Sunday, October 1, 2017

Vijayadasami- 9th Birthday - விஜயதசமி திருநாள் - வலைப்பூவின் ஒன்பதாம் ஆண்டு துவக்கம்

வெற்றித் திருநாளான விஜயதசமி நன்னாளில் வாசகர்கள் அனைவருக்கும் க்ஷேத்ரயாத்ராவின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இத்திருநாளின் நாயகி துர்க்கா தேவியின் அருளால் அனைவரின் இல்லத்திலும் எல்லாவிதமான வளங்களும் பெருகட்டும்.

இன்று, க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. எட்டு ஆண்டுகளாக உங்களுடன்  பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சியும் நிறைவும் அடைகிறது. 262 பதிவுகள், அப்பதிவுகளை பார்வை இட்டோரின் எண்ணிக்கை 2.40 லட்சத்திற்கும் மேல்...

அதாவது சராசரியாக ஒவ்வோரு பதிவையும் பார்வை இடுவோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1000...Awesome Stats.  

ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களது வலைப்பூவிற்க்கு இது ஒரு மிகப்பெரிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது என்றால் மிகையாது. வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து ஏகாதசி விரதத்தை முடிந்தவரை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

இவ்வளர்ச்சிக்கு வாசகர்களின் ஆதரவு மட்டுமே காரணம். வாசகர்களின் ஆதரவுக்கு க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த நம்பிக்கையும், ஆதரவும் தொடரவும் வேண்டிக் கொள்கிறது.

கடந்த ஆண்டினை போல் அடி எடுத்து வைத்துள்ள ஒன்பதாம் ஆண்டிலும்  க்ஷேத்ரயாத்ரா வலைப்பூவின் பணி சிறப்பாக இருக்கும் என்று உறுதியுடன்  நம்பலாம். இறுதியாக, இத்தருணத்தில், எனக்கு உற்சாகமாக ஆலோசனை  அளித்தும், தன்னுடைய பொன்னான நேரத்தை பதிவுகள் பிழைகள் இல்லாமல இருக்க பிழை திருத்தம் செய்து அளித்தல், என்று என் பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் பேரன்புக்கு உரிய சகோதரி திருமதி.பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.


ஏகாதசி தொடர் பதிவுகளை போல் இவ்வருடம் மகான் ஞானேஸ்வர் அவர்களின் ஞானேஸ்வரி கீதாவை தொடர்பதிவுகளாக இடும் பணியினை , வெற்றிகரமாக முடிக்க இறைவனின் அருளோடு, தங்கள் அனைவரது அருளாசியையும் க்ஷேத்ரயாத்ரா வேண்டுகிறது.

நன்றியுடனும், நம்பிக்கையுடனும் ஒன்பதாம் ஆண்டில் காலடி வைக்கும்

உங்கள் அன்புள்ள


க்ஷேத்ரயாத்ரா

4 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!.. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சகோதரரின் வலைப்பூவின் வளர்ச்சியும் சேவையும் இன்னும்.. இன்னும் பல மடங்கு பெருக வேண்டும். இறையருளால் எண்ணியவை இனிதே நிறைவேற பிரார்த்திக்கிறேன். தங்களது பேருழைப்பில் மிகச் சிறிய பங்கே எனது என்ற போதிலும், பதிவில் என் பெயரையும் சேர்த்த தங்களது பெருந்தன்மைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!.. மேலும் பல பெருமைகள் இவ்வாண்டில் இனிதே சேரட்டும்!!..தங்கள் நற்பணி, வெற்றிகரமாக ஆண்டு தோறும் தொடர‌ வேண்டுகிறேன்!..

J.R.Julius said...

Congratulations Sir. It shows your dedication & great efforts to maintain such a wonderful blog for 9 successful years. May the Universal Source Energy Bless You in all ways.

kshetrayatraa said...

@Julius,
You gave me pleasant surprise..Thank you so much for your visit and wonderful Blessings..I, always remain, to receive all gifts of blessings and abundanace...Thanks once again

kshetrayatraa said...

@ Parvathi Ramachandran,
Thank you so much for your visit and comments. Your contribution goes beyond correction...It is like the mentor guiding disciple properly to enlighten, not only himself but also grooming for enlightening others / world..
Thanks once again

Post a Comment