Sunday, March 10, 2013

Maha Shivaratri - மஹா சிவராத்திரி

Image Courtesy - Google Images



॥  ஓம் நமசிவாய  ॥
மஹா சிவராத்திரி

நாளை (10-03-2013) மாசி மாச கிருஷ்ண பட்ச சதுர்தசி அதாவது மஹா சிவராத்திரி நன்னாள். சிவபெருமானின் அருளால் இகத்திலும், பரத்திலும் இன்பமாக வாழ விதிக்கப்பட்ட பல விரதங்களுள் இவ்விரதம் சிறப்பானது. இதன் பெருமைகள் புராணங்களில் பல கதைகள் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன.

சிவராத்திரி விரதம் பற்றிய மேல் விவரம் அறிய இங்கு சொடுக்கவும்.
சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும். சிவலிங்க மகிமை பற்றி அறிய இங்கு சொடுக்கவும்

சிவராத்திரி மகிமையில் அரிதானது அன்று உபவாசம் இருப்பது. சிவராத்திரியன்று யார் உபவாசம் இருந்தாலும் அது நூறு யாகங்களை அனுஷ்டித்தற்குச் சமம். அதைவிட அரிதானது இரவு விழித்திருந்தல். அன்றிரவு கண்விழித்தல் கோடி ஆண்டு தவத்தைவிட மேல்.

பரமேஸ்வர தரிசனம் செய்தல்  பரமேஸ்வர பூஜை செய்தல் அதைவிட சிறப்பானது, அப்பூஜையில் வில்வதளங்களை சமர்ப்பித்தல் என்னும் பாக்கியம் பல கோடிஜென்மங்களில் செய்த புண்ணியத்தால் வரக்கூடியது. பதினாயிரம் வருஷம் கங்கை நீரில் நீராடினால் ஒருவன் அடையும் புண்ணியத்தை, சிவராத்திரியன்று ஒரு முறை பரமேச்வரனுக்கு வில்வார்ச்சனை செய்து அடையலாம். அன்று ஒரு வில்வ இலையால் சிவலிங்கார்ச்சனை செய்வதால் உண்டாகும் புண்ணியத்திற்குச் சமமாக மூவுலகிலும் வேறு எதுவும் இல்லை.

சிவராத்திரி அன்று வேத சார சிவ ஸ்தோத்ரத்தை சிவ சந்நிதியில் 5 முறை அதன் பொருள் உணர்ந்து ஒருமனதோடு தியானத்தில் ஆழ்ந்து பாராயணம் செய்வது மிக விசேஷமானதாகவும், சிவபெருமானின் கிருபா கடாக்ஷத்தை அள்ளித்தரும் அட்சய பாத்திரம் என்றும் வட இந்தியாவில் நம்பப்படுகிறது.

வேதங்கள் போற்றித் துதிக்கும் வேதநாயகனான சிவபெருமானை, நிர்குணப் பரம்பொருளென புகழ்ந்து தொழும் வேத ஸார சிவ ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய இங்கு சொடுக்கவும்.

சிவராத்திரி அன்று பாராயணம் செய்ய இவ்வலைப்பூவில் உள்ள இதர சிவ ஸ்தோத்ரங்கள்
ரிஷி மார்க்கண்டேயர் அருளிய மஹா மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம் - இங்கு 

சிவா சிவா ஸ்துதி - இங்கு
தாரித்திரிய துக்க தஹன சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் - இங்கு
ஸ்ரீ லிங்காஷ்டகம் - இங்கு 

கண் பதிகம் - இங்கு 
ருத்ர அபிஷேக ஸ்தோத்ரம் - இங்கு 

சிவராத்திரி அன்று உபவாசம், இரவில் கண் விழித்தல், சிவபூஜை செய்து வில்வ தளங்களால் அர்ச்சனை, பஞ்சாக்ஷரீ ஜபம், ஸ்ரீ ருத்ர பாராயணம், சிவபுராணம் வாசித்தல் முதலிய சிவதர்மங்களை கடைப்பிடிக்க புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று நம்மால் முடிந்தவரை சிவதர்மத்தை கடைப்பிடித்து கைலாய நாதனின் அருளை வேண்டி நிற்போம்.

1 comment:

பார்வதி இராமச்சந்திரன். said...

மிக அருமையான பதிவு. சிவராத்திரி விரதம் மற்றும் சிவலிங்க மகிமை லிங்க் கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.

சிவராத்திரி விரத மகிமைகளை மிகத் தெளிவாகவும் அழகாகவும் விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Post a Comment