ஸ்ரீ விருபஷ தேவர் அருளிச் செய்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்
அகணித குணகண மப்ரமேமாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்
உபரத மனோயோகி ஹ்ருந் மந்திரம்தம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே .....1
நிரவதி ஸூகம் இஷ்ட தாதார மீட்யம்
நதஜன மநஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபிந தவாக்னி நாமதேயம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே .....2
த்ரிபுவன குரும் ஆகமைகப்ரமாணம்
த்ரி ஜகத்காரண ஸூத்ரயோக மாயம்
ரவி சத பாஸ்வரம் ஈஹித ப்ரதானம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே .....3
அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவினா மதூரம்
பவ ஜலதிஸூதா ரணரங்கிரி போதம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே .....4
க்ருத நிலய மநிசம் வடாக மூலே
நிகம சிகா வ்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குளி கம்ய சாரூரூபம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே .....5
த்ருஹிண ஸூத பூஜிதாங்கிரி பத்மம்
பத பத்மாநத மோக்ஷ தாந தக்ஷம்
க்ருத குருகுல வாஸ யோகி மித்ரம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே .....6
யதி வர ஹ்ருதயே சதா விபாந்தம்
ரதிபதி சதகோடி ஸூந்தராங்க மாத்யம்
பரஹித நிரதாத்மனம் ஸூஸேவ்யம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே .....7
ஸ்மித தவள விகாஸிதநநாப்ஜம்
ஸ்ருதி ஸூலபம் வ்ருஷபாதிரூட காத்ரம்
ஸித ஜலஜ ஸூசோப தேஹ காந்திம்
ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே .....8
வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்நிதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க ஹாநிம்
வ்ரஜதிசிரம் க்ஞானவான் சம்புலோகம் .....9
1. எண்ணுதற்கரிய குணமுடையவரும், காட்சி முதலிய பிரமாணங்களால் அறியவொண்ணாதவரும், உலகங்களைப் படைத்து காத்து, அழிக்கக் காரணமாவரும், சாந்தமான யோகிகளின் உள்ளத்தில் குடிகொண்டவரும், முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை இடையறாது நான் துதித்து வணங்குகிறேன்.
2. வரம்பிலாத இன்பமுடையவரும், விருப்பங்களை அளிப்பவரும், வணங்கியவரின் மனக்கவலைகளைத் தீர்ப்பதில் வல்லுநரும், காட்டைத் தீ அழிப்பது போலத் தன் நாமத்தை உச்சரித்த அளவில் பிறவிக் கடலைக் கடக்கச் செய்கின்றவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதித்து வணங்குகிறேன்.
3. மூவுலகிற்கும் குருவானவரும், ஆகமங்களால் உணரப்படுபவரும், உலகங்களுக்குக் காரணமான யோகமாயையுடையவரும், நூறு சூரியன் போல் ஒளிர்பவரும், இஷ்டங்களை அளிப்பவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதித்து வணங்குகிறேன்.
4. உலக வாழ்க்கையை நினைப்பவர்கட்கு எட்டாதவரும், தாமரை அடியிணைகளை தியானிப்பவருக்கு அண்மையிலுள்ள பிறவிக் கடலைத் தாண்ட கப்பல் போன்ற திருவடிகளை உடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதித்து வணங்குகிறேன்.
5. எப்போதும் ஆலமரத்தடியிலிருப்பவரும், உபநிடதங்களால் உணர்த்தப் பெறும் உடலுடையவரும், கைவிரலிலுள்ள சின் முத்திரையினால் மெய்ஞ்ஞானம் உணர்த்துபவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதித்து வணங்குகிறேன்.
6. பிரம்மபுத்திரனால் பூஜிக்கப்பட்ட திருவடித்தாமரைகளை வணங்கியவர்களுக்கு வீடுபேறு அளிக்க வல்லமையுடையவரும், குருகுலவாசம் செய்த யோகிகளுக்கு நண்பருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதித்து வணங்குகிறேன்.
7. துறவிகளின் உள்ளத்தில் விளங்குபவரும், கோடி மன்மதனையொத்த அழகினை உடையவரும், பரோபகாரிகளுக்குச் சேவிக்கத்தக்க முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதித்து வணங்குகிறேன்.
8. புன்முறுவல் (இளநகை) பூத்த மலர்ந்த முகமுடையவரும், மறைகளால் அறியப்படுபவரும், விடையேறிய வெண்தாமரை போன்ற ஒளிமிக்க திருமேனியுடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதித்து வணங்குகிறேன்.
9. விருஷப தேவரால் இயற்றப்பட்ட இஷ்டங்களை அளிக்கவல்ல இத்துதியைத் தக்ஷிணாமூர்த்தியின் சந்நிதியில் படிப்பவர் சகல துக்கங்களிலிருந்தும் பாபங்களிலிருந்தும் விடுபட்டவராய் மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிவலோகத்தில் வாழ்வர்.
.
.
4 comments:
I want above pic in frame please kindly suggest
Sorry for late reply... Search Google images with "dakshinamurthy"... U will get n just press and download
can i get the text in Sanskrit L.Srinivasan
I don't hv sanskrit version but you can try at sanskrit documents site. Probably you may get it Thanks for Visiting.
Post a Comment