Sunday, May 12, 2013

Sri Vaibhava Lakshmi Puja - சகல ஐஸ்வர்யங்களும் தரும் வைபவலட்சுமி பூஜை


சகல ஐஸ்வர்யங்களும் தரும் வைபவலட்சுமி பூஜை

வைபவலட்சுமி விரத மகிமையால் பல்லாயிரக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். வைபவலட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் தேவையில்லை என்றாலும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அகத்தூய்மையும் முக்கியம், மனதில் அன்பும், தயாள குணமும், பொறுமையும் இருந்தாலே பக்தி தானாக வந்து விடும். இத்தகைய பக்தியும், நம்பிக்கையும் கொண்டு செய்யும் பூஜை பல மடங்கு பலனைக் கொடுக்குமென்பதும் சத்தியம், ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ வைபவலக்ஷ்மியைப் பூஜிப்பதால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இது அனுபவபூர்வமான உண்மை.


மகாலட்சுமி, வைபவலட்சுமியாக வந்த கதையும், அதன் மகிமையும்
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது அதில் இருந்து, செந்தாமரை மலரில் அமர்ந்த வண்ணம் ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்தாள். அந்த மகாலட்சுமியைக் குறித்து, தேவர்களும், ரிஷிகளும் ஸ்தோத்ரம் செய்த மந்திரமே ஸ்ரீ சூக்தம். சூக்தம் என்றால் சிறப்பாகச் சொல்லப்பட்டது என்று பொருள். 'ஸ்ரீ' யாகிய திருமகளைக் குறித்துச் சிறப்பாகச் சொல்லப்பட்ட துதியே ஸ்ரீ சூக்தம். சம்பூதித ஸ்ரீசூக்தம் பதிவு காண இங்கு சொடுக்கவும்.

திருமகள் அவதரித்ததும், கங்கை போன்ற புண்ணிய நதிகள் அம்மனை நீராட்டின. அஷ்ட திக்கஜங்கள் தன் துதிக்கையால் நீரை முகர்ந்து ஸ்ரீ மகாலட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. திருப்பாற்கடல் பங்கஜ (தாமரை) மாலையையும், திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது.

திருமகள் தன் திருக்கரத்திலிருந்த தாமரை மலர் மாலையை திருமாலுக்குச் சூட்டி, அவரின் திருமார்பில் குடிகொண்டாள். அனைத்துத் தேவர்களும், திருமாலையும் திருமகளையும் துதி செய்தனர். அதன் பின், திருமாலும், மஹாலக்ஷ்மியும் வைகுண்டம் ஏகினர்.

ஒரு நாள், சூரியனின் மகன் ரேவந்தன் உச்சை சிரவஸ் என்ற குதிரையின் மேல் ஏறி திருமாலை வழிபட வைகுண்டம் வந்தான். (உச்சை சிரவஸ், பாற்கடலை கடையும் போது திருமகளோடு வெளிப்பட்டது) அந்த குதிரையை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அது சமயம் திருமால் மகாலட்சுமியிடம் இவன் யார்? என்று கேட்டார். தேவி பழைய ஞாபகத்தில் இருந்தால் கேள்விக்குப் பதில் கூறவில்லை. திருமால் கோபத்துடன் மகாலட்சுமியை நீ பெண் குதிரையாக பூலோகத்தில் பிறப்பாயாக என்று சபித்து விட்டார். இதைப் பார்த்த ரேவந்தன் தூரத்தில் இருந்தபடி பெருமாளை வணங்கிவிட்டு சென்று விட்டான்.

காளிந்தி நதியும், தமஸா நதியும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீ மகாலட்சுமி பெண் குதிரையாக அவதரித்தாள். சூரியனின் மனைவி உஷாதேவி தன் கணவனின் வெப்பம் (உக்ரம்) தாங்காமல் தன் நிழலை (சாயாதேவி) தன் வடிவை ஒத்த பெண்ணாக்கி, சூரியலோகத்தில் விட்டு விட்டு, குதிரை வடிவில் காளிந்தி நதியும், தமஸா நதியும் சந்திக்கும் இடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பெண் குதிரை வடிவில் இருந்த மகாலட்சுமி உஷா தேவியிடம், 'உன் கணவர் உன்னை வந்து சேருவார். அவர் உனக்காகத் தன் உக்ரத்தை குறைத்துக் கொண்டார். உங்களுக்கு அஷ்வினி தேவர்கள் குழந்தைகளாக பிறப்பார்கள்' என்று வரமளித்தாள்.

ஸ்ரீமகாலட்சுமி இல்லாத வைகுண்டம் களையிழந்து ரம்யமில்லாமல் காட்சியளித்தது. மகாவிஷ்ணு ஆண்குதிரை வடிவெடுத்து, பெண் குதிரை வடிவில் இருக்கும் ஸ்ரீ மகாலட்சுமியை, வைகுண்டத்திற்கு அழைத்துப் போவதற்காக தமஸா நதிக்க‌ரைக்கு வந்தார். அது சமயம் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அங்கு யயாதியின் மகன் துர்வஸூ பிள்ளை வரம் வேண்டித் தவம் இருந்தான். மகாவிஷ்ணு அவனுக்குத் தாம் பெற்ற மகவைத் தரத் திருவுளம் கொண்டார். அவ்வாறே, ஸ்ரீ மகாலட்சுமியிடமும் கூறினார். ஸ்ரீ மகாலட்சுமி சம்மதிக்கவில்லை. அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியிடம், 'துர்வஸூவுக்கு சந்தான வைபவத்தைக் கொடு, இதனால் வைபவலட்சுமி என பூலோகத்தில் உன்னை பூஜிப்பார். நான் உன்னைத் தேடி வந்தது போல் வைபவலட்சுமியான உன்னை பூஜிக்கும் பெண்கள் கணவனோடு சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சாபங்கள், தோஷங்கள் நீங்கும். உன்னை பூஜிப்பவர்களுக்கு உன்னுடன் சேர்ந்து நானும் அருள் புரிவேன்!!' என பல வரங்கள் கொடுத்தார். பின்னர் தங்கள் குழந்தையை துர்வஸுக்குக் கொடுத்து ஆசீர்வதித்து விட்டு, இருவரும் வைகுண்டம் சென்றார்கள்.

விரதமகிமை: 
இந்தக் கதையை வெள்ளிக்கிழமைதோறும் விளக்கேற்றி வைத்து படித்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை முடிந்தபின் உங்களால் இயன்ற அளவு (11,21,51 அல்லது, இதைவிட அதிக அளவிலும்) புத்தகங்களை வாங்கி அதனுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள்குங்குமம், தாலிச்சரடு ஒரு ரூபாய் நாணயம் வாழைப்பழம் ஆகிய மங்கல‌ப் பொருட்களை சுமங்கலிகளுக்கு தானம் செய்தால் செல்வம் பெருகும். புத்திரபாக்கியம், தாலி பாக்கியம், உடல் ஆரோக்கியம், உண்டாகும். வழக்குகள் வெற்றியடையும், மனதில் சந்தோஷ‌மும், நிம்மதியும் உண்டாகும். இந்த ஸ்ரீவைபவ லட்சுமி பூஜையை ஜாதி மத பேதமின்றி எல்லோரும் செய்யலாம்.

இந்த பூஜையை குபேர தம்பதிகள் செய்ததால் அவர்களுக்கு சங்கநிதியும், பத்மநிதியும் கிடைத்தன. 

பக்தர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேறும் பொருட்டு, இந்த பூஜையை ஏதாவது வெள்ளிக்கிழமை தொடங்கி அன்றிலிருந்து 11வது வெள்ளிக்கிழமை பூர்த்தி செய்வது விசேஷம். நடுவில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அந்த வெள்ளிக் கிழமையை விட்டு விட்டு அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலிருந்து கணக்கிடலாம். இந்த ஸ்ரீவைபவ லட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் கிடையாது. சுமங்கலிகள் கூடியிருந்து பூஜை செய்யலாம்.

1. இந்த பூஜைக்கு, 11 வெள்ளிக்கிழமைகள் மட்டும் தான் பூஜை செய்ய வெண்டும்  என்பது கட்டாயம் இல்லை. பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறிய பின்னாலும் கூட நன்றி செலுத்தும் பொருட்டு பூஜையை தொடரலாம்.

2. பக்தர்கள்  வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது ஸ்ரீ வைபவ லட்சுமியின் படம் அல்லது தங்க நகைகளைக் கொண்டு இருந்த இடத்திலேயே பூஜித்து, இனிப்பு நைவேத்தியம் (வெல்லம்-சர்க்கரை-பழங்கள்) செய்தாலும் பலன் உண்டு.

பூஜைக்குரிய பொருட்கள்: ஸ்ரீ வைபவ லட்சுமி படம், யந்திரம், வெள்ளி, பித்தளை -செம்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினால் செய்த குடம் அல்லது செம்பு - தீர்த்தம், அரிசி, தேன், மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், வெற்றிலைபாக்கு, பழம், புஷ்பம், ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, தேங்காய், தாலிச்சரடு, அர்ச்சனை செய்ய குங்குமம், புஷ்பம் அல்லது நாணயங்கள் - ஆசன பலகை ஆகியவை. நைவேத்தியம் - சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம்.

ஸ்ரீவைபவ லட்சுமி பூஜை
ஸ்ரீ வைபவ லக்ஷ்மீக்குரிய வெள்ளிக்கிழமை விரதம் ஏற்றவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீவைபவ லக்ஷ்மிக்கு பூஜை செய்ய வேண்டும்.

ஸ்ரீ விக்னேச்வர பூஜை
(முதலில் விக்னேச்வர பூஜையைச் செய்த பிறகு ஸ்ரீவைபவ லக்ஷ்மீ பூஜை செய்ய வேண்டும்)
(பூஜை ஆரம்பிக்கும்முன், கால் கைகள் சுத்தம் செய்த பின் ஆசமநம் செய்யவும். கையில் புஷ்பம், அக்ஷதை எடுத்துக்கொண்டு நெற்றிப் பொட்டுகளில் குட்டிக் கொள்ளவும்).

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே "

ப்ரணாயாமம்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம்,
ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந:
ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம்.
"மமோபாக்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்.

ததேவ லக்னம் ஸுதினம் ததேவ
தாராபலம் சந்த்ரபலம் ததேவ
வித்யா பலம் தைவ பலம் ததேவ
ஸ்ரீ லக்ஷ்மீபதே: (அ)ங்க்ரியுகம் ஸ்மராமி

கரிஷ்ய மாணஸ்ய கர்மண: நிர்விக்நேந பரிஸ மாப்த்யர்த்தம் ஆதௌவிக்னேச்வர பூஜாம் கரிஷ்யே" என்று அக்ஷதையை ஸங்கல்ப்பித்து வடக்கே போடவும்.

மஞ்சள் பிள்ளையார் மீது பூஜிக்கவும்.

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட்டாராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆநச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்.

அஸ்மின் ஹரித்ராபிம்பே ஸுமுகம் மஹாகணபதிம் த்யாயாமி ஆவாஹயாமி என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.

பிறகு உபசார பூஜை
ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம: ஒளபசாரிக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(மேற்கண்ட மந்திரங்களைச் சொல்லும் போது உத்தரணியால் தீர்த்தம் எடுத்து, கிண்ணத்தில் சேர்க்கவும்).
ஸ்ரீ மஹாகணபதயே நம: வஸ்த்ரார்த்தம் அஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்).
ஸ்ரீ மஹாகணபதயே நம: அலங்காரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்).
ஸ்ரீ மஹாகணபதயே நம: யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்).
ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தான் (சந்தனம்) தாரயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தஸ்ய உபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)
ஸ்ரீ மஹாகணபதயே நம: புஷ்பை: பூஜயாமி (புஷ்பம் அக்ஷதைகளையெடுத்து அர்ச்சிக்கவும்)

ஓம் ஸுமுகாய நம:               ஓம் தூமகேதவே நம:
ஓம் ஏகதந்தாய நம:                ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் கபிலாய நம:                    ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜகர்ணகாய நம:         ஓம் கஜாநநாய நம:
ஓம் லம்போதராய நம:         ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் விகடாய நம:                    ஓம் சூர்ப்பகர்ணாய நம: 
ஓம் விக்ன ராஜாய நம:         ஓம் ஹேரம்பாய நம: 
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:  ஓம் கணாபதிபாய நம:

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: நாநாவித பத்ர நம:புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

(பிறகு வெற்றிலை, பாக்கு, பழம் இவைகளை நிவேதனம் செய்ய வேண்டும்)

ஸ்ரீ மஹாகணபதயே நம: கதளீஃபலம் நிவேதயாமி (வாழைப்பழம் நிவேதனம் செய்யவும்) பாநீயம் ஸமர்ப்பயாமி (உத்தரணியால் தீர்த்தம் எடுத்து கிண்ணத்தில் விடவும்)

வெற்றிலை, பாக்கு மீது ஒரு உத்தரணி தீர்த்தத்தை விடவும், தாம்பூலம் ஸமர்ப்பயாமி (என்று சொல்லி அக்ஷதை போடவும்)

ஸ்ரீ மஹாகணபதயே நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி (என்று கற்பூரம் காட்டவும்)

ப்ரார்த்தனை.
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸுர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா

(ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைச் செய்யவும்)

ஸ்ரீமஹா கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹணாமி (என்று புஷ்பம் கொஞ்சம் எடுத்து தலையில் வைத்துக்கொண்டு அக்ஷதையை சிரசில் (தலையில்) போட்டுக் கொள்ளவும்.

பிறகு ஸ்ரீவைபவ லக்ஷ்மீக்கு (கலசத்தில்) பூஜையைச் செய்யவும்.

ஸ்ரீ வைபவ லட்சுமி பூஜை.
(கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்  கொண்டு, நெற்றிப் பொட்டுகளில் குட்டிக் கொள்ளவும்).

சுக்லாம் பரதாம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே.  

ப்ரணாயாமம்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம்,
ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந:
ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம்.
மமோபாக்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹுர்த்தே ஆத்ய ப்ரஹ்மண த்விதீய பரார்த்தே. ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வதமந்வந்தரே, அஷடாவிகும்சதி தமே கலியுகே. ப்ரதமே பாதே. ஜம்பூத்வீபே. பாரத வர்ஷே, பரதக்கண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே. அஸ்மிந்வர்த்தமாநே. வ்யாவஹாரிகே. ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே... நாம ஸம்வதஸரே... அயநே... ருதௌ ... மாஸே... பக்ஷ... யாம் (திதி) சுபதிதௌ ப்ருகு வாஸர யுக்தாயாம்... நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்... (திதி) சுபதிதௌ (வருடம், மாதம், திதி,பக்ஷம் முதலிய விவரங்களைப் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அவரவர்களுக்கு உரிய ப்ரார்த்தனைகளை வேண்டிக் கொள்ள வேண்டும்) மம சீக்ரமேவ விவாஹ ப்ராப்த்யர்த்தம், மம தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், மம பர்த்துச்ச அந்யோந்ய ப்ரீதி புரஸ்ஸரம் அவியோகார்த்தம். ஸத்புத்ர ஸகல ஸெளபாக்ய ஸித்யர்த்தம். லக்ஷ்மீ கடாக்ஷ அனுக்ரஹ ஸித்தியர்த்தம் இஷ்டகாம்யார்த்த ஸித்யார்த்தம் ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ ப்ரீத்யர்த்தம், ஸ்ரீ வைபவலக்ஷ்மி ப்ரஸாத ஸித்யர்த்தம் ஸ்ரீவைபவ லக்ஷ்மீ ப்ரஸாதாத் ஸகல சிந்தித மனோரதாவாப்த்யர்த்தம் ஸ்ரீவைபவ லக்ஷ்மீ பூஜாம் கரிஷ்யே (என்று கூறி உத்தரணியால் சிறிது தீர்த்தத்தை எடுத்து கையை துடைத்துக் கொண்டு)

பிறகு விக்நேச்வராய நம: யதாஸ்தாநம் ப்ரதிஷ்டா பயாமி.

(என்று சொல்லி அக்ஷதை புஷ்பம் சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கே நகர்த்தவும்)

கலச பூஜை
பஞ்சபாத்திரத்தில் தீர்த்தம் நிரப்பி பாத்திரத்திற்கு சந்தனம் குங்குமமிட்டு ஒரு துளசி அல்லது புஷ்பத்தைத் தீர்த்தத்தில் போட்டு அதைக் கையால் மூடிக் கொண்டு,

கலசஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ரஸமாச் ரித: மூலே:
தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸம்ருதா

குக்ஷௌது ஸாகராஸ் ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா:
ருக்வேதோ(அ)த யஜுர்வேத: ஸாமவேதோ(அ) ப்யதர்வண:

அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா
ஆயாந்து தேவி பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

கங்கே ச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரீ ஜலே(அ) ஸ்மிந் ஸந்நிதம்குரு

(என்று கூறி துளஸி அல்லது கலச புஷ்பத்தால் தன்னையும், பூஜா திரவியங்களையும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்)

கண்டா பூஜை
ஆகமார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யத்ய‌ தேவதாஹ்வாந லாஞ்சநம்

(என்று கூறி மணியை அடிக்கவும், பிறகு கையில் புஷ்பம், அக்ஷதை கொஞ்சம் எடுத்துக் கொண்டு)

த்யானம்
யா ரக்தாம்புஜ வாஸினீ விலாஸினீ சண்டாம்சு தேஜஸ்வினீ
யா ரக்தா ருதிராம்பரா ஹரிஸகீ யா ஸ்ரீமனோஹ்லாதினீ
யா ரத்னாகர மந்தனாத் ப்ராகன்டிதா விஷ்ணோஸ்வயாகேஹினீ
ஸா மாம் பாது மனோரமா பகவதீ லக்ஷ்மீச்ச பத்மாவதீ 
(இந்த தியான ஸ்லோகத்தை, 11 அல்லது 21 முறைகள் சொல்வது சிறப்பு).

ஸரஸிஜ நயனே ஸரோஜ ஹஸ்தே
தவளதராம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதகரி ப்ரஸீத மஹ்யம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: த்யாயாமி (என்று கூறி புஷ்பாக்ஷதைகளை கும்பத்தில் யந்திரத்தில் ஸமர்ப்பிக்கவும்)

ஸர்வ ஸம்பத் ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் அஹம் பஜே
ஆவாஹயாம்யஹம் லக்ஷ்மீம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயீநீம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: ஆவாஹயாமி (என்று கூறி புஷ்பாக்ஷதைகளை கும்பத்தில் யந்திரத்தில் ஸமர்ப்பிக்கவும்)

கங்காதி ஸர்வ தீர்த்தேப்யோ மயா ப்ரார்த்தநயாஹ்ருதம்
தோயம் ஏதத் ஸுகஸ்பர்சம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்)

அஷ்டகந்த ஸமாயுக்தம் ஸ்வர்ண பாத்ர ப்ரபூஜிதம்
அர்க்யம் க்ருஹாண மத் தத்தம் மஹாலக்ஷ்ம்யை நமோ அ(எ)ஸ்து தே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மூன்று முறை கிண்ணத்தில் விடவும்)

கற்பூரேண ஸுகந்தேந ஸுரபி ஸ்வாது சீதளம்
தோயம் ஆசமநீயார்த்தம் தேவி த்வம் ப்ரதிக்ருஹ்யதாம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மூன்று முறை கிண்ணத்தில் விடவும்)

மதுபர்க்கம் மயா தேவி காஞ்சீ நூபுர சோபிதே
ஸ்வீக்ருத்ய தயயா தேவி குருமஹம் து மங்களம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (மூன்று சொட்டு தேனை கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்).

பஞ்சாம்ருதம் இதம் திவ்யம் பஞ்சபாதக நாசநம்
பஞ்ச பூதாத்மகே தேவி பாஹி ஸ்வீக்ருத்ய சங்கரீ

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி (பஞ்சாம்ருதத்தை அபிஷேகம் செய்வது போல் பாவித்து சிறிதளவு கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்).

ஸ்நாஸ்யதாம் பாபநாசாய யா ப்ரவ்ருத்த ஸுராபஹா
மயார்பிதாத்வம் க்ருஹ்ணீஷ்வ ப்ரீதா பவ தயாநிதே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: கத்தோதகஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்தத்தை உத்தரணியில் எடுத்து கிண்ணத்தில் விடவும்).

ஸர்வ பூஷாதிகே ஸெளம்யே லோக லஜ்ஜா நிவாரணே
வாஸஸி ப்ரதி க்ருஹ்யேதாம் மயா துப்யம் ஸமர்ப்பிதே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (கும்பம் அல்லது யந்திரத்தில் அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்) அல்லது ரவிக்கைத் துணியும் சாற்றலாம்.

ஸ்ரீ கண்ட சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம்
விலேபநம் ஸுரச்ரேஷ்ட்டே ப்ரீத்யர்த்தம் ப்ரதி க்ருஹ்யதாம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: கந்தாந் தாரயாமி. கந்தஸ்ய உபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி (கும்பத்திற்கு சந்தனம், குங்குமம் ஸமர்ப்பிக்கவும்).

மாங்கலிய மணி ஸம்யுக்தம் முக்தா வித்ரும ஸம்யுக்தம்
தத்தம் மங்கள ஸூத்ரஞ்ச க்ருஹாண ஹரி வல்லபே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: மங்கள ஸுத்ரம் ஸமர்ப்பயாமி (மங்கள ஸுத்ரம் - மஞ்சள் கயிறு ஸமர்ப்பிக்கவும்).

ரத்ந கங்கண வைடூர்ய முக்தா ஹாராதிகாநி ச
ஸுப்ரஸந்நேந மநஸா தத்தாநி த்வம் க்ருஹாண மே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: ஆபரணானி ஸமர்ப்பயாமி (வெள்ளி, பவுன் முதலிய ஆபரணங்களை ஸமர்ப்பிக்கவும்) ( அவரவர் சக்திக்கேற்றபடி)

ஜாதீ சம்பக புந்நாக கேதீக வகுளாநி ச
மயார்ப்பிதாநி ஸுபகே க்ருஹாண ஜகதம்பிகே

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி (புஷ்பங்களை போடவும்).

அங்க பூஜை. (புஷ்ப அக்ஷதைகளை, அம்பிகையின் திருவுருவம் கலசத்தில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து, அந்தந்த அங்கங்களில் சேர்க்கவும்).

ஓம் ஸபலாயை  நம: பாதௌ (பாதம்) பூஜயாமி
ஓம் ஸஞ்சலாயை நம: ஜாநூ (முழங்கால்) பூஜயாமி

ஓம் கமலாயை நம: கடிம்  (இடுப்பு) பூஜயாமி
ஓம் காத்யாயிந்யை நம: நாபிம் (நாபி)  பூஜயாமி
ஓம் ஜகன் மாதரே நம: ஜடரம் (வயிறு) பூஜயாமி
ஓம் விஷ்ணு வல்லபாயை நம: வக்ஷஸ்தலம் (மார்பு) பூஜயாமி
ஓம் கமல வாஸிந்யை நம: புஜத்வயம் (புஜங்கள் தோள்) பூஜயாமி
ஓம் பத்மநிலயாயை நம: முகம் (முகம்) பூஜயாமி
ஓம் கமலபத்ராக்ஷ்யை நம: நேத்ரத்வயம் (கண்கள்)  பூஜயாமி
ஓம் ச்ரியை நம: சிர (சிரஸ்) பூஜயாமி
ஓம் ஸ்ரீவைபவ லக்ஷ்ம்யை நம: ஸர்வாணி அங்கானி பூஜயாமி.

இது நிறைவுற்றதும், குங்குமத்தால், லக்ஷ்மி அஷ்டோத்திரம் கூறி, ஸ்ரீ வைபவ லக்ஷ்மியைப் பூஜிக்கவும்.

ஸ்ரீ வைபவ லக்ஷ்மி விசேஷ அர்ச்சனை

(குங்குமம் அல்லது மஹாலக்ஷ்மி திருவுருவம் பொறித்த  வெள்ளி, செம்பு காசுகளால் அர்ச்சனை செய்யவும்)

ஸ்ரீ பார்வதீ ஸரஸ்வதீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

கமலே விமலே தேவி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காருண்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
தாரித்ரிய துக்க சமனீ  மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ தேவீ  நித்ய கல்யாணீ  மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸமுத்ர தனயே தேவீ  மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ராஜ லக்ஷ்மீ ராஜ்ய லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வீர லக்ஷ்மீ விஜய லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மூக ஹந்த்ரீ மந்த்ரரூபாயை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

மஹிஷாஸுர ஸம்ஹர்த்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வைகுண்ட ஸ்ருதயாவாஸே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்ஷீந்த்ர வாஹனே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
தான்யரூபே தான்யலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்வர்ணரூபே ஸ்வர்ண மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வித்தரூபே வித்தலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹரிப்ரியே வேதரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஃபலரூபே ஃபல தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நிஸ்துலே நிர்மலே நித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரத்னரூபே ரத்னலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
க்ஷீரரூபே க்ஷீரதாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வேதரூபே நாதரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ராணரூபே ப்ராண மூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

ப்ரணவானந்த மஹாஸே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மரூபே ப்ரஹ்ம தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஜாதவேத ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆதார சுல்க நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸுஷும்னா ஸுஷிராந்தஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

யோகாநந்த ப்ரதாயின்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸெளந்தர்ய ரூபிணீ தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸித்தலக்ஷ்மீ ஸித்தரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ ஸந்தோஷஸத்ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
துஷ்டிதே புஷ்டிதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ராஜ ராஜார்ச்சித பதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸாரஸ்வரூபே திவ்யாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சாரித்ர்ய திவ்ய சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வேதகுஹ்யே சுபே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

தர்மார்த்த காமரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மோக்ஷ ஸாம்ராஜ்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ கம்யே ஸர்வரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மோஹனீ மோஹ ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பஞ்சபூதாந்தராளஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

நாராயண ப்ரியதமே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காரணீ கார்யரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அனந்த தல்ப சயனே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
லோகைக ஜனனீ வந்த்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சம்புரூபே சம்புமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே


ப்ரஹ்மரூபே ப்ரஹ்மமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுரூபே விஷ்ணுமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆஜ்ஞா சக்ராப்ஜ நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹகாரரேஃப சக்த்யாபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஹ்ருதயாம்புஜ தீபாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுக்ரந்தி விசாலாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆதாரமூல நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மக்ரந்தி ப்ரகாசாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
குண்டலீ சயநானந்தீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஜீவாத்ம ரூபிணீ மாதா மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரகாசஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அச்வத்த வ்ருக்ஷ ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

காருண்ய பூர்ணே ஸ்ரீதேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மூர்த்தி த்ரய ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸூர்ய ப்ரகாச ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சந்த்ர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பீதாம்பரதரே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
திவ்யாபரண சோபாட்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ப்ராஹ்மணாராதிதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நாரஸிஹ்மீ க்ருபாஸிந்தோ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

வரதே மங்களே மான்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பத்மாடவீ நிலயனே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வ்யாஸாதி திவ்யஜ்ஞ ஸம்பூஜ்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ஜயலக்ஷ்மீ ஸித்தலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராஜமுத்ரே விஷ்ணுமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸர்வார்த்த ஸாதகீ நித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸனுமத் பக்தி ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹனுமத் பக்தி ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மஹதீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ரதிரூபே ரம்யரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காமாங்கீ காமஜனனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸுதாபூர்ணே ஸுதாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
இந்த்ர வந்த்யே தேவலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அஷ்டைச்வர்ய ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

தர்மராஜ ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரக்ஷோவரபுரீ லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரத்னாகர ப்ரபாரம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மருத்புர மஹானந்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

குபேர லக்ஷ்மீ மாதங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஈசான லக்ஷ்மீ ஸர்வேசீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மபீடே மஹாபீடே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மாயா பீடஸ்திதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீசக்ர வாஸிநீ கன்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

அஷ்டபைரவ ஸம்பூஜ்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அஸிதாங்க பூரீ நாதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸித்தலக்ஷ்மீ மஹாவித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
புத்தீந்த்ரியாதி நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரோக தாரித்ர்ய சமனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே


ம்ருத்யு ஸந்தாப நாசின்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பதிப்ரியே பதிவ்ரதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சதுர்புஜே கோமளாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்ஷ்ய‌ரூபே புக்தி தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸதானந்தமயே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்திப்ரியே பக்திகம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்தோத்ரப்ரியே ரமேராமே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராமநாம ப்ரியே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கங்கா ப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

விச்வ பர்த்ரீ விச்வமூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

க்ருஷ்ண ப்ரியே க்ருஷ்ண ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கீதரூபே ராகமூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸாவித்ரீ பூத ஸாவித்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

காயத்ரீ ப்ரஹ்ம காயத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மீ ஸரஸ்வதி தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சுகலாபினீ சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வீணாதர ஸ்தோத்ர கம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆஜ்ஞாகரீ ப்ராஜ்ஞவந்த்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

வேதாங்கவன ஸாராங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நாதாந்த ரஸபூயிஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

திவ்யசக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ந்ருத்தப்ரியே ந்ருத்த லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

சது: ஷஷ்டி கலாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ மங்கள ஸம்பூரணே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
திவ்ய கந்தாங்க ராகாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
முக்திதே முக்தி தேஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
யஜ்ஞஸாரார்த்த சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே


உத்தராங்க பூஜை
வநஸ்பதி ரஸோத்பந்தோ கந்தாட்யோ கந்த உத்தமம்
ஆக்ரேயஸ் ஸர்வ தேவானாம் தூபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம : தூபம் ஆக்ராபயாமி (ஊதுபத்தி அல்லது சாம்பிராணி காட்டவும்)


கற்பூர வர்த்தி ஸம்யுக்தம் க்ருதயுக்தம் மநோஹரம்
தமோ நாசகரம் தீபம் க்ருஹாண பரமேச்வரி

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: தீபம் தர்சயாமி (தீபக்கால் அல்லது அகலில் தீபத்தை ஏற்றிக் காட்டவும்)


பிறகு நைவேத்யம். சர்க்கரை பொங்கல், உடைத்த தேங்காய், வாழைப்பழம், தாம்பூலம் முதலிய நைவேத்ய பதார்த்தங்களை ஒரு உத்தரணி தீர்த்தத்தால் ப்ரோக்ஷித்து,

பஹுபக்ஷ்ய ஸமாயுக்தம் நாநாஃபல ஸமந்விதம்

நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி நாராயண குடும்பிநீ

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: குடான்னம் நாளிகேர கண்டம், கதலீஃபலம், தாம்பூலம் நைவேத்யம் ஸமர்ப்பயாமி. நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (என்று தீர்த்தத்தை மூன்று முறை கிண்ணத்தில் விடவும்)


நீராஜநம் நீரஜாக்ஷீ நாராயண விலாஸிநீ
க்ருஹ்யதாமர்ப்பிதம் பக்த்யா கருடத்வஜ பாமிநீ

ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி (என்று கற்பூரம் ஏற்றிக் காட்டவும்).


யாநி காநிச பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

என்று கூறி ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.

பிறகு மஞ்சள் குங்குமம் கரைத்த நீரில் ஆரத்தி எடுக்கவும். 'அஸ்மாத் கும்பாத் ஸ்ரீ வைபவ லக்ஷ்மீம் உத்யாபயாமி' என்று சொல்லி அக்ஷதை புஷ்பம் ஸமர்ப்பித்து கலசத்தை சிறிது வடக்கு பக்கம் நகர்த்தி வைக்கவும்.


கலச தீர்த்தத்தை தான் சிறிதளவு உட்கொண்டு, ப்ரோக்ஷித்துக் கொண்டு, வீடு முழுவதும் ப்ரோக்ஷித்து, வந்தவர்களுக்கும் தீர்த்தமாகக் கொடுத்து, மீதியை துளசிச் செடியிலோ, கிணற்றிலோ ஊற்றவும்.

ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ பூஜை ஸம்பூர்ணம்.
ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ விரத பூஜா வரலாற்று கதையை அடுத்த பதிவில் காணலாம்.

No comments:

Post a Comment