Thursday, April 24, 2014

Ekadashi Vrat Katha – Varuthini Ekadashi - வரூதினீ ஏகாதசி விரத கதை

Courtesy:- Google Images
The Ekādhaśī which comes in the dark fortnight of the month of Vaisākha (March-April) is most auspicious and magnanimous Varūthinī Ekādhaśī.
  • Whosoever observes a complete fast on this sacred day has his sins completely removed, obtains continuous happiness, and achieves all good fortune.
  • Whatever merit one obtains by performing austerities and penances for ten thousand years is achieved by a person who observes Varūthinī Ekādhaśī.
  • Fasting on Varūthinī Ekādhaśī makes even an unfortunate woman fortunate.
  • The merit one achieves by donating a great amount of gold during a solar eclipse at Kuruketra is gained by one who observes this one Ekādhaśī with love and devotion, and certainly attains his goals in this life and the next. In short, this Ekādhaśī is pure and very enlivening and the destroyer of all sins.
  • Upon anyone who observes it, this Ekādhaśī bestows material enjoyment in this life and liberation after the death of this present body. It destroys the sins of all and saves people from the miseries of repeated rebirth.  
Courtesy: http://madhwasaints.wordpress.com
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹ‌ரே ஹரே

வரூதினீ ஏகாதசி
(வைகாசி மாதம் - கிருஷ்ண பட்சம்)

ஏப்ரல் மாதம், 25ம் தேதி, வெள்ளிக்கிழமை, வைகாசி மாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை வரூதினீ ஏகாதசியாக ‌கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம். 

அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே பிரபு !, தாங்கள் தயைகூர்ந்து வைகாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியம், அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், விரத விதிமுறைகள், விரதத்தை அனுஷ்டிப்பதால் விளையும் நற்பலன்கள் ஆகியவற்றைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்க வேண்டுகிறேன்." என்றான்.

ஸ்ரீ கிருஷ்ணர்," ஹே குந்தி நந்தனா! வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, வரூதினீ ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அளவில்லா செளபாக்கியம் கிடைக்கும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதர்களின் சர்வ பாவங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் (सधवा) வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினை பெறுவர். வரூதினீ ஏகாதசியின் புண்ணியபலனின் பிரபாவத்தால் ராஜா மாந்தாதா ஸ்வர்க்கலோகப் பிராப்தியை பெற்றார். இஷ்வாகு அரச பரம்பரையில் வந்த மஹாராஜா தந்துமாரா, சிவபெருமானின் சாபத்தால் தான் பெற்ற குஷ்டரோகத்திலிருந்து விடுதலை பெற்று, இவ்விரத மேன்மையால் ஸ்வர்க்க லோகப் பிராப்தியும் பெற்றார்.

வரூதினீ ஏகாதசி விரத புண்ணியபலன், பத்தாயிரம் (10,000) வருடங்கள் தவம் செய்வதால் கிடைக்கப் பெறும் புண்ணியத்திற்கு இணையானதாகும். இவ் ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலன், குருக்ஷேத்ர பூமியில் சூரிய கிரஹண காலத்தில் சொர்ண (தங்கம்) தானம் ஒரு முறையாவது செய்வதால் கிடைக்கப் பெறும் புண்ணியத்திற்கு சமமானதாகும்.  உத்தமமான இவ் ஏகாதசி விரதத்தின் புண்ணிய மஹிமையால், மனிதர்கள் இவ்வுலகில் அல்லாது பரலோகத்திலும் சுகபோகங்களை அனுபவித்துடன்,முடிவில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர். 

"ஹே ராஜன் ! இவ் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், இவ்வுலகில் சுக போகங்களுடன் வாழ்வதுட‌ன், இறுதியில் முக்தியும் பெறுவர். சாஸ்திரங்களில், குதிரை(அஸ்வ) தானத்தை விட யானை(கஜ) தானம் மேலானது எனவும், யானை தானத்தை விட, பூமி தானம் மேலானது எனவும், பூமி தானத்தை விட,  தில (எள்) தானம், மேலானது எனவும், தில தானத்தை விட சொர்ணதானம் பன்மடங்கு மேலானது எனவும், தான தர்மங்களைப் பற்றி குறிப்பிடும் போது கூறியுள்ளனர். மேலும், சொர்ண தானத்தை விட அன்னதானம்  மேன்மையானதும், சிரேஷ்டமானதும் ஆகும் என்றும் கூறியுள்ளனர். இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை. அன்னதானம் பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

தகுதியானவருக்கு கன்யாதானம் செய்து கொடுப்பது, அன்னதானம் செய்வதற்கு இணையானது என்றும், அறியாமையில் உழல்பவருக்கு ஜீவன் முக்திக்கு வழிகோலும் ஆன்மீக அறிவினைப் புகட்டுவது அதை விட மேலானது என்றும் சாஸ்திரம் அறிந்த சான்றோர் கூறியுள்ளனர்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், கோதானம் அன்னதானத்திற்கு இணையானது என்று கூறியுள்ளார்.  கன்யாதானம், அன்னதானம், கோதானம் மற்றும் ஆன்மீக அறிவு புகட்டுதல் முதலிய உத்தமமான நற்கர்மங்களால் கிட்டும் ஒருங்கிணைந்த புண்ணிய பலனை, ஒருவர் வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதின் மூலம் பெறுவர். 

பேராசை, சோம்பல், வேலை செய்ய உடல் வணங்காமை இவை காரணமாக, தன் மகளின் செல்வத்தில் வாழ்பவர், செல்வத்தை அனுபவிப்பவர் பிரளய காலம் வரை நரகத்தில் தண்டனை அனுபவிப்பதுடன், மறு ஜென்மத்தில் இழி (बिलाव) பிறப்பெடுத்து கஷ்டமும், துக்கமும் அனுபவிப்பர்.   ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் ஹோம அக்னி வளர்த்து, இறைவணக்கத்துடன், மந்திரங்கள் ஒலிக்க, அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்ட கன்னியை தகுதியானவருக்கு கன்யாதானம் செய்வதனால் கிட்டும் புண்ணியத்தைக் கணக்கிட சித்ரகுப்தனாலும் இயலாது. அத்தகைய மேன்மையான கன்யாதான புண்ணிய பலனை, வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் எளிதில் பெறலாம்.  

வருதினீ ஏகாதசி விரதத்தை மேற்கொள்வோர் முதல் நாளான தசமி திதியிலிருந்து கீழே குறிப்பிட்டுள்ளனவற்றைத் தவிர்க்க வேண்டும்.
1. பெல் மெட்டலினால் (Bell Metal)  செய்யப்பட்ட பாத்திரத்திலிருந்து உணவு உட்கொள்ளுதல்
2. மாமிசம்
3. மசூர் பருப்பு
4. கொண்டைக்கடலை
5. कोदों 
6. கீரை மற்றும் காய்கறிகள்
7. தேன்
8. மற்றவர் வீட்டில் அல்லது வெளியில் சமைத்த உணவு 
9. இரண்டு முறை உணவு உட்கொள்ளுதல். 
மேலும்,  விரதம் பூர்த்தி ஆகும் வரை பூர்ண பிரம்மசரியம் பேணுதல் வேண்டும்.

இரவு முழுவதும் கண் விழித்து, பாகவதம், புராணங்கள் ஸ்ரவணம் செய்தல், பஜனை, கீர்த்தனை என்று இருத்தல் வேண்டும். பிறரை நிந்தனை செய்தல்,  சூதாட்டம், கேளிக்கை, பகல் உறக்கம், வெற்றிலை பாக்கு, எண்ணெய் மற்றும் உணவு உண்ணுதலும் தவிர்க்கப்பட வேண்டும். துஷ்டர் மற்றும் பாவம் புரிந்தோரிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும். கோபம் கொள்வதும், பொய் பேசுதலும் கூடாது.

ஹே ராஜன்!, எவர் ஒருவர் ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாக கடைப்பிடிக்கிறாரோ, அவருக்கு ஸ்வர்க்கலோகப் பிராப்தி கிட்டும். மனிதர்கள் பாவவினைகளைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். வருதினீ ஏகாதசி விரத மஹாத்மியத்தை ஸ்ரவணம் செய்வதால் ஒரு ஆயிரம் கோதானம் (பசு) செய்த புண்ணியம் கிட்டப் பெறும். இவ் ஏகாதசி விரத புண்ணியமானது புனித நதியான கங்கையில் நீராடுவதால் கிட்டப் பெறும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானதாகும்.

கதாசாரம்
தன் உணர்ச்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் ஆதாரமாகும். அனைத்துவித நடவடிக்கைகளிலும் சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல், சுகத்திற்கும்  சௌபாக்கியத்திற்கும் வளர்ச்சியை கொடுக்கும். சுயக்கட்டுப்பாடு இல்லையெனில் அவர் மூலம் செய்யப்படும் தவம், தியாகம், பக்தி, பூஜை இவை யாவும் சக்தியை இழக்கும்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம

தொடர்புடைய  ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -
  காமதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  பாபமோசனி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  ஆமலாகீ  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  விஜயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  ஜெயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  சட்-திலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  புத்ரதா  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  சஃபால  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  மோக்ஷ்தா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு
சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
 அஜா – அன்னதா ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி
  ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,
 ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.                

No comments:

Post a Comment