Wednesday, May 22, 2013

Sri Jagaddhatri Stotra - ஸ்ரீ ஜக³த்³தா⁴த்ரீ ஸ்தோத்ரம்



श्री जगद्धात्रीस्तोत्रं
आधारभूते चाधेये धृतिरूपे धुरन्धरे । ध्रुवे ध्रुवपदे धीरे जगद्धात्रि नमोऽस्तु ते ॥१॥
शवाकारे शक्तिरूपे शक्तिस्थे शक्तिविग्रहे । शाक्ताचारप्रिये देवि जगद्धात्रि नमोऽस्तु ते॥२॥
जयदे जगदानन्दे जगदेकप्रपूज्जिते । जय सर्वगते दुर्गे जगद्धात्रि नमोऽस्तु ते ॥३॥
परमाणुस्वरूपे च द्वयणुकादि स्वरूपिणि । सूक्ष्माति सूक्ष्मरूपे च जगद्धात्रि नमोऽस्तु ते ॥४॥
सूक्ष्मातिसुक्ष्मरूपे च प्राणपानादिरूपिणि । भावाभावस्वरूपे च जगद्धात्रि नमोऽस्तु ते ॥५॥
कालादिरूपे कालेशे कालाकाल विभेदिनि । सर्वस्वरूपे सर्वज्ञे जगद्धात्रि नमोऽस्तु ते ॥६॥
महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे । प्रपञ्चसारे साध्वीशे जगद्धात्रि नमोऽस्तु ते ॥७॥
अगम्ये जगतामाद्ये माहेश्वरि वराङ्गने । अशेष रूपे रूपस्थे जगद्धात्रि नमोऽस्तु ते ॥८॥
द्विसप्तकोटिमन्त्राणां शक्तिरूपे सनातनि । सर्वशक्तिस्वरूपे च जगद्धात्रि नमोऽस्तु ते ॥९॥
तीर्थयज्ञतपोदानयोगसारे जगन्मयि । त्वमेव सर्वं सर्वस्थे जगद्धात्रि नमोऽस्तु ते ॥१०॥
दयारूपे दयादृष्टे दयार्द्र दुःखमोचनि । सर्वापत्तारिके दुर्गे जगद्धात्रि नमोऽस्तु ते ॥११॥
अगम्यधामधामस्थे महायोगिश-हृतपुरे । अमेयभावकूट्स्थे जगद्धात्रि नमोऽस्तु ते ॥१२॥


ஸ்ரீ ஜக³த்³தாத்ரீஸ்தோத்ரம்ʼ
ஆதாரபூதே சாதேயே த்ருʼதிரூபே துரந்தரே|
த்ருவே த்ருவபதே³ தீரே ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே||  1||
ஸ²வாகாரே ஸ²க்திரூபே ஸ²க்திஸ்தே² ஸ²க்திவிக்³ரஹே |
ஸா²க்தாசாரப்ரியே தே³வி ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 2||
ஜயதே³ ஜக³தா³னந்தே³ ஜக³தே³க ப்ரபூஜ்ஜிதே |
ஜய ஸர்வக³தே து³ர்கே³ ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே  || 3||
பரமாணுஸ்வரூபே ச த்³வயணுகாதி³ ஸ்வரூபிணி |
ஸூக்ஷ்மாதி ஸூக்ஷ்மரூபே ச ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 4||
ஸூக்ஷ்மாதி ஸுக்ஷ்மரூபே ச ப்ராணபாணாதி³ரூபிணி |
பாவாபாவ ஸ்வரூபே ச ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 5||
காலாதி³ரூபே காலேஸே² காலாகால விபேதி³னி |
ஸர்வஸ்வரூபே ஸர்வக்ஞே ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 6||
மஹாவிக்னே மஹோத்ஸாஹே மஹாமாயே வரப்ரதே³ |
ப்ரபஞ்சஸாரே ஸாத்வீசே²  ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 7||
அக³ம்யே ஜக³தாமாத்யே மாஹேஸ்²வரி வராங்க³நே |
அஸே²ஷ ரூபே ரூபஸ்தே² ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 8||
த்³விஸப்தகோடிமந்த்ராணாம்ʼ ஸ²க்திரூபே ஸநாதனி |
ஸர்வஸ²க்திஸ்வரூபே ச ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 9||
தீர்த்த² யஜ்ஞ தபோதா³னயோக³ ஸாரே ஜக³ன்மயி |
த்வமேவ ஸர்வம்ʼ ஸர்வஸ்தே²  ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே ||10||
த³யாரூபே த³யாத்³ருʼஷ்டே த³யார்த்³ர து³:க²மோசனி |
ஸர்வாபத்தாரிகே து³ர்கே³ ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 11||
அக³ம்யதாமதாமஸ்தே² மஹாயோகி³ஸ²-ஹ்ருʼத்புரே |
அமேயபாவகூடஸ்தே² ஜக³த்³தாத்ரி நமோ(அ)ஸ்து தே || 12||

1. அண்ட சராசரங்களின் ஆதாரமே விளங்குபவளே ! அந்த ஆதாரத்தின் மீது அமர்பவளே ! அதைத் தாங்கும் சக்தியே ! (இவ்வுலக இயக்கத்தின்) பொறுப்பை ஏற்பவளே ! நிலையானவளே!  நிலைபெற்ற இடத்தில் இருப்பவளே ! உலகைத் தாங்குபவளே !  தாயே,  உனக்கு வந்தனம். (ஆதாரம், ஆதேயம், தாரணம் எனும் திரிபுடி நிலையும், நிலைப்பும் ஆனவளே ! )

2. சக்தியற்ற சவ வடிவினளே ! (சவத்தை உயிர்ப்பிக்கிற) சக்தி வடிவினளே (இதன் உட்பொருள், 'சிவ' என்ற சொல்லில் உள்ள 'இ'காரம் குண்டலினி சக்தியாகிய அம்பிகையின் ஸ்வரூபம். சிவ என்ற சொல்லில் இருக்கும் 'இ'காரத்தை எடுத்து விட்டால், அது உயிரற்றது எனப் பொருள்படும் சொல்லாகிவிடும். உயிரற்ற, உயிருள்ள அனைத்துப் பொருட்களின் வடிவினள் அம்பிகை) ! அந்த சக்தியில் அமர்ந்தவளே ! சக்தியின் சொரூபமானவளே, சாக்த சம்பிரதாயத்தில் விருப்பமுள்ளவளே !  ஜகத்தாத்ரீ !  உனக்கு வந்தனம்.

3. வெற்றி அளிப்பவளே !  உலகின் ஆனந்தமே ! தனிப்பெரும் சிறப்புடன் கூடியவளாக, இவ்வுலகத்தால் வழிபடப் பெறுபவளே ! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவளே !  எளிதில் அணுக (அறிய) இயலாதவளே !  ஜகத்தாத்ரி !  உனக்கு வந்தனம்

4. பரமாணு வடிவினளே ! இரண்டு அணுக்களின் கூட்டாகிய த்வ்யணு முதல் பரந்த இவ்வுலகம் வரையிலான அனைத்தின் வடிவே ! மிக நுண்ணிய, சூட்சும வடிவினளே !  ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.

5. நுண்மையிலும் மிக நுண்ணியதாக வடிவினளே !  உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன் ஆகிய வாயுக்களின் (பஞ்சப் பிராண) வடிவினளே ! இருப்பும், இல்லாமையும் ஆனவளே ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.

6. காலம் (திசை) முதலானவளே ! காலத்தை ஆள்கின்றவளே !  உரிய நேரம் - தவறான நேரம் எனப் பாகுபடுத்துபவளே ! அனைத்துமானவளே ! அனைத்தும் அறிந்தவளே ! ஜகத்தாத்ரி !  உனக்கு வந்தனம்.

7. பெரும் தடையானவளே ! (எவராலும் அகற்ற இயலாத இடையூறாக உள்ளவளே ! ), பெரும் உற்சாகமானவளே ! (தடையை எதிர்த்துச் செல்கின்ற ஆர்வம் தருபவளே ! ) 'மஹாமாயா' எனப்படும் மாயாசக்தியாக இவ்வுலகை வசப்படுத்துபவளே !  கோரியதைத் தருபவளே ! விரிந்த இந்த உலகின் சாரப் பொருளே !  நல்லோரை ஆட்கொள்பவளே !  ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.

8. எளிதில் அடைய முடியாதவளே !  உலகம் அனைத்தின் முதற்பொருளே !  மகேசனின் சக்தியே ! சிறந்த பெண்மணியே ! அனைத்தின் வடிவினளே !  உருவ வடிவெடுத்து அதில் துலங்குபவளே (சகுண ஸ்வரூபிணியே) !  ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.

9. 14 கோடி மந்திரங்களுக்கும் சக்தி ஆனவளே !  எப்போதும் நிலையாக உணரப்படுபவளே ! சக்திகள் அனைத்தின் வடிவானவளே !  ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.

10. புனித நதிகள், வேள்விகள், தவம், தானம் இவற்றின் ஒழுங்குமுறைகளின் சாரமே ! உலகமாகக் காணப் பெறுபவளே (ஜகன்மாதாவே) ! அனைத்திலும் உள்ளவளே !  நீயே அனைத்துமாயும் இருந்தருளுகிறாய் - ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.

11. பரிவின் வடிவே !  பரிவுடன் நோக்குபவளே !  பரிவால் கனிந்தவளே ! துயரிலிருந்து விடுவிப்பவளே ! நெருக்கடிகள் அனைத்திலிருந்தும் காப்பவளே ! எளிதில் உணர முடியாதவளே ! ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.

12.  சென்றடைய இயலாத பெருநிலை எனும் மாளிகையில் இருப்பவளே !  பெரும் யோகீச்வரரின் இதயத்தைத் தன் தலைநகரமாகக் கொண்டவளே !  அளவிட இயலாத மூலப்பொருள் என்ற நிலையில் (பரம்பொருளாக) உள்ளவளே ! ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.

No comments:

Post a Comment