வெற்றித் திருநாளான விஜயதசமி நன்னாளில் வாசகர்கள் அனைவருக்கும் க்ஷேத்ரயாத்ராவின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இத்திருநாளின் நாயகி துர்க்கா தேவியின் அருளால் அனைவரின் இல்லத்திலும் எல்லாவிதமான வளங்களும் பெருகட்டும்.
இன்று, க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக உங்களுடன் பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சியும் நிறைவும் அடைகிறது. 16900 விசிட்டர்களின் எண்ணிக்கையுடன், 220 பதிவுகளுடனும் ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த வலைப்பூ ஒரு வருடகாலத்தில் மேலும் 30 பதிவுகளை சேர்த்து மொத்த பதிவு எண்ணிக்கையை 250 ஆக உயர்த்தி உள்ளது. விசிட்டர்கள் எண்ணிக்கை 16900 லிருந்து 60000 மேல் உயர்ந்து உள்ளது. பதிவுகளின் பார்வை இட்டோரின் எண்ணிக்கையும் 89200 ஆக உயர்ந்து உள்ளது. வலைப்பூவை பின் தொடருபவர்களின் எண்ணிக்கையும் 41 ஆக உள்ளது. இவ்வருடத்தில் மிக முக்கியமான நிகழ்வாக அனைத்து ஏகாதசி விரதங்களின் மஹிமையை பற்றிய பதிவுகள் என சொல்லலாம்.
இவ்வளர்ச்சிக்கு வாசகர்களின் ஆதரவு மட்டுமே காரணம். வாசகர்களின் ஆதரவுக்கு க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த நம்பிக்கையும், ஆதரவும் தொடரவும் வேண்டிக் கொள்கிறது.
கடந்த ஆண்டினை போல் அடி எடுத்து வைத்துள்ள ஆறாம் ஆண்டிலும் க்ஷேத்ரயாத்ரா வலைப்பூவின் பணி சிறப்பாக இருக்கும் என்று உறுதியுடன் நம்பலாம். இறுதியாக, இத்தருணத்தில், எனக்கு உற்சாகமாக ஆலோசனை அளித்தும், தன்னுடைய பொன்னான நேரத்தை பதிவுகள் பிழைகள் இல்லாமல இருக்க பிழை திருத்தம் செய்து அளித்தல், என்று என்னுடைய பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் பேரன்புக்கு உரிய சகோதரி திருமதி.பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. சகோதரியின் அற்புதமான வலைப்பூவினை காண இங்கு சொடுக்கவும்.
நன்றியுடனும், நம்பிக்கையுடனும் ஆறாம் ஆண்டில் காலடி வைக்கும்
உங்கள் அன்புள்ள
க்ஷேத்ரயாத்ரா
1 comment:
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!..இன்னும் பல்லாயிரம் பதிவுகள் காண வேண்டுகிறேன்.. 'ஆலோசனை'யையும் தங்கள் பதிவில் இணைத்த தங்கள் பெருந்தன்மைக்கு என் இதயம் நிறைந்த நன்றி!.
Post a Comment