நவராத்திரியில்,
ஜகன்மாதாவான அம்பிகையின் பிரபாவத்தைப் புகழும் 'ஸ்ரீ தேவி மஹாத்மியம்' பாராயணம் செய்வது
மிகப் பலரின் வழக்கம். தேவியின் அவதார மகிமை, யுத்த சரித்திரம் முழுவதும் அடங்கியதே ஸ்ரீ தேவி மஹாத்மியம். இது,
நினைத்தவுடனே முக்தி அளிக்கும் மிக மகிமை வாய்ந்த நூலாகும். அந்த ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில்
இருக்கும் எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே, 'ஸ்ரீதுர்க்கா ஸப்த ஸ்லோகி". இதை பாராயணம்
செய்தால், ஸ்ரீ தேவிமஹாத்மியம் பாராயணம் செய்த முழுப் பலனும் அடையலாம்.
அஷ்டமி,
சதுர்த்தசி, மற்றும் வெள்ளிக் கிழமைகளில், ஐந்து முக தீபத்தை ஏற்றி, தேவியைப் பூஜித்து,
ஸ்ரீ துர்க்கா ஸ்ப்த ஸ்லோகியை மூன்று முறை சொல்லி நமஸ்கரிப்பது, எல்லா நலன்களையும்
பெற்றுத் தரும். தீபத்தை கிழக்கு, அல்லது வடக்கு முகமாக வைத்துப் பூஜிக்க வேண்டும்.
வெள்ளிக் கிழமைகளில், சப்தஸ்லோகியுடன், லக்ஷ்மி அஷ்டோத்திர அர்ச்சனையும் சேர்த்து செய்து,
தேங்காய், பழம் நிவேதனம் செய்ய, ஐஸ்வர்யம் பெருகி, சர்வ மங்களங்களும் உண்டாகும்.
ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ
சிவ உவாச:
தேவி
த்வம் பக்தி ஸூலபே சர்வ கார்ம விதாயினி!
கலௌ
ஹிகார்ய ஸித்யர்த்தம் உபாயம் ப்ருஹியர்ந்த:
தேவ்யுவாச:
ச்ருணுதேவி
ப்ரவக்ஷ்யாமி கலேட ஸர்வேஷ்டஸாதநம்
மயாதவைவ
ஸநேஹநாப்யம்பாஸ்துதி: ப்ராகாச்யதே
சங்கல்பம்:
ஓம்
அஸ்ய ஸ்ரீ துர்க்கா ஸப்தச்'லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
நாராயண
ருஷி: |।
அனுஷ்டுப்சந்த:
ஸ்ரீ
மஹாகாளி, மஹாலக்ஷ்மீ, மஹா சரஸ்வத்யோ தேவதா: ।
ஸ்ரீ
ஜகதம்பா ப்ரீத்யர்த்தே ஜபே (பாடே) விநியோக: ॥
க்ஞானினாமபி
சேதாம்ஸி தேவீ பகவதி ஹி ஸா ।
பலாதாக்ருஷ்ய
மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி ॥ 1 ॥
துர்க்கே
ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசே'ஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை:
ஸ்ம்ருதா மதிமதீவ சு'பாம் ததாஸி ।
தாரித்ர்ய
து:க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார
கரணாய ஸதார்த்ர சித்தா ॥ 2 ॥
ஸர்வமங்கள
மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
ச'ரண்யே
த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥
ச'ரணாகத
தீனார்த்த பரித்ராண பராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே
தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥
ஸர்வஸ்வரூபே
ஸர்வேசே' ஸர்வச'க்தி ஸமந்விதே ।
பயேப்யஸ்த்ராஹிநோ
தேவி துர்க்கே தேவி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥
ரோகா
நசே'ஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது
காமான் ஸகலானபீஷ்டான் ।
த்வாமாச்'ரிதானம்
ந விபந்நராணாம்
த்வாமாச்'ரிதா
ஹ்யாச்'ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥
ஸர்வா
பாதா ப்ரச'மனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்'வரி ।
ஏவமேவ
த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாச'னம் ॥ 7 ॥
"ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ"
யின் கருத்துரை
மகாமாயையான பகவதி தேவி ஞானியரின்
சித்தங்களையும் பலவந்தமாக தன் மாயா சக்தியால்
இழுத்து மோகத்தில் செலுத்துகிறாள். (1)
கடக்க முடியாத பெரும் துன்பத்தில் ஸ்மரிக்கப்பட்டால் ஸ்ரீ துர்க்கா தேவி,சகல பிராணிகளின் அச்சத்தையும்
போக்குகிறாள் (அல்லது) துர்கே உனை ஸ்மரித்த மாத்திரத்தில் எல்லா உயிரினங்களின் பயத்தையும்
போக்குகின்றாய்.
இன்ப நிலையில் இருந்து கொண்டு
ஸ்மரிக்கப்பட்டால் பரம மங்களமான நல்லறிவை நல்குகிறாய். வறுமை, துன்பம், பயம் ஆகியவற்றை
நீக்குபவளே ! ஸகலருக்கும் ஸர்வ உபகாரங்களையும் செய்வதற்காக ஸதாகாலமும் காத்திருக்கும்,
கருணையால் நிரம்பிய நெஞ்சுடையவர் உனையன்றி எவர் உண்டு? (2)
மங்கள வஸ்துக்கள் அனைத்தினும்
பரமமங்களமானவளே! மங்களமே வடிவான சிவனின் சக்தியே ! சகல புருஷார்த்தங்களையும் சாதித்துத்
தருபவளே ! சரணாகத நிலையமே ! முக்கண் படைத்த (அல்லது மூம்மூர்த்தியருக்கும் அன்னையான)
த்ரயம்பகியே ! வெண்பொற் சோதியாம் கௌரி!! நரருக்கெல்லாம் ஆசிரயமாம் நாராயணி/!! உனக்கு
நமஸ்காரம். (3)
'சரண்' என வந்த தீனரையும் துன்புற்றோரையும்
மிக அருமையாகக் காப்பதையே தொழிலாகக் கொண்ட தேவி ! அனைவரின் துன்பங்களையும் நீக்கும்
நாராயணி!!! உனக்கு நமஸ்காரம். (4)
காணும் உருவனைத்தும் நீயே ! அனைத்தையும்
ஆளும் தேவி நீயே ! சர்வ சக்தியும் ஒன்றிய
இடம் நீயே ! தேவி துர்கே ! உனக்கு வந்தனம் ! எங்களை அச்சங்களினின்று ரட்சித்தருள்வாய்.! (5)
(பக்தியினால்) நீ திருப்தியடைந்தால், சகல ரோகங்களையும் அறவே அகற்றுகிறாய். கோரும் விருப்பங்கள்
அனைத்தையும் நிறைவேற்றி அருள்கிறாய். உனை அரண் போல பாதுகாப்பாகக் கொண்ட மனிதருக்கு
இடர் என்பதே இல்லை. அவர்களே பிறருக்கு அரணாகின்றனர் அன்றோ ? (6)
அகிலாண்டேசுவரி ! உன்னால் எமது
பகைவர்கள் அழிக்கப் பெற வேண்டும். இவ்வாறே மூவுலகிலும் உள்ளவர்களின் சகல துன்பங்களையும்
நீ அடியோடு அகற்றி அருள வேண்டும்.
3 comments:
Dhum Dhurge Dhuritam Hara.
Dhum Durge Dhuritam Hara.
Dhum Durge Dhuritam Hara.
U.AMBIKAPATHY:24.1.2022.
thanks for visiting blog and commenting...please keep visiting.
ஐயா அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு வருடமும் நான் நவராத்திரி தினங்களில் 24 வருடங்களாக நான் துர்கா ஸ்லோகம் படித்து வருகிறேன். மிக எளிமையாக படிக்கச் கூடியது . நன்மை தரக்கூடியது
Post a Comment