बालरक्षा
स्तोत्रं
इंद्रियाणि
हृषीकेशः प्राणन्नारायणोऽवतु । श्वेतद्बिपपतिश्चितं मनो योगेश्वरोऽवतु ॥
पृश्निगर्भस्तु
ते बुध्दिमात्मानं भगवान्परः । क्रीडंतं पातु गोविदः शयानं पातु माधवः॥
व्रजंतमव्याद्वैकुंठ
आसीनं त्वां श्रियः पतिः। भुंजानं यज्ञमुक् पातु सर्वग्रहभयंकरः॥
डाकिन्यो
यातुधान्यश्च कूष्मांडा येऽर्भकग्रहाः । भूतप्रेतपिशाचाश्च यक्षरक्षोविनायकाः॥
कोटरो
रेवती ज्येषठा पूतना मातृकादयाः । उन्मादा ये ह्मपस्मारा देहप्राणेन्द्रियद्रुहः॥
स्वप्न
स्वप्नदृष्टा महोत्पाता वृध्दबालग्रहाश्च ये । सर्वे नश्यंतु ते
विष्णोर्नामग्रहणभीरवः॥
इति
प्रणयवध्दाभिर्गोपीभिः कृतरक्षणम् । पायायित्बा
स्तनं माता संन्यवीविशदात्मजम् ॥
इति
श्रीबालरक्षास्तोत्रं संपूर्णम् ॥
பா³லரக்ஷா ஸ்தோத்ரம்
இந்த்³ரியாணி ஹ்ரு'ஷீகேஸ² ப்ராண நாராயணோ(அ)வது |
ஸ்²வேதத்³பி³பபதிஸ்²சிதம்' மனோ
யோகே³ஸ்²வரோ(அ)வது
||
ப்ரு'ஸ்²னிக³ர்பஸ்து
தே பு³த்தி³மாத்மானம்' பக³வான்பர: |
க்ரீட³ந்தம்' பாது
கோ³வித³ ஸ²யானம் பாது
மாதவ: ||
வ்ரஜந்தமவ்யாத்³வைகுண்ட² ஆஸீனம்' த்வாம்' ஸ்²ரிய: பதி: |
புஞ்ஜானம்' யஜ்ஞமுக் பாது ஸர்வக்³ரஹபயங்கர: ||
டா³கின்யோ யாதுதான்யஸ்²ச கூஷ்மாண்டா³ யே(அ)ர்பகக்³ரஹா: |
பூதப்ரேதபிஸா²சாஸ்²ச யக்ஷரக்ஷோவினாயகா: ||
கோடரோ ரேவதீ ஜ்யேஷ்டா² பூதனா
மாத்ருகாத³யா: |
உன்மாதா³ யே ஹ்மபஸ்மாரா தே³ஹப்ராணேந்த்³ரியத்³ருஹ: ||
ஸ்வப்ன ஸ்வப்னத்³ருஷ்டா மஹோத்பாதா வ்ரு'த்த³பா³லக்³ரஹாஸ்²ச யே
|
ஸர்வே நஸ்²யந்து தே விஷ்ணோர் நாமக்³ரஹணபீரவ: ||
இதி ப்ரணயவத்தா³பிர்கோ³பீபி: க்ரு'தரக்ஷணம் |
பாயாயித்பா³ ஸ்தனம்' மாதா
ஸம்'ன்யவீவிஸ²தா³த்மஜம் ||
இதி ஸ்ரீபா³லரக்ஷா ஸ்தோத்ரம்' ஸம்பூர்ணம் ||
குழந்தைக்கு ஐந்து வயது வரை மிகுந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று தெரியாது. அறியா பருவம். எல்லாமே விளையாட்டு. பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவே, ஸ்ரீ கிருஷ்ணராக திருஅவதாரம் செய்த போது, அவர் செய்த லீலைகள் தான் எத்தனை... எத்தனை.... 'விஷமக்காரக் கண்ணன்' என்று பாடும் அளவுக்குக் குறும்புத்தனமே வடிவெடுத்தாற்போலிருந்த அந்தப் பரம்பொருளின் லீலா விநோதங்களால், அவரது தாயாகும் பாக்கியம் பெற்ற யசோதைக்கு பொழுதெல்லாம் ஒரே கவலைதான். எல்லாம் அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே, குழந்தையாக அடைந்த போதும் யசோதை இத்தனை கவலை கொண்டாள் என்றால், சாதாரண மானிடப் பிறவிகளான நாம், நம்முடைய குழந்தைகளை எப்படிக் காப்பது?'. குழந்தை பருவம் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதனால் அந்தப்பருவத்தில் தாய்க்குத்தான் பொறுப்பு மிக அதிகமாகிறது. ஆகவே தன்னுடைய குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பை இவ்வுலகை காக்கும் ஸ்ரீமஹா விஷ்ணுவிடம் அளித்து வேண்டுவதான இந்த அற்புதமான ஸ்தோத்ரம் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது. மனதை விஷ்ணுவின் பாதாரவிந்தங்களில் ஒருமுகமாக நிலைநிறுத்தி, நம்பிக்கையோடும், பக்தியோடும் தினமும் பாராயணம் செய்தால் நிச்சயமாக பலன் சித்தியாகும். இந்த ஸ்தோத்ரத்தை கர்ப்பகாலத்திலிருந்து குழந்தைக்கு 5 வயது வரை ஜபித்து வரலாம்.
இந்த ஸ்லோகம், ஒரு தாய், ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் பலவாறு துதித்து, தன் குழந்தையைக் காக்க வேண்டுவது போல் அமைந்துள்ளது.
இந்த ஸ்லோகம், ஒரு தாய், ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் பலவாறு துதித்து, தன் குழந்தையைக் காக்க வேண்டுவது போல் அமைந்துள்ளது.
அச்யுதா, கேசவா, நாராயணா, கோவிந்தா என்று மஹாவிஷ்ணுவின் திவ்ய நாமங்களால் ஸ்ரீபதியை அழைத்து தன்னுடைய குழந்தையை பத்து திசைகளிலும் காக்குமாறு வேண்டுகிறாள். பத்து திசைகள் என்றால் எட்டு திசைகளோடு, பூமி, ஆகாயம் இரண்டையும் சேர்த்து பத்து திசைகளாக கருத்தில் கொண்டு பகவானை வேண்டுகிறாள்.
பின்னர் தனித்தனியாக, மஹாவிஷ்ணுவின் திவ்ய ஸ்வரூபத்தின் திருநாமங்களை ஒவ்வொன்றாகத் துதித்து, குழந்தையைக் காக்குமாறு வேண்டுகிறாள். ரிஷிகேசரை குழந்தையின் உடலின் அங்கங்களையும், நாராயணரை ப்ராணனையும், யோகேஷ்வரை மனதையும், ஸ்வேதத்விபதியை சித்தத்தையும், ப்ரூஷ்ணிகர்ப்பரை புத்தியையும், ஸ்ரீ பகவானை ஆத்மாவையும், கோவிந்தரை விளையாடும் பொழுதும், மாதவரை தூங்கும் போதும், யக்ஞ்பாஹூவை உண்ணும் போதும் மற்றும் நவக்கிரஹ பீடைகளிலிருந்தும் காக்குமாறு வேண்டுகிறாள். அசுர சக்திகளிடமிருந்து காக்க தேவி கூஷ்மாண்டாவையும், பூத, பிரேத, பிசாசுகளிடமிருந்து காக்க ஸ்ரீ விநாயகரையும், மனநோய்கள், வலிப்பு போன்றவற்றிலிருந்து காக்க மத்ருகடையர், ஜேஷ்டா, ரேவதி ஆகியோரிடமும் வேண்டுகிறாள்.
2 comments:
நன்றாக உள்ளது நான் தேடும் பல ஸ்லோகங்கள் உங்கள் பதிவில் பார்கிறேன்
நன்றி. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
Post a Comment