Saturday, March 18, 2017

Dharmasastha Stuti Dasakam - தர்மசாஸ்தா ஸ்துதி தசகம்


Image result for dharmasastha
Courtesy - Google Images
धर्मशास्तृस्तुतिदशकम्
आशानुरूपफलदं चरणारविन्द- भाजामपारकरुणार्णवपूर्णचन्द्रम् ।
नाशाय सर्वविपदामपि नौमि नित्यं, ईशानकेशवभुवं भुवनैकनाथम् ॥
 पिञ्छावलीवलयिताकलितप्रसून- संजातकान्तिभरभासुर के शभारम् ।
शिञ्जानमञ्जुमणिभूषितरञ्जिताङ्गं, चन्द्रावतंसहरिनन्दनमाश्रयामि ॥
आलोलनीलललितालकहाररम्यं आकम्रनासमरुणाधरमायताक्षम् ।
आलम्बनं त्रिजगतां प्रमथाधिनाथं आनम्रलोकहरिनन्दनमाश्रयामि ॥
कर्णावलम्बिमणिकुण्डलभासमान- गण्डस्थलं समुदिताननपुण्डरीकम् ।
अर्णोजनाभहरयोरिव मूर्तिमन्तं पुण्यातिरेकमिव भूतपतिं नमामि ॥
 उद्दण्डचारुभुजदण्डयुगाग्रसंस्थ- कोदण्डबाणमहितान्तमदान्तवीर्यम् ।
उद्यत्प्रभापटलदीप्रमदभ्रसारं नित्यं प्रभापतिमहं प्रणतो भवामि ॥
मालेयपङ्कसमलङ्कृतभासमान- दोरन्तरालतरलामलहारजालम् ।
नीलातिनिर्मलदुकूलधरं मुकुन्द- कालान्तकप्रतिनिधिं प्रणतोऽस्मि नित्यम् ॥
यत्पादपङ्कजयुगं मुनयोऽप्यजस्रं भक्त्या भजन्ति भवरोगनिवारणाय ।
पुत्रं पुरान्तकमुरान्तकयोरुदारं नित्यं नमाम्यहममित्रकुलान्तकं तम् ॥
कान्तं कलायकुसुमद्युति लोभनीय- कान्तिप्रवाहविलसत् कमनीयरूपम् ।
कान्तातनूजसहितं निखिलामयौघ शन्तिप्रदं प्रमथनाथमहं नमामि ॥
भूतेश भूरिकरुणामृतपूरपूर्ण- वारान्निधे वरद भक्तजनैकबन्धो ।
पायात् भवान् प्रणतमेनमपारगघोर- संसारभीतमिह मामखिलामयेभ्यः ॥
हे भूतनाथ भगवन् भवदीयचारु- पादाम्बुजे भवतु भक्तिरचञ्चला मे ।
नाथाय सर्वजगतां भजतां भवाब्धि- पोताय नित्यमखिलाङ्गभुवे नमस्ते ॥ १०
 தர்மஸா²ஸ்த்¹ருஸ்து¹தி¹³²¹ம்

ஆஸா²னுரூப ¹²லத³ம் ¹ரணாரவிந்த³-
பாஜா
¹மபா¹ர க¹ருணார்ணவ பூ¹ர்ண ச¹ந்த்³ரம் |
நாஸா
²ய ஸர்வ விப¹தா³மபி¹ நௌமி நித்¹
மீஸா
²  கே¹²வ புவம்  புவநைக¹ நாத²ம் ||  1 ||

தன் சரண கமலத்தை அடைந்தவர்களுக்கு விரும்பிய பயனை அளிப்பவரும், கரை இல்லாத கருணையாகிற கடலுக்கு முழு நிலவு போன்றவரும், ஹரிஹரபுத்திரரும், உலகங்களுக்கெல்லாம் ஒரே நாயகனாய் இருப்பவருமான ஸ்ரீசாஸ்தாவை எல்லாவித ஆபத்துக்களும் விலகுவதற்காக எப்போதும் நமஸ்கரிக்கிறேன்.

பி¹ஞ்சா²வலீவலயிதா¹¹லித¹ப்¹ரஸூன-
ஸஞ்ஜா
¹¹கா¹ந்தி¹பரபாஸுர கே¹²பாரம் |
ஸி
²ஞ்ஜா¹னமஞ்ஜு¹மணிபூஷித¹ரஞ்ஜி¹தா¹ங்க³ம்
¹ந்த்³ராவத¹ம்ஸஹரினந்த³னமாஸ்²ரயாமி ||  2 ||

மயில் தோகையைச் சுற்றிலும் தொடுக்கப்பட்ட புஷ்பங்களிலிருந்து உண்டான ஒளிக்கற்றைகள் விளங்கும் கேசபாரத்தை உடையவரும், சப்திக்கின்ற அழகான ரத்ன ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் அங்கங்களை உடையவரும், ஸ்ரீசந்திரசேகரன ஸ்ரீவிஷ்ணு இவர்களின் புத்திரருமான ஸ்ரீசாஸ்தாவை வணங்குகிறேன்.

ஆலோலனீலலலிதா¹லக¹ஹாரரம்யம்
ஆக
¹ம்ரனாஸமருணாதரமாயதா¹க்¹ஷம் |
ஆலம்ப
³னம் த்¹ரிஜ¹³தா¹ம் ப்¹ரமதா²தினாத²ம்
ஆனம்ரலோக
¹ஹரினந்த³னமாஸ்²ரயாமி  || 3 ||

கருத்த அழகிய கேசச்சுருளகள் மாலைகளாக ஆடும் அழகு வாய்ந்தவரும், அழ்கான நாசியையுடையவரும், சிவந்த உதடுகளையும், நீண்ட கண்களையும் உடையவரும், மூவுலகிற்கும் ஆதாரமானவரும், சிவகணங்களுக்குத் தலைவனுமான ஹரிஹர புத்திரனை நமஸ்கரிக்கின்றேன்.

¹ர்ணாவலம்பி³மணிகு¹ண்ட³லபாஸமான-
³ண்ட³ஸ்த²லம் ஸமுதி³தா¹னனபு¹ண்ட³ரீக¹ம் |
அர்ணோஜ
¹னாபஹரயோரிவ மூர்தி¹மந்த¹ம்
பு
¹ண்யாதி¹ரேக¹மிவ பூத¹¹தி¹ம் நமாமி || 4 ||

காதுகளில் தொங்கும் ரத்ன குண்டலங்களால் ஒளிரும் கன்னங்களை உடையவரும், பத்மநாபன் மற்றும் சிவனின் புண்ணியமே திரண்டு உருவமெடுத்து வந்தது போல் விளங்குகிறவரும், பூதங்களுக்கு நாயகருமான ஸ்ரீசாஸ்தாவை நமஸ்கரிக்கின்றேன்.

உத்³³ண்ட³சா¹ருபுஜ¹³ண்ட³யுகா³க்³ரஸம்ஸ்த²-
கோ
¹³ண்ட³பா³ணமஹிதா¹ந்த¹மதா³ந்த¹வீர்யம் |
உத்
³யத்¹ப்¹ரபாப¹¹லதீ³ப்¹ரமத³ப்ரஸாரம்
நித்
¹யம் ப்¹ரபாப¹தி¹மஹம் ப்¹ரணதோ¹ பவாமி ||  5 ||

உயர்ந்ததும் அழகியதுமான இரண்டு கைகளிலும் வில், அம்பு ஆகியவற்றை தரித்தவரும், சத்ருக்களை நாசம் செய்கிறவரும், அளவற்ற பராக்கிரமத்தை உடையவரும், மிக்க பலசாலியும், ஒளிமயமாக விளங்குகிறவரும், ஒளிக்கு இருப்பிடமான ஸ்ரீ சாஸ்தாவை தினந்தோறும் நமஸ்கரிக்கின்றேன்.

மாலேயப¹ங்க¹ஸமலங்க்¹ருத¹பாஸமான-
தோ
³ரந்த¹ராலத¹ரலாமலஹாரஜா¹லம் |
நீலாதி
¹னிர்மலது³கூ¹லதரம் முகு¹ந்த³-
கா
¹லாந்த¹¹ப்¹ரதி¹னிதிம் ப்¹ரணதோ¹(அ)ஸ்மி நித்¹யம் ||  6 ||

மலய பர்வதத்தில் உண்டான சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டுப் பிரகாசிக்கின்ற மார்பில் ஆடுகின்ற மாலைகளை உடையவரும், பரிசுத்தமான நீல வண்ணப்பட்டு வஸ்திரத்தை அணிந்திருப்பவரும், ஸ்ரீவிஷ்ணுவுக்கும் ஸ்ரீபரமேஸ்வரனுக்கும், பிரதிநிதியாக விளங்குகிறவருமான ஸ்ரீ சாஸ்தாவை எப்பொழுதும் வணங்குகிறேன்.

யத்¹பா¹³¹ங்க¹¹யுக³ம் முனயோ(அ)ப்¹யஜ¹ஸ்ரம்
பக்
¹த்¹யா பஜ¹ந்தி¹ பவரோக³னிவாரணாய |
பு
¹த்¹ரம் பு¹ராந்த¹¹முராந்த¹¹யோருதா³ரம்
நித்
¹யம் நமாம்யஹமமித்¹ரகு¹லாந்த¹¹ம் த¹ம் ||  7 ||

மஹரிஷிகள், சம்சாரமாகிற நோயின் நிவர்த்திக்காக இடைவிடாத பக்தியுடன் பாத கமலங்களை பூஜிக்கும் தெய்வமாகவும் சிவன் விஷ்ணு இவர்களுடைய புத்திரரும், உதார குணம் உள்ளவரும், சத்ருக் கூட்டங்களுக்கு எமனாக இருப்பவருமான அந்த சாஸ்தாவை நமஸ்கரிக்கின்றேன்.

கா¹ந்த¹ம் க¹லாயகு¹ஸுமத்³யுதி¹ லோபனீய-
கா
¹ந்தி¹ப்¹ரவாஹவிலஸத்¹¹மனீயரூப¹ம் |
கா
¹ந்தா¹¹னூஜ¹ஸஹித¹ம் நிகி²லாமயௌக
²ந்தி¹ப்¹ரத³ம் ப்¹ரமத²னாத²மஹம் நமாமி || 8 ||

மிக அழகு வாய்ந்தவரும், காயாம்பூ போன்று மனதைக் கவரும் ஒளிப்பிரவாகமாக விளங்கும் அழகிய உருவத்தை உடையவரும், மனைவி, புத்திரர் இவர்களுடன் கூடியவரும், சகல வியாதிகளையும் போக்குபவரும், முக்கிய கணங்களுக்கு நாயகனுமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பூதே¹² பூரிக¹ருணாம்ருத¹பூ¹ரபூ¹ர்ண-
வாரான்னிதே வரத
³ பக்¹¹¹னைக¹³ந்தோ |
பா
¹யாத்¹ பவான் ப்¹ரணத¹மேனமபா¹ரக³கோர-
ஸம்ஸாரபீத
¹மிஹ மாமகி²லாமயேப்ய​: ||  9 ||

ஒ, பூத நாயகனே, மிகுந்த கருணையாகிற அமிருதப் பிரவாகத்திற்கு ஸமுத்ரம் போன்றவரே, பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்பவரே, பக்தர்களுக்கு முக்கிய உறவாக இருப்பவரே, கரையற்றதும் மிகப் பயங்கரமானதுமான ஜனன மரண துக்கத்தால் மிகவும் பயந்தவனும், தங்களை நமஸ்கரிக்கின்றவனுமான என்னைத் தாங்கள் எல்லாவித வியாதிகளிலிருந்தும் காக்க வேண்டும்.

ஹே பூத¹னாத² பக³வன் பவதீ³யசா¹ரு-
பா
¹தா³ம்பு³ஜே¹ பவது¹ பக்¹தி¹ரச¹ஞ்ச¹லா மே |
நாதா
²ய ஸர்வஜ¹³தா¹ம் பஜ¹தா¹ம் பவாப்³தி-
போ
¹தா¹ய நித்¹யமகி²லாங்க³புவே நமஸ்தே¹ || 10 ||

ஹே பூதத் தலைவனே, ஒ பகவானே, எனக்குத் தங்களது அழகிய பாத கமலங்களில் இடைவிடாத பக்தி ஏற்படட்டும். எல்லா உலகங்களுக்கும் நாதனும், தன்னை பூஜிக்கிறவர்கள் சம்ஸாரக்கடலைத் தாண்டுவதற்குக் கப்பலாக இருப்பவரும், சூரியன், சந்திரன், வருணன், பூமி, அக்னி, ஸோமயாகம் செய்தவர்கள், வாயு, ஆகாயம் - இந்த எட்டுகளை சரீரமாகக் கொண்ட ஸ்ரீ பரமேஸ்வரனின் குமாரனுமாகிய தங்களை தினமும் நமஸ்கரிக்கிறேன்.



1 comment:

rrv said...

Does anyone had any idea who wrote this Dasakam? My question is about 'Pinchavaleevalayitha'. Does Sastha has pincham in his hair?

Post a Comment