Friday, February 8, 2013

Devi Navaratna Malika Stotram - நவரத்னமாலிகா ஸ்தோத்ரம்

Image Courtesy - Google Images



॥ नवरत्नमालिका॥
हारनूपुरकिरीटकुण्डलविभूषितावयवशोभिनीं
कारणेशवरमौलिकोटिपरिकल्प्यमानपदपीठिकाम्।
कालकालफणिपाशबाणधनुरङ्कुशामरुणमेखलां
फालभूतिलकलोचनां मनसि भावयामि परदेवताम्॥ १॥
गन्धसारघनसारचारुनवनागवल्लिरसवासिनीं
सान्ध्यरागमधुराधराभरणसुन्दराननशुचिस्मिताम्।
मन्धरायतविलोचनाममलबालचन्द्रकृतशेखरीं
इन्दिरारमणसोदरीं मनसि भावयामि परदेवताम्॥ २॥
स्मेरचारुमुखमण्डलां विमलगण्डलम्बिमणिमण्डलां
हारदामपरिशोभमानकुचभारभीरुतनुमध्यमाम्।
वीरगर्वहरनूपुरां विविधकारणेशवरपीठिकां
मारवैरिसहचारिणीं मनसि भावयामि परदेवताम्॥ ३॥
भूरिभारधरकुण्डलीन्द्रमणिबद्धभूवलयपीठिकां
वारिराशिमणिमेखलावलयवह्निमण्डलशरीरिणीम्।
वारिसारवहकुण्डलां गगनशेखरीं च परमात्मिकां
चारुचन्द्ररविलोचनां मनसि भावयामि परदेवताम्॥ ४॥
कुण्डलत्रिविधकोणमण्डलविहारषड्दलसमुल्लस-
त्पुण्डरीकमुखभेदिनीं च प्रचण्डभानुभासमुज्ज्वलाम्।
मण्डलेन्दुपरिवाहितामृततरङ्गिणीमरुणरूपिणीं
मण्डलान्तमणिदीपिकां मनसि भावयामि परदेवताम्॥ ५॥
वारणाननमयूरवाहमुखदाहवारणपयोधरां
चारणादिसुरसुन्दरीचिकुरशेकरीकृतपदाम्बुजाम्।
कारणाधिपतिपञ्चकप्रकृतिकारणप्रथममातृकां
वारणान्तमुखपारणां मनसि भावयामि परदेवताम्॥ ६॥
पद्मकान्तिपदपाणिपल्लवपयोधराननसरोरुहां
पद्मरागमणिमेखलावलयनीविशोभितनितम्बिनीम्।
पद्मसम्भवसदाशिवान्तमयपञ्चरत्नपदपीठिकां
पद्मिनीं प्रणवरूपिणीं मनसि भावयामि परदेवताम्॥ ७॥
आगमप्रणवपीठिकाममलवर्णमङ्गलशरीरिणीं
आगमावयवशोभिनीमखिलवेदसारकृतशेखरीम्।
मूलमन्त्रमुखमण्डलां मुदितनादबिन्दुनवयौवनां
मातृकां त्रिपुरसुन्दरीं मनसि भावयामि परदेवताम्॥ ८॥
कालिकातिमिरकुन्तलान्तघनभृङ्गमङ्गलविराजिनीं
चूलिकाशिखरमालिकावलयमल्लिकासुरभिसौरभाम्।
वालिकामधुरगण्डमण्डलमनोहराननसरोरुहां
कालिकामखिलनायिकां मनसि भावयामि परदेवताम्॥ ९॥
नित्यमेव नियमेन जल्पतां
भुक्तिमुक्तिफलदामभीष्टदाम्।
शंकरेण रचितां सदा जपे-
न्नामरत्ननवरत्नमालिकाम्॥ १०॥
इति श्रीमत्परमहंसपरिव्रजकाचार्यस्य
श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य
श्रीमच्छंकरभगवतः कृतौ नवरत्नमालिका संपूर्णाम्॥

|| நவரத்னமாலிகா||
ஹார நூபுர கிரீட குண்ட³ல விபூஷிதாவயவஶசோபி⁴னீம்
காரணேஶவரமௌலி கோடி பரிகல்ப்யமான பத³பீடி²காம் |
காலகாலப²ணிபாஶ பா³ணத⁴னுரங்குஶாமருணமேக²லாம்
பா²லபூ⁴திலகலோசனாம் மனஸி பா⁴வயாமி பரதே³வதாம் || 1 ||

க³ந்த⁴ஸார கனஸார சாருநவ நாக³வல்லி ரஸவாஸினீம்
ஸாந்த்ய ராக³மதுரா தராபரண ஸுந்த³ராநந ஶுசிஸ்மிதாம் |
மந்தராயதவிலோசனா மமலபா³லசந்த்³ரக்ருதஶேக²ரீம்
இந்தி³ராரமண ஸோத³ரீம் மனஸி பாவயாமி பரதே³வதாம் || 2 ||

ஸ்மேரசாரு முக²மண்ட³லாம்  விமலக³ண்ட³லம்பி³ மணிமண்ட³லாம்
ஹாரதா³ம பரிஶோப⁴மான குசபார பீருதனுமத்யமாம் |
வீரக³ர்வ ஹரநூபுராம் விவித காரணேஶ வரபீடி²காம்
மாரவைரிஸஹ சாரிணீம் மனஸி பாவயாமி பரதே³வதாம் || 3 ||

பூரிபாரதரகுண்ட³லீந்த்³ரமணிப³த்³த பூவலய பீடி²காம்
வாரிராஶி மணிமேக²லாவலய வஹ்னிமண்ட³ல ஶரீரிணீம் |
வாரிஸார வஹகுண்ட³லாம் க³க³னஶேக²ரீம் ச பரமாத்மிகாம்
சாருசந்த்³ர விலோசனாம் மனஸி பாவயாமி பரதே³வதாம் || 4||

குண்ட³லத்ரிவித கோண மண்ட³ல விஹார ஷட்³த³ல ஸமுல்லஸத்
புண்ட³ரீக முக²பேதி³னீம் ச ப்ரசண்ட³பானுபாஸ முஜ்ஜ்வலாம் |
மண்ட³லேந்து³ பரிவாஹிதாம் ருததரங்கி³ணீ மருணரூபிணீம்
மண்ட³லாந்தமணி தீ³பிகாம் மனஸி பாவயாமி பரதே³வதாம் || 5||

வாரணாநந மயூரவாஹ முக²தா³ஹ வாரணபயோதராம்
சாரணாதி³ஸுரஸுந்த³ரீசிகுரஶேகரீ க்ருதபதா³ம் பு³ஜாம் |
காரணாதிபதிபஞ்சக ப்ரக்ருதி காரண ப்ரத²ம மாத்ருகாம்
வாரணாந்த முக²பாரணாம் மனஸி பாவயாமி பரதே³வதாம்||  6||

பத்³மகாந்தி பத³பாணி பல்லவ பயோதராநந ஸரோருஹாம்
பத்³மராக³ மணிமேக²லா வலய நீவிஶோபி⁴த நிதம்பி³நீம் |
பத்³மஸம்பவ ஸதா³ஶிவாந்தமய பஞ்சரத்னபத³பீடி²காம்
பத்³மினீம் ப்ரணவரூபிணீம் மனஸி பாவயாமி பரதே³வதாம் || 7||

ஆக³ம ப்ரணவபீடி²கா மமலவர்ண மங்க³ல ஶரீரிணீம்
ஆக³மாவயவஶோபி⁴னீ மகி²ல வேத³ஸாரக்ருத ஶேக²ரீம் |
மூலமந்த்ர முக²மண்ட³லாம் முதி³தநாத³ பி³ந்து³ நவயௌவனாம்
மாத்ருகாம் த்ரிபுரஸுந்த³ரீம்  மனஸி பாவயாமி பரதே³வதாம் ||8||

காலிகா திமிர குந்தலாந்த கன ப்ருங்க³ மங்க³ல விராஜினீம்
சூலிகா ஶிக²ரமாலிகா வலயமல்லிகா ஸுரபிஸௌரபாம்|
வாலிகா மதுரக³ண்ட³மண்ட³லமனோ ஹராநநஸரோருஹாம்
காலிகா மகி²ல நாயிகாம் மனஸி பாவயாமி பரதே³வதாம் ||9||

நித்யமேவ நியமேந ஜல்பதாம்
புக்திமுக்தி ப²லதா³மபீஷ்டதா³ம் |
ஶங்கரேண ரசிதாம்  ஸதா³ ஜபேத்
நாமரத்ன நவரத்னமாலிகாம் || 10 ||

|| இதி ஶ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ரஜகாசார்யஸ்ய ஶ்ரீகோ³விந்த³ பக³வத் பூஜ்யபாத³ ஶிஷ்யஸ்ய ஶ்ரீமச் ச²ங்கரபக³வத​: க்ருதௌ நவரத்னமாலிகா ஸம்பூர்ணாம் ||
 
1. ஹாரம், காற்சதங்கை, கிரீடம், குண்டலம், இவற்றால் அலங்கரிக்கப்பட்ட அவயங்களால் அழகாக இருப்பவளும், பிரம்மா முதலிய காரணதேவதைகளின் தலைமுனைகள் சேர்ந்து ஏற்படுத்திய பாதபீடத்தையுடையவளும், மிகக் கரிய நாகங்கள், பாசம், பாணம், வில், அங்குசம் இவற்றுடன் கூடியவளும், சிவந்த மேகலையணிந்தவளும், நெற்றியில் இட்ட திலகமாகிய கண்ணையுடையவளுமான பரதேவதையை மனதில் த்யானிக்கிறேன். 

2. வாசனை பொருந்திய கற்பூரம் அழகிய புது வெற்றிலை இவற்றின் சாறு சுவைத்து நறுமணம் கொண்டவளும், மாலைச் செம்மானம்போல் அழகிய உதட்டுச் சாயமும், தூய புன்முறுவலும் கொண்ட முகத்தையுடையவளும், நிர்மல பிறை சந்திரனையணிந்தவளும், லக்ஷ்மீபதியான நாராயணின் சகோதரியுமான பரதேவதையை மனதில் த்யானிக்கிறேன். 

3. மன்மதனின் பகைவரான பரமேச்வரன் மனைவியான பரதேவதையின் மனதில் த்யானிக்கிறேன். அவள், புன்முறுவல் பூத்த அழகிய முகமண்டலம் கொண்டவள். சுத்தமான கன்னத்தின் கீழே தொங்கும் மணிக்காதோலையுடையவளும், ஹார வரிசைகள் அழகுறச் செய்த ஸ்தனபாரத்தினால் பயந்ததுபோல மிகக் குறுகிய இடையுடையவளும், வீரர்களுக்கே கர்வத்தைப் போக்கும் காற் சதங்கை கொண்டவளும், பிற்கால காரணேசர்களால் தாங்கப்படும் ஆஸனமுடையவளாயும் திகழ்கிறாள் அவ்வம்பிகை. 

4. மிகுந்த பாரத்தை தாங்கும் ஆதிசேஷன் மூலம் கிடைத்த மணிகள் பதித்த பூவலமாகிய பீடத்தையுடையவளும், சமுத்திரத்திலிருந்து கிடைத்த மணிகளான மேகலையைச் சுற்றிய b மண்டலமோவென்ற சரீரத்தையுடையவளும், மேகங்களாகிய குண்டலமும், ஆகாயமாகிய தலையும் கொண்டு பரம்பொருளால், அழகிய சந்திரன், சூர்யர்களாகிய கண்களும் உடைய பரதேவதையை மனதில் த்யானிக்கிறேன். 

5. பிந்து, த்ரிகோணம், ஷட்கோணம், நவகோணம் இவற்றிலின்றி ஆறுதலங்களிலும் இருந்துகொண்டு சூர்யன், மின்னல் இவைபோல் பிரகாசிப்பவளும், பூர்ண சந்திரனிலிருந்து பெருகிஒடும் அம்ருத நதியாக இருப்பவளும், செந்நிறமானவளும், வட்டத்தில் அமைந்த மணிதீபம் போன்றிருப்பவளுமான பரதேவதையை தியானிக்கிறேன். 

6. யானை முகத்தவன், மயூர வாவஹனன் ஆகியோரது தாகம் தணிக்கும் ஸ்தலங்களையுடையவளும், சாரணர் முதலிய தேவி கன்னியர் கேசங்களின் மேல் அணியாகச் செய்யப்பட்ட திருவடித் தாமரைகளையுடையவளும், காரணேச்வரர் ஐவரின் முதற்காரணமாயும், முதல் மாத்ருதேவதையாயும் இருப்பவளும், கணேசப் பெருமானுக்கு ஆனந்தமளிப்பவளுமான பரதேவதையை த்யானிக்கிறேன். 

7. தாமரை நிறமொத்த கால், கை, பயோதரம், முகம் இவற்றை கொண்டவளும், பத்மராகக் கல் பதிந்த ஒட்டியாணம் சுற்றி அழகான இடைப்பாகங் கொண்டவளும், பிரம்மா முதல் ஸதாசிவர் வரையிலான ஐவர் அடங்கிய பாதபீடம் உடையவளும், லக்ஷ்மியாயும், ஒங்கார ரூபிணியாயும் இருக்கிற பரதேவதையை தியானிக்கிறேன். 

8. ஆகமங்களும் பிரணவமும் பீடமாகக் கொண்டவள், சுத்த வர்ணமாலிகையை மங்கல சரீரமாக அமைத்துக் கொண்டவள், ஆகமங்களாகிய அவயவங்களால் அழகாய் இருப்பவள், வேதசாரம் முழுதும் ஆபரணமாகக்க கொண்டவள், ஸ்ரீவித்யா மூலமந்த்ரத்தை முகமண்டலமாகவும், நாதபிந்துக்களை புது யௌவனப்பருவமாகவும் கொண்ட த்ரிபுரஸுந்தரி மாதாவை மனதில் த்யானிக்கிறேன். 

9. அகில உலகத்துக்கும் நாயகியான காளிபரதேவதையை மனதில் த்யானிக்கிறேன். அவள் மிகக்கரிய கூந்தல் கத்தையுடன் விளங்குகிறாள். தலைக்கு மேல் அலங்காரமாக வைத்துக் கொள்ளப்பட்ட மல்லிகை, மிகுந்த நறுமணத்தை கூட்டுவிக்கிறது. தாமரை மலரொத்த முகத்தின் வசீகரத்தன்மை, அந்த தேவியின் மிருதுவான கன்னத்துக்கப்பால் மேலும் அதிகரித்துள்ளது. 

முறைப்படி தினந்தோறும் படிப்பவர்களுக்கு, இவ்வுலக சுகபோகமும், முக்தியும் மற்ற விருப்பங்கள் அனைத்தும் கொடுப்பதும் ஸ்ரீ சங்கரர் இயற்றியதுமான ஒன்பது பத்யங்களாகிய ரத்னங்களால் ஆக்கிய மாலையை எப்பொழுதும் ஜபிக்க வேண்டும்.

Tamil Commentary Courtesy: www.kamakoti.org   

No comments:

Post a Comment