நாகசதுர்த்தியும் கருட பஞ்சமியும் பதிவுகளை எழுத உற்சாகமும், ஊக்கமும் அளித்து ஒவ்வொரு பதிவையும் கவனமாக கவனித்து பிழை ஏதும் இல்லாமல் இருக்க உதவிய சகபதிவாளரும், சகோதரியுமான திருமதி.பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சகோதரி நேற்று மாவிளக்கு பற்றி ஒரு அருமையான பதிவை இட்டுள்ளார். கட்டாயம் படிக்க வேண்டிய பதிவுகளில் அதுவும் ஒன்று. பதிவினை படிக்க இங்கு சொடுக்கவும்.
-------------------------------------------------------------------------------------------------
நாகசதுர்த்தியும்
கருட பஞ்சமியும் தொடர் கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கு சொடுக்கவும். இதன் இரண்டாவது பகுதியை படிக்க இங்கு சொடுக்கவும்.
நாகசதுர்த்தியன்று
வீட்டில் பூஜை செய்திருந்தால் அதற்கு அடுத்த நாள் அதாவது பஞ்சமி திதியன்று நாகருக்கு
மறுபடியும் சம்க்ஷேப (அதாவது சுருக்கமான என்று பொருள். புனர் பூஜை என்றும் சொல்வதுண்டு ) பூஜை செய்ய வேண்டும். அன்று அதிகாலையில் எழுந்து
தலைகுளித்து வெறும் வயிற்றோடு வீட்டில் உள்ளவர் அனைவரும் தனித்தனியாக நாகருக்கு மூன்று
முறை உத்தரணி (சிறு தேக்கரண்டி அளவில் இருக்கும்) மூலம் பால், தண்ணீர் இடவேண்டும்.
பிறகு மஞ்சள், குங்குமம், கஜவஸ்திரம், பூ தூவி, நைத்வேத்யம் செய்து அனைவரின் நலத்திற்காகவும்,
வீட்டின் சுபிக்க்ஷத்திற்காகவும் நாகரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தம்பிட்டு
அதாவது மாவிளக்கு ஆரத்தி எடுத்து நாகர் பூஜையை முடிககவும். முதல் நாளே மாவிளக்கு இட்டிருந்தால்,
ஜோதி ஆரத்தி எடுக்கலாம்.
முக்கியமான ஸ்தோத்ரங்கள்
நாக சதுர்த்தி மற்றும் பஞ்சமி அன்று வழிபட வேண்டியவர்களில்
முதன்மையான தேவதை, நாகேஸ்வரி, வைஷ்ணவி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் நாகராணியான ஸ்ரீ மனசாதேவி. வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீமனசாதேவி காஷ்யப ரிஷியின் மானசீக புத்திரியாவார். தம்மை நம்பி வந்த பக்தர்களின் உண்மையான வேண்டுகோளை எப்போதும் நிறைவேற்றி வைப்பவர். புராண இதிகாசங்கள் அவளை வைஷ்ணவி தேவி என்றும், மூன்று யுகங்களின் பிரதிபலிப்பு என்றும் குறிப்பிடுகின்றன.
கயிலைநாதன் அவள் முன் தோன்றிய போது அன்னையின் கிழிந்த வஸ்திரங்களையும், மெலிந்த தோற்றத்தையும் கண்டு அவளை அழைத்த நாமம் "ஜரத்காரு". அவர் தேவியின் பக்தியைக்கண்டு மகிழ்ந்து ஸ்வர்க்கலோகம், ப்ரம்ம லோகம், பூமண்டலம், பாதாளம் ஆகிய அனைத்து உலகமும் அவளை தேவி சொரூபமாக வழிபடும் என்று ஆசீர்வதித்து வரமளித்தார்.
"ககட்கௌரி" அதாவது அசாதாரண அழகு மற்றும் கருணை பொருந்தியவள்.
சைவ மார்க்கத்தில் பயிற்சியும், வழிமுறைகளையும் சிவனிடமிருந்தே கற்றவர் ஆகையால் 'சைவி" என்னும் திருநாமம் அவருக்கு.
சைவ மார்க்கத்தில் பயிற்சி பெற்றிருந்தாலும், பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்ததால் "வைஷ்ணவி" என்னும் திருநாமத்தாலும் வழிபடப்படுகிறார்.
அம்பிகையின் மற்ற திருநாமங்கள்:
அரசர் ஜனமேயன் அவரது தந்தை பரீக்ஷத் தக்ஷகன் என்னும் சர்ப்பம் தீண்டி இறந்தார் என்பதற்காக வெகுண்டெழுந்து அனைத்து சர்ப்பங்களையும் அழிக்க எண்ணி நடத்திய யக்ஞத்தீயில் அழிய இருந்த அனேக சர்ப்பங்களை காப்பாற்றியதால் "நாகேஸ்வரி", மற்றும் " நாக பாகினி".
'விஷஹாரி' - கொடும் விஷத்தையும் முறித்து அதனால் ஏற்படும் தீங்குகளிலிருந்து காக்கும் சக்தி பெற்றவர்
"சித்த யோகினீ "' - யோகசித்திகளை சிவனிடமிருந்து பெற்றவர்
'மஹா ஞான யுக்தா' - இறந்தவரை உயிர்ப்பிக்கும் மந்திர வித்தையை சிவபெருமானிடமிருந்து கற்றவர். இது மிகவும் விசேஷமான திருநாமம் ஆகும். தேவியைத் தவிர இந்த மந்திரத்தை அறிந்த மற்ற இருவர் - சுக்ராச்சாரியார் மற்றும் தேவ குரு ப்ரஹஸ்பதியின் புத்ரன் கசன்
'ஜரத்காரு ப்ரியா' - ஜரத்காரு ரிஷியின் அன்புக்கு பாத்திரமானவள்
'ஆஸ்திக மாதா' - ரிஷி ஆஸ்திகரின் அன்னை.
ஸ்ரீ மனசா
தேவியின் ஸ்தோத்ரத்திற்கு இங்கு சொடுக்கவும்
ஸ்ரீ
மனசா தேவியின் சம்க்ஷேப அதாவது சுருக்கமான நாக ஸ்தோத்ரம்:
மனஸா தே³வி நாக³ ஸ்தோத்ரம்
मनसादेवी नागस्तोत्र
। ॐ नमो मनसायै ।
जरत्कारू जगद्गौरी मनसा सिध्दयोगिनी । वैष्णवी
नागभगिनी शैवी नागेश्वरी तथा ॥
जरत्कारूप्रियाऽऽस्तीकमाता विषहरीति च । महाज्ञानयुता
चैव सा देवी विश्वपूजिता ॥
द्वादशैतानि नामानि पूजाकाले च यः पठेत् ।
तस्य नागभयं नास्ति तस्य वंशोदीवस्य च ॥
नागभीते च शयने नागग्रस्ते च मंदिरे । नागभीते
महादुर्गे नागवेष्टिम विग्रहे ॥
इदं स्तोत्र पाठित्वा तु मुच्यते नात्रसंशयः
। नित्यं पठेद् यः तं दृष्टवां नागवर्गः पलायते ॥
नागौधं भूषणं कृत्वा
स भवेत् नागवाहनाः । नागासनो नागतल्पो महासिध्दो भवेन्नरः ॥
| ஓம் நமோ மனஸாயை |
ஜரத்காரூ ஜக³த்³கௌ³ரீ மனஸா ஸித்த³யோகி³னீ |
வைஷ்ணவீ நாக³பகி³னீ ஸை²வீ நாகே³ஸ்²வரீ ததா² ||
ஜரத்காரூப்ரியா(அ)(அ)ஸ்தீகமாதா விஷஹரீதி ச |
மஹாஜ்ஞானயுதா சைவ ஸா தே³வீ விஸ்²வபூஜிதா ||
த்³வாத³ஸை²தானி நாமானி பூஜாகாலே ச ய: படே²த் |
தஸ்ய நாக³பயம் நாஸ்தி தஸ்ய வம்ஸோ²தீ³வஸ்ய ச ||
நாக³பீதே ச ஸ²யனே நாக³க்³ரஸ்தே ச மந்தி³ரே |
நாக³பீதே மஹாது³ர்கே³ நாக³வேஷ்டிம விக்³ரஹே ||
இத³ம் ஸ்தோத்ர பாடி²த்வா து முச்யதே நாத்ரஸம்ஸ²ய: |
நித்யம் படே²த்³ ய: தம் த்³ருஷ்டவாம் நாக³வர்க³: பலாயதே ||
நாகௌ³தம் பூஷணம் க்ருத்வா ஸ பவேத் நாக³வாஹனா: |
நாகா³ஸனோ நாக³தல்போ மஹாஸித்தோ³ பவேன்னர: ||
பலஸ்ருதி:
இதைப் பாராயணம் செய்வதால் பாம்பு பயம் நீங்கும். வசிக்கும் இடத்தில் பாம்பு நடமாட்டம் இருந்தாலோ அல்லது தொல்லை இருந்தாலோ, இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்ய அவை உடனடியாக அகன்று விடும். இந்த ஸ்தோத்ரத்தை பத்து லட்சம் முறை, முறையாக ஜபித்து வந்தால் படிப்பவர் நாக சித்தி அடைவர். பாம்பு விஷம் அவரை ஒன்றும் செய்யாது. நாகசித்தி பெற்றவர் பாம்புகளுடன் விளையாடவும், அவற்றை கழுத்தில் மாலையாக அணிந்து கொள்ளவும் முடியும். அத்துடன் மஹாசித்திகளான நாகாசனம் மற்றும் நாக தல்பா போன்றவைகளையும் பெற முடியும்.
மனசா தேவியின் மூல மந்திரம் -
" ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் மனசா தேவ்யை ஸ்வாஹா "
இம் மந்திரத்தை முறைப்படி குரு உபதேசம் பெற்று ஆஷாட மாத சங்க்ராந்தி (இது வட இந்தியா பத்ததி, நமக்கு சிராவண சுக்ல பஞ்சமி) அன்று ஸ்ரீ மனசா தேவிக்கு க்ஷோடசோபசார பூஜை செய்து பின்னர் ஜபிப்பவருக்கு தனலாபம், தான்ய லாபம், புத்ர லாபம் மற்றும் கீர்த்தியும் கிட்டும் என்று ப்ரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
अनन्तं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम्।
शंखपालं
धार्तराष्ट्रं तक्षकं कालियं तथा ॥
एतानि
नव नामानि नागानां च महात्मनाम् ।
सायंकाले
पठेन्नित्यं प्रातः काले विशेषतः ॥
तस्मै
विषभयं नास्ति सर्वत्र विजयी भवेत् ॥
அனந்தம் வாஸூகிம் ஸே²ஷம் பத்³மனாபம் ச கம்ப³லம்|
ஸ²ங்க²பாலம் தார்தராஷ்ட்ரம் தக்ஷகம் காலியம் ததா² ||
ஏதானி நவ நாமானி நாகா³னாம் ச மஹாத்மனாம் |
ஸாயங்காலே படே²ன்னித்யம் ப்ராத: காலே விஸே²ஷத: ||
தஸ்மை விஷபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் ||
இது சர்ப்ப ஸ்தோத்ரம். கால சர்ப்ப தோஷ பரிகார ஸ்தோத்ரம்.
அனந்த கால சர்ப்பம்
குளிக கால சர்ப்பம்
வாசுகி கால சர்ப்பம்
சங்க்பால கால சர்ப்பம்
பதம கால சர்ப்பம்
மஹா பதம கால சர்ப்பம்
தக்க்ஷக் கால சர்ப்பம்
கார்கோடக கால சர்ப்பம்
சங்கசூட கால சர்ப்பம்
காடக கால சர்ப்பம்
விஷதர கால சர்ப்பம்
சேஷநாக கால சர்ப்பம்
குளிக கால சர்ப்பம்
வாசுகி கால சர்ப்பம்
சங்க்பால கால சர்ப்பம்
பதம கால சர்ப்பம்
மஹா பதம கால சர்ப்பம்
தக்க்ஷக் கால சர்ப்பம்
கார்கோடக கால சர்ப்பம்
சங்கசூட கால சர்ப்பம்
காடக கால சர்ப்பம்
விஷதர கால சர்ப்பம்
சேஷநாக கால சர்ப்பம்
இவை அனைத்திற்கும்
பொதுவான பரிகாரம் இந்த ஸ்தோத்ரம். இதை கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி/பஞ்சமி
நாளில் பாராயணம் செய்தால் கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். மேலும்,
அவர்கள் கோயிலுக்கு சென்று அரசமரத்தடியில் உள்ள நாகர் சிலா ரூபத்திற்கு, மஞ்சள், குங்குமமிட்டு,
பால் சமர்ப்பித்து, மலர்களால் இந்த ஸ்தோத்ரத்தை சொல்லி பூஜித்தால் நிச்சயம் இன்னல்களிலிருந்து
விடுபட முடியும்.
இவை தவிர சர்ப்ப சூக்தம், சர்ப்ப சூக்தம் என்னும் சுப்ரமண்ய சூக்தம், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு இன்னாளில் ஜபிக்கலாம். பாடலுக்கு இங்கு சொடுக்கவும்.
நாகங்கள் அருள்பெற்று, நலம் பல பெற உகந்த தினங்களான நாக சதுர்த்தி, கருட பஞ்சமி தினங்களில், நாக தேவதையையும் கருட பகவானையும் பூஜித்து, அம்பிகையின் பேரருளால், எல்லா தோஷங்களும் நீங்கப் பெற்று, வாழ்வில் எல்லா வளங்களுடனும் நலங்களுடனும் வாழ தேவியைப் பிரார்த்திக்கிறேன்.
இவை தவிர சர்ப்ப சூக்தம், சர்ப்ப சூக்தம் என்னும் சுப்ரமண்ய சூக்தம், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு இன்னாளில் ஜபிக்கலாம். பாடலுக்கு இங்கு சொடுக்கவும்.
நாகங்கள் அருள்பெற்று, நலம் பல பெற உகந்த தினங்களான நாக சதுர்த்தி, கருட பஞ்சமி தினங்களில், நாக தேவதையையும் கருட பகவானையும் பூஜித்து, அம்பிகையின் பேரருளால், எல்லா தோஷங்களும் நீங்கப் பெற்று, வாழ்வில் எல்லா வளங்களுடனும் நலங்களுடனும் வாழ தேவியைப் பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment