॥ अम्बानवमणिमाला॥
वाणीं जित सुखदाणीं अलिकुल वेणीं भवाम्बुधित्रोणीम् ।
वीणां सुखशिशुपाग्णिं नत कीर्वाणीं नमामि सर्वाणीम् ॥ १॥
कुवलय दल नीलाङ्गीं कुवलयाक्षैक दीक्षित पाङ्गीम् ॥
लोचन विजित कुरङ्गीं मातङ्गीं नौमि शङ्करार्धाङ्गीम् ॥२॥
कमला कमलज कान्ता कलसारसदत्त कान्त करकमलकं ।
करयुगल विद्रुत कमलां विमलां कमलाङ्ग चूड सकलकलाम् ॥३॥
सुन्दर हिमकर वदनां कुन्द सुरतनां मुकुन्द निधि सदनाम् ।
करुनोज्जिवित मदनां सुर कुसलय सुरेशु क्रुत कदनाम् ॥४॥
तुङ्ग स्तन जित कुम्भां कृत परिरम्भां शिवेन गुह दिम्भाम् ।
धरित शुम्भ निशुम्भां नर्तित रम्भां पुरो विगदम्बाम् ॥ ५॥
अरुणाधर जित बिम्बां जगदम्बां गमन विजि कडम्बाम् ।
पालित सुजन कडम्बां पृतुल निदम्बां भजे सहेरम्भाम् ॥ ६॥
शरणागत जनभरणां करुणा वरुणालयां नवावरणाम् ।
मणिमय दिव्यभरणां शरणाम्न्भोजध सेवकोत्तरणाम् ॥ ७॥
नथ जन रक्षां दक्षां प्रत्यक्ष दैवताद्यकाहाम् ।
वही कृत हर्यक्षां क्षपि दवि पक्षां सुरेषु कृत रक्षाम् ॥ ८॥
धन्यां सुरवमान्यां हिमगिरितनयां त्रिलोक मूर्धन्याम् ।
विहृत सुरद्रुमवन्यां वेद्मि विन त्वां न देवतास्वन्याम् ॥९॥
एतां नवमणिमालां पतन्ति भक्त्येह ये परासक्त्याः।
तेषां वदने सदने नृत्यति वणि रमा च परम मुदा ॥१०॥
पातय वा पाताले स्थापय वा सकल भुवन साम्राज्ये ।
मातस्तव पाद युगलं नाहं मुञ्चामि नैव मुञ्चामि ॥११॥
|| அம்பா³ நவமணி மாலா ||
வாணீம்ʼ ஜித ஸுக²தா³ணீம்ʼ அலிகுல வேணீம்ʼ ப⁴வாம்பு³தி⁴த்ரோணீம் |
வீணாம்ʼ ஸுக²ஸி²ஸு²பாக்³ணிம்ʼ நத கீர்வாணீம்ʼ நமாமி ஸர்வாணீம் ||1||
குவலய த³ல நீலாங்கீ³ம்ʼ குவலயாக்ஷைக தீ³க்ஷித பாங்கீ³ம் ||
லோசன விஜித குரங்கீ³ம்ʼ மாதங்கீ³ம்ʼ நௌமி ஸ²ங்கரார்தா⁴ங்கீ³ம் ||2||
கமலா கமலஜ காந்தா
தரஸாரஸத³த்த காந்த கரகமலாம்ʼ |
கரயுக³ல வித்³ருத கமலாம்ʼ விமலாம்ʼ கமலாங்க³ சூட³ ஸகலகலாம் ||3||
ஸுந்த³ர ஹிமகர வத³நாம்ʼ குந்த³ ஸுரதநாம்ʼ முகுந்த³ நிதி⁴ ஸத³நாம் |
கருணேஜ்ஜீவித மத³நாம்ʼ ஸுர குஸலய ஸுரேஸு² க்ருத கத³நாம் ||4||
துங்க³ ஸ்தன ஜித கும்பா⁴ம்ʼ க்ருʼத பரிரம்பா⁴ம்ʼ ஸி²வேந கு³ஹ தி³ம்பா⁴ம் |
தாரித ஸு²ம்ப⁴ நிஸு²ம்பா⁴ம்ʼ நர்தித ரம்பா⁴ம்ʼ புரோ விக³த³ம்பா³ம் ||5||
அருணாத⁴ர ஜித பி³ம்பா³ம்ʼ ஜக³த³ம்பா³ம்ʼ க³மந விஜித காட³ம்பா³ம்|
பாலித ஸுஜந கட³ம்பா³ம்ʼ
ப்ருʼதுல நித³ம்பா³ம்ʼ ப⁴ஜே ஸஹேரம்பா⁴ம் ||6||
ஸ²ரணாக³த ஜநப⁴ரணாம்ʼ
கருணா வருணாலயாம்ʼ நவாவரணாம் |
மணிமய தி³வ்யப⁴ரணாம்ʼ
ஸ²ரணாம் போ⁴ஜாத⁴ ஸேவகோத்தரணாம் ||7||
நத² ஜன ரக்ஷாம்ʼ
த³க்ஷாம்ʼ ப்ரத்யக்ஷ தை³வதாத்³யகாஹாம் |
வஹீ க்ருʼத ஹர்யக்ஷாம்ʼ
க்ஷபி த³வி பக்ஷாம்ʼ ஸுரேஷு க்ருʼத ரக்ஷாம் ||8||
த⁴ந்யாம்ʼ ஸுரவமாந்யாம்ʼ
ஹிமகி³ரிதநயாம்ʼ த்ரிலோக மூர்த⁴ந்யாம் |
விஹ்ருʼத ஸுரத்³ருமவந்யாம்ʼ
வேத்³மி விந த்வாம்ʼ ந தே³வதாஸ்வந்யாம் ||9||
ஏதாம்ʼ நவமணிமாலாம்ʼ
படந்தி ப⁴க்த்யேஹ யே பராஸக்த்யா: |
தேஷாம்ʼ வத³நே ஸத³நே
ந்ருʼத்யதி வாணி ரமா ச பரம முதா³ ||10||
பாதய வா பாதாளே
ஸ்தா²பய வா ஸகல பு⁴வன ஸாம்ராஜ்யே |
மாதஸ்தவ பாத³ யுக³லம்ʼ
நாஹம்ʼ முஞ்சாமி நைவ முஞ்சாமி ||11||
வேதவடிவினளும்,
கிளியைப் பழிக்கின்ற குரலை உடையவளும் , கருவண்டுக் கூட்டம் போன்ற கரிய
நிறமுடைய கூந்தலை உடையவளும், சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தோணி
போன்றவளும், வீணை, கிளி ஆகியவற்றைத் திருக்கரங்களில் ஏந்தியவளும்
சரஸ்வதியினால் நமஸ்கரிக்கப்படுகிறவளும், பரமசிவனுடைய பத்தினியுமான அன்னையை
நமஸ்கரிக்கிறேன்.
நீலோத்பவ(கருங்குவளை)
மலரின் வண்ணம் போன்ற சரீரத்தை உடையவளும், உலகு அனைத்தையும் தன்
கடைக்கண் பார்வையால் காக்கும் திறத்தினளும் மானின் கண்களைப் பழிக்கும்
விழிகளைக் கொண்டவளும் மதங்க மகரிஷியின் புதல்வியும், பரமசிவனின்
இடப்பாகங் கொண்டவளுமான அம்பாளை வணங்குகிறேன்.
லட்சுமி,
சரஸ்வதி ஆகியோர் ஏந்தியிருக்கும் தாமரை போன்ற மென்மையான திருக்கரங்களை
உடையவளும், இரண்டு திருக்கரங்களிலும் தாமரை மலர்களைத் தரித்தவளும்,
தூய்மையானவளும், சந்திர சூடனான பரமசிவனுடைய சகலவித்யைகளின் உருவமாக
இருப்பவளுமான பராசக்தியை பூஜிக்கிறேன்.
அழகிய
சந்திரன் போன்ற முகத்தை உடையவளும், முல்லைமலர் போன்ற பல்வரிசையை உடையவளும்,
முகுந்தம் என்ற நிதிக்கு (நவநிதிகளில் ஒன்று) இருப்பிடமானவளும், மன்மதனை
கருணையினால் உயிர்ப்பித்தவளும், தேவர்களின் நலனுக்காக அசுரர்களை
அழித்தவளுமான பராசக்தியை துதிக்கிறேன்.
உன்னதமான
ஸ்தனங்களினால் குடத்தை வென்றவளும், பரமசிவனால் அணைத்துக் கொள்ளப்பட்டவளும்;
ஸகந்த மாதாவும், சும்பன் நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளும்,
ரம்பையின் நடனத்தை ரசிப்பவளும், ஆணவத்தை அழிப்பவளுமாகிய அன்னையை
நமஸ்கரிக்கிறேன்.
கோவைப்பழத்தை
வென்ற சிவந்த இதழ்களை உடையவளும், லோகமாதாவும், நடையினால் அன்னத்தை
வென்றவளும், நல்லோரைக் காப்பவளும் அழகிய பின்புறமும் உடையவளும்,
கணபதியுடன் காட்சி தருபவளுமான அம்பிகையை ஆராதிக்கிறேன்.
சரணடையும்
பக்தர்களை ரக்ஷிப்பவளும், கருணைக் கடலாயிருப்பவளும், ஒன்பது விதமான ஆடைகளை
அணிபவளும், ரத்தின ஆபரணங்களைத் தரித்துள்ளவளும், பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை துன்பத்திலிருந்து விடுவிப்பவளுமான தேவி!!!, தங்களைத்
தவிர வேறு யாரையும் நான் அறியவில்லை.
மிகுந்த
பக்தியுடன் தன்னை நாடியவர்களைக் காக்க வேண்டும் என விரதம் கொண்டவளும்,
ப்ரத்யக்ஷமான தேவதையானவளும், மிகுந்த ஆற்றலுடையவளும், சிம்மவாஹினியானவளும்,
கொடியவர்கள் அழித்து தேவர்களைக் காத்தருளும் தேவியுமான தங்களைத் தவிர
வேறு யாரையும் நான் அறியேன்.
பாக்கியமுள்ளவளும், தேவர்களால் வணங்கத்தக்கவளும், ஹிமவானின் குமாரியும், மூன்று உலகங்களிலும்
சிறந்தவளும், மந்தாரம் முதலிய தேவ விருட்சங்கள் அடங்கிய தோட்டத்தில்
விளையாடுபவளான தங்களைத் தவிர வேறு எந்த தேவதையும் நான் அறியவில்லை.
பராசக்தி!!!,
மேலான இந்த நவமணி மாலையை பக்தியுடன் எவர்கள் படிக்கிறார்களோ அவர்களின்
வாக்கில் சரஸ்வதியும், வீட்டில் மஹாலட்சுமியும் மிக பூரிப்புடன்
நடனமாடுகின்றனர்.
என் தாயே
மஹாதேவி , தாங்கள் என்னை அதல பாதாளத்தில் தள்ளினாலும் சரி,பெரிய
சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாக்கினாலும் சரி, உன் பாதகமலங்களை எக்காலத்திலும்
நான் விட மாட்டேன், விடவே மாட்டேன்.
இந்த ஸ்துதி கவி காளிதாசனால்
இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அற்புதமான இத்துதியை சொல்பவர் இல்லத்தில் அம்மன்
திருவருளால் அனைத்து வளமும் நலமும் சேரும். அஷ்ட லட்சுமி கடாட்சம் அகலாமல்
நிலைக்கும்.
No comments:
Post a Comment