Wednesday, September 26, 2012

Sukhkarta Dukhharta Ganesh Aarthi - சுக கர்த்தா துக்க ஹர்த்தா கணபதி ஆர்த்தி


Tuljapur Amba Bhavani
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கணபதி வழிபாடு மிகவும் பிரசித்தி. விநாயகர் சதுர்த்தியை 10 நாட்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். தலைநகர் மும்பையில் கேட்கவே வேண்டாம். ஆங்காங்கே நண்பர்கள் குழு ஒன்று கூடி பந்தல் போட்டு ஆளுயுர கணபதியை ஸ்தாபனம் செய்து 10 நாட்களும் விமரிசையாக பூஜை நடத்துவார்கள். பந்தல் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் பிரபலமான கோயில்களை அப்படியே அச்சு அசலாக பிரதிபலிக்கும். காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். 10 வது நாளின் இறுதியில் வாண வேடிக்கையுடன் போகும் வழி எல்லாம் பூச்சொரிதலுடன் விஸ்ர்ஜன் என்னும் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.


இன்று காலை வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு கணபதி பந்தலுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வருடம் அப்படியே அச்சு அசலாக துல்ஜாபூர் பவானி தேவி கோயிலை உருவாக்கி இருந்தனர். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் வெற்றிக்கு வழிகாட்டி அருள்புரிந்த அம்பாபவானி தேவியின் தரிசனமும், கணபதியின் தரிசனமும் ஒரு சேர செவ்வாய்க்கிழமையன்று கிடைத்தது மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. வழக்கமாக இந்த பந்தலை காண மக்கள் கூட்டம் அலைமோதும் ஆகையால் ஒவ்வொரு வருடமும் தரிசனம் தவறிப்போகும். இந்த வருடம் திடீரென்று இப்படி எதிர்பார்க்காமல் தரிசனம் கிட்டியது கணபதியின் அருள் என்பதை தவிர வேறு எதுவும் நினைக்க தோன்றவில்லை. மும்பையின் கணபதி பந்தல்கள், கணபதி விழா ஆகியவை பற்றி இன்னொரு பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.

இப்போது இந்த பதிவில் மிகவும் பிரபலமான லதா மங்கேஸ்கர் அவர்களால் பாடப்பட்ட "சுக கர்த்தா துக்க ஹர்த்தா வார்த்தா விக்னாசீ" என்னும் ஆர்த்தி பாடல் அதன் காணொளியுடன்.


गणपतीजी आरती
सुखकर्ता दुःखहर्ता वार्ता विघ्नाची
नुरवी पुरवी प्रेम कृपा जयाची ।
सर्वांनी सुंदर उटी शेंदूराची
कंठी झळके माळ मुक्ता फ़ळांची ॥ १ ॥
जय देव जय देव जय मंगलमूर्ती ।
दर्शनमात्रे मनकामना पुरती ॥धृ ॥
रत्नखचित फ़रा तुज गौरीकुमरा ॥
चंदनाची उटी कुमकुमकेशरा ॥
हिरेजडित मुकुट शोभतो बरा ।
रुणझुणती नुपुंरे चरणी घागरिया  ॥ जय ॥  ॥ २ ॥
लंबोदर पीतांबर फ़णिवरबंधना ।
सरळ सोंड वक्रतुंड त्रिनयना ॥
दास रामाचा वाट पाहे सदना ।
संकटी पावावें निर्वाणी रक्षावें सुरवरवंदना ।
जय देव जय देव जय मंगलमूर्ती ।
दर्शनमात्रे मनकामना पुरती ॥ ३ ॥
घालीन लोटांगण, वंदीन चरण ।
डोळयांनी पाहिन रूप तुझे ।
प्रेम आलिंगिन, आनंदे पूजिन ।
भावे ओवाळिन् म्हणे नामा ॥  ॥
त्वमेव माता च पिता त्वमेव ।
त्वमेव बंधूश्च सखा त्वमेव ।
त्वमेव विद्या द्रविणं त्वमेव ।
त्वमेव सर्व मम देवदेव ॥ 2 ॥
 कायेन वाचा मनसेन्द्रियैर्वा ।
बुध्यात्मना वा प्रकृतिस्वभावात् ।
करोमि यद्यत् सकलं परस्मै ।
नारायणायेति समर्पयामी ॥ 3 ॥
अच्युतं केशवं रामनारायणं ।
कृष्णदामोदरं वासुदेवं हरिं ।
श्रीधरं माधवं गोपिकावल्लभं ।
जानकीनायकं  रामचंद्रं भजे ॥ 4 ॥
हरे राम हरे राम, राम राम हरे हरे ।
हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे ॥
க³ணபதி ஆரத்தி
ஸூக²கர்தா து³க்க²ஹர்தா வார்தா விக்னாசீ
நுரவீ புரவீ ப்ரேம் க்ருபா ஜயாசீ |
ஸர்வாங்கனீ ஸுந்த³ உடீ ஸே²ந்தூ³ராசீ
கண்டீ² ²ளகே மாள முக்தா ஃபளாஞ்சீ ||  1 ||
ஜய தே³ ஜய தே³ ஜய மங்க³ளமூர்(த்)தீ |
³ர்ஸ²னமாத்ரே மன காமனா புரதீ
ரத்னக²டித ஃபரா துஜ கௌ³ரீகுமரா ||
சந்த³னாசீ உடீ குங்கும கேஸ²ரா ||
ஹிரேஜடி³ முகுட ஸோ² தோ ³ரா |
ருணஜு²ணதீ நுபுரே ருணஜு²ணதீ நுபுரே  
சரணீ காக³ரியா       || ஜய || ||  2 ||
லம்போ³³ பீதாம்ப³ ஃபணிவர ³ந்தனா |
ஸரள ஸோண்ட³ வக்ரதுண்ட³ த்ரிநயனா ||
தா³ ரா மாசா வாட பாஹே ஸத³னா |
ஸங்கடீ பாவா வே(ம்) நிர்வாணீ ரக்க்ஷாவே(ம்) ஸூமரவரவந்த³னா |
ஜய தே³ ஜய தே³ ஜய மங்க³ளமூர்(த்)தீ |
³ர்ஸ²னமாத்ரே மன் காமனா புரதீ ||  3 ||
காலீன லோடாங்க³, வந்தீ³ சரண |
டோ³ளயாம்னீ பாஹின ரூப துஜே² |
ப்ரேம ஆலிங்கி³, ஆனந்தே³ பூஜின |
பாவே ஓவாளின் ம்ஹணே நாமா ||   ||
த்வமேவ மாதா பிதா த்வமேவ |
த்வமேவ ³ந்தூஸ்² ஸகா² த்வமேவ |
த்வமேவ வித்³யா த்³ரவிணம் த்வமேவ |
த்வமேவ ஸர்வம் மம தே³வதே³ ||  2 ||
காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா |
பு³த்யாத்மனா வா ப்ரக்ருதிஸ்வபாவாத் |
கரோமி யத்³யத் ஸகலம் பரஸ்மை |
நாராயணாயேதி ஸமர்ப்பயாமீ ||  3 ||
அச்யுதம் கேஸ²வம் ராமநாராயணம் |
க்ருஷ்ண தா³மோத³ரம் வாஸுதே³வம் ஹரிம் |
ஸ்ரீதரம் மாதவம் கோ³பிகாவல்லபம் |
ஜானகீ நாயகம் ராமசந்த்³ரம் பஜே ||  4 ||
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே |
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ||

No comments:

Post a Comment