சாதுர்மாஸ்யத்தின் முக்கியத்துவம்
சாதுர்மாஸ்யம் என்றால் என்ன?.
ஆஷாட(ஆடி) சுக்ல தசமியிலிருந்து கார்த்திகை சுக்ல
பௌர்ணமி வரையிலான நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய புண்ணிய சுபகாலம் எனப்படும்.
சிராவணம், பாத்ரபாதம்(புரட்டாசி), ஆஸ்வீனம்(ஐப்பசி), கார்த்திகை ஆகிய நான்கு
மாதங்கள் இதில் அடங்கும். இந்த நான்கு மாதங்கள் திரு மஹாவிஷ்ணுவின் வழிபடுவதற்கு
மிகவும் உகந்ததாகவும், விரைவில் பலன் கிட்டக் கூடியதாகவும் கருதப்படுகிறது.
மஹாவிஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் பெருமையை
விவரிக்கும் வராஹ புராணத்தில், சாதுர்மாஸ்யத்தின் மகத்துவம் பற்றி வராக
மூர்த்தியும்,பூமா தேவி இடையே
ஒரு ருசிகரமான சம்பாஷணை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை, பூமாதேவி, அறியாமை, அற்ப ஆயுள்,பிறவிப் பிணி
இவற்றுடன் கலியுகத்தில் பிறந்தவர்களைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு, சிந்தனையுடன்
வராகமூர்த்தியை அணுகி, - "பிரபு! இவர்கள் கலியுகத்தில் தங்களுடைய
குறைகளிலிருந்து பூரணமாக விடுபட்டு நலமுடனும், வளமுடனும் வாழ தாங்கள் தான் வழி
காட்ட வேண்டும். இக்கலியுகத்தில் பிறவி
எடுத்த அனைவரின் நிறை, குறைகளை தாங்கள் நன்கு அறிவீர். ஆகையால் அதிக சிரமமில்லாமல்
அதே சமயம் முழு பலனை அளிக்கக்கூடிய பிரார்த்தனை முறையை அருளி இவர்களை
ரட்சியுங்கள்" என்று வேண்டி நின்றாள்.
அதைக் கேட்ட ஸ்ரீ வராகமூர்த்தி அருள் ததும்பும்
புன்னகையுடன் - " தேவி, வருடத்தில் நான்கு மாதங்கள் புண்ணிய சுபகாலமாக
கருதப்படுகிறது. இந்த சுபகாலத்தில் செய்யப்படும் தானம், விரதம், ஜபம், ஹோமம் அனேக
நன்மைகளை தரவல்லது. மற்ற மாதங்களில் செய்யப்படும் புண்ணிய காரியங்களை விட, இந்த
நான்கு மாத காலத்தில் செய்யப்படும் நற்செயல்கள் பலமடங்கு பலன்களை
அளிக்கும்." என்று அருளினார்.
अस्ति प्रियतमः कालः चातुर्मास्याभिधो मम ।
दानं व्रतं जपो होमः तत्रानन्तगुणं स्मृतम् ।। वराह 1.16
मासेष्वन्येषु यत्किञ्चित् क्रियते मम तोषणम् ।
ततोप्यनन्तगुणितं चातुर्मास्ये न संशयः ।। वराह 1.17
அஸ்தி ப்ரியதம: கால:
சாதுர்மாஸ்யாபி⁴தோ⁴ மம |
தா³னம்ʼ வ்ரதம்ʼ ஜபோ ஹோம: தத்ரானந்தகு³ணம்ʼ ஸ்ம்ருʼதம் || வராஹ 1.16
மாஸேஷ்வன்யேஷு
யத்கிஞ்சித் க்ரியதே மம தோஷணம் |
ததோப்யனந்தகு³ணிதம்ʼ சாதுர்மாஸ்யே
ந ஸம்ʼஸ²ய: || வராஹ 1.17
ஸ்ரீ வராகர் அதற்கு, தேவி கேள் - "ஆஷாட (ஆடி)
மாதத்திலிருந்து தொடங்கி மார்க்கசீர்ஷ (மார்கழி) மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்
தட்சிணாயனமாகவும், புஷ்ய (தை) மாதத்திலிருந்து ஜேஷ்ட (ஆனி) மாதம் வரை உள்ள ஆறு
மாத காலம் உத்தராயண புண்ய காலமாகவும் அழைக்கப்படுகிறது. பூமியின் இந்த ஒரு
வருட காலமானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த நாளில் புஷ்ய மாதத்திலிருந்து
ஜேஷ்ட மாதம் வரையிலான காலம் நாளின் பகல் பொழுதாகவும், ஆஷாட மாதத்திலிருந்து
மார்க்கசீர்ஷ மாதம் வரையிலான காலம் நாளின் இரவுப் பொழுதாகவும் தேவர்களுக்கு
அமைகிறது."
"ஒரு சமயம், மேரு மலையின் சிகரத்தில்
அமர்ந்திருந்த பொழுது, தேவர்கள் அனைவரும் - "பிரபு, இரவு பொழுதாகி
விட்டது. நாங்கள் செல்லுவதற்கு எங்களுக்கு விடை கொடுங்கள்"
என்றனர்.
அச்சமயம், கருநிறத்தில் மினுக்கும் வெள்ளாடையுடன்,
கரத்தில் பரசு (கோடாலி) வுடன் ஒரு பெண்மணி என் முன் வந்தாள். என்னை
நமஸ்கரித்து, - "பிரபு வராக மூர்த்தி, என் பெயர் ராத்திரி. இராப்பொழுதின்
அபிமானியாக இருந்து வருபவள். இந்நேரத்தில் எவ்விதமான மங்கள சுப செயல்களும்
நடைபெறுவதில்லை. அசுபமானவள் என்று என்னை எல்லோரும் வெறுத்து ஒதுக்கிறார்கள். இவை
எல்லாம் எனக்கு மிகவும் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. இப்படியே உயிர்
வாழ்வதில் எந்தவொரு பயனும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த வேதனையையும்,
வருத்தத்தையும் என்னால் தாங்க முடியவில்லை, அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள
விரும்புகிறேன். நீங்கள் அருள்புரிந்தால் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்" என்று
கூறி நின்றாள்.
தேவர்களும் -" பிரபு! ராத்திரி தேவி தன்
மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ தாங்கள் கருணை புரியுங்கள் என்று
பிரார்த்தனை செய்தனர்.
நானும் (ஸ்ரீ வராகரும்) தேவர்களின் பிரார்த்தனையை
ஏற்று ராத்திரி தேவிக்கு வரம் அளித்தேன்.
நான், (ஸ்ரீ வராக மூர்த்தி) ராத்திரி தேவியிடம் -
"உன் வருத்தத்தை போக்கி நீ மகிழ்வுடன் வாழ உனக்கு வரமளிக்கிறேன். ஒரு நாளின்
இரவுப் பொழுதை மூன்று யாமமாக பிரித்து, (ஒரு யாமம் = இரண்டு மாதம்) அதில் முதல்
இரண்டு யாமம் அதாவது 4 மாதங்கள், இனி மேல் எனக்கு பிரியமானதாக ஆகும். இந்த நான்கு
மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்று அழைக்கப்படும். சாதுர்மாஸ்யத்தில் செய்யப்படும்
புண்ணிய தர்ம காரியங்கள் நிறைந்த நன்மைகளை அளிக்கும். சிராவணம், பாத்ரபதம்,
ஆஸ்வீனம், கார்த்திகை ஆகிய நான்கு சாதுர்மாஸ்ய மாதங்களில் நற்செயல்களினால்
விளையும் புண்ணியமானது நாளுக்கு நாள் கூடுதல் காணும். இக்காரணத்தினால் தான்
கடைசி மாதமான கார்த்திகை அனைத்து விதங்களிலும் மிகுந்த நன்மையளிக்கும் மாதமாக
கருதப்படும் " என்று அருளினேன். இதைக் கேட்டு ராத்திரி தேவி மிகுந்த
மகிழ்வுடன் தன்னுடைய வந்தனத்தை சமர்ப்பித்து தன் இருப்பிடம் சென்றாள்.
"ஒ தரணி(பூமா) தேவி, அப்பொழுதிலிருந்து இந்த
நான்கு சாதுர்மாஸ்ய மாதங்களும் எனக்கு மிகவும் பிரியமானதாகும். புண்ணிய
தீர்த்தங்களில் நீராடுவது, தானம் செய்வது, விரதம் மேற்கொள்ளுவது, ஹோமம், யக்ஞங்களை
நடத்துவது, ஜபம் செய்வது போன்ற புண்ணிய தர்ம செயல்களை செய்பவர்களுக்கு நான்
மிகுந்த நன்மைகளை அளிக்கிறேன்." என்று அருளினார்.
சாதுர்மாஸ்யம் பிரபு நாராயணர் யோக நித்ரையில்
ஆழ்ந்து போகும் காலமும் ஆகும். யோக நித்திரையில் ஆழ்ந்து போகுதல் என்றால் நாராயணன்
மானிடரைப் போல் நித்திரையில் ஆழ்கிறார் என்ற அர்த்தம் அல்ல. தேவர்கள் எல்லோரும்
இமைப் போதும் தூங்காமல் இருப்பவர்கள். அப்படியிருக்க, தேவர்களைப் படைத்த
இப்பிரபஞ்சத்தின் காவலரான நாராயணர் எப்படி உறங்க முடியும்? ஆகையால்
நித்திரையில் ஆழ்வது என்பது கடவுளின் ஒரு திருவிளையாடல் ஆகும்.
ஸ்ரீதரர், ஹ்ருஷீகேசர், பத்மநாபர் மற்றும் தாமோதரர்
என்னும் தன் நான்கு திருவடிவங்களில் பிரபு நாராயணனே சாதுர்மாஸ்ய மாதங்களின்
முக்கிய வணங்குதற்குரிய தெய்வமாவார்.
பக்தியை மேலும் அதிகரித்துக் கொள்ள சாதுர்மாஸ்ய
காலம் ஒரு அருமையான வாய்ப்பாவதோடு மோட்சப் பிராப்தி பெறுவதற்கான வழியின் முதல்
படியாகவும் அமைகிறது. நம்முடைய சாஸ்திரங்கள் கீழ்க்கண்ட பத்து புண்ணிய
தீர்மானங்களை (நியதிகளை) சாதுர்மாஸ்யத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று
விதித்து உள்ளது.
1.
Satsanga / சத்சங்கம்
2. Dvijabhakti / த்விஜ பக்தி
3. Guru, Deva, Agni Tarpana / குரு, தேவர், அக்னி தர்ப்பணம்
4. Gopradana / கொப்பரை தானம்
5. Vedapatha / வேதம் அத்யயனம்
6. Satkriya / சத் கிரியை
7. Satyabhashana / சத்ய பாஷனை
8. Gobhakti / கோ பக்தி அதாவது கோபூஜை
9. Dana Bhakti / தான பக்தி
10. Dharma Sadhana / தர்ம சாதனை
2. Dvijabhakti / த்விஜ பக்தி
3. Guru, Deva, Agni Tarpana / குரு, தேவர், அக்னி தர்ப்பணம்
4. Gopradana / கொப்பரை தானம்
5. Vedapatha / வேதம் அத்யயனம்
6. Satkriya / சத் கிரியை
7. Satyabhashana / சத்ய பாஷனை
8. Gobhakti / கோ பக்தி அதாவது கோபூஜை
9. Dana Bhakti / தான பக்தி
10. Dharma Sadhana / தர்ம சாதனை
Anna
Dana / அன்ன தானம்
இக்காலத்தில் அன்னதானம் செய்வது மிக சிறப்பானதாகவும், மற்ற எல்லா தானங்களை விடவும் முக்கியமானதாகவும், மேன்மையான புண்ணிய பலனை அளிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Control of senses / புலனடக்கம்
இக்காலத்தில் அன்னதானம் செய்வது மிக சிறப்பானதாகவும், மற்ற எல்லா தானங்களை விடவும் முக்கியமானதாகவும், மேன்மையான புண்ணிய பலனை அளிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Control of senses / புலனடக்கம்
உணவுக் கட்டுப்பாட்டை
வலியுறுத்தும் எந்த விரதத்தையும் முழுமையாக, அதற்குரிய விதிமுறைகளின்படி
கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டுமெனில்
அந்த விதியையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு சுயகட்டுப்பாட்டுடன்
விரதமிருப்பதால், நாம் (மாயையினாலான) இவ்வுலகத்தைச் சார்ந்து வாழ்வது என்பது
விலகி, நம் உள்ளிருக்கும் உயர்ந்த ஆன்ம சக்தியை அறிந்து வாழ்தல் இயலும். இது
புலனடக்கத்திற்கு ஒரு சிறந்த வழியாகும். புலனடக்கமே ஒருவரது ஆன்மாவை மிக உயர்ந்த
தெய்வீக நிலைக்கு இட்டுச் செல்லும். ஆகவே, விரதங்கள் முறையாக கடைபிடிக்கப்படுவது
அவசியம்.
சாதுர்மாஸ்யத்தின்
நான்கு விரதங்கள்
இந்த நான்கு மாத காலத்தில் சில உணவு வகைகளை உட்கொள்ளுதல் தவிர்க்கப்பட்டுள்ளது. தவிர்க்கப்பட வேண்டிய
உணவு வகைகளின் பெயரால் அந்தந்த மாதத்தின் விரதங்கள் அழைக்கப்படுகிறது
1. Shaka Vrata / சாக விரதம்
2. Ksheera Vrata / க்ஷீரா விரதம்
3. Dadhi Vrata / ததி விரதம்
4. Dvidala Vrata / த்விதாலா விரதம்.
2. Ksheera Vrata / க்ஷீரா விரதம்
3. Dadhi Vrata / ததி விரதம்
4. Dvidala Vrata / த்விதாலா விரதம்.
சங்கல்பம்
விரதங்கள் சரியான
சங்கல்பத்துடன் அனுஷ்டிக்கப் பட்டால் பூரண பலனை அளிக்கும். விரத சங்கல்பத்தை அந்தந்த
மாத விரதத்தின் தொடக்கத்திலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாகா விரத சங்கல்பம் (ஆஷாட சுக்ல ஏகாதசி)
आचम्य, प्राणानायम्य,
देशकालादिसंकीर्त्य वासुदेव शुचौ
मासे शाकव्रतमनुत्तमम् ।
त्वत्प्रीत्यर्थं करिष्येहं निर्विघ्नं कुरु माधव ।।
ஆசம்ய, ப்ராணானாயம்ய, தே³ஸ²காலாதி³ஸங்கீர்த்ய
त्वत्प्रीत्यर्थं करिष्येहं निर्विघ्नं कुरु माधव ।।
ஆசம்ய, ப்ராணானாயம்ய, தே³ஸ²காலாதி³ஸங்கீர்த்ய
வாஸுதே³வ ஸு²சௌ மாஸே ஸா²கவ்ரதமனுத்தமம்
|
த்வத்ப்ரீத்யர்த²ம்ʼ கரிஷ்யேஹம்ʼ நிர்விக்⁴னம்ʼ குரு மாத⁴வ ||
ததி விரத சங்கல்பம் (சிராவண சுக்ல ஏகாதசி)
संकर्षणारविन्दाक्ष
करिष्येहं दधिव्रतं ।
द्वितीये मासि देवेश निर्विघ्नं कुरु मे प्रभो ।
ஸங்கர்ஷணாரவிந்தா³க்ஷ கரிஷ்யேஹம்ʼ த³தி⁴வ்ரதம்ʼ |
द्वितीये मासि देवेश निर्विघ्नं कुरु मे प्रभो ।
ஸங்கர்ஷணாரவிந்தா³க்ஷ கரிஷ்யேஹம்ʼ த³தி⁴வ்ரதம்ʼ |
த்³விதீயே மாஸி தே³வேஸ² நிர்விக்⁴னம்ʼ
குரு மே ப்ரபோ⁴ |
க்ஷீரா விரத சங்கல்பம் ( பாத்ரபத சுக்ல ஏகாதசி)
प्रद्युम्न
तव तुष्ट्यर्थं प्रोष्टपद्यां तृतीयके ।
निर्विघ्नं कुरु देवेश करिष्येहं पयोव्रतम् ।।
निर्विघ्नं कुरु देवेश करिष्येहं पयोव्रतम् ।।
ப்ரத்³யும்ன தவ
துஷ்ட்யர்த²ம்ʼ ப்ரோஷ்டபத்³யாம்ʼ த்ருʼதீயகே |
நிர்விக்⁴னம்ʼ குரு
தே³வேஸ² கரிஷ்யேஹம்ʼ பயோவ்ரதம் ||
த்விதாலா விரத சங்கல்பம் ( ஆஸ்வீன சுக்ல ஏகாதசி)
अनिरुद्ध सुरैर्वन्द्य
द्विदळव्रतमुत्तमम् ।
करोम्यहमिषेमासे निर्विघ्नं कुरु मे प्रभो ।।
அனிருத்³த⁴ ஸுரைர்வந்த்³ய த்³வித³ளவ்ரதமுத்தமம் |
करोम्यहमिषेमासे निर्विघ्नं कुरु मे प्रभो ।।
அனிருத்³த⁴ ஸுரைர்வந்த்³ய த்³வித³ளவ்ரதமுத்தமம் |
கரோம்யஹமிஷேமாஸே
நிர்விக்⁴னம்ʼ குரு மே ப்ரபோ⁴ ||
சமர்ப்பணம்
விரதத்தை சங்கல்பத்துடன் தொடங்குவது எத்தனை
அவசியமோ, அதே போன்று நிறைவு செய்யும் நாளில் பகவான் விஷ்ணுவிற்கு சமர்ப்பணம்
செய்வதும் அவசியமாகும். அது நம்க்கு விரதத்தின் பலனை பூரணமாக பெற வழிவகுக்கும்.
சாக விரத சமர்ப்பணம்
वासुदेव नमस्तुभ्यं
प्रथमे मासि मत्कृतम् । शाकव्रतं
मया तेन संतुष्टो भव माधव ।।
வாஸுதே³வ நமஸ்துப்⁴யம்ʼ ப்ரத²மே மாஸி மத்க்ருʼதம் |
வாஸுதே³வ நமஸ்துப்⁴யம்ʼ ப்ரத²மே மாஸி மத்க்ருʼதம் |
ஸா²கவ்ரதம்ʼ மயா தேன ஸந்துஷ்டோ ப⁴வ மாத⁴வ ||
ததி விரத சமர்ப்பணம்
संकर्षण
नमस्तुभ्यं श्रवणे मत्कृतेन च । दधिव्रतेन देवेश
तुष्टो भव जनार्दन ।।
ஸங்கர்ஷண நமஸ்துப்⁴யம்ʼ ஸ்²ரவணே மத்க்ருʼதேன ச |
ஸங்கர்ஷண நமஸ்துப்⁴யம்ʼ ஸ்²ரவணே மத்க்ருʼதேன ச |
த³தி⁴வ்ரதேன தே³வேஸ² துஷ்டோ ப⁴வ
ஜனார்த³ன ||
ஷீரா விரத சமர்ப்பணம்
श्रीप्रद्युम्न
नमस्तुभ्यं मासमारभ्य यत्कृतं । इष्टदो भव सर्वेश गृहीत्वा तु पयोव्रतम् ।।
ஸ்ரீப்ரத்³யும்ன நமஸ்துப்⁴யம்ʼ மாஸமாரப்⁴ய யத்க்ருʼதம்ʼ |
ஸ்ரீப்ரத்³யும்ன நமஸ்துப்⁴யம்ʼ மாஸமாரப்⁴ய யத்க்ருʼதம்ʼ |
இஷ்டதோ³ ப⁴வ ஸர்வேஸ² க்³ருʼஹீத்வா து
பயோவ்ரதம் ||
த்விதாலா விரத சமர்ப்பணம்
अनिरुद्ध नमस्तुभ्यं
द्विदळाख्यव्रतेन च । मत्कृतेनाश्विने मासे प्रीत्यर्थं फलदो भव ।।
அனிருத்³த⁴ நமஸ்துப்⁴யம்ʼ த்³வித³ளாக்²யவ்ரதேன ச |
அனிருத்³த⁴ நமஸ்துப்⁴யம்ʼ த்³வித³ளாக்²யவ்ரதேன ச |
மத்க்ருʼதேனாஸ்²வினே மாஸே ப்ரீத்யர்த²ம்ʼ ப²லதோ³ ப⁴வ ||
சாதுர்மாஸ்ய விரதத்தை யார் கடைப்பிடிக்கலாம்?
எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரும் இவ்விரதத்தை
கடைப்பிடிக்கலாம். அறியாமை அல்லது அக்கறையின்மையினாலோ, இவ்விரதத்தை மேற்கொள்ளாமல்
இருப்பவர்கள் நிச்சயம் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
சாக விரதம் (ஆஷாட மாதம் சுக்ல பட்ச ஏகாதசியிலிருந்து
சிராவண மாதம் சுக்ல பட்ச தசமி வரை)
சாதுர்மாஸ்யத்தில் நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப
நான்கு காலங்களாக பிரித்து அதற்கேற்ப விரதங்களும் மேற்கொள்ளப்படுகிறது. முதலில்
ஆஷாட மாத சுக்ல பட்ச ஏகாதசியிலிருந்து தொடங்கி சிராவண மாதம் சுக்ல பட்ச தசமி வரை சாக விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சாக விரத காலத்தில் காய்கறிகளையும்,
கனி வகைகளையும் பகவானுக்கு அர்ப்பணிப்பதோ அல்லது உணவாக உட்கொள்ளுவதையோ தவிர்க்க
வேண்டும்.
இவ்விரத காலத்தில் நாம் உணவில் சேர்த்துக்
கொள்ளக்கூடிய பொருட்கள்
1. அனைத்து வித பயிறுகள்
2. சீரகம்
3. எண்ணெய்
4. பால் / தயிர்
உணவில் தவிர்க்க வேண்டிய பொருட்கள்
1. அனைத்து கனி வகைகளும் ( மாங்கனி
உட்பட)
2. அனைத்து காய்கறிகளும்
3. அனைத்து கீரை வகைகளும், கறிவேப்பிலை, கொத்துமல்லி உட்பட
4. எலுமிச்சை
5. மசாலா பொருட்கள், முந்திரி, உலர் திராட்சை உட்பட
6. புளி
ததி விரதம் (சிராவண மாதம் சுக்ல பட்ச
ஏகாதசியிலிருந்து பாத்ரபத மாதம் சுக்ல பட்ச தசமி வரை)
சாதுர்மாஸ்யத்தின் இரண்டாவது விரதமான இதில்
தயிர், யோகர்ட் (தயிரிலிருந்து பெறப்படும்) இரண்டையும் தவிர்க்க வேண்டும்.
ஷீரா விரதம் (பாத்ரபத மாதம் சுக்ல
பட்ச ஏகாதசியிலிருந்து ஆஸ்வீன மாதம் சுக்ல பட்ச தசமி வரை)
பால் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் அனைத்து
விதமான பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
த்விதாலா விரதம். (ஆஸ்வீன மாதம்,
சுக்ல பட்ச ஏகாதசியிலிருந்து கார்த்தீக மாதம் சுக்ல பட்ச தசமி வரை.
இருபகுதிகளாக பிரியும் பயிறு வகைகளை, அதாவது கொண்டைக்கடலை,
துவரை, மசூரி பருப்பு, உளுந்து, நிலைக்கடலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment