष्यत्यर्थ लाभेन योऽलोभे न व्यथत्यपि ।
स्थिर - बुद्‍ धिरसक्‍तात्मा तमहं नौमि नारदम् ॥१५॥
तं सर्व - गुण - सम्पन्नं दक्षं शुचिमकातरम् ।
कालज्ञं च नयज्ञं च शरणं यामि नारदम् ॥१६॥
॥ फलश्रुतिः ॥
इमं स्तवं नारदस्य नित्यं राजन् पठाम्यहम् ।
तेन मे परमां प्रीतिं करोति मुनि सत्तमः ॥१७॥
अन्योऽपि यः शुचिर् भूत्वा नित्यं एतां स्तुतिं जपेत् ।
अचिरात् तस्य देवर्षिः प्रसादं कुरुते परम् ॥१८॥
एतान्  गुणान्  नारदस्य त्वमथाऽऽकर्ण्य पार्थिव ।
जप नित्यं स्तवं पुण्यं प्रीतस्ते भविता मुनिः ॥१९॥
॥ इति श्रीस्कान्दे महापुराणे प्रथमे माहेश्वर खण्डे नारद माहात्म्य वर्णने 
श्रीकृष्‍ण कृत श्रीनारद स्तोत्रं सम्पूर्णम् ॥

||  ஸ்ரீ நாரத³ ஸ்தோத்ரம்ʼ - ஸ்ரீ க்ருʼஷ்ண​: - ஸ்ரீஸ்கந்த³ புராணம் || 
உக்³ரஸேன உவாச - 

க்ருʼஷ்ண ப்ரவக்ஷ்யாமி த்வாமேகம்ʼ ஸம்ʼஸ²யம்ʼ வத³ தம்ʼ மம ||  1|| 
யோ(அ)யம்ʼ நாம மஹாபு³த்³ தி⁴ர் நாரதோ³ விஸ்²வ - வந்தி³த​: | 

கஸ்மாத்³ ஏஷோ(அ)திசபலோ வாயுவத்³ ப்⁴ரமதே ஜக³த்  || 2|| 

கலிப்ரியஸ்² ச கஸ்மாத்³ வா கஸ்மாத் த்வய்யதிப்ரீதிமான் || 3||

ஸ்ரீக்ருʼஷ்ண உவாச - 
ஸத்யம்ʼ ராஜம்ʼஸ் த்வயா ப்ருʼஷ்ட²ம்ʼ ஏதத் ஸர்வம்ʼ வதா³மி தே |

த³க்ஷேண து புரா ஸ²ப்தோ நாரதோ³ முனி ஸத்தம​: || 4|| 
ஸ்ருʼஷ்டி மார்கா³த் ஸுதான் வீக்ஷ்ய நாரதே³ன விசாலிதான் |

நா(அ)வஸ்தா²னம்ʼ ச லோகேஷு ப்⁴ரமதஸ்தே ப⁴விஷ்யதி || 5|| 
பைஸு²ன்ய வக்தா ச ததா² த்³விதியானாம்ʼ ப்ரசாலனாத் | 

இதி ஸா²ப - த்³வயம்ʼ ப்ராப்ய த்³விவிதா⁴(அ)(அ)த்மல சாலனாத் || 6|| 
நிராகர்த்தும்ʼ ஸமர்தா²(அ)பி முநிர்மேனே ததை²வ தத் |

ஏதாவான் ஸாது⁴வாதோ³ ஹி யதஸ்² ச க்ஷமதே ஸ்வயம் || 7|| 
விநாஸ² - காலம்ʼ சா(அ)வேக்ஷ்ய கலிம்ʼ வர்த⁴யதே யத​: | 

ஸத்யம்ʼ ச வக்தி தஸ்மாத் ஸ ந ச பாபேந‌ லிப்யதே || 8|| 
ப்⁴ரமதோ(அ)பி ச ஸர்வத்ர நா(அ)ஸ்ய யஸ்மாத் ப்ருʼத²ங் மன​: |

த்⁴யேயாத்³ ப⁴வதி நைவஸ்யாத்³ ப்⁴ரமதோ³ஷஸ் ததோ(அ)ஸ்ய ச || 9|| 

யச் ச ப்ரீதிர் மயி தஸ்ய பரமா தச் ச்²ருʼணுஷ்வ ச  || 10||

அஹம்ʼ ஹி ஸர்வதா³ ஸ்தௌமி நாரத³ம்ʼ தே³வ - த³ர்ஸ²னம்  | 
மஹேந்த்³ர க³தி³தேநைவ ஸ்தோத்ரேண ஸ்²ருʼணு தன் ந்ருʼப || 11||

 ||  ஸ்ரீநாரத³ ஸ்தோத்ரம் || 

ஸ்²ருத சாரித்ரயோர் ஜாதா யஸ்யா(அ)ஹந்தா ந வித்³யதே | 
அகு³ப்த - ஸ்²ருத - சாரித்ரம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 1|| 

அரதி - க்ரோத⁴ - சாபல்யே ப⁴யம்ʼ நைதாநி யஸ்ய ச | 
அதீ³ர்க⁴ - ஸூத்ரம்ʼ தீ⁴ரம்ʼ ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 2||

காமாத்³ வா யதி³ வா லோபா⁴த்³ வாசம்ʼ யோ நா(அ)ந்யதா² வதே³த் | 
உபாஸ்யம்ʼ - ஸர்வ - ஜந்தூனாம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 3|| 

அத்⁴யாத்ம - க³தி - தத்த்வஜ்ஞம்ʼ  க்ஷாந்தம்ʼ ஸ²க்தம்ʼ ஜிதேந்த்³ரியம் | 
ருʼஜும்ʼ யதா²(அ)ர்த² வக்தாரம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 4||

தேஜஸா யஸ²ஸா பு³த்³த்⁴யா நயேந‌ விந‌யேன ச | 
ஜன்மனா தபஸா வ்ருʼத்³த⁴ம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 5||

ஸுக² - ஸீ²லம்ʼ ஸுக²ம்ʼ வேஷம்ʼ ஸுபோ⁴ஜம்ʼ ஸ்வாசரம்ʼ ஸு²ப⁴ம் |
ஸுசக்ஷுஷம்ʼ ஸுவாக்யஞ் ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 6||

கல்யாணம்ʼ குருதே கா³ட⁴ம்ʼ பாபம்ʼ யஸ்ய ந வித்³யதே | 
ந ப்ரீயதே பராந‌ர்தே² யோ(அ)ஸௌ தம்ʼ நௌமி நாரத³ம் || 7|| 

வேத³ ஸ்ம்ருʼதி புராணோக்த த⁴ர்மே யோ நித்யம்ʼ ஆஸ்தி²த​: |
ப்ரியா(அ)ப்ரிய - விமுக்தம்ʼ தம்ʼ நாரத³ம்ʼ  ப்ரணமாம்யஹம்  || 8|| 

அஸ²னாதி³ஷ்வலிப்தம்ʼ ச பண்டி³தம்ʼ நாலஸம்ʼ த்³விஜம் | 
ப³ஹுஸ்²ருதம்ʼ சித்ரகத²ம்ʼ நாரத³ம்ʼ  ப்ரணமாம்யஹம்  || 9||

நா(அ)ர்தே² க்ரோதே⁴ ச காமே ச மூதபூர்வோ(அ)ஸ்ய விப்⁴ரம​: | 
யேநைதே நாஸி²தா தோ³ஷா நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 10||

வீத ஸம்மோஹ தோ³ஷோ யோ த்³ருʼட⁴ - ப⁴க்திஸ்² ச ஸ்²ரேயஸி | 
ஸுந‌யம்ʼ ஸத்ரபம்ʼ தம்ʼ ச நாரத³ம்ʼ  ப்ரணமாம்யஹம் || 11||

அஸக்த​: ஸர்வ - ஸங்கே³ஷு ய​: ஸக்தாத்மேதி லக்ஷ்யதே | 
அதி³ர்க⁴ ஸம்ʼஸ²யோ வாக்³மீ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 12||

ந த்யஜத்யாக³மம்ʼ கிஞ்சித்³ யஸ் தபோனோபஜீவதி | 
அவந்த்⁴ய - காலோ யஸ்யாத்மா தமஹம்ʼ நௌமி நாரத³ம்  || 13||

க்ருʼதஸ்²ரமம்ʼ க்ருʼதப்ரஜ்ஞம்ʼ ந ச த்ருʼப்தம்ʼ ஸமாதி⁴த​: | 
நித்யம்ʼ யத்னாத்  ப்ரமத்தம்ʼ ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம்  || 14||

ந ஹ்ருʼஷ்யத்யர்த² லாபே⁴ன யோ(அ)லோபே⁴ ந வ்யத²த்யபி | 
ஸ்தி²ர - பு³த்³ தி⁴ரஸக்தாத்மா தமஹம்ʼ நௌமி நாரத³ம் || 15||

தம்ʼ ஸர்வ - கு³ண - ஸம்பன்னம்ʼ த³க்ஷம்ʼ ஸு²சிமகாதரம் | 
காலஜ்ஞம்ʼ ச நயஜ்ஞம்ʼ ச ஸ²ரணம்ʼ யாமி நாரத³ம் || 16|| 

||  ப²லஸ்²ருதி​: || 

இமம்ʼ ஸ்தவம்ʼ நாரத³ஸ்ய நித்யம்ʼ ராஜன் படா²ம்யஹம் | 
தேந‌ மே பரமாம்ʼ ப்ரீதிம்ʼ கரோதி முனி ஸத்தம​: || 17|| 

அன்யோ(அ)பி ய​: ஸு²சிர் பூ⁴த்வா நித்யம்ʼ ஏதாம்ʼ ஸ்துதிம்ʼ ஜபேத் | 
அசிராத் தஸ்ய தே³வர்ஷி​: ப்ரஸாத³ம்ʼ குருதே பரம் || 18||

ஏதான்  கு³ணான்  நாரத³ஸ்ய த்வமதா²(அ)கர்ண்ய பார்தி²வ | 
ஜப நித்யம்ʼ ஸ்தவம்ʼ புண்யம்ʼ ப்ரீதஸ்தே ப⁴விதா முனி​: || 19||

||  இதி ஸ்ரீஸ்காந்தே³ மஹாபுராணே ப்ரத²மே மாஹேஸ்²வர காண்டே³ நாரத³ மாஹாத்ம்ய வர்ணனே ஸ்ரீக்ருʼஷ்ண க்ருʼத ஸ்ரீநாரத³ ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||

Saturday, February 9, 2013

Dhavanala Samharana Stotram - தா³வானல ஸம்ஹரண ஸ்தோத்ரம்

Image Courtesy - Google Images


दावानल संहरण स्तोत्रम्
यथा संरक्षितं ब्रह्मन् सर्वापत्स्वेव नः कुलम् । तथा रक्षां कुरु पुनर्दावाग्रेर्मधुसूदन  ॥ १ ॥
त्वमिष्टदेवतास्माकं त्वमेव कुलदेवता । वन्हिर्वा वरुणो वापि चन्द्रौ वा सूर्य एव वा ॥ २ ॥
यमः कुबेरः पवन ईशानाद्याश्र्च देवताः । ब्रह्मेशशेषधर्मेन्द्रा मुनीन्द्रा मनवः स्मृता: ॥ ३ ॥
मानवाश्र्च तथा दैत्या यक्षराक्षसकिन्नराः । ये ये चराचराश्र्चैव सर्वे तव विभूतयः ॥ ४ ॥
स्रष्टा पाता च संहर्ता जगतां च जगत्पते । आविर्भावस्तिरोभावः सर्वेषां च तवेच्छया ॥ ५ ॥
अभयं देहि गोविन्द वन्हिसंहरण कुरु । वयं त्वां शरणं यामो रक्ष नः शरणागतान्  ॥ ६ ॥
इत्येवमुक्त्वा ते सर्वे तस्थुर्ध्यात्वा पदाम्बुजम् । दूरीकृतश्र्च दावाग्निः श्रीकृष्णामृतदृष्टितः ॥ ७ ॥
दूरीभूतेऽत्र दावाग्नौ विपत्तौ प्राणसंकटे । स्तोत्रमेतत् पठित्वा च मुच्यते नात्र संशयः ॥ ८ ॥
शत्रुसैन्यं क्षयं याति सर्वत्र विजयी भवेत् । इहलोके हरेर्भक्तिमन्ते दास्यं लभेद् ध्रुवम् ॥ ९ ॥
॥ इति श्रीब्रह्मवैवर्तपुराणे श्रीकृष्णजन्मखंडे दावानल संहरण स्तोत्रम् संपूर्णम् ॥

தா³வானல ஸம்ஹரண ஸ்தோத்ரம்

யதா² ஸம்ரக்ஷிதம் ப்³ரஹ்மன் ஸர்வாபத்ஸ்வேவ ந: குலம் |
ததா² ரக்ஷாம் குரு புனர்தா³வாக்³ரேர்மதுஸூத³ன || 1 ||
த்வமிஷ்டதே³வதாஸ்மாகம்  த்வமேவ குலதே³வதா |
வன்ஹிர்வா வருணோ வாபி சந்த்³ரௌ வா ஸூர்ய ஏவ வா || 2 ||
யம: குபே³ர: பவன ஈஸா²னாத்³யாஸ்²ர்ச தே³வதா: |
ப்³ரஹ்மேஸ²ஸே²ஷதர்மேந்த்³ரா முனீந்த்³ரா மனவ: ஸ்ம்ருதா: || 3 ||
மானவாஸ்²ர்ச ததா² தை³த்யா யக்ஷராக்ஷஸகின்னரா: |
யே யே சராசராஸ்²ர்சைவ ஸர்வே தவ விபூதய: || 4 ||
ஸ்ரஷ்டா பாதா ச ஸம்ஹர்தா ஜக³தாம் ச ஜக³த்பதே |
ஆவிர்பாவஸ்திரோபாவ: ஸர்வேஷாம் ச தவேச்ச²யா || 5 ||
அபயம்  தே³ஹி கோ³விந்த³ வன்ஹிஸம்ஹரண குரு |
வயம் த்வாம் ஸ²ரணம் யாமோ ரக்ஷ ந: ஸ²ரணாக³தான் || 6 ||
இத்யேவமுக்த்வா தே ஸர்வே தஸ்து²ர்த்யாத்வா பதா³ம்பு³ஜம் |
தூ³ரீக்ருதஸ்²ர்ச தா³வாக்³னி: ஸ்ரீக்ருஷ்ணாம்ருதத்³ருஷ்டித: || 7 ||
தூ³ரீபூதே(அ)த்ர தா³வாக்³னௌ விபத்தௌ ப்ராணஸங்கடே |
ஸ்தோத்ரமேதத் படி²த்வா ச முச்யதே நாத்ர ஸம்ஸ²ய: || 8 ||
ஸ²த்ருஸைன்யம் க்ஷயம் யாதி ஸர்வத்ர விஜயீ பவேத் |
இஹலோகே ஹரேர்பக்திமந்தே தா³ஸ்யம்ʼ லபேத்³ த்ருவம் || 9 ||

|| இதி ஸ்ரீ ப்³ரஹ்மவைவர்தபுராணே ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மக²ண்டே³ தா³வானல ஸம்ஹரண ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||


தாவானல ஸம்ஹரண ஸ்தோத்திரம்: பொருள்
'தாவானல' என்றால் காட்டுத் தீ எனப் பொருள்படும். கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய அவதாரத்தில் புரிந்த லீலைகள் அநேகம். ஓரு சமயம் கோகுலத்தை பெருங்காட்டுத்தீ ஒன்று சுற்றி வளைத்து எரியத்தொடங்கியது. ஸ்ரீ கிருஷ்ணர், அந்தப் பெருந்தீயை அழித்து, கோகுலத்தைக் காத்த லீலையை விளக்குவதே 'தாவானல ஸம்ஹரண ஸ்தோத்திரம்.

காட்டுத் தீ, காற்று வீசும் பக்கமெல்லாம் கொழுந்து விட்டு எரிந்து தன் (தீ) நாக்குகளால் தாவரங்களையும், விலங்குகளையும் விழுங்கிக் கொண்டு பரவியது. அக்னி ஜ்வாலையின் வெம்மை பசுக்களையும், கோபர்களையும் சுட்டெரித்தது. குழந்தைகள் எல்லாம் அக்னியின் சீற்றத்தை கண்டு நடுங்கி பெருங்குரலில் அழத் தொடங்கினர். அவர்களைச் சுற்றிலும் வேகமாக பரவி வரும் தீயைக் கண்டு கோபர்கள் மரணபயத்தால் நடுங்கி, ஐம்புலன்களும் அடங்கி,  "க்ருஷ்ணா ! க்ருஷ்ணா!"  என்று சித்தம் ஸ்ரீகிருஷ்ணனிடம் ஐக்கியமாக, மெளனமாக ப்ரார்த்தனை செய்தனர்.

"ஹே ப்ரஹ்மன், மதுசூதனா ! எங்களுக்கு நேரும் அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் எங்களைக் காப்பவனே ! இந்த பயங்கரமான தீயிலிருந்து எங்களைக் காப்பாற்று !  நீயே எங்களின் இஷ்டதெய்வமும் குலதெய்வமும் ஆவாய். நீயே மூம்மூர்த்தியும் ஆவாய். நீயே (த்வம்) அக்னி, மழை (வருணன்), சந்திரன், சூரியன், யமன், குபேரன், வாயு, ஈசானன், ப்ரஹ்மா, சிவன், ஆதிசேஷன், தர்மம், முனிவர், மனு, மனிதர், தைத்யா(அசுரர்கள்), யக்ஷர், ராக்ஷஸர், கின்னரர் மற்றும் அனைத்து உயிரினங்களும் ஆவாய். அனைத்தும் உன்னிடமிருந்து பிறந்து உன்னிடமே லயம‌டைகின்றன. அனைத்திற்கும், முதலும் முடிவும் நடுவும் நீயே!!! ஹே கோவிந்தா ! எங்களைக் இந்தத் தீயின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்று !  உன் பாதாரவிந்தமே சரணம், எங்களைக் காப்பாயாக என்று பிரார்த்தித்தனர்.

"கோவிந்தா !  கோவிந்தா ! " என்று பக்தர்கள் அழைத்தாலே ஓடோடி வருபவன் அவன். தான் வசிக்கும் கோகுலத்தின் குழந்தைகள், கோபர்கள், பசுக்களுக்கு ஆபத்து என்றால் விட்டுவிடுவானா...ஆதிமூலமே என்ற பிளிறிய கஜேந்திரன் என்னும் யானைக்காக தன் சக்ராயுதத்தை அனுப்பியதோடு அல்லாமல் தானும் தன் தேவியோடு பறந்து வந்து கஜேந்திரனைக் காத்தவனல்லவா!!.

அத்தகைய பக்தவத்ஸலனான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, கோகுலத்தின் அபயக்குரலை கேட்டதும் ஓடி வந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய திருஷ்டி தாவ அனல் என்னும் நெருப்பின் மீது பட்டதும், அக்னி ஜ்வாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி கடைசியில் அணைந்து போயின. அக்னி பகவான் அறியாததா! இது எல்லாம் மாயக்கிருஷ்ணனின் லீலை என்று?!!.  அக்னி மறைந்து போக, கோபர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் ஆனந்தக்கூத்தாடினர்.

இந்த லீலை நமக்கு எதை உணர்த்துகிறது என்றால் ஆபத்து நேரும் போது பரம்பொருளை நினைத்து சகலமும் அவனே என்று அறிந்து அவன் வசம் நம்மை ஒப்படைத்தால், நாம் நிச்சயமாக காப்பாற்றப்படுவோம் என்பதையே. யாரொருவர்   அதிகாலையில் எழுந்து இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்கிறாரோ, அவருக்கு கண்ணபிரானின் அருளால் அக்னி பயம் இருக்காது. மேலும் இந்த ஸ்தோத்ரத்தை நித்யம் பாராயணம் செய்வதால் நெருப்பினால் ஏற்படும் பயம், எதிரிகளால் வரும் பயம், துன்பம் தரும் தொல்லைகளினால் ஏற்படும் பயம்,  மரணபயம் ஆகியவைகளிலிருந்து விடுபடலாம்.இந்த ஸ்தோத்ரத்தின் பாராயணத்தால் பக்தன், ஸ்ரீ ஹரியின் அன்புக்கு உரியவனாகி, வைகுண்டத்தை அடைகிறான் என்று பலஸ்ருதி கூறுகிறது.

எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணருக்கே அர்ப்பணம்!!!