Tuesday, March 31, 2015

Somotpatti Stotram - சோமோத்பத்தி ஸ்தோத்ரம்



॥ श्रीः ॥
सोमोत्पत्तिः (याजुर्वेदिकी)
॥ हरिः ॐ ॥ श्री गुरुभ्यो नमः ॥
ऋषय ऊचुः -
कौतूहलं समुत्पन्न देवता ऋषिभिः सह ।
संशयं परिपृच्छन्ति व्यास धर्मार्थ कोविदम्  ॥१॥
कथं वा क्षीयते सोमः क्षीणो वा वर्धते कथम् ।
इमं प्रश्‍नं महाभाग ब्रूहि सर्वमशेषतः ॥२॥
व्यास उवच -
शृण्वन्तु देवताः सर्वे यदर्थमिह आगताः ।
तमर्थं संप्रवक्ष्यामि सोमस्य गतिमुत्तमाम् ॥३॥
अग्‍नौ हुतं च दत्तं च सर्वं सोमगतं भवेत् ।
तत्र् सोमः समुत्पन्नः स्मितांशु - हिम - वर्षणः ॥४॥
अष्‍टाशीति सहस्राणि विस्तीर्णो योजनानि तु ।
प्रमाणं तत्र् विज्ञेयं कलाः पञ्‍चदशैव तत्  ॥५॥
षोडशी तु कलाप्यत्र् इत्येकोऽपि विधिर्भवेत् 
तं च सोमं पपुर्देवाः पर्यायेणा - नुपूर्बशः ॥६॥
प्रथमां पिबते वह्निः  द्वितियां पिबते रविः ।
विश्‍वेदेवाः तृतीयां तु चतुर्थिं सलिलाधिपः ॥७॥
पञ्‍चमीं तु वषट् कारः षष्‍टीं पिबत वासवः ।
सप्‍तमीं ऋषयो दिव्याः अष्‍टमीं अज एकपात् ॥८॥
नवमीं कृष्णपक्षस्य यमः प्राश्‍नाति वै कलाम् ।
दशमीं पिबते वायुः पिबत्येकादशीं उमा ॥९॥
द्वादशीं पितरः सर्वे सम्प्राश्‍नन्ति  भागशः ।
त्रयोदशीं धनाध्यक्षः कुबेरः पिबते कलाम् ॥ १०॥
चतुर्दशीं पशुपतिः पञ्‍चदशीं प्रजापतिः ।
निष्पीत एक - कलाशेषः चन्द्रमा न प्रकाशते ॥११॥
कला षोडशकायां तु आपः प्रविशते सदा ।
अमायां तु सदा सोमः ओषधिः प्रतिपद्यते ॥१२॥
तं ओषधिगतं गावः पिबन्त्यंबुगतं च यत् ।
यत्क्षीरं अमृतं भूत्वा मन्त्रपूतं द्विजातिभिः ॥१३॥
हुतमग्‍निषु यज्ञेषु पुनराप्यायते शशी ।
दिने दिने कला वृद्धिः पौर्णिमास्यां तु पूर्णतः ॥१४॥
नवो नवो भवति जायभानोह्नां केतुरुषसामेत्यग्रे ।
भागं देवेभ्यो विदधात्यायन् प्रचन्द्रमास्तग्‍ति दीर्घमायुः ॥१५॥
त्रिमुहूर्तं बसेत् अर्के त्रिमुहूर्तं जले वसेत् ।
त्रिमुहूर्तं वसेद्‌गोषु त्रिमुहूर्तं वनस्पतौ ॥१६॥
वनस्पतिगते सोमे यस्तु हिंस्याद्वनस्पतिम् ।
घोरायां ब्रूण हत्यायां युज्यते नात्र संशयः ॥१७॥
वनस्पतिगते सोमे अनडुहो यस्तु वाहयेत् ।
नाश्‍नन्ति पितरः तस्य दशवर्षाणि पंच च॥१८॥
वनस्पति गते सोमे पंथानं यस्तु कारयेत् 
गावःतस्य प्रणश्यन्ति चिरकाल - मुपस्थिताः ॥१९॥
वनस्पतिगते सोमे स्‍त्रियं वा योऽधिगच्छति ।
स्वर्गस्थाः पितरस्तस्य च्यवन्ते नात्र सेशयः ॥२०॥
वनस्पतिगते सोमे परान्नं यस्तु भुञ्‍जति ।
तस्य मासकृतो होमः दातारमधिगच्छति ॥२१॥
वनस्पतिगते सोमे यः कुर्यात् दन्त-धावनम् ।
चन्द्रमा भक्षितो येन पितृवंशस्य घातकः ॥२२॥
सोमोत्पत्ति - मिमां यस्तु श्राद्धकाले सदा पठेत् ।
तदन्नं अमृतं भूत्वा पितॄणां दत्तमक्षयम् ॥२३॥
सोमोत्पत्तिमिमां यस्तु गुर्विणीं श्रावयेत् प्रियाम् ।
ऋषभं जनयेत् - पुत्रं सर्वज्ञं वेद - पारगम् ॥२४॥
सोमोत्पत्तिमिमां यस्तु पर्वकाले सदा पठेत् ।
सर्वान् कामान् अवाप्‍नोति सोमलोकं स गच्छति ॥२५॥
श्रीसोमलोकं स गच्छत्यों नम इति ॥
शुक्‍ले देवान्, पितॄन् कृष्णे, तर्पंयत्यमृतेन च
यश्च राजा द्विजातीनां तस्मै सोमात्मने नमः ॥२६॥
॥ श्रीकृष्णार्पणमस्तु ॥
  
||  ஸ்ரீ: ||
ஸோமோத்பத்தி: (யஜுர்வதி³கீ)
||  ஹரி: ஓம்ʼ ||  ஸ்ரீ கு³ருப்யோ நம: ||
ருʼஷய ஊசு: -
கௌதூஹலம்ʼ ஸமுத்பன்ன தே³வதா ருʼஷிபி⁴​: ஸஹ |
ஸம்ʼ²யம்ʼ பரிப்ருʼச்ச²ந்தி வ்யாஸம்ʼர்மார்த² கோவித³ம்  || 1||
கத²ம்ʼ வா க்ஷீயதே ஸோம: க்ஷீணோ வா வர்ததே கத²ம் |
இமம்ʼ ப்ரஸ்²னம்ʼ மஹாபா³ ப்³ரூஹி ஸர்வமஸே²ஷத: || 2||
வ்யாஸ உவச -
ஸ்²ருʼண்வந்து தே³வதா: ஸர்வே யத³ர்த²மிஹ ஆக³தா: |
தமர்த²ம்ʼ ஸம்ப்ரவக்ஷ்யாமி ஸோமஸ்ய க³திமுத்தமாம் || 3||
அக்³னௌ ஹுதம்ʼ ச த³த்தம்ʼ ச ஸர்வம்ʼ ஸோமக³தம்ʼவேத் |
தத்ர் ஸோம: ஸமுத்பன்ன: ஸ்மிதாம்ʼஸு² - ர்ஹிம - வர்ஷண: || 4||
அஷ்டாஸீ²தி ஸஹஸ்த்ராணி விஸ்தீர்ணோ யோஜனானி து |
ப்ரமாணம்ʼ தத்ர விஜ்ஞேயம்ʼ கலா: பஞ்சத³ஸை²வ தத்  || 5||
ஷோட³ஸீ² து கலாப்யத்ர இத்யேகோ(அ)பி விதிர்பவேத்  |
தம்ʼ ச ஸோமம்ʼ பபுர்தே³வா: பர்யாயேணா - நுபூர்வஸ²​: || 6||
ப்ரத²மாம்ʼ பிப³தே வஹ்னி:  த்³விதியாம்ʼ பிப³தே ரவி: |
விஸ்²வேதே³வா: த்ருʼதீயாம்ʼ து சதுர்தி²ம்ʼ ஸலிலாதி: || 7||
பஞ்சமீம்ʼ து வஷட் கார: ஷஷ்டிம்ʼ பிப³த வாஸவ: |
ஸப்தமீம்ʼ ருʼஷயோ தி³வ்யா: அஷ்டமீம்ʼ அஞ்ஜ ஏகபாத் || 8||
நவமீம்ʼ க்ருʼஷ்ணபக்ஷஸ்ய யம: ப்ராஸ்²னாதி வை கலாம் |
³²மீம்ʼ பிப³தே வாயு: பிப³த்யேகாத³ஸீ²ம்ʼ உமா || 9||
த்³வாத³ஸீ²ம்ʼ பிதர​: ஸர்வே ஸம்ப்ராஸ்²னந்தி பா⁴க³ஸ²​: |
த்ரயோத³ஸீ²ம்ʼ த⁴னாத்⁴யக்ஷ​: குபே³ர​: பிப³தே கலாம் ||  10||
சதுர்த³ஸீ²ம்ʼ பஸு²பதி​: பஞ்சத³ஸீ²ம்ʼ ப்ரஜாபதி​: |
நிஷ்பீத ஏக - கலாஸே²ஷ​: சந்த்³ரமா ந ப்ரகாஸ²தே || 11||
கலா ஷோட³ஸ²காயாம்ʼ து ஆப​: ப்ரவிஸ²தே ஸதா³ |
அமாயாம்ʼ து ஸதா³ ஸோம​: ஓஷதி⁴​: ப்ரதிபத்³யதே || 12||
தம்ʼ ஓஷதி⁴க³தம்ʼ கா³வ​: பிப³ந்த்யம்பு³க³தம்ʼ ச யத் |
யத்க்ஷீரம்ʼ அம்ருʼதம்ʼ பூ⁴த்வா மந்த்ரபூதம்ʼ த்³விஜாதிபி⁴​: || 13||
ஹுதமக்³னிஷு யஜ்ஞேஷு புனராப்யாயதே ஸ²ஸீ² |
தி³னே தி³னே கலா வ்ருʼத்³தி⁴​: பௌர்ணிமாஸ்யாம்ʼ து பூர்ணத​: || 14||
நவோ நவோ ப⁴வதி ஜாயபா⁴னோஹ்னாம்ʼ கேதுருஷஸாமேத்யக்³ரே |
பா⁴க³ம்ʼ தே³வேப்⁴யோ வித³தா⁴த்யாயன் ப்ரசந்த்³ரமாஸ்தக்³தி தீ³ர்க⁴மாயு​: || 15||
த்ரிமுஹூர்தம்ʼ ப³ஸேத் அர்கே த்ரிமுஹூர்தம்ʼ ஜலே வஸேத் |
த்ரிமுஹூர்தம்ʼ வஸேத்³கோ³ஷு த்ரிமுஹூர்தம்ʼ வனஸ்பதௌ || 16||
வனஸ்பதிக³தே ஸோமே யஸ்து ஹிம்ʼஸ்யாத³னஸ்பதிம் |
கோ⁴ராயாம்ʼ ப்³ரூண ஹத்யாயாம்ʼ யுஜ்யதே நாத்ர ஸம்ʼஸ²ய​: || 17||
வனஸ்பதிக³தே ஸோமே அனடு³ஹோ யஸ்து வாஹயேத் |
நாஸ்²னந்தி பிதர​: தஸ்ய த³ஸ²வர்ஷாணி பஞ்ச ச|| 18||
வனஸ்பதி க³தே ஸோமே பந்தா²னம்ʼ யஸ்து காரயேத்  |
கா³வ​:தஸ்ய ப்ரணஸ்²யந்தி சிரகால - முபஸ்தி²தா​: || 19||
வனஸ்பதிக³தே ஸோமே ஸ்த்ரியம்ʼ வா யோ(அ)தி⁴க³ச்ச²தி |
ஸ்வர்க³ஸ்தா²​: பிதரஸ்தஸ்ய ச்யவந்தே நாத்ர ஸேஸ²ய​: || 20||
வனஸ்பதிக³தே ஸோமே பரான்னம்ʼ யஸ்து பு⁴ஞ்ஜதி |
தஸ்ய மாஸக்ருʼதோ ஹோம​: தா³தாரமதி⁴க³ச்ச²திம்ʼ || 21||
வனஸ்பதிக³தே ஸோமே ய​: குர்யாத் த³ந்த-தா⁴வனம் |
சந்த்³ரமா ப⁴க்ஷிதோ யேன பித்ருʼவம்ʼஸ²ஸ்ய கா⁴தக​: || 22||
ஸோமோத்பத்தி - மிமாம்ʼ யஸ்து ஸ்²ராத்³த⁴காலே ஸதா³ படே²த் |
தத³ன்னம்ʼ அம்ருʼதம்ʼ பூ⁴த்வா பித்ருʼணாம்ʼ த³த்தமக்ஷயம் || 23||
ஸோமோத்பத்திமிமாம்ʼ யஸ்து கு³ர்விணீம்ʼ ஸ்²ராவயேத் ப்ரியாம் |
ருʼஷப⁴ம்ʼ ஜனயேத் - புத்ரம்ʼ ஸர்வஜ்ஞம்ʼ வேத³ - பாரக³ம் || 24||
ஸோமோத்பத்திமிமாம்ʼ யஸ்து பர்வகாலே ஸதா³ படே²த் |
ஸர்வான் காமான் அவாப்னோதி ஸோமலோகம்ʼ ஸ க³ச்ச²தி || 25||
ஸ்ரீஸோமலோகம்ʼ ஸ க³ச்ச²த்யோம்ʼ நம இதி ||
ஸு²க்லே தே³வான், பித்ருʼன் க்ருʼஷ்ணே, தர்பம்ʼயத்யம்ருʼதேன ச
யஸ்²ச ராஜா த்³விஜாதீனாம்ʼ தஸ்மை ஸோமாத்மனே நம​: || 26||
||  ஸ்ரீக்ருʼஷ்ணார்பணமஸ்து ||

அநேகமாக, நாம் அனைவருமே, 'நவோ நவோ பவதி' என்று துவங்கும் ஆசீர்வாத மந்திரத்தை, நம் மதம் சார்ந்த சடங்குகளில் கலந்து கொள்ளும் போது கேட்டிருப்போம்... ருக் வேதத்தில், ஒரு பகுதியாக அமைந்திருக்கும் இந்த மந்திரம், சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக வளர்ந்து, நிறைவாக, பூரண சந்திரனாக பொலிவுறுவதைப் பற்றிக் கூறுகின்றது.

இந்த மந்திரம், ஒரு புராணக் கதையின் நடுநாயகமாகவும் விளங்குகின்றது.. முக்காலமும் உணர்ந்த மஹாமுனிவராகிய வியாச மஹரிஷியின் திருவாக்கின் மூலமாக, இந்த புராணக் கதை அருளப்பட்டது.  மந்திரத்துடன்  கூடிய இந்தப் புராணம், மிக மகிமை வாய்ந்தது.. இதைக் கேட்கும் கர்ப்பிணிப் பெண்கள், ஒவ்வொரு நாளும் இனிது வளர்ந்து, பின் பூரணமடையும் சந்திரனைப் போன்று, அழகான, நாளுக்கு நாள், பொலிவுடன் வளர்ந்து  சுக வாழ்வு வாழும் பாக்கியம் பெற்ற, ஒரு நல்ல குழந்தையை, சுகப் பிரசவத்தின் மூலம் அடைந்து இன்புறுவர்.

'சோமோத்பத்தி' (சந்திரனின் தோற்றம் குறித்த புராணம்).
ஒரு சமயம், ரிஷிகளும் முனிவர்களும், வேத வியாசரை அணுகி, சந்திரனின் தோற்றம் குறித்தும், அது எவ்விதம் வளர்ந்து, பின் தேய்கிறது என்பது குறித்தும் வினவினர். மஹரிஷி வியாசரும், பின்வருமாறு கூறலானார்.

'எதையெல்லாம் அக்னி பகவானுக்கு ஆஹூதியாக இடுகிறோமோ, எவற்றையெல்லாம், தகுதி வாய்ந்த ஆன்மாக்களுக்கு அன்புடன் அளிக்கிறோமோ, அவையெல்லாம், சந்திரனின் தோற்றத்துக்கு காரணமாகின்றன‌. பூரண சந்திரன் உதயமாகின்றார்..தண்மையான கதிரொளி வீசி, பனி மழை பொழியச் செய்கின்றார்.

சந்திரனின் பரப்பளவு, 88000 யோஜனை தூரம்... சந்திரன், மொத்தம் பதினைந்து கலைகளால் (பகுதிகளால்) அமைக்கப்பட்டுள்ளான். ஆனால், (வெளித்தெரியாத) பதினாறாவது கலையும் சந்திரனுக்கு உண்டு என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

சந்திரனின்  பதினைந்து கலைகளில், ஒவ்வொரு கலையும்  பின்வருமாறு தேவர்களால் நுகரப்படுகின்றன.  முதல் கலையானது அக்னியாலும், இரண்டாவது கலையானது சூரியனாலும், மூன்றாவது கலையானது விஸ்வேதேவர்களாலும், நான்காவது, வருணனாலும், ஐந்தாவது, வஷட்காரத்தாலும், ஆறாவது, இந்திரனாலும், ஏழாவது, ரிஷிகளாலும், எட்டாவது, அஜ ஏக பாதரென்று அழைக்கப்படும் ருத்ரனாலும், ஒன்பதாவது யமனாலும், பத்தாவது வாயுவாலும், பதினொன்றாவது உமையாலும், பன்னிரண்டாவது பித்ருக்களாலும், பதின்மூன்றாவது குபேரனாலும், பதினான்காவது பசுபதியாலும், பதினைந்தாவது பிரஜாபதியாலும் நுகரப்படுகின்றன.

சந்திரனின் பதினாறாவது கலை, யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நுகரப்படுவதில்லை... அது, நீர் நிலைகளை அடைகின்றது.. அமாவாசை தினத்தில், சந்திரன்,  சூரியன், நீர்நிலைகள், கால்நடைகள், உண்பதற்குரிய பொருட்களைத் தரும் தாவர வகைகள் (மரம், செடி, கொடிகள்) ஆகியவற்றில் தஞ்சமடைகின்றான். இவை ஒவ்வொன்றிலும், மும்மூன்று முகூர்த்த காலங்கள் வசிக்கின்றான் (மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். இப்போதைய கால அளவீடுகளின்படி, மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும்). . 

இதன் காரணமாகவே, அமாவாசை தினத்தன்று, மாட்டு வண்டிகளில் பயணம் செய்வது, மரத்தின் ஒரு சிறு குச்சியை, பல்துலக்குவதற்காகக் கூட ஒடிப்பது முதலிய சில விஷயங்களை செய்யக் கூடாது என்று பெரியோர்கள் தடை விதித்துள்ளனர். ஏனெனில், அவற்றில் தஞ்சமடைந்திருக்கும் சந்திரனுக்கு,  இம்மாதிரியான‌  விலக்கப்பட்ட செயல்களைச் செய்வது துன்பம் விளைவிக்கக் கூடும். பொதுவாகவே, தேவையின்றி, தாவர வகைகளுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாதென்று சொல்வதும் இதனால் தான்.  

அமாவாசை தினத்தில் சந்திரன், தன் இருப்பிடமாகக் கொண்ட‌ பசுக்கள்,  தாவர வர்க்கங்களையும், நீரையும் (இவற்றிலும் சந்திரன், மறைமுகமாக நிறைந்துள்ளான்) உணவாகக் கொள்கின்றன.. பாலைப் பொழிகின்றன. பாலிலிருந்து பெறப்படும் பொருட்களில் ஒன்றாகிய நெய், வேத மந்திரங்களால் சுத்திகரிக்கப்படும் போது, அம்ருதத்திற்கு ஒப்பாகக் கருதப்படுகின்றது..யாகத்தீயில், ஆஹூதியாக அளிக்கப்படுவதற்குரிய‌ புனிதத் தன்மையைப் பெற்று, சந்திரன் மீண்டும் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்றது.  மீண்டும் தோன்றிய  சந்திரன், ஒவ்வொரு நாளும், இழந்த தன் கலைகளை மீண்டும் பெற்று  பொலிவோடு வளர்ந்து, பௌர்ணமி தினத்தில், முழுமையடைந்த பூரண சந்திரனாகப் பிரகாசிக்கின்றான்.

திதிகளில் சுழற்சியைக் கணக்கிடுவதில்  முதன்மையான‌ பங்கு வகிப்பது சந்திரனே!.. தன் சொந்தக் கலைகளை, தேவர்களுக்கு அளித்து விட்டு, நீண்ட ஆயுளை நமக்கு தந்தருளுகின்றான் சந்திரன்.

இந்த 'சோமோத்பத்தி'  புராணத்தை பக்தியுடனும் சிரத்தையுடனும் பாராயணம் செய்யும் வேளையில், சமர்ப்பிக்கப்படும் அன்னமானது, அம்ருதத்திற்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது. அதன் மூலம், பித்ருக்கள் மிகவும் ப்ரீதியடைகின்றார்கள்.

இந்த புராணம், பாராயணம் செய்யப்படுவதை சிரவணம் (கேட்கும்) கர்ப்பிணிப் பெண், ஆரோக்கியமான,  பலம் பொருந்திய, புத்திமானாக விளங்கக் கூடிய குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள்.

இந்த 'சோமோத்பத்தி'யை, க்ரஹண காலம், சங்க்ரமண காலம் முதலிய பர்வ காலங்களில், பாராயணம் செய்பவர்கள் வேண்டுவன அனைத்தும் பெறுவர். தம் வாழ்நாள் நிறைவடையும் போது, மகிழ்ச்சி நிறைந்த சோம‌லோகத்தை எய்துவர்.

இவையனைத்தும், சந்திரனில் ஜ்வலிக்கும் தெய்வீக சக்தியாக விளங்கும் ஸ்ரீவாமன மூர்த்தியின் அனுக்ரஹத்தால் சாத்தியமாகும்..

சுக்ல பக்ஷத்தில், தேவர்களுக்கும் க்ருஷ்ண பக்ஷத்தில் பித்ருக்களுக்கும் சந்தோஷத்தைத் தருபவனும், நக்ஷத்திரங்களின் அரசனாக பிரகாசிப்பவனுமான சந்திரனின் அந்தர்யாமியாக விளங்கும், ஸ்ரீவாமனமூர்த்தியை, பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்கிப் பணிவோமாக!...

இந்த ஸ்தோத்ரத்திற்கு தமிழ் விளக்கவுரை எழுதிய சகோதரி பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். சகோதரியின் வலைப்பூவை காண இங்கு சொடுக்கவும்.

No comments:

Post a Comment