Image Courtesy - Google Images |
श्री बालाम्बिकाष्टम्
१. नतोस्मि ते देवि सुपाद पङ्कजम् , सुरासुरेन्द्रैरपि वन्दितम् सदा ।
परात्परम् चारुतरम् सुमङ्कळम् , वेदान्त वेद्यम् ममकार्य सिद्ध्ये ॥
२. वेदैक वन्द्यम् भुवनस्य मातरम् , समस्त कल्याण गुणाभिरामिकाम् ।
भक्तार्थताम् भक्त जऩाभि वन्द्याम् , बालाम्बिकाम् बालकलाम् नतोस्मि ॥
३. सौवर्ण चित्राभरणाञ्च गौरीम् , प्रफुल्ल रक्तोत्पल भुषिताङ्गीम् ।
नीलाळकाम् नीलकळ प्रियाञ्च, बालाम्बिकाम्
बालकलाम् नतोस्मि ॥
४. सौवर्ण वर्णाक्रुति दिव्य वस्त्राम् , सौवर्ण रत्नकचित दिव्य काञ्चीम्
।
निम्बाट वीनाथमन: प्रह्रुष्टाम्, बालाम्बिकाम् बालकलाम् नतोस्मि ॥
५. स्रक् चन्दऩालङ्क्रुत दिव्य देहाम्, हारिदृ सच्चूर्ण विराजिताङ्गीम् ।
वैचित्र कोटीर विभूषिताङ्गीम्, बालाम्बिकाम् बालकलाम् नतोस्मि ॥
६. वैचिद्र मुक्तामणि विद्रुमाणाम्, स्रग्भिस् सदाराजित गौरवर्णाम् ।
चतुर्भुजाम् चारुविचित्र रूपाम् , बालाम्बिकाम् बालकलाम् नतोस्मि ॥
७. क्वणत्सु मञ्जीर रवाभिरामाम्, समस्त ह्रुऩ् मण्डल मध्यपीठाम् ।
वैद्येस्वरीम् वैद्यपतिप्रियाञ्च, बालाम्बिकाम् बालकलाम् नतोस्मि ॥
८. ब्रम्मेन्द्र विष्णुवर्क निचीच:,
पूर्व गीर्वाण वर्यार्च्चित दिव्य देहाम्
।
ज्योतिर्मयाम् ञाऩद दिव्य रूपाम् , बालाम्बिकाम् बालकलाम् नतोस्मि ॥
९. बालाम्बिका स्तोत्रम् अतीव
पुण्यम् , भक्तेष्टदम् चेत् मऩुज: प्रभाते ।
भक्त्या पठेत् प्रफलार्थ सिद्धिम्, प्राप्ऩोति सत्यस् सकलेष्टकामाऩ् ॥
ஸ்ரீ பா³லாம்பி³காஷ்டகம்
1. நதோஸ்மி தே தே³வி ஸுபாத³ பங்கஜம்
ஸுராஸுரேந்த்³ரைரபி வந்தி³தம் ஸதா³ |
பராத்பரம் சாருதரம் ஸுமங்களம்
வேதா³ந்த வேத்³யம் மமகார்ய ஸித்³த்⁴யே ||
2. வேதை³க வந்த்³யம் பு⁴வனஸ்ய மாதரம்
ஸமஸ்த கல்யாண கு³ணாபி⁴ராமிகாம் |
ப⁴க்தார்த²தாம் ப⁴க்த ஜனாபி⁴ வந்த்³யாம்
பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோஸ்மி
||
3. ஸௌவர்ண சித்ராப⁴ரணாஞ்ச கௌ³ரீம்
ப்ரபு²ல்ல ரக்தோத்பல பூ⁴ஷிதாங்கீ³ம் |
நீலாளகாம் நீலகள ப்ரியாஞ்ச
பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோஸ்மி
||
4. ஸௌவர்ண வர்ணாக்ருதி தி³வ்ய வஸ்த்ராம்
ஸௌவர்ண ரத்நகசித தி³வ்ய காஞ்சீம் |
நிம்பா³ட வீநாத²மந: ப்ரஹ்ருஷ்டாம்
பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோஸ்மி
||
5. ஸ்ரக் சந்த³னாலங்க்ருத தி³வ்ய தே³ஹாம்
ஹாரித்³ருʼ ஸச்சூர்ண விராஜிதாங்கீ³ம் |
வைசித்ர கோடீர விபூ⁴ஷிதாங்கீ³ம்
பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோஸ்மி
||
6. வைசித்³ர முக்தாமணி வித்³ருமாணாம்
ஸ்ரக்³பி⁴ஸ் ஸதா³ராஜித கௌ³ரவர்ணாம் |
சதுர்பு⁴ஜாம் சாருவிசித்ர
ரூபாம்
பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோஸ்மி
||
7. க்வணத்ஸு மஞ்ஜீர ரவாபி⁴ராமாம்
ஸமஸ்த ஹ்ருன் மண்ட³ல மத்⁴யபீடா²ம் |
வைத்³யேஸ்வரீம் வைத்³யபதிப்ரியாஞ்ச
பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோஸ்மி
||
8. ப்³ரம்மேந்த்³ர விஷ்ணுவர்க நிசீச:
பூர்வ கீ³ர்வாண வர்யார்ச்சித
தி³வ்ய தே³ஹாம் |
ஜ்யோதிர்மயாம் ஞானத³ தி³வ்ய ரூபாம்
பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோஸ்மி
||
9. பா³லாம்பி³கா ஸ்தோத்ரம் அதீவ
புண்யம்
ப⁴க்தேஷ்டத³ம் சேத் மனுஜ: ப்ரபா⁴தே |
ப⁴க்த்யா படே²த் ப்ரப²லார்த² ஸித்³தி⁴ம்
ப்ராப்னோதி ஸத்யஸ் ஸகலேஷ்டகாமான் ||
1. தேவி, நான் மேற்கொண்டுள்ள
காரியம் சித்தி அடைவதற்காக, எப்போதும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் தலைவனாலும் வணங்கப்படுவதும்,
மேலானவற்றிற்கும் மேலானதும், எல்லாவற்றையும் விட அழகு நிறைந்ததும் மங்களம் தரக்கூடியதும்
வேதங்களின் முடிவில் அறியப்படுவதுமான உனது பாதகமலங்களை தேவியே, நான் வணங்குகிறேன்.
2. வேதத்தில் போற்றித் துதிக்கப்படும்
புவனங்களுக்கெல்லாம் அன்னை, அனைத்து கல்யாண குணங்களும் ஒருங்கே அமைந்த பேரேழில் வடிவினள்,
பக்தர்கள் வேண்டுவதைத் தருபவள், பக்த ஜனங்களால் வணங்கப்படுபவள். அப்படிப்பட்ட இளம்பிறையான
பாலாம்பிகையை வணங்குகிறேன்.
3. தங்க நிறத்தில் விதவித ஆபரணங்களாலும்
அன்றலர்ந்த செந்தாமரை மலர்களாலும், அலங்கரிக்கப்பட்ட குமரியாய், கருத்த கூந்தலை உடையவளும்,
விடமுண்ட நீலகண்டனுக்குப் பிரியமானவளுமான, இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.
4. பொன் நிற மேனியில் தெய்வீக
ஆடை அணிந்தவள், பொன்னும் மணிகளும் பதிந்த ஒட்டியாணம் அணிந்தவள், வேப்ப வனத்திலுறை ஈசனின்
மனம் கவர்ந்தவளுமான, இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.
5. சந்தனத் தண்டுகளால் உருவாக்கப்பட்ட
எழிலார்ந்த மேனி உடையவளும், நறுமணமிக்க நற்சந்தனப் பொடிகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்பவளும்,
விசித்திரமான கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவளுமான இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.
6. விசித்ரமான முத்து, மணி,
பவளம் இவற்றால் தொகுப்பட்ட மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்படும் வெள்ளை நிறத்தவளும்,
நான்கு கரங்களுடன் அழகிய வடிவம் உடையவளுமான, இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.
7. கால்களில் இனிமையான இசை
எழுப்பும் நூபுரங்களை உடையவளும், அனைத்து உயிர்களின் இதயக் கமலத்தில் வீற்றிருப்பவளும்,
மருத்துவத்திற்கு நாயகியும், வைத்தியநாதனுக்கு இனிய தையல்நாயகியும் ஆன இளம்பிறையான
பாலாம்பிகையை வணங்குகிறேன்.
8. பிரம்மா, இந்திரன், விஷ்ணு,
சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்கள் அனைவராலும் அர்ச்சிக்கப்படும் தெய்வீகத் திருமேனி
கொண்டவளாக, கற்பனைக் கெட்டா ஒளிமயமாக விளங்குபவளும், ஞானத்தை வாரி வழங்கும் தெய்வீக
உருவாம் பாலாம்பிகையை வணங்குகிறேன்.
9. அளவற்ற புண்ணியம் நிறைந்ததும்,
பக்தர்கள் விரும்பியதைத் தரக்கூடியதுமான இந்த பாலாம்பிகா ஸ்தோத்திரத்தை அதிகாலையில்
பக்தி சிரத்தையுடன் படிப்பவர்கள் அளவிட முடியாத சித்திகளையும், தாங்கள் விரும்பும்
எல்லா நன்மைகளையும் அடைவர்.
சகோதரி திருமதி.பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் ஸ்ரீ பாலாம்பிகாஷ்டத்தை தமிழில்
துதியாக எழுதியுள்ளார். அவருக்கு ஷேத்ரயாத்ரா வலைப்பூவின் மனமார்ந்த நன்றிகள். சகோதரியின்
ஆலோசனை வலைப்பூ (click here), அவசியம் காண வேண்டிய ஒரு ஆன்மீக கலைக்களஞ்சியமாகும்.
நான் மறைகள் தொழுதேத்தும்
அரவிந்த மலரடிகள்
வானவரும் தானவரும்
போற்றிடும் செம் மலரடிகள்
முழுமுதலாய் நின்றொளிரும்
அழகு நிறை மலரடிகள்
செயலதனில் வென்றிடவே
பணிந்திடுவேன் தேவி நான்!! .1.
வேதங்கள் தொழும்
தேவி பிரபஞ்சத்தின் அன்னை நீ!!
விரும்பும் நற்குண
நிறை அழகொளிரும் தேவி நீ!!
வணங்குகின்ற பக்தர்க்
கெல்லாம் வரமருளும் செல்வம் நீ!!
வளருமொரு இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன். ..2.
விதவிதமாய் அணிமணிகள்
அணிந்திருக்கும் கௌரியளே!
விடமுண்ட கண்டன்
மனம் உகக்கும் பொன்னிறத்தவளே!!
வண்ணமிகு தாமரைகள்
கருங்கூந்தல் அலங்கரிக்க,
வளருமொரு இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன். ..3.
தங்க நிற மேனியிலே
சிறந்தொளிரும் பட்டாடை
தங்கத்திலே ஒட்டியாணம்
பதிந்தொளிரும் சிற்றிடை
வேப்ப வனந் தனிலுறையும்
ஈசன் மனதில் உன் நடை
வளருமொரு இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன். ..4.
வாசமிகு சந்தனமல
ங்கரிக்கும் திருவுருவே
பூசிய மஞ்சளுடன்
ஒளிர்கின்ற எழிலுருவே
விசித்திர கிரீடமது
துலங்குகின்ற நல்லுருவே
வளருமொரு இளம்பிறையே
பாலாம்பிகையே பணிகின்றேன். ..5.
அணிமுத்து பவள மாலை
அலங்கரிக்கும் தேவியளே
அழகொளிரும் தங்க
நிறத் திருமேனி கொண்டவளே
ஈரிரண்டு கரங்களுடன்
விளங்கி நிற்கும் சுந்தரியே
இளம்பிறையே பாலாம்பிகை
அடி தொழுது பணிகின்றேன். ..6.
நூபரங்கள் இசையொலிக்க
நடனமிடும் பொற்பாதம்
உயிரினங்கள் இதயந்தனில்
வீற்றிருக்கும் பொற்பாதம்
வைத்தியத்தின் நாயகியே
வைத்தீசன் தேவியளே
வளருமொரு இளம்பிறையே
பாலாம்பிகையே பணிகின்றேன் ..7.
பிரம்ம விஷ்ணு இந்திரரும்
பூஜிக்கும் திவ்ய ரூபம்
ஜோதி உருவான தொரு
ஞானமய மான தேஹம்
சூரியரும் சந்திரரும்
தாள் பணிந்தே தொழுது நிற்பர்
சுடர்கின்ற இளம்பிறையே
பாலாம்பிகையே பணிகின்றேன். ..8.
பாலையின் ஸ்துதி
அதி காலையில் படித்திட
பக்தர்கள் வேண்டுவது
யாவையும் நடந்திடும்
புண்ணியம் நிறைந்திடும்
சித்திகள் கிடைத்திடும்
பாலையின் மலரடி
இணை தொழுதேத் துவோம் ..9.
1 comment:
என் துதியை வெளியீடு செய்தமைக்கும் 'ஆலோசனை' இணைப்புக் கொடுத்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி!! அருமையான பல பதிவுகளை தொடர்ந்து அளித்து வரும் தங்கள் இணையற்ற சேவைக்குத் தலைவணங்குகிறேன்!
Post a Comment