Image Courtesy - Google Images |
दावानल संहरण स्तोत्रम्
यथा संरक्षितं ब्रह्मन् सर्वापत्स्वेव नः कुलम् । तथा रक्षां कुरु
पुनर्दावाग्रेर्मधुसूदन ॥ १ ॥
त्वमिष्टदेवतास्माकं त्वमेव कुलदेवता । वन्हिर्वा वरुणो वापि चन्द्रौ
वा सूर्य एव वा ॥ २ ॥
यमः कुबेरः पवन ईशानाद्याश्र्च देवताः । ब्रह्मेशशेषधर्मेन्द्रा
मुनीन्द्रा मनवः स्मृता: ॥ ३ ॥
मानवाश्र्च तथा दैत्या यक्षराक्षसकिन्नराः । ये ये चराचराश्र्चैव
सर्वे तव विभूतयः ॥ ४ ॥
स्रष्टा पाता च संहर्ता जगतां च जगत्पते । आविर्भावस्तिरोभावः
सर्वेषां च तवेच्छया ॥ ५ ॥
अभयं देहि गोविन्द वन्हिसंहरण कुरु । वयं त्वां शरणं यामो रक्ष नः
शरणागतान् ॥ ६ ॥
इत्येवमुक्त्वा ते सर्वे तस्थुर्ध्यात्वा पदाम्बुजम् । दूरीकृतश्र्च
दावाग्निः श्रीकृष्णामृतदृष्टितः ॥ ७ ॥
दूरीभूतेऽत्र दावाग्नौ विपत्तौ प्राणसंकटे । स्तोत्रमेतत् पठित्वा च
मुच्यते नात्र संशयः ॥ ८ ॥
शत्रुसैन्यं क्षयं याति सर्वत्र विजयी भवेत् । इहलोके हरेर्भक्तिमन्ते
दास्यं लभेद् ध्रुवम् ॥ ९ ॥
॥ इति श्रीब्रह्मवैवर्तपुराणे श्रीकृष्णजन्मखंडे दावानल संहरण
स्तोत्रम् संपूर्णम् ॥
தா³வானல ஸம்ஹரண ஸ்தோத்ரம்
யதா² ஸம்ரக்ஷிதம் ப்³ரஹ்மன் ஸர்வாபத்ஸ்வேவ ந: குலம் |
ததா² ரக்ஷாம் குரு புனர்தா³வாக்³ரேர்மதுஸூத³ன || 1 ||
த்வமிஷ்டதே³வதாஸ்மாகம் த்வமேவ குலதே³வதா |
வன்ஹிர்வா வருணோ வாபி சந்த்³ரௌ வா ஸூர்ய ஏவ
வா || 2 ||
யம: குபே³ர: பவன ஈஸா²னாத்³யாஸ்²ர்ச தே³வதா: |
ப்³ரஹ்மேஸ²ஸே²ஷதர்மேந்த்³ரா முனீந்த்³ரா மனவ: ஸ்ம்ருதா: || 3 ||
மானவாஸ்²ர்ச ததா² தை³த்யா யக்ஷராக்ஷஸகின்னரா: |
யே யே சராசராஸ்²ர்சைவ ஸர்வே தவ விபூதய: || 4 ||
ஸ்ரஷ்டா பாதா ச ஸம்ஹர்தா ஜக³தாம் ச ஜக³த்பதே
|
ஆவிர்பாவஸ்திரோபாவ: ஸர்வேஷாம் ச
தவேச்ச²யா || 5 ||
அபயம்
தே³ஹி கோ³விந்த³ வன்ஹிஸம்ஹரண குரு |
வயம் த்வாம் ஸ²ரணம் யாமோ ரக்ஷ ந: ஸ²ரணாக³தான்
|| 6 ||
இத்யேவமுக்த்வா தே ஸர்வே தஸ்து²ர்த்யாத்வா
பதா³ம்பு³ஜம் |
தூ³ரீக்ருதஸ்²ர்ச தா³வாக்³னி:
ஸ்ரீக்ருஷ்ணாம்ருதத்³ருஷ்டித: || 7 ||
தூ³ரீபூதே(அ)த்ர தா³வாக்³னௌ விபத்தௌ
ப்ராணஸங்கடே |
ஸ்தோத்ரமேதத் படி²த்வா ச முச்யதே நாத்ர
ஸம்ஸ²ய: || 8 ||
ஸ²த்ருஸைன்யம் க்ஷயம் யாதி ஸர்வத்ர விஜயீ
பவேத் |
இஹலோகே ஹரேர்பக்திமந்தே தா³ஸ்யம்ʼ லபேத்³ த்ருவம்
|| 9 ||
||
இதி ஸ்ரீ ப்³ரஹ்மவைவர்தபுராணே ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மக²ண்டே³ தா³வானல ஸம்ஹரண
ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
தாவானல ஸம்ஹரண ஸ்தோத்திரம்: பொருள்
'தாவானல'
என்றால் காட்டுத் தீ எனப் பொருள்படும். கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய
அவதாரத்தில் புரிந்த லீலைகள் அநேகம். ஓரு சமயம் கோகுலத்தை பெருங்காட்டுத்தீ
ஒன்று சுற்றி வளைத்து எரியத்தொடங்கியது. ஸ்ரீ கிருஷ்ணர், அந்தப்
பெருந்தீயை அழித்து, கோகுலத்தைக் காத்த லீலையை விளக்குவதே 'தாவானல ஸம்ஹரண
ஸ்தோத்திரம்.
காட்டுத்
தீ, காற்று வீசும் பக்கமெல்லாம் கொழுந்து விட்டு எரிந்து தன் (தீ)
நாக்குகளால் தாவரங்களையும், விலங்குகளையும் விழுங்கிக் கொண்டு பரவியது.
அக்னி ஜ்வாலையின் வெம்மை பசுக்களையும், கோபர்களையும் சுட்டெரித்தது.
குழந்தைகள் எல்லாம் அக்னியின் சீற்றத்தை கண்டு நடுங்கி பெருங்குரலில் அழத்
தொடங்கினர். அவர்களைச் சுற்றிலும் வேகமாக பரவி வரும் தீயைக் கண்டு கோபர்கள்
மரணபயத்தால் நடுங்கி, ஐம்புலன்களும் அடங்கி, "க்ருஷ்ணா ! க்ருஷ்ணா!"
என்று சித்தம் ஸ்ரீகிருஷ்ணனிடம் ஐக்கியமாக, மெளனமாக ப்ரார்த்தனை செய்தனர்.
"ஹே
ப்ரஹ்மன், மதுசூதனா ! எங்களுக்கு நேரும் அனைத்து ஆபத்துக்களிலிருந்தும்
எங்களைக் காப்பவனே ! இந்த பயங்கரமான தீயிலிருந்து எங்களைக் காப்பாற்று !
நீயே எங்களின் இஷ்டதெய்வமும் குலதெய்வமும் ஆவாய். நீயே மூம்மூர்த்தியும்
ஆவாய். நீயே (த்வம்) அக்னி, மழை (வருணன்), சந்திரன், சூரியன், யமன்,
குபேரன், வாயு, ஈசானன், ப்ரஹ்மா, சிவன், ஆதிசேஷன், தர்மம், முனிவர், மனு,
மனிதர், தைத்யா(அசுரர்கள்), யக்ஷர், ராக்ஷஸர், கின்னரர் மற்றும் அனைத்து
உயிரினங்களும் ஆவாய். அனைத்தும் உன்னிடமிருந்து பிறந்து உன்னிடமே
லயமடைகின்றன. அனைத்திற்கும், முதலும் முடிவும் நடுவும் நீயே!!! ஹே
கோவிந்தா ! எங்களைக் இந்தத் தீயின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்று ! உன்
பாதாரவிந்தமே சரணம், எங்களைக் காப்பாயாக என்று பிரார்த்தித்தனர்.
"கோவிந்தா
! கோவிந்தா ! " என்று பக்தர்கள் அழைத்தாலே ஓடோடி வருபவன் அவன். தான்
வசிக்கும் கோகுலத்தின் குழந்தைகள், கோபர்கள், பசுக்களுக்கு ஆபத்து என்றால்
விட்டுவிடுவானா...ஆதிமூலமே என்ற பிளிறிய கஜேந்திரன் என்னும் யானைக்காக தன்
சக்ராயுதத்தை அனுப்பியதோடு அல்லாமல் தானும் தன் தேவியோடு பறந்து வந்து
கஜேந்திரனைக் காத்தவனல்லவா!!.
அத்தகைய
பக்தவத்ஸலனான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, கோகுலத்தின் அபயக்குரலை கேட்டதும்
ஓடி வந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய திருஷ்டி தாவ அனல் என்னும்
நெருப்பின் மீது பட்டதும், அக்னி ஜ்வாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி
கடைசியில் அணைந்து போயின. அக்னி பகவான் அறியாததா! இது எல்லாம்
மாயக்கிருஷ்ணனின் லீலை என்று?!!. அக்னி மறைந்து போக, கோபர்கள் எல்லோரும்
மகிழ்ச்சியில் ஆனந்தக்கூத்தாடினர்.
இந்த
லீலை நமக்கு எதை உணர்த்துகிறது என்றால் ஆபத்து நேரும் போது பரம்பொருளை
நினைத்து சகலமும் அவனே என்று அறிந்து அவன் வசம் நம்மை ஒப்படைத்தால், நாம்
நிச்சயமாக காப்பாற்றப்படுவோம் என்பதையே. யாரொருவர் அதிகாலையில் எழுந்து
இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்கிறாரோ, அவருக்கு கண்ணபிரானின் அருளால்
அக்னி பயம் இருக்காது. மேலும் இந்த ஸ்தோத்ரத்தை நித்யம் பாராயணம் செய்வதால்
நெருப்பினால் ஏற்படும் பயம், எதிரிகளால் வரும் பயம், துன்பம் தரும்
தொல்லைகளினால் ஏற்படும் பயம், மரணபயம் ஆகியவைகளிலிருந்து விடுபடலாம்.இந்த
ஸ்தோத்ரத்தின் பாராயணத்தால் பக்தன், ஸ்ரீ ஹரியின் அன்புக்கு உரியவனாகி,
வைகுண்டத்தை அடைகிறான் என்று பலஸ்ருதி கூறுகிறது.
எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணருக்கே அர்ப்பணம்!!!
No comments:
Post a Comment