Friday, April 14, 2017

Sri Krishna Stuti - ஸ்ரீ கிருஷ்ண ஸ்துதி



श्रीकृष्ण स्तुतिः - गर्ग संहिता
देवा ऊचुः
कृष्णाय पूर्ण-पुरुषाय परात्पाराय - यज्ञेश्‍वराय पर-कारण-कारणाय ।
राधा-वराय परिपूर्णतमाय साक्षाद् - गोलोक्-धाम-धिषणाय नमः परस्मै ॥१॥

योगेश्‍वराः किल वदन्ति महः परं - त्वं तत्रैव सात्वत-मनाः कृत विग्रहं च ।
अस्माभिर् अद्य विदितं यददोऽद्वयं ते - तस्मै नमोऽस्तु महसां पतये परस्मै ॥२॥

व्यङग्‍येन वा न न हि लक्षणया कदापि - स्फोटेन यच् च कवयो न विशन्ति मुख्याः ।
निर्देश्‍य भाव रहितं प्रकृतेः परं च - त्वां ब्रह्म निर्गुणमलं शरणं व्रजामः ॥३॥

त्वां ब्रह्म केचिद् अवयन्ति परे च - कालं केचित् प्रशान्तमपरे भुवि कूर्म-रूपं ।
पूर्व च योगमपरे किल कर्तृ-भावं - अन्योक्तिभिर् न विदितं शरणं गताः स्मः ॥४॥

श्रेयस्करीं भगवतस् तव पाद-सेवां - हित्वाऽथ तीर्थ यजनादि तपश् चरन्ति ।
ज्ञानेन ये च विदिता बहु-विघ्‍न-सङ्‍घैः - सन्ताडिताः किमु भवन्ति न ते कृतार्थाः ॥५॥

विज्ञाप्यमद्य किमु देव अशेष साक्षी - यः सर्व-भूत-हृदेषु विराजमानः ।
देवैर् नमद्‍भिर् अमलाशय मुक्त देहैस् - तस्मै नमो भगवते पुरुषोत्तमाय ॥६॥

यो राधिका - हृदय - सुन्दर-चन्द्र-हारः - श्रीगोपिका-नयन-जीवन-मुल-हारः ।
गोलोक-धाम-धिषण-ध्‍वज आदिदेवः - स त्वं विपत्सु विबुधान् परिपाहि पाहि ॥७॥

वृन्दावनेश गिरि-राज-पते व्रजेश - गोपाल वेष कृत नित्य विहार लील ।
राधापते श्रृति धराधिपते धरां त्वं - गोवर्द्‍ धनोद्धरण उद्धर धर्मधाराम्  ॥८॥

॥ इति श्रीगर्ग संहितायां गोलोक खण्‍डे तृतीयोध्याये श्रीकृष्‍ण स्तुतिः सम्पूर्णम् ॥
ஶ்ரீக்ருʼஷ்ண ஸ்துதி​: - க³ர்க³ ஸம்ʼஹிதா
தே³வா ஊசு​:
க்ருʼஷ்ணாய பூர்ண-புருஷாய பராத்பாராய - யக்ஞேஶ்வராய பர-காரண-காரணாய |
ராதா⁴-வராய பரிபூர்ணதமாய ஸாக்ஷாத்³ - கோ³லோக்-தா⁴ம-தி⁴ஷணாய நம​: பரஸ்மை || 1 ||

யோகே³ஶ்வரா​: கில வத³ந்தி மஹ​: பரம்ʼ - த்வம்ʼ தத்ரைவ ஸாத்வத-மனா​: க்ருʼத விக்³ரஹம்ʼ ச |
அஸ்மாபி⁴ர் அத்³ய விதி³தம்ʼ யத³தோ³(அ)த்³வயம்ʼ தே - தஸ்மை நமோ(அ)ஸ்து மஹஸாம்ʼ பதயே பரஸ்மை || 2||

வ்யஙக்³யேன வா ந ந ஹி லக்ஷணயா கதா³பி - ஸ்போ²டேந யச்ச கவயோ ந விஶந்தி முக்²யா​: |
நிர்தே³ஶ்ய பா⁴வ ரஹிதம்ʼ ப்ரக்ருʼதே​: பரம்ʼ ச - த்வாம்ʼ ப்³ரஹ்ம நிர்கு³ணமலம்ʼ ஶரணம்ʼ வ்ரஜாம​: || 3||

த்வாம்ʼ ப்³ரஹ்ம கேசித்³ அவயந்தி பரே ச - காலம்ʼ கேசித் ப்ரஶாந்தமபரே பு⁴வி கூர்ம-ரூபம்ʼ |
பூர்வ ச யோக³மபரே கில கர்த்ருʼ-பா⁴வம்ʼ - அன்யோக்திபி⁴ர் ந விதி³தம்ʼ ஶரணம்ʼ க³தா​: ஸ்ம​: || 4||

ஶ்ரேயஸ்கரீம்ʼ ப⁴க³வதஸ் தவ பாத³-ஸேவாம்ʼ - ஹித்வா(அ)த² தீர்த² யஜனாதி³ தபஶ் சரந்தி |
ஜ்ஞானேன யே ச விதி³தா ப³ஹு-விக்⁴ன-ஸங்கை⁴​: - ஸந்தாடி³தா​: கிமு ப⁴வந்தி ந தே க்ருʼதார்தா²​: || 5||

விஜ்ஞாப்யமத்³ய கிமு தே³வ அஶேஷ ஸாக்ஷீ - ய​: ஸர்வ-பூ⁴த-ஹ்ருʼதே³ஷு விராஜமான​: |
தே³வைர் நமத்³பி⁴ர் அமலாஶய முக்த தே³ஹைஸ் - தஸ்மை நமோ ப⁴க³வதே புருஷோத்தமாய || 6||

யோ ராதி⁴கா - ஹ்ருʼத³ய - ஸுந்த³ர-சந்த்³ர-ஹார​: - ஶ்ரீகோ³பிகா-நயன-ஜீவன-முல-ஹார​: |
கோ³லோக-தா⁴ம-தி⁴ஷண-த்⁴வஜ ஆதி³தே³வ​: - ஸ த்வம்ʼ விபத்ஸு விபு³தா⁴ன் பரிபாஹி பாஹி || 7||

வ்ருʼந்தா³வனேஶ கி³ரி-ராஜ-பதே வ்ரஜேஶ - கோ³பால வேஷ க்ருʼத நித்ய விஹார லீல |
ராதா⁴பதே ஶ்ர்ருʼதி த⁴ராதி⁴பதே த⁴ராம்ʼ த்வம்ʼ - கோ³வர்த்³ த⁴னோத்³த⁴ரண உத்³த⁴ர த⁴ர்மதா⁴ராம்  || 8||

||  இதி ஶ்ரீக³ர்க³ ஸம்ʼஹிதாயாம்ʼ கோ³லோக க²ண்டே³ த்ருʼதீயோத்⁴யாயே ஶ்ரீக்ருʼஷ்ண ஸ்துதி​: ஸம்பூர்ணம் ||
  
பூரணப் பொருளே, மேன்மையிலும் மேலானவனே, யாகங்களின் தலைவனே, யாவற்றிற்கும் காரணமானவனே, ராதையின் நாயகனே, புலனடக்கம் நிறைந்து இருப்பவனே மற்றும் கோகுலத்தில் உறைகின்ற பரம்பொருளே ஸ்ரீகிருஷ்ணா, உனக்கு நமஸ்காரம்.

நீ பெரும் ஜோதி, நிலைபெற்ற மனதினன் என்று வர்ணிக்கின்றனர் யோகியர். நீ மாற்றுருக்கொள்ளாத பரமனென்று நாங்கள் இப்போது அறிந்து கொண்டோம். பேரொளியின் தலைவனே உனக்கு நமஸ்காரம்.

மூலப்பரம்பொருளே! புறசாதனங்களைக் கொண்டு மாபெரும் அறிஞர்களாலும் கூட அணுக முடியாத குறிப்பால் உணர்த்த இயலாத, குணங்களற்ற, களங்கமற்ற பரப்பிரம்மமாகிய உன்னைச் சரணடைகிறோம்.

பிரம்மம், காலம், அமைதி ரூபமானவன், கூர்ம வடிவில் உலகைத் தாங்குபவன், நிலையான யோகி, செயல்வடிவான கர்த்தா, பிற தத்துவ வழிகளால் அறியப்படாதவன் என்றெல்லாம் பலரால் வர்ணிக்கப்படும் உன்னைச் சரணடைகிறோம்.

மிகவும் மேலானதான உனது பாதம் பணிவதை விட்டுவிட்டுத் தீர்த்த யாத்திரை, யாகம், தவம் என்று பலவித அலைக்கழிப்புகளால் துயருற்ற மக்கள் தமது முயற்சிகளால் பலன் பெற மாட்டார்களா?

இறைவா ! தேவர்களாலும் யோகியராலும் உன்னிடம் தெரிவிக்கப்பட வேண்டியதும் உண்டோ ? அனைத்துயிர்களின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்த அப்பழுக்கற்ற தூய நற்குண நாயகனே ! நமஸ்காரம்.

ஸ்ரீராதையின் இதயம் எனும் அழகிய நிலவை மாலையாகக் கொண்டவனும், ஸ்ரீகோபிகைகளின் கண்களை உயிர்ப்பிக்கும் மூலசக்தியை மாலையாகக் கொண்டவனும், கோகுலத்தின் உயர்க்கொடியின் முதற்கடவுளும் ஆகிய நீ விபத்துக்களின் போது சான்றோரைக் காத்தருள்க

பிருந்தாவனத் தலைவனே !  கோவர்த்தனகிரியின்  நாயகனே ! வ்ரஜபூமியின் இறைவனே ! இடைச்சிறுவனாக வேடம் பூண்டு பல லீலைகள் புரிந்தவனே !  ராதையின் காவலனே,  வேதங்களின் ரட்சகனே , நீர் புவியையும் அறத்தையும் கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்ததைப் போல் காத்தருளும் 

1 comment:

பார்வதி இராமச்சந்திரன். said...

மிக அருமையான பதிவுக்கு நன்றி!!..., மீண்டும் தொடர்ச்சியாக பதிவுகள் வருவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி!!!!..

Post a Comment