Showing posts with label Stotras_Hanuman. Show all posts
Showing posts with label Stotras_Hanuman. Show all posts

Wednesday, January 8, 2014

Sri Hanuman Vadvanal Stotra - ஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம்

Image Courtesy - Google Image




 வாசகர்கள் கவனத்திற்கு:
பொதுவாக ஸ்தோத்ரம் என்றால் கடவுளை துதிப்பது , ஸ்தோத்ரங்கள் கடவுளின் அளவில்லா மகிமையை புகழ்ந்து ரிஷிகள், முனிவர்கள் மற்றும் மகான்களால் மக்களின் நன்மைக்காக பாடலாக இயற்றி அருளப்பட்டது. அவற்றை பாராயணம் செய்வதற்கு எவ்வித தடையும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பொதுவிதிகளுக்கு, சில விதிவிலக்கு இருப்பது போல், ஸ்தோத்ரங்களிலும் விதிவிலக்குகள் உண்டு. மந்திர உச்சாடனத்துடன் கூடிய ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்வதற்கு குரு உபதேசம் அல்லது வேதம் நன்கு கற்றறிந்த பண்டிதர்கள் மூலம் கற்று பிறகு பாராயணம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும். இல்லையெனில் தவறான மந்திர உச்சாடனம் பயன் அளிக்காமல் போவதுடன், பிற வீபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம். இதை கவனத்தில் கொள்ளவும்.

பீஜ மந்திரங்களுடன் கூடிய இந்த் ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆதலால் மிகவும் கவனத்துடன் குரு முகமாக அல்லது வேதம் கற்றறிந்தவர் மூலம் நன்கு கற்றறிந்து, பிறகு பாராயணம் செய்வது நல்லது.

பொதுவாக ஹனுமான் ஸ்தோத்ரத்தை எந்நாளும் செய்யலாம். ஆனால் நான் அறிந்த வரை இந்த ஸ்தோத்ரத்தை வடநாட்டினர் புதன்கிழமை அன்று மட்டும் பாராயணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

வழிபடும் மார்க்கத்திற்கு ஏற்ப, பாராயண விதிகளும் இரு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அவை:-

தந்திர விதி : கடுகு எண்ணெய் விளக்கேற்றி தினம் 108 முறை ஆக 41 நாட்கள் ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்ய, அனைத்து தடைகளும் விலகி வேண்டியது கைக்கூடும்.

சாத்வீகம் : புதன் கிழமைகளில் சுத்த பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி அனுமானை தியானித்து 108 முறை ஸ்தோத்ர பாராயணம் செய்ய தடைகள் விலகி, நல் ஆரோக்கியமும், செல்வமும் கைக்கூடும் என்பது நம்பிக்கை.

॥ श्री हनुमान वडवानल स्तोत्रम् ॥
श्री गणेशाय नमः ॥

ॐ अस्य श्री हनुमानवडवानल स्तोत्रमंत्रस्य ॥ श्रीरामचंद्र ऋषिः ॥ श्रीवडवानल हनुमान देवता ॥ मम समस्तरोगप्रशमनार्थ आयुरारोग्यैक्ष्वर्या भिवृध्दर्थ समस्तपापक्षयार्थं सीतारामचंद्र प्रीत्यर्थ हनुमान्वडवानल स्तोत्र जपमहं करिष्ये ॥ 1 ॥

ॐ र्हां र्हीं ॐ नमो भगवते श्री महाहनुमंते प्रकटपराक्रम सकलदिङ् मण्ड्लयशोवितानधवलीकृत जगत्रितय वज्रदेह रुद्रावतार लंकापुरीदहन उमाअमलमंत्र उदधिबंधन दशशिरः कृतांतक सीताक्ष्वसन वायुपुत्र अंजनी गर्भसंभूत श्रीरामलक्ष्मणानंदकर कपिसैन्य प्राकार सुग्रीवसाह्या रणपर्वतोत्पाटन कुमारब्रह्मचारिन् गभीरनाद सर्वपापग्रहवारण सर्वज्वरोच्चाटन डाकिनीविध्वंसन ॥ 2 ॥

ॐ र्हां र्हीं ॐ नमो भगवंते महावीराय सर्वदुःखनिवारणाय ग्रहमंडळ सर्वभूतमंडल सर्वपिशाचमण्डलोच्चाटन भूतज्वर एकाहिकज्वर द्वयाहिकज्वर त्र्याहिकज्वर चातुर्थिकज्वर संपापज्वर विषमज्वर तापज्वर माहेक्ष्वर वैष्णवज्वरान् छिं धि छिं धि यक्षब्रह्मराक्षस भूतप्रेतपिशाचान् उच्चाटय् उच्चाटय ॥ 3 ॥

ॐ र्हां र्हीं ॐ नमो भगवते श्री महाहनुमते ॥ 4 ॥

ॐ र्हां र्हीं र्हूं र्हैं र्हौं र्हं: आं हां हां हां हां औं सौ. एहि एहि ॐ हं ॐ हं ॐ हं ॐ हं ॥ 5 ॥

ॐ नमो भगवते श्रीमहाहनुमते श्रवणचक्षुभूतानां शाकिनीडाकिनीना विषमदुष्टांना सर्वविषं हर हर ॥ 6 ॥

आकाशभुवनं भेदय भेदय छेदय छेदय मारय मारय शोषय शोषय मोहय मोहय ज्वालय ज्वालय

प्रहारय प्रहारय सकलमायां भेदय भेदय ॥ 7 ॥

ॐ र्हां र्हीं ॐ नमो भगवते महाहनुमते सर्व ग्रहोच्चाटन परबल क्षोभय क्षोभय ॥

सकल बंधनमोक्षणं कुरु कुरु ॥

शिरःशुलगुल्मशुल सर्वशूलान्निर्मूल्य निर्मूलय ॥ 8 ॥

नागपाशनंत्तवासुकित्तक्षककर्कोटक कालियान् यक्षकुल जलदगतबिलगत रात्रिंचर दिवाचर सर्वान्निर्विषं ॥ कुरु कुरु स्वाहा ॥ 9 ॥

राजभय चोरभय परमंत्र परयंत्र परतंत्र परविद्याश्छेदय छेदय ॥ 10 ॥

स्वमंत्र स्वयंत्र स्वतंत्र स्वविद्याः प्रकटय प्रकटय ॥ 11 ॥

सर्वारिष्टान्नाशय नाशय ॥ 12 ॥

सर्वशत्रून्नाशय नाशय  ॥ 13 ॥

असाध्यं साधय साधय ॥ 14 ॥

हुं फ़्ट् स्वाहा ॥

॥ इति बिभीषणकृतं हनुमद्वडवानलस्तोत्र संपूर्णम् ॥

 
|| ஸ்ரீ ஹனுமான் வட³வானல ஸ்தோத்ரம் ||

ஸ்ரீ க³ணேஸா²ய நம​: ||
ஓம் அஸ்ய ஸ்ரீ ஹனுமான் வட³வானல ஸ்தோத்ர மந்த்ரஸ்ய ||  ஸ்ரீராமசந்த்³ர ரிஷி​: ||  ஸ்ரீவட³வானல ஹனுமான் தே³வதா ||  மம ஸமஸ்த ரோக³ ப்ரஸ²மனார்த்த² ஆயுராரோக்³யைஸ்வர்யாபிவ்ருத்த³ர்த்த² ஸமஸ்த பாப க்ஷயார்த்த²ம் ஸீதாராமசந்த்³ர ப்ரீத்யர்த்த² ஹனுமான் வட³வானல ஸ்தோத்ர ஜப-மஹம் கரிஷ்யே ||  1 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே ஸ்ரீ மஹாஹனுமந்தே ப்ரகட பராக்ரம ஸகல தி³ங்மண்ட்³ல யஸோ²விதான, தவலீக்ருத ஜக³த்ரிதய வஜ்ரதே³ஹ ருத்³ராவதார லங்காபுரீத³ஹன உமா அமல மந்த்ர உத³தி-ப³ந்தன த³ஸ²ஸி²ர​: க்ருதாந்தக ஸீதாக்ஷ்வஸன வாயுபுத்ர அஞ்ஜனீ க³ர்ப்பஸம்பூத ஸ்ரீராம லக்ஷ்மணானந்த³கர கபிஸைன்ய ப்ராகார ஸுக்³ரீவஸாஹ்யா ரணபர்வதோத் பாடன குமார ப்³ரஹ்ம-சாரின் க³பீரநாத³ ஸர்வ-பாப-க்³ரஹ-வாரண ஸர்வ-ஜ்வரோச்சாடன, டா³கினீ வித்வம்ஸன ||  2 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே மஹாவீராய ஸர்வது³க்:க²  நிவாரணாய  க்³ரஹமண்ட³ல  ஸர்வபூதமண்ட³ல ஸர்வ பிசா²ச மண்ட³லோச்சாடன பூத-ஜ்வர-ஏகாஹிக-ஜ்வர-த்³வ்யாஹிக-ஜ்வர-த்ர்யாஹிக-ஜ்வர-சாதுர்தி²க ஜ்வர-ஸம்பாப ஜ்வர- விஷம-ஜ்வர-தாபஜ்வர-மாஹேக்ஷ்வர வைஷ்ணவ-ஜ்வரான் சி²ந்தி சி²ந்தி, யக்ஷ-ப்³ரஹ்ம-ராக்ஷஸ-பூத-ப்ரேத-பிசா²சான் உச்சாடய உச்சாடய ||  3 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே ஸ்ரீ மஹா ஹனுமதே ||  4 ||

ஓம் ஹ்ராம்  ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர: ஆம் ஹாம் ஹாம் ஹாம் ஹாம் ஓம் ஸௌம் ஏஹி ஏஹி ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ||  5 ||

ஓம் நமோ பக³வதே ஸ்ரீமஹாஹனுமதே ஸ்²ரவண சக்ஷுபூதானாம் ஸா²கினீ-டா³கினீனா விஷம-து³ஷ்டாம்னா ஸர்வ விஷம் ஹர ஹர || 6 ||

ஆகாஸ²புவனம் பேத³ய பேத³ய, சே²த³ய சே²த³ய, மாரய மாரய, ஸோ²ஷய ஸோ²ஷய மோஹய மோஹய ஜ்வாலய ஜ்வாலய ப்ரஹாரய ப்ரஹாரய ஸகலமாயாம் பேத³ய பேத³ய || 7 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே மஹாஹனுமதே ஸர்வ க்³ரஹோச்சாடன பரப³ல க்ஷோபய க்ஷோபய ||
ஸகல ப³ந்தன மோக்ஷணம் குரு குரு ||  ஸி²ர​: ஸு²ல-கு³ல்ம-ஸு²ல, ஸர்வ ஸூ²லாந்- நிர்மூலய நிர்மூலய || 8 ||

நாக³பாஸ² நந்த வாஸுகி தக்ஷ, கர்கோடக காலியான் யக்ஷகுல-ஜல-த³க³த-பி³ல-க³த ராத்ரிஞ்சர தி³வாசர ஸர்வாந் நிர்விஷம் || குரு குரு ஸ்வாஹா || 9 ||

ராஜபய சோரபய பரமந்த்ர பரய்ந்த்ர பரதந்த்ர பரவித்³யாஸ்² சே²த³ய சே²த³ய || 10 ||

ஸ்வமந்த்ர ஸ்வயந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வவித்³யா​: ப்ரகடய ப்ரகடய || 11 ||
ஸர்வாரிஷ்டான் நாஸ²ய நாஸ²ய || 12 ||

ஸர்வ ஸ²த்ரூன் நாஸ²ய நாஸ²ய  || 13 ||

அஸாத்யம் ஸாதய ஸாதய       || 14 ||

ஹும் பட் ஸ்வாஹா ||

||  இதி ஸ்ரீவிபீஷணக்ருதம் ஹனுமத்³ வட³வானல ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

வட்வானல்  என்றால் சமுத்திரத்தின் நடுவில் வசிக்கும் நெருப்பு. வடவாக்கினி என்று தமிழில் கூறுவதுண்டு. அதன் உணவு சமுத்திரத்தின் தண்ணீர்.

ஓம் என்னும் பிரணவத்துடன் கூடிய அனுமான் மந்திர வட்வானல் ஸ்தோத்ரத்தின் ரிஷி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, தேவதை - ஸ்ரீ வட்வானல் ஹனுமான், சர்வ ரோக நிவாரணம், தீர்க்க ஆயுள், ஐஸ்வர்யம்,  ஆரோக்யம், சகல வித பாப நிவர்த்தி அனைத்தையும் அருளும், சீதா ராமச்சந்திர மூர்த்திக்கு பிரியமான அனுமான் வட்வானல ஸ்தோத்ரத்தை ஜபிக்கிறேன்..

ஓம் ஹ்ராம் ஹ்ரீம், ஓம் நமோ பகவதே என்னும் மந்திர உச்சாடனத்தால் மஹா பராக்கிரமசாலியான,  புகழ் அனைத்து திக்குகளிலும் பரவியுள்ள,  இவ்வுலகத்தின் ஹ்ருதயமாக விளங்கும் அனுமானை வணங்குகிறேன்.

வஜ்ர தேகம் பொருந்தியவர், ருத்ரனாகிய சிவபெருமானின்  அம்சாவதாரம், இலங்கையைத் தகனம் செய்தவர், உமா மகேஷ்வர மந்திரக் கடலின் திறவுகோலாகத் திகழ்பவர், பத்து தலை இராவணனை அழித்தவர், சீதையின் ப்ராணனை ரட்சித்து நம்பிக்கை ஸ்வாசத்தை அளித்தவர், வாயுவின் புத்ரர், மாதா அஞ்சனையின் மைந்தன், ராம லக்க்ஷமணர்களுக்கு மகிழ்ச்சியை கொணர்ந்தவர், வானர சேனைக்குத் தலைவராக வழி நடத்திச் செல்பவர், சுக்ரீவனுக்கு சகாயம் செய்தவர், ரத்னங்களால் ஆன பர்வதத்திலிருந்து தோன்றியவர்.அத்தகைய சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.

குமார பிரம்மச்சாரி (இள பிரம்மச்சாரி),  கம்பீர நாத த்வனியை ஒத்த குரலுடையவர், சர்வ பாபங்கள் மற்றும் க்ரஹ பீடைகளிலிருந்து நிவர்த்தி அருளுபவர், அனைத்து ஜ்வர பீடைகளிலிருந்து நிவாரணம் தருபவர், சகல வித டாகினி துன்பங்களை அழிப்பவர், அத்தகைய சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் என்னும் மந்திர உச்சானடத்தால் ஹனுமானை வணங்குகிறேன். வீர தீர பராக்கிரமர், துன்பத்தால் ஏற்படும் வருத்தத்தை நீக்குபவர்,  நவக்ரஹங்கள், பூத, ப்ரேத தோஷங்களால் விளையும் சங்கடங்களை நீக்குபவர்,  பூத ப்ரேத பயத்தால் விளையும் ஜ்வர தோஷம், கவலை, வருத்தம், சங்கடங்கள், மஹாவிஷ்ணு மற்றும் பரமேஸ்வரரின் கோபத்தால் ஏற்படும் ஜ்வரங்களிலிருந்து நிவர்த்தி அழிப்பவர் , யக்ஷர்கள், ப்ரஹ்ம ராட்சஸர்கள், பூத, ப்ரேத, பைசாசம் ஆகியவைகளை அழிப்பவர். அத்தகைய மந்த்ர சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.

ஓம் ஹ்ராம் ஸ்ரீம் ஓம் என்னும் மந்தர உச்சாடனத்தால் மஹா பலசாலியான ஹனுமானை வணங்குகிறேன். ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரோம், ஹ்ரா, ஆம் ஹாம் ஹாம் ஹாம் ஹாம் ஓம் ஸௌம் ஏஹி ஏஹி ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் என்பது வட்வானல ஹனுமானின் பீஜ மந்த்ரம்.

பூத பிசாசுகளின் கண்களையும், காதுகளையும் அழிப்பீர்!!!, சாகினி, டாகினி, தீய மனிதர்கள், அனைத்து விஷங்களையும் அழிப்பீர்!!.

ஆகாயம், பூமி இவற்றை உடைப்பீர்!.

சகல மாயங்களையும் வெட்டுவீர், பலமிழக்க செய்வீர், மோஹிக்கச்செய்து எரித்து அழிப்பீர்!.

ஓம் ஹ்ராம், ஹ்ரீம் ஓம் என்னும் மந்த்ர உச்சாடனத்தால் தங்களை வணங்குகிறேன். நவக்கிரகங்களால் விளையும் அனைத்து கேடுகளையும் எதிர்த்து அழித்து என்னை காப்பீர்!!!.

சகல பந்த பாசங்களிலிருந்தும் எனக்கு முக்தி அளிப்பீர்!.

முடக்குவாதம், கணுக்காலில் ஏற்படும் வீக்கம்,  ஆகியவற்றிலிருந்து பூரண நிவாரணத்தை அளிப்பீர்!.

கொடிய விஷ சர்ப்பங்களான அனந்தன், வாசுகி, தக்க்ஷன், கார்கோடகன், காளிங்கன், யக்ஷ‌ர், நீரில் வாழும் மிருகங்கள்,  குகையில் வாழும் மிருகங்கள்,  இரவில் மட்டும் நடமாடும் மிருகங்கள், பகலில் மட்டும் நடமாடும் மிருகங்கள் ஆகியவற்றால் ஏற்படும் விஷ பந்தங்களை (தளைகள்), ஆபத்துக்களை முறியடித்து பெரும் துன்பத்திலிருந்து காப்பீர்!!!.

ராஜ பயம், திருடர் பயம், தீய மந்த்ர, யந்தர, தந்த்ர ப்ரயோகங்களை அழித்து என்னை காப்பீர்!.

தங்களின் பரிபூரண மந்த்ர, யந்தர, தந்த்ர ஞானத்தை எனக்கு வெளிப்படுத்தி அருள்வீர்!.

சகல அரிஷ்டங்களையும்(குறைகளையும்) நாசம் செய்வீர்!.
அனைத்து எதிர்ப்புகளையும் அழித்து காப்பீர்!.
முடியாததை முடித்து காட்டுவீர்!.
ஹூம் ஃபட் ஸ்வாஹா
விபீஷணரால் இயற்றப்பட்ட ஹனுமான் வட்வானல ஸ்தோத்ரம் முற்றிற்று.


Wednesday, May 1, 2013

Bhima Roopi Hanuman Stotra - பீமரூபி ஹனுமான் ஸ்தோத்ரம்

 ॥ भीमरूपी स्तोत्र॥
भीमरूपी महारुद्रा वज्र हनुमान मारुती।
वनारि अन्जनीसूता रामदूता प्रभंजना ॥१॥
महाबळी प्राणदाता सकळां उठवी बळें ।`
सौख्यकारी  दुःखहारी धूर्त वैष्णव गायका ॥२॥
दीनानाथा हरीरूपा सुंदरा जगदांतरा।
पातालदेवताहंता भव्यसिंदूरलेपना ॥३॥
लोकनाथा जगन्नाथा प्राणनाथा पुरातना ।
पुण्यवंता पुण्यशीला पावना परितोषका ॥४॥
ध्वजांगें उचली बाहो आवेशें लोटला पुढें ।
काळाग्नि काळरुद्राग्नि देखतां कांपती भयें ॥५॥
ब्रह्मांडें माइलीं नेणों आंवळे दंतपंगती ।
नेत्राग्नि चालिल्या ज्वाळा भ्रकुटी तठिल्या बळें ॥६॥
पुच्छ तें मुरडिलें माथां किरीटी कुंडलें बरीं ।
सुवर्णकटिकांसोटी घंटा किंकिणि नागरा ॥७॥
ठकारे पर्वतासा नेटका सडपातळू ।
चपळांग पाहतां मोठें महाविद्युल्लतेपरी ॥८॥
कोटिच्या कोटि उड्डणें झेपावे उत्तरेकडे ।
मंदाद्रीसारिखा द्रोणू क्रोधें उत्पाटिला बळें ॥९॥
आणिला मागुती नेला आला गेला मनोगती ।
मनासी टाकिलें मागें गतीसी तूळणा नसे ॥१०॥
अणूपासोनि ब्रह्मांडायेवढा होत जातसे ।
तयासी तुळणा कोठें मेरुमांदार धाकुटें ॥११॥
ब्रह्मांडाभोंवते वेढे वज्रपुच्छें करूं शके ।
तयासी तुळणा कैंची ब्रह्मांडीं पाहतां नसे ॥१२॥
आरक्त देखिलें डोळां ग्रासिलें सूर्यमंडळा ।
वाढतां वाढतां वाढे भेदिलें शून्यमंडळा ॥१३॥
धनधान्य पशुवृद्धि पुत्रपौत्र समग्रही ।
पावती रूपविद्यादि स्तोत्रपाठें करूनियां ॥१४॥
भूतप्रेतसमंधादि रोगव्याधि समस्तही ।
नासती तूटती चिंता आनंदे भीमदर्शनें ॥१५॥
हे धरा पंधराश्लोकी लाभली शोभली भली ।
दृढदेहो निःसंदेहो संख्या चंद्रकलागुणें ॥१६॥
रामदासीं अग्रगण्यू कपिकुळासि मंडणू ।
रामरूपी अन्तरात्मा दर्शने दोष नासती ॥१७॥
॥ इति श्री रामदासकृतं संकटनिरसनं नाम श्री मारुतिस्तोत्रम्‌ संपूर्णम्‌॥
    
பீமரூபி ஸ்துதி : ஸமர்த்த ராமதாஸர் 
 (மூலம் : மராட்டிய மொழி)
மஹாராஷ்டிர மாநிலத்தில் தோன்றிய மஹான் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக கருதப்பட்டவர். மாருதியைப் பிரத்யக்ஷமாகக் கண்டு அவர் மூலமாக ஸாக்ஷாத் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று  'த்ரயோதஸாக்ஷரி' யான 'ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்கின்ற 33 அக்ஷரங்களால் ஆன திவ்ய மஹாமந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர்.

அம்மஹானால் இயற்றப்பட்ட இந்த பீமரூபி ஸ்துதியை "த்ரயோதஸாக்ஷரி" மஹாமந்திர ஜபம் செய்து ஆழ்ந்த பக்தியுடனும் அதிக நம்பிக்கையுடனும் மூன்று தடவை வீதம் 45 நாட்களுக்கு பாராயணம் செய்து வந்தால் நினைத்த காரியம் சுலபமாகவும் சீக்கிரமாகவும் கைகூடும். தொடர்ந்து தினம் ஜபித்து வந்தால் தீராத கஷ்டங்கள் எல்லாம் நீங்கி இஹபர சுகத்துடன் வளமாக வாழலாம். 
||  பீ⁴மரூபீ ஸ்தோத்ர || 
பீ⁴மரூபீ மஹாருத்³ரா வஜ்ர ஹனுமான மாருதீ|
வனாரி அன்ஜனீஸூதா ராமதூ³தா ப்ரப⁴ஞ்ஜநா ||1||
மஹாப³லீ ப்ராணதா³தா ஸகளாம்ʼ உட²வீ ப³ளேம்ʼ|
ஸௌக்²யகாரீ  து³:க²ஹாரீ தூ⁴ர்த வைஷ்ணவ கா³யகா ||2||
தீ³னநாதா² ஹரீரூபா ஸுந்த³ரா ஜக³த³ந்தரா|
பாதாள தே³வதாஹந்தா ப⁴வ்யஸிந்தூ³ர லேபநா ||3||
லோகநாதா² ஜக³ன்னாதா² ப்ராணநாதா² புராதனா|
புண்யவந்தா புண்யஸீ²லா பாவனா பரிதோஷகா ||4||
த்⁴வஜாங்கே³ம்ʼ உசலீ பா³ஹோ ஆவேஸே²ம்ʼ லோடலா புடே⁴ம்ʼ |
காலாக்³னி கால‌ருத்³ராக்³னி தே³க²தாம்ʼ காம்பதீ ப⁴யேம்ʼ ||5||
ப்³ரஹ்மாண்டே³ʼ மாயிலீʼ நேணோம்ʼ ஆʼவளே த³ந்த பங்க³தீ |
நேத்ராக்³னி சாலில்யா ஜ்வாலா ப்⁴ருகுடீ தாடி²ல்யா ப³ளேம்ʼ ||6||
புச்ச² தேம்ʼ முரடி³லேʼ மாதா²ʼ கிரீடீ குண்ட³லேʼ ப³ரீʼ |
ஸுவர்ண கடி காஞ்ʼஸோடீ க⁴ண்டா கிங்கிணி நாக³ரா ||7||
ட²காரே பர்வதா ஐஸா நேடகா ஸட³ பாதளூ |
சபளாங்க³ பாஹதாம்ʼ மோடே²ம்ʼ மஹாவித்³யுல்லதேபரீ ||8||
கோடீச்யா கோடி உட்³டா³ணேம்ʼ ஜே²பாவே உத்தரேகடே³|
மந்தா³த்³ரீ ஸாரிகா² த்³ரோணூக்ரோதே⁴ம்ʼ உத்பாடிலா ப³ளேம்ʼ ||9||
ஆணிலா மாருதி நேலா ஆலா கே³லா மனோக³தீ |
மனாஸீ டாகிலேம்ʼ மாகே³ம்ʼ க³தீஸீ தூளணா நஸே ||10||
அணூபாஸோனி ப்³ரஹ்மாண்டா³ எவடா⁴ ஹோத ஜாதஸே |
தயாஸீ துளணா கோடே²ம்ʼ மேருமந்தா³ர தா⁴குடேʼ ||11||
ப்³ரஹ்மாண்டா³போ⁴ʼவதே வேடே⁴ வஜ்ரபுச்சே²ம்ʼ காலும்ʼ ஸ²கே |
தயாஸீ துளணா கைஞ்சீ ப்³ரஹ்மாண்டீ³ம்ʼ பாஹதாம்ʼ நஸே ||12||
ஆரக்த தே³கி²லேம்ʼ டோ³ளாம்ʼ க்³ராஸிலேம்ʼ ஸூர்யமண்ட³லா |
வாட⁴தாம்ʼ வாட⁴தாம்ʼ வாடே⁴ பே⁴தி³லேம்ʼ ஸூ²ன்யமண்ட³லா ||13||
த⁴னதா⁴ன்ய பஸு²வ்ருʼத்³தி⁴ புத்ரபௌத்ர ஸமக்³ரஹீ |
பாவதீ ரூபவித்³யாதி³ ஸ்தோத்ரபாடே²ம்ʼ கரூனியாம்ʼ ||14||
பூ⁴தப்ரேதஸமந்தா⁴தி³ ரோக³வ்யாதி⁴ ஸமஸ்தஹீ |
நாஸதீ தூடதீ சிந்தா ஆநந்தே³ பீ⁴மத³ர்ஸ²னேʼ ||15||
ஹே த⁴ரா பந்த⁴ரா ஸ்²லோகீ லாப⁴லீ ஸோ²ப⁴லீ ப⁴லீ |
த்³ருʼட⁴ தே³ஹோ நி:ஸந்தே³ஹோ ஸங்க்²யா சந்த்³ரகலாகு³ணேʼ ||16||
ராமதா³ஸீʼ அக்³ரக³ணூ கபிகுலாஸி மண்ட³ணூ|
ராமரூபீ அந்தராத்மா த³ர்ஸ²னே தோ³ஷ நாஸதீ ||17||

|| இதி ஸ்ரீ ராமதா³ஸக்ருʼதம்ʼ ஸங்கட நிரஸனம்ʼ நாம ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

1. மஹத்தான ரூபத்தையுடையவரே, மஹாருத்ராம்சமான வைரம் பாய்ந்த சரீரத்தோடு கூடின ஹனுமந்தா, வனத்தில் சஞ்சரிப்பவரே, அஞ்சனா தேவியின் புத்ரரும் வாயு அம்சமுமான ராமதூதா.

2. மஹாபலமுடையவரே, ப்ராணனைக் கொடுப்பவரே, அனைவரின் உற்சாகத்தைத் தூண்டும் சக்தி வாய்ந்தவரே,  சகலருக்கும் துக்கத்தைப் போக்கி சுகத்தைக் கொடுப்பவரே, தீவிர வைஷ்ணவரே, பாடும் திறமை கொண்டவரே.

3. ஏழைகளைக் காப்பவரே, வானர ரூபமுடையவரே, அழகு வாய்ந்தவரே, லோகத்திற்கு விலக்ஷணமானவரே, பாதாள தேவதைகளைக் கொன்றவரே,  ராமனை ரக்ஷிக்க அஹிமஹி ராவணர்களைக் கொன்றவரே, சிந்தூரத்தை நிறையப் பூசிக் கொள்பவரே.

4. உலகுக்கெல்லாம் நாயகனே, இன்னும் ஜகத்துக்கெல்லாம் நாயகனே, பிராணனுக்கும் அதிபதியே, மிகப் பழமையானவரே, புண்யவானே, புண்ய நடத்தையுடையவரே, உத்தம பாவனையுடன் பிறரைச் சந்தோஷிக்கச் செய்பவரே.

5. கையைத் த்வஜம் (கொடி) போலத் தூக்கி ஆவேசத்தோடு முன் தள்ளிச் செல்பவர். காலாக்னியும், காலருத்ராக்னியும் அவரைக் கண்டு பயத்தால் நடுங்குகின்றன.

6. ப்ரம்மாண்டத்தை அளந்தவரோ என்னவோ தெரியவில்லை. பற்களைக் கடித்துக் கொண்டு கண்களிலிருந்து நெருப்பு ஜ்வாலைத் தெரிக்கப் பலமாக நெற்றியை நெரிப்பவர்.

7. தன் வாலைத் தலைவரையில் வளைத்து அழகிய குண்டலங்களையும், கீரிடத்தையும் அணிந்து இடுப்பில் பொன் ஒட்டியாணத்தையும் அணிந்து தங்கக் கச்சத்துடன் செல்லும் போது நகரா (பேரிகை) அடிப்பது போல ஒட்டியாணத்தின் மணிகள் ஒலிக்கின்றன்.
 
8. வாலினால் பர்வதத்தை நன்றாக உதைத்துத் தள்ளி ஆகாயத்தில் செல்லும் போது அவருடைய பளபளப்பாக ஜ்வலிக்கும் சரீரம் மகத்தான மின்னல் கொடி போல் இருக்கிறது.

9. கோடிக்கணக்கான தாண்டுதலைத் தாண்டி வடக்கு திசை சென்று மந்த்ராத்ரியிலிருந்த த்ரோண பர்வதத்தை க்ரோத ஆவேசத்துடன் வேறுபடுத்தினார்.

10. மலையைக் கொண்டு வந்து மறுபடியும் கொண்டு போய் வைத்துவிட்டு மனோவேகமாய்த் திரும்பினாரே, அச்சமயம் மனோவேகம் போதாமல் போனதால் அதையே பின் விட்டு போன வேகத்தை எப்படி அளவிட முடியும்.

11. சிறு வடிவிலிருந்து ப்ரம்மாண்டமான ரூபத்தை எடுத்து வண்ணம் கோளகம் முழுவதும் வ்யாபித்தவராய் வஜ்ரமான வாலைச் சுற்றிக் கொண்டார்.

12. அவருக்கு உபமானம் எது?  மேரு மந்த்ர பர்வதமெல்லாம் மிகச் சிறியவை. இந்தப் பிரம்மாண்டம் முழுதும் அவரை ஒப்பிடப் வேறு எதுவும் இல்லை.

13. சிவப்பான சூர்ய மண்டலத்தை எவர் விழுங்கினாரோ, மேலும் விஸ்வரூபம் எடுத்த போது வளர வளர பிரம்மாண்டத்தையே போதித்தாரே, அவரே ஸ்ரீ ஆஞ்சநேயர்.

14. பூத, பிரேத ஸம்பந்தங்கள்,  ரோகம், வியாதி முதலியன, கவலை முதலிய கஷ்டங்கள் இந்த பீமரூபி ஸ்தோத்திரத்தினால் நசிந்து இருப்பிடம் தெரியும். தரிசனத்தினால் ஆனந்தமுண்டாகும்.

15. இந்த சந்திரகலை (பிறை) போன்ற பதினைந்து ஸ்லோகங்களைக் கடைபிடியுங்கள். அவைகளை ஜபிப்பதனால் லாபமும், அழகும், த்ருடதேஹமும் ஏற்படும். இதில் ஐயமில்லை.

16. இதைத் துதிப்பதால் செல்வம், தானியங்கள், வம்சவிருத்தி, நலல் ஸ்வபாவம், ரூபம், வித்யை முதலியன கிடைக்கும்.

17.  ஸமர்த்த ராமதாஸர் கபிகுல பூஷணமான ஆஞ்சநேயரை உபாசிப்பதில் முதல்வர். அந்தர்யாமியான ராமரைத் தரிசிப்பதாலும், தியானிப்பதாலும் எல்லாவிதமான தோஷங்களும் விலகும்.


Saturday, April 6, 2013

Sankat Mochan Hanuman Aarti - சங்கடமோசன ஹனுமான் ஆரத்தி

Courtesy :- Google Images
श्री हनुमान जी की आरती
आरती कीजै हनुमान लला की ।
दुष्ट दलन रघुनाथ कला की ॥

जाके बल से गिरिवर काँपे, रोग दोष जाके निकट न झाँके।
अंजनि पुत्र महा बलदायी, संतन के प्रभु सदा सहायी॥
 
आरती कीजै हनुमान लला की ।
दे बीड़ा रघुनाथ पठाये, लंका जाय सिया सुधि लाये ।
लंका सौ कोटि समुद्र सी खाई, जात पवनसुत बार न लाई ॥ 
आरति कीजै हनुमान लला की ।
लंका जारि असुर संघारे, सिया रामजी के काज संवारे ।
लक्ष्मण मूर्छित पड़े सकारे, आन संजीवन प्राण उबारे ॥ 
आरती कीजै हनुमान लला की ।
पैठि पाताल तोड़ि यम कारे, अहिरावन की भुजा उखारे ।
बाँये भुजा असुरदल मारे, दाहिने भुजा संत जन तारे ॥ 
आरति कीजै हनुमान लला की ।
सुर नर मुनि जन आरति उतारे, जय जय जय हनुमान उचारे ।
कंचन थार कपूर लौ छाई, आरती करती अंजना माई ॥ 
आरती कीजै हनुमान लला की ।
जो हनुमान जी की आरति गावे, बसि वैकुण्ठ परम पद पावे ।
आरती कीजै हनुमान लला की। दुष्ट दलन रघुनाथ कला की ॥

ஸ்ரீ ஹனுமான ஜீ கீ ஆரதீ

ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ | 
து³ஷ்ட த³லன ரகு⁴னாத² கலா கீ || 

வாருங்கள். எல்லோரும் நமக்குப் பிரியமான ஸ்ரீஹனுமானுக்கு ஆர‌த்தி செய்வோம். அவர் துஷ்டர்களை அழிப்பவர். ரவிகுல திலகமான ஸ்ரீராமனின் அங்கம் போன்றவர்.

ஜாகே ப³ல் ஸே கி³ரிவர காம்பே, ரோக்³ தோ³ஷ் ஜாகே நிகட ந ஜா²ங்கே | 
அஞ்ஜனி புத்ர மஹா ப³லதா³யீ, ஸந்தன கே ப்ரபு⁴ ஸதா³ ஸஹாயீ || 
....... ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ |

அவரின் (ஸ்ரீஹனுமானின்) வலிமையைக் கண்டு மிகப்பெரிய மலைகளும் நடுங்கும்.  ரோகங்கள் (பிணி), தோஷங்கள் அவரை அண்டாது.  ஸ்ரீஹனுமான், பக்தர்களுக்குப் பெரும் பலத்தை அளித்து காப்பவர்.  சாதுக்கள், ரிஷி, முனிவர்களுக்கு எப்போதும் துணையாக இருந்து சேவை புரிபவர். மஹா பலவானும் அஞ்சனையின் மைந்தனுமான‌ ஸ்ரீஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.

தே³ பீஃ‌டா³ ரகு⁴னாத² படா²யே, லங்கா ஜாய ஸியா ஸுதி⁴ லாயே | 
லங்கா ஸௌ கோடி ஸமுத்³ர ஸீ கா²யீ, ஜாத பவனஸுத பா³ர ந லாயீ || 
...... ஆரதி கீஜை ஹனுமான லலா கீ |

சீதையைத் தேடி வருவதற்காக, ரகுநாதன் தேர்ந்தெடுத்தவர் ஸ்ரீஹ‌னுமானே. தென் திசையின் கோடியில் நின்று ராம நாம ஜபத்தின் மகிமையால் கண் இமைக்கும் நேரத்தில் சமுத்திரத்தை கடந்து, சீதையைக் கண்டறிந்த‌ நற்செய்தியைக் கொணர்ந்த வாயுபுத்ர ஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.
  
லங்கா ஜாரி அஸுர ஸங்கா⁴ரே, ஸியா ராமஜீ கே காஜ ஸம்ʼவாரே | 
லக்ஷ்மண மூர்சி²த பஃ‌டே³ ஸகாரே, ஆன ஸஞ்ஜீவன ப்ராண உபா³ரே ||  ......ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ | 

த‌ன் (ஸ்ரீஹனுமானின்) வாலில், இராவணன் வைத்த தீயால், இலங்கையை தகனம் செய்து, அசுரர்களை அழித்து, 'தன் வினை தன்னைச் சுடும்'  என்று பாடம் புகட்டியதோடு அல்லாமல், ஸ்ரீராமபிரானின் வலிமையையும் அசுர வேந்தன் அறியச் செய்த ராஜதந்திரர், போரில் இளவல் இலக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்து விழுந்த போது, சஞ்சீவீனி மலையை கொணர்ந்து அவர் ப்ராணனைக் காத்தவர். இத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.

பைடி² பாதால தோஃ‌டி³ யம காரே, அஹிராவன கீ பு⁴ஜா உகா²ரே | 
பா³ம் ̐யே பு⁴ஜா அஸுரத³ல மாரே, தா³ஹினே பு⁴ஜா ஸந்த ஜன தாரே || 
....... ஆரதி கீஜை ஹனுமான லலா கீ | 

பாதாளத்தில், யமபுரியிலிருக்கும் சிறையின் வாயிற்கதவுகளை நொறுக்கி, மயில் ராவணனின் கைகளை உடைத்து எறிந்தவர், தனது இடது  கரத்தால் அசுரர்களை அழிப்பவர், தனது வலது  கரத்தால் சாதுக்கள், ரிஷிகள், முனிவர்கள், தனது பக்தர்கள் ஆகியோரைக் காப்பவரான ஸ்ரீராமதூத  ஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.

ஸுர நர முனி ஜன ஆரதி உதாரே, ஜய ஜய ஜய ஹனுமான உசாரே |
கஞ்சன தா²ர கபூர லௌ சா²யீ, ஆரதீ கரதீ அஞ்ஜனா மாயீ ||  
..........ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ | 

தங்க ஆரத்தித் தட்டின் நடுவில் கற்பூர தீபம் ஊஞ்சலாட, அன்னை அஞ்சனா உனக்குச் செய்யும் ஆரத்தியின் அழகைக் காண  தேவர், முனிவர், பக்தர்கள் என்று அனைவரும் கூடி நின்று உன் புகழைப் பாடுகின்றனர்.  "ஜெய் ஜெய் ஜெய் அனுமான்" என்று  அவர்கள் எழுப்பும் நாமகோஷம் எங்கும் நிறைந்து ஒலிக்க, அஞ்சனையின் மைந்தன் ஹ‌னுமானுக்கு நாமும் ஆரத்தி செய்வோம். 

 ஜோ ஹனுமான ஜீ கீ ஆரதி கா³வே, ப³ஸி வைகுண்ட² பரம பத³ பாவே | 
ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ |  து³ஷ்ட த³லன ரகு⁴னாத² கலா கீ || 

ஹனுமானுக்கு ஆரத்தி செய்பவர்கள், ஸ்ரீராமபிரானாக அவதரித்த ஸ்ரீமந் மஹாவிஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தை அடைந்து மோட்சம் பெறுவர். ஆகவே, வாழ்வின் நற்பேற்றை அளிக்கும் ஸ்ரீஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.