Image Courtesy - Google Image |
ஸ்ரீ வல்லப கணபதி ஸ்துதி
மங்களம் திசதுமே கணாதிபோ, மங்களம் திசதுமே ஷடானன: |
மங்களம் திசதுமே மஹேச்வரோ, மங்களம் திசதுமே த்ரிவிக்ரம: ||
மங்களம் திசதுமே கணாதிபோ, மங்களம் திசதுமே ஷடானன: |
மங்களம் திசதுமே மஹேச்வரோ, மங்களம் திசதுமே த்ரிவிக்ரம: ||
(ஸ்ரீ கணேசர், ஆறுமுகக்கடவுள், மஹேச்வரர், மஹாவிஷ்ணு ஆகியோர் எனக்கு
மங்களத்தை அருளட்டும்.)
மங்களம் திசதுமே ஹிமாத்ரிஜா, மங்களம் திசதுமே திவாகர: |
மங்களம் திசதுமே ஹரீசயோ, ராத்மஜ: ஸகல பூதநாயக: ||
மங்களம் திசதுமே ஹரீசயோ, ராத்மஜ: ஸகல பூதநாயக: ||
(ஹிமவானின் புத்திரியான பார்வதீயும் சூரியனும் ஹரிஹர புத்திரரான
பூதநாதனும் எனக்கு மங்களம் அருளட்டும்.)
ஸரஸிஜஸ்திதம் பாசமங்குசம் சரசராஸனே பிப்ரதம் கரை: |
ஸததமர்ச்சிதம் முத்கலாதிபி: வரதமாச்ரயே வல்லபா பதிம்: ||
ஸததமர்ச்சிதம் முத்கலாதிபி: வரதமாச்ரயே வல்லபா பதிம்: ||
(தாமரை மலரில் அமர்ந்திருப்பவரும், பாசம், அங்குசம், பாணம், வில்
இவற்றை திருக்கரங்களில் தரித்திருப்பவரும், முத்கலர் முதலான யோகிகளால் எப்போதும் அர்ச்சிக்கப்படுகிறவரும்,
வல்லபாதேவியின் பதியுமான வரமருளும் கணேசரைச் சரணடைகிறேன்.)
கஜமுகை: சுபை: பஞ்சபிர்யுதம் ப்ரபஜதரம் ஸதாம் கல்ப பாதபம் |
விதிஹரீச்வரை: ஸேவிதம் ஸதா வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
விதிஹரீச்வரை: ஸேவிதம் ஸதா வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
(ஐந்து திருமுகங்களையுடைய யானை முகக் கடவுளும், தன்னை பூஜிக்கும்
நல்லோருக்கு கல்பவிருக்ஷம் போன்றவரும், பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் இவர்களால் எப்போதும்
ஸேவிக்கப்பட்டவரும் வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)
ப்ரணவரூபிணம் ப்ரார்திதப்ரதம் ஸுரவரேடிதம் சோபனாக்ருதிம் |
கலசஸம்பவேனார்ச்சிதம் ப்ரியம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
கலசஸம்பவேனார்ச்சிதம் ப்ரியம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
(ஓங்கார ஸ்வரூபியும் விரும்பியதை அளிப்பவரும், இந்திரன் முதலானவரால்
துதிக்கப்பட்டவரும் அழகிய திரு உருவத்தை உடையவரும், அகஸ்திய முனிவரால் அர்ச்சிக்கப்பட்டவரும்
அனைவருக்கும் விருப்பமானவரும் வரமருளுபவரும் ஆகிய ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)
ரஜத பர்வதே சேஷமந்திரே ஸுரபுரே மயூரேச்வரே புரே |
ஸுதநிவாஸினம் விக்னவாரகம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
ஸுதநிவாஸினம் விக்னவாரகம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
(கயிலையங்கிரி, ஆதிசேஷனுடைய வீடாகிய பாதாளம், ஸ்வர்க்கலோகம் மயூரேச்வரம்
என்ற ஊர் இவற்றில் சுகமாய் வசிப்பவரும், இடையூறுகளை அகற்றுபவருமான வரமளிக்கும் ஸ்ரீ
வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)
அதிமனோஹரானந்த நாமகே புரவரே ஸ்திதம் பார்ஷதைர்வ்ருதம் |
தசகரோஜ்வலம் ஸ்வர்ண வர்ஷிணம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
தசகரோஜ்வலம் ஸ்வர்ண வர்ஷிணம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
(மிக அழகிய 'ஸ்வானந்தம்' என்ற உலகில் வசிப்பவரும், பரிவாரங்களால்
சூழப்பட்டவரும், பத்துக் கரங்களை உடையவரும், ஸ்வர்ணத்தை (தங்கத்தை) பொழிபவரும் வரமளிப்பவருமான
ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)
வரவரப்ரதம் வ்யாஸபூஜிதம் கணகணாதிபம் காவ்யக்ருத்வரம் |
கணகபூஜிதம் சாபவர்ஜிதம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
கணகபூஜிதம் சாபவர்ஜிதம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
(சிறந்த வரங்களை அளிப்பவரும், ஸ்ரீ வியாஸ மஹரிஷியால் பூஜிக்கப்பட்டவரும்,
பல கணங்களுக்குத் தலைவரும் மஹாகவியும், கணகசித்தரால் பூஜிக்கப்பட்டவரும், சாபத்தினின்றும்
விடுபட்டவரும் (மற்றவர் இடும் சாபம் கணபதியை ஒன்றும் செய்யாது. அத்துடன் அது இட்டவரையே
சாரும் என்பர் பெரியோர்), வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)
கலிமலாபஹம் காலவர்ஜிதம் ப்ரதியுகோதயம் யோகஸித்திதம் |
ஸகலதேவதா ஜ்யேஷ்ட மீச்வரம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
ஸகலதேவதா ஜ்யேஷ்ட மீச்வரம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
(கலிகல்மஷத்தைப் (கலியினால் ஏற்படும் தோஷத்தை) போக்குபவரும் காலமற்றவரும்
(கால பரிமாணத்தைக் கடந்தவரும்), ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்பவரும், யோகஸித்தி
அளிப்பவரும், அனைத்து தேவதைகளுக்கும் முன்னவரும் ஈச்வரனும் (அனைவரையும் ஆளக்கூடியவர்)
வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)
லலிதயா ஸ்ம்ருதம் விக்னநிக்ரஹே ஹரிஸமர்சிதம் சாப்திமந்தனே |
விதிஸமர்சிதம் ஸ்ருஷ்டிவ்ருத்தயே வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
விதிஸமர்சிதம் ஸ்ருஷ்டிவ்ருத்தயே வரதமாச்ரயே வல்லபாபதிம் ||
(விக்னயந்த்ரத்தை அழிக்க லலிதா தேவியினால் ஸ்மரிக்கப்பட்டவரும் அம்ருதமதன
காலத்தில் விஷ்ணுவினால் அர்ச்சிக்கப்பட்டவரும் ஸ்ருஷ்டித் தொழில் வளர பிரம்மதேவனால்
பூஜிக்கப்பட்டவரும் வரமருளுபவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)
அப்ஜாஸனாத்யமர வந்தித பாதபத்ம:
பாசம்தனு: சரஸ்ருணீ ச கரைர்ததான: |
ஆரக்த பத்மநிலய ப்ரியயா ஸமேத
ஸ்ரீமன் மஹாகணபதி ஸ்ரீயம் ஆதனோது ||
பாசம்தனு: சரஸ்ருணீ ச கரைர்ததான: |
ஆரக்த பத்மநிலய ப்ரியயா ஸமேத
ஸ்ரீமன் மஹாகணபதி ஸ்ரீயம் ஆதனோது ||
(பிரமன் முதலான தேவர்கள் வணங்கிய திருவடித் தாமரையுடையவரும் பாசம்,
வில், அம்பு, அங்குசம் இவற்றை ஏந்திய கரத்தினரும் சிவந்த தாமரை மலரில் வீற்றிருப்பவரும்
ஸித்திலக்ஷ்மீ என்ற மனைவியுடன் இருப்பவருமான ஸ்ரீ மஹாகணபதி (எங்களுக்கு) செல்வத்தை
அருளட்டும்.)
பிர்மாதிதேவ வரவந்தித பாதபத்மாத்
பாசாங்குசாசுக சராஸன சோபிஹஸ்தாத்: |
ஆரக்த பத்மநிலயாத் ப்ரியயா ஸமேதாத்
ஸ்ரீமன் மஹா கணபதே அபரம் ந வித்ம: ||
பாசாங்குசாசுக சராஸன சோபிஹஸ்தாத்: |
ஆரக்த பத்மநிலயாத் ப்ரியயா ஸமேதாத்
ஸ்ரீமன் மஹா கணபதே அபரம் ந வித்ம: ||
(பிரம்மா முதலிய பெரும் தெய்வங்களால் வணங்கப்பட்ட பாதகமலமுடையவரும்,
பாசம், அங்குசம், பாணம், வில் இவை சோபையுடன் விளங்கும் திருக்கரங்களை உடையவரும், செந்தாமரை
மலரில் வீற்றிருப்பவரும், ப்ரியத்துக்கு உகந்த பத்னியுடன் கூடியவருமான ஸ்ரீ மஹாகணபதியைத்
தவிர வேறு எதுவும் நாம் அறியோம்.)
No comments:
Post a Comment