Thursday, March 7, 2013

Veda Sara Shiva Stotra - வேத³ஸார ஸி²வ ஸ்தோத்ரம்‌

 ||  வேத³ஸார ஸி²வ ஸ்தோத்ரம்‌ || 
            
பஸூ²னாம்ʼ பதிம்ʼ பாபனாஸ²ம்ʼ பரேஸ²ம்ʼ
   க³ஜேந்த்³ரஸ்ய க்ருʼத்திம்ʼ வஸானம்ʼ வரேண்யம்‌ | 
ஜடாஜூடமத்⁴யே ஸ்பு²ரத்³கா³ங்க³வாரிம்ʼ
   மஹாதே³வமேகம்ʼ ஸ்மராமி ஸ்மராரிம்‌ || 1 ||

(அனைத்து தெய்வங்களுக்கும் மேலான மஹாதேவா, 'பசு' என்று அறியப்படும் அனைத்து ஆத்மாக்களுக்கும் அதிபதியான ஆத்மநாதா, அனைத்துயிரினங்களின் பாபங்களை எல்லாம் நாசம்  செய்யும் பாபவிநாசா, முதன்மையான பிரபுவே, கஜேந்திரன் என்னும் யானையின் தோலை ஆடையாகத் தரித்தவரே (கஜசம்ஹாரமூர்த்தியே), அடர்ந்து வளர்ந்து மகுடம் போல் தங்கள் தலைமேல் அமைந்த ஜடாமுடியில்  பிரவகித்து ஓடும் கங்கையைக் கொண்டவரே, காமதேவனின் பாணத்தை வென்றவரே, தங்களை மானஸீகமாக வணங்குகிறேன்.)

மஹேஸ²ம்ʼ ஸுரேஸ²ம்ʼ ஸுராராதினாஸ²ம்ʼ
   விபு⁴ம்ʼ விஸ்²வனாத²ம்ʼ விபூ⁴த்யங்க³பூ⁴ஷம்‌| 
விரூபாக்ஷமிந்த்³வர்கவஹ்னித்ரினேத்ரம்ʼ
   ஸதா³னந்த³மீடே³ ப்ரபு⁴ம்ʼ பஞ்சவக்த்ரம்‌||  2||

(தேவர்களுக்கெல்லாம் ஈசனான மஹேசனே!, தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவரே!, அனைத்துயிரினங்களுக்கும் தலைவரே!(விபுவே),  பரந்த பிரபஞ்ச வெளியெங்கும் எதிலும் வியாபித்திருக்கும் விஸ்வநாதா!, திருமேனியெங்கும் திருநீறு அணிந்தருளுபவரே!,  சந்திரன், சூர்யன் மற்றும் அக்னி சொரூபமான மூன்று த்ரிநேத்ரங்களை (கண்கள்) உடையவரே!, எப்பொழுதும் தன்னை மறந்து மோன நிலையான ஆனந்த லயத்தில் ஆழ்ந்திருப்பவரே, சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம் என்னும் திருநாமங்களை உடைய ஐந்து திருமுகங்களைக் கொண்ட பிரபுவே, தங்களை வணங்குகிறேன்.)

கி³ரீஸ²ம்ʼ க³ணேஸ²ம்ʼ க³லே நீலவர்ணம்ʼ
   க³வேந்த்³ராதி⁴ரூட⁴ம்ʼ கு³ணாதீதரூபம்‌| 
ப⁴வம்ʼ பா⁴ஸ்வரம்ʼ ப⁴ஸ்மனா பூ⁴ஷிதாங்க³ம்ʼ
   ப⁴வானீகலத்ரம்ʼ ப⁴ஜே பஞ்சவக்த்ரம்‌||  3|| 

(பர்வதங்களின் (மலைகளின்) தலைவனான பர்வதராஜனே, திருக்கைலாயத்தின் கணங்களுக்கு அதிபதியான கணநாதா, தேவர்களைக் காக்கவென பாற்கடலைக்  கடைந்த போது  வெளிவந்த, வாசுகி என்னும் நாகத்தின் ஆலகால‌ விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீ அருந்தியவுடன், தேவி பார்வதி தன் திருக்கரத்தை வைத்து, அந்த விஷத்தை உனது திருக்கழுத்திலேயே நிலைபெற செய்ததால் கழுத்து நீல நிறமாக உருமாற நீலகண்டன் எனும் நாமகரணம் பெற்றவரே, ரிஷபத்தை வாகனமாக கொண்டவரே,சத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட உருவத்தை கொண்டவரே (நிர்க்குணமான பரம்பொருளே), அனைத்திற்கும் மூலமான ஆதிநாதா, திருநீறால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களை உடையவரே, தேவி பவானியை அர்த்தாங்கினியாகக் (தன்னில் பாதியாக) கொண்டவரே, ஐந்து திருமுகங்களை உடைய நமசிவாய, தங்களை வணங்குகிறேன்.)

ஸி²வாகாந்த ஸ²ம்போ⁴ ஸ²ஸா²ங்கார்த⁴மௌலே
   மஹேஸா²ன ஸூ²லிஞ்ஜடாஜூடதா⁴ரின்‌ | 
த்வமேகோ ஜக³த்³வ்யாபகோ விஸ்²வரூப:
   ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ பூர்ணரூப || 4 || 

(பார்வதி தேவியின் மணாளனே!, சம்போ சதாசிவா!, தலையில் பிறைச்சந்திரனை அணிந்தவரே, மகிமை வாய்ந்த ஈசானனே(மஹேசா),  ஜடாமுடியுடன் திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்தியவரே,  எப்பொழுதும் தனிமையில் தியானத்தில் அமர்ந்திருந்தாலும், எங்கும், எதிலும் வியாபித்திருப்பவரே, பூர்ணமான பிரபுவே, தாங்களே எழுந்தருளி (எங்களுக்கு) அருளவேண்டும்.)

பராத்மானமேகம்ʼ ஜக³த்³பீ³ஜமாத்³யம்ʼ
   நிரீஹம்ʼ நிராகாரமோங்காரவேத்³யம்‌ | 
யதோ ஜாயதே பால்யதே யேன விஸ்²வம்ʼ
   தமீஸ²ம்ʼ ப⁴ஜே லீயதே யத்ர விஸ்²வம்‌ || 5 || 

(அனைத்திற்கும் மேலான பரம்பொருளே, பிரபஞ்சத்தின் முதல் ஆதாரமே, ஆசை எனும் மாயையிலிருந்து விடுபட்டவர் என்றதால் ஈசன் எனும்  திருநாமம் கொண்டவரே,  உருவமில்லாதவரே, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தியானத்தின் மூலமாக அறியத் தக்கவரே(பிரணவப்பொருளே), இப்பிரபஞ்சமானது தங்கள் சித்தப்படி படைக்கப்படுகிறது, தங்களால் காக்கப்பட்டு திரும்பவும் தங்கள் சித்தப்படி தங்களிடமே லயமடைகிறது.)

ந பூ⁴மிர்னம்ʼ சாபோ ந வஹ்னிர்ன வாயு-
   ந சாகாஸ²மாஸ்தே ந தந்த்³ரா ந நித்³ரா | 
ந சோஷ்ணம்ʼ ந ஸீ²தம்ʼ ந தே³ஸோ² ந வேஷோ
   ந யஸ்யாஸ்தி மூர்திஸ்த்ரிமூர்திம்ʼ தமீடே³ || 6 || 

(நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதத்திற்கு அப்பாற்பட்டவரே,  தாங்கள் செயலும் அல்ல சோம்பலும் அல்ல, வெப்பமும் அல்ல தண்மையும் அல்ல,  இடமும் அல்ல கற்பனையும் அல்ல, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்று மும்மூர்த்திகளாக வடிவெடுத்தாலும் உண்மையில்  ஒரு வடிவமும் இல்லாத பரம்பொருளே தாங்கள். அத்தகைய மகிமை வாய்ந்த ஈசனான தங்களை வணங்குகிறேன்.)

அஜம்ʼ ஸா²ஸ்²வதம்ʼ காரணம்ʼ காரணானாம்ʼ
   ஸி²வம்ʼ கேவலம்ʼ பா⁴ஸகம்ʼ பா⁴ஸகானாம்‌ | 
துரீயம்ʼ தம:பாரமாத்³யந்தஹீனம்ʼ
   ப்ரபத்³யே பரம்ʼ பாவனம்ʼ த்³வைதஹீனம்‌ || 7 || 

(தேவர்களில் உன்னதமானவரான சிவனிடம் புகலிடம் தேடித் தஞ்சம் அடைகிறேன். அவர் அழிவற்றவர்,  நிலையானவர், எல்லா காரண காரியங்களுக்கும் காரணமானவர்,  இணையில்லாதவர்,  ஒளிக்கெல்லாம் ஒளியான‌ ஞான ஒளியானவர்,  விழிப்பு, கனவு மற்றும் ஆழ் உறக்கம் எனும் மூன்று நிலைகளையும் கடந்து நின்றவர். அறியாமை என்னும் இருளுக்கும் அப்பால் இருப்பவர், ஆதியும், அந்தமும் இல்லாதவர், பாவனமான‌  நிர்குணமானவர், இரு வேறு நிலைகளைக் கடந்த ஒரே பரம்பொருளானவர்(த்வைத ஹீனம்) ,அவரை வணங்குகிறேன்.)

நமஸ்தே நமஸ்தே விபோ⁴ விஸ்²வமூர்தே
   நமஸ்தே நமஸ்தே சிதா³னந்த³மூர்தே | 
நமஸ்தே நமஸ்தே தபோயோக³க³ம்ய
   நமஸ்தே நமஸ்தே ஸ்²ருதிஜ்ஞானக³ம்ய || 8 ||

(இப்பிரபஞ்சமே உருவாக வடிவெடுத்தவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம், விழிப்பு நிலையில் ஆனந்த லயமே முழு உருவாக வடிவெடுத்தவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்;  தவம் மற்றும் தியானத்தினால் அறியத் தக்கவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்;  வேத நூல்களில் வகுத்துள்ள அறிவுப் பாதையின் மூலமாக அறிய முடிந்தவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.)

ப்ரபோ⁴ ஸூ²லபாணே விபோ⁴ விஸ்²வனாத²
   மஹாதே³வ ஸ²ம்போ⁴ மஹேஸ² த்ரினேத்ர | 
ஸி²வாகாந்த ஸா²ந்த ஸ்மராரே புராரே
   த்வத³ன்யோ வரேண்யோ ந மான்யோ ந க³ண்ய: || 9 || 

(ஹே பிரபு ! திரிசூலத்தை திருக்கரங்களில் ஏந்தியவரே, பிரபஞ்சத்தின் அதிபதியான விஸ்வநாதா, மஹாதேவரே, நன்மையின் ஆதாரமே, த்ரிநேத்ரங்களை (முக்கண்கள்) உடைய உன்னதமான பகவானே, பார்வதி மணாளா, அமைதியே வடிவானவரே,  காமனையும் திரிபுரங்களையும் எரித்தவரே,  அசுரர்களின் பகைவரே,  ஈடு இணையற்றவரே,  தாங்களே பக்தர்களின் நாடுதலுக்கும், போற்றுதலுக்கும், புகலுக்கும்(சரணடைதலுக்கும்)  சிறந்தவர்.)

ஸ²ம்போ⁴ மஹேஸ² கருணாமய ஸூ²லபாணே
   கௌ³ரீபதே பஸு²பதே பஸு²பாஸ²னாஸி²ன்‌ | 
காஸீ²பதே கருணயா ஜக³தே³ததே³க-
   த்வம்ʼஹம்ʼஸி பாஸி வித³தா⁴ஸி மஹேஸ்²வரோ(அ)ஸி || 10 ||

நன்மையின் வடிவான சம்போ மஹாதேவா,  திரிசூலத்தை கரங்களில் ஏந்தி இருந்தாலும் கருணையே வடிவானவரே (கருணாமய சூலபாணே), தேவி கெளரியின் பதியானவரே (கௌரி பதே),  அனைத்து ஆத்மாவிற்கும் இறைவனே,  பந்தம், பாசம் என்னும் தளைகளிலிருந்து ஆத்மாக்களை விடுவிப்பவரே (பசுபாசநாசின்), வாரணாசி என்று அழைக்கப்படும் காசியின் தலைவனே (காசிபதே),  இவ்வுலகமே தங்கள் திருவிளையாடல் அன்றோ...! தங்களின் அளவில்லாத அபரிமிதமான பெருங்கருணை, இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து பின்னர் மீண்டும் தங்களில் இணைத்துக்கொள்கிறது.) 

த்வத்தோ ஜக³த்³ப⁴வதி தே³வ ப⁴வ ஸ்மராரே
   த்வய்யேவ திஷ்ட²தி ஜக³ன்ம்ருʼட³ விஸ்²வனாத² | 
த்வய்யேவ க³ச்ச²தி லயம்ʼ ஜக³தே³ததீ³ஸ²
   லிங்கா³த்மகே ஹர சராசரவிஸ்²வரூபின்‌ || 11 || 

(ஹே பிரபு ! அனைத்திற்கும் மூலாதாரமே, காமனை எரித்தவரே, ஜகதீசா, கருணை வடிவினனான கருணாகரனே, பாபங்களை அழிப்பவரே (பாபவிநாசா),    இப்பிரபஞ்சம்   தங்களிலிருந்தே பிறந்து, நிலைபெற்று, பின்னர் தங்களில் லயமாகிறது. பிரபஞ்சத்தின் இருக்கும் அசையும் மற்றும் அசையா வஸ்துகளின் சங்கமமாக லிங்க உருவில் வடிவெடுத்தவரே தங்களை வணங்குகிறேன்.)
 
| இதி ஸ்ரீமத்பரமஹம்ʼஸபரிவ்ராஜகாசார்யஸ்ய
ஸ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஸி²ஷ்யஸ்ய
ஸ்ரீமச்ச²ங்கரப⁴க³வத: க்ருʼதௌ
வேத³ஸாரஸி²வஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் |
 
Image Courtesy - Google Images 

No comments:

Post a Comment