Tuesday, July 23, 2013

Ashadi Ekadashi Pandharpur - ஆஷாட ஏகாதசி பண்டரிபூர் பாதயாத்திரை


ஆஷாட ஏகாதசி பண்டரிபூர் பாதயாத்திரை
ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளுள், ஆஷாட ஏகாதசி அல்லது சயனி ஏகாதசி மிகவும் பிரசித்தி பெற்றது. 

'சீர்டி மஜே பண்டரிபூர், சாய் பாபா ராமவரா'அதாவது "சீர்டியே எனது பண்டரிபுரம் மற்றும் சாய் பாபாவே பண்டரியில் எழுந்தருளியிருக்கும் விட்டல் பாண்டுரங்கன் ஆவார்" என்ற மராத்திய ஆர்த்தி பாடல் சீர்டியில் பாடப்படும் ஆர்த்தி பாடல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 

சாய்பாபாவும் பண்டரிபுரத்தில் எழுந்தருளியிருக்கும்  விட்டோபாவை மிகவும் மதித்து வந்தார் (பாண்டுரங்கனை 'விட்டோபா' என்னும் திருநாமத்தாலேயே பெரும்பாலும் அழைப்பர்). தாஸ்கணு பண்டரிபுரத்திற்கு புண்ணிய யாத்திரை செல்ல விரும்பின போது, சாய்பாபா அவரைத் தடுத்து சீர்டியே பண்டரிபுரமாகும் என்றார். சாய்சத் சரிதத்தில் நிறைய இடங்களில் பண்டரிபுரத்தின் மகிமை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

புண்ணிய யாத்ரிகர்கள் மற்றும் பிரபு விட்டலின் பக்தர்கள் "வர்கரி" என்று அழைக்கப்படுகின்றனர். அனைவரும் ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் கூடுவர். ஸ்ரீமஹாவிஷ்ணு, ஆஷாட ஏகாதசியில் நித்திரையில் ஆழ்ந்து நான்கு மாத முடிவில் கார்த்திகை மாதத்தில் வரும் தேவோத்தானி ஏகாதசியில் விழித்தெழுகிறார்.  புண்ணிய யாத்ரீகர்கள் மற்றும் வர்கரிகள் பண்டரிபுரத்தை நோக்கிய தங்களது பாத யாத்திரையை ஜேஷ்ட மாத கிருஷ்ண பட்ச ஏகாதசியில் ஆலண்டி என்னும் இடத்திலிருந்து தொடங்கி ஆஷாட தேவசயனி ஏகாதசியன்று பண்டரிபுரத்தை அடைந்து நிறைவு செய்வர்.  பாதயாத்திரை செய்வோர், வழியில் வரும் சீர்டியை கடந்து செல்லும் போது, சீர்டி சாய் பாபாவின் அருளையும், ஆசிகளையும் பெற்று யாத்திரையைத் தொடருவர். 

சாய் சத்சரிதம் அத்தியாயம் 4, சீர்டி சாய்பாபாவே பிரபு விட்டலும் ஆவார் என்பதற்கு போதுமான அளவு தகவல்களை கொண்டுள்ளது.  

சாய் சத்சரிதம் அத்தியாயம் 7, எவ்வாறு நானா சாகேப் சந்தோர்கர் பண்டரிபுரத்திற்கு மாற்றல் பெற்றார் என்று எடுத்துரைக்கிறது. சாய்பாபாவின் மீது அவர் கொண்டிருந்த அபரிமிதமான பக்தி அவர் விரும்பிய இடமான பூலோக வைகுண்டம் எனக் கருதப்படும் பண்டரிபுரத்திற்கு மாற்றல் பெற்றுத் தந்தது. அவர் பண்டரிபுரமாக கருதிய சீர்டிக்கு சென்று தான் விட்டோபாவாக கருதிய பாபாவிடம் ஆசி பெற்று பண்டரிபுரம் செல்ல விரும்பினார். ஆகையால் முன்கூட்டியே பாபாவிற்கு தெரிவிக்காமல், அவருக்கு ஆச்சரியத்தை அளிக்க விரும்பி சீர்டிக்கு பயணித்த போது, சீர்டியில் பாபா,  மால்சாபதி மற்றும் குழுமியிருந்தோரிடம் - " நாம் எல்லோரும் பஜனை செய்வோம். பண்டரிபுரத்தின் கதவுகள் திறந்துள்ளன...ஆனந்தத்தில் திளைத்து நாம் பாடுவோம்"  என்றருளினார். அந்த பாடல் " நான் பண்டரிபுரத்திற்கு செல்ல வேண்டும் மற்றும் அங்கு தங்க வேண்டும். ஏனெனில் அது என் பிரபுவின் வீடாகும்" என்ற வரிகளைக் கொண்ட பாடலாகும்.

நாமும் இந் நன்னாளில் பண்டரிபுரத்தில் இருப்பதாக மனதில் இருத்திக் கொண்டு, பாண்டுரங்க விட்டல் மற்றும் சாய் தர்சனத்தின் அமிர்த ஆனந்தத்தில் திளைப்போம்.

No comments:

Post a Comment