வாகீசாத்யா: ஸுமநஸ: ஸர்வார்த்தாநாம் உபக்ரமே |
யம் நத்வா க்ருத க்ருத்யாஸ்யு: தம் நமாமி கஜானனம் ||
பிரம்மா முதலிய தேவர்களும் தாங்கள் எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எவரை வணங்கி, அந்தக் காரியத்தைத் தடையின்றி முடிக்கிறார்களோ, அந்த யானைமுகத்தோனை நானும் வணங்குகிறேன்.
- ஸ்ரீ விக்னேஸ்வர ஸ்துதி மஞ்சரி
ஸ்ரீ விநாயகர் துதி
குருவே பரமன் கொழுந்தே பணிந்தேன்
குவலயம் போற்றும் கணநாதா !
வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்
வடிவேலவனின் சோதரனே !
அருள்வாய் ! உனையே
அனுதினம் பணிவேன்
அன்னை பராசக்தி அருள்மகனே !
திருமால் மருகா ! திருவடி சரணம்
தீன ரக்ஷகனே கணநாதா !
ஆனையின் அன்பன் அழகு முருகனின்
அண்ணனாய் உலகில் அவதரித்தாய் !
ஆனை முகத்தொடு ஐங்கரங் கொண்டதோர்
அற்புத வடிவே ! கணநாதா !
யானுனை என்றும் இராப்பகல் தொழுதேன்
என் துயர் களைவாய் ! கணநாதா
!
அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய் !
அரவணைத்தெனையும் ஆண்டருள்வாய் !
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பார்வதி மைந்தா ! கணநாதா
வல்லபை நாதா ! விக்ன விநாயகா
வாழ்த்திப் பணிந்தேன் உன்பதமே !
வல்வினை எல்லாம் வலிமை இழந்தே
வாடிடச் செய்வாய் ! கணநாதா !
தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன்
துன்பமெலாம் நீ துடைத்திடுவாய் !
அல்லொடு பகலும் அனவரதமும் உன்
அடியினைத் தொழுவேன் கணநாதா !
வானோடு நீரும் வளியும் தீயும்
வையகம் யாவும் மகிழ்வுறச் செய்வாய் !
மங்கலப் பொருளே கணநாதா !
தேனோடு பாலும் தெங்கொடு பழமும்
தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன் !
ஊனோடு உயிரும் உணர்வும் புரப்பாய் !
உன்னடி தொழுதேன் கணநாதா !
ஒமெனும் வடிவே உன் வடிவாமென
உலகிற்கெலாம் நீ உணர்த்திடுவாய் !
ஆம் எனச் சொல்வாய் ! அன்னை குமாரா !
ஆதரித்தருள்வாய் ! கணநாதா
!
ஒமெனும் பொருளே உமையவள் பாலா !
ஒரு பரம்பொருளே ! கணநாதா !
சங்கரன் மகனே ! சஞ்சலம் தீர்ப்பாய்
சக்தி குமாரா ! கணநாதா
ஐங்கரனே ! உன் அடியினை தொழுதேன்
அடைக்கலம் நீயே கணநாதா !
சங்கரித்திடுவாய் சங்கடமெல்லாம்
சம்புகுமாரா ! கணநாதா
!
சங்கரி மைந்தா ! சந்ததம் பணிவேன்
சரணம் ! சரணம்
! கணநாதா
!
Source Courtesy - Sri Ramakrishna Vijayam Magazine
2 comments:
ஸ்ரீ கணேச பாஹிமாம்!!!, ஜெய கணேச பாஹிமாம்!!. அருமையான பதிவு. நன்றிகள் பல.
சகோதரியின் வருகைக்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி
Post a Comment