Friday, October 23, 2015

Vijayadasami - 6th Birthday - விஜயதசமி திருநாள் - வலைப்பூவின் ஏழாம் ஆண்டு துவக்கம்

Displaying IMG-20151014-WA0002.jpg

வெற்றித் திருநாளான விஜயதசமி நன்னாளில் வாசகர்கள் அனைவருக்கும் க்ஷேத்ரயாத்ராவின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இத்திருநாளின் நாயகி துர்க்கா தேவியின் அருளால் அனைவரின் இல்லத்திலும் எல்லாவிதமான வளங்களும் பெருகட்டும்.

இன்று, க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆறு ஆண்டுகளாக உங்களுடன்  பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சியும் நிறைவும் அடைகிறது. 60000 க்கும் மேற்பட்ட விசிட்டர்களின் எண்ணிக்கையுடன், 250 பதிவுகளுடனும் ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த வலைப்பூ ஒரு வருடத்தில் மேலும் 2 பதிவுகளை மட்டும் சேர்த்து மொத்த பதிவு எண்ணிக்கையை 252 ஆக உயர்த்தி உள்ளது. பதிவுகளின் பார்வை இட்டோரின் எண்ணிக்கை 89200 லிருந்து 122000 ஆக உயர்ந்து உள்ளது. வலைப்பூவை பின் தொடருபவர்களின் எண்ணிக்கையும் 47 ஆக உள்ளது. இவ்வருடம் வேலை பளு, அதிக பயணம், நேரமின்மை என பல காரணங்களால் அதிக பதிவுகள் இட முடியாமல் போனது. இவ் ஏழாம் ஆண்டில் அதையும் சேர்த்து அதிக பதிவுகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

குறிப்பாக ஏகாதசி மகிமை பற்றிய பதிவுகளை முழுவதும் பதிவு செய்தபின் நான் காணும் நல்மாற்றமும், நற்பலனும் அதனால் விளைந்து வரும் தொடர் முன்னேற்றமும்..பதிவுகள் இட நேரம் இல்லாமல் போனதற்கு ஒரு காரணி ஆகும். வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து ஏகாதசி விரதத்தை முடிந்தவரை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். 

இவ்வளர்ச்சிக்கு வாசகர்களின் ஆதரவு மட்டுமே காரணம். வாசகர்களின் ஆதரவுக்கு க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த நம்பிக்கையும், ஆதரவும் தொடரவும் வேண்டிக் கொள்கிறது.

கடந்த ஆண்டினை போல் அடி எடுத்து வைத்துள்ள ஏழாம் ஆண்டிலும்  க்ஷேத்ரயாத்ரா வலைப்பூவின் பணி சிறப்பாக இருக்கும் என்று உறுதியுடன்  நம்பலாம். இறுதியாக, இத்தருணத்தில், எனக்கு உற்சாகமாக ஆலோசனை  அளித்தும், தன்னுடைய பொன்னான நேரத்தை பதிவுகள் பிழைகள் இல்லாமல இருக்க பிழை திருத்தம் செய்து அளித்தல், என்று என் பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் பேரன்புக்கு உரிய சகோதரி திருமதி.பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

நன்றியுடனும், நம்பிக்கையுடனும் ஏழாம் ஆண்டில் காலடி வைக்கும்

உங்கள் அன்புள்ள


க்ஷேத்ரயாத்ரா

No comments:

Post a Comment