Saturday, May 18, 2013

Sri Srisha Gunadarpana Stotra - ஸ்ரீ ஸ்ரீஸ² கு³ணத³ர்பண ஸ்தோத்ரம்



அளவிட முடியாத மகிமை பொருந்திய, இந்த மகாலட்சுமி ஸ்தோத்ரத்தை ஸ்ரீ வாதிராஜ சுவாமிகள் இயற்றிய சூழ்நிலை மிகவும் ருசிகரமானது.

பெருமை வாய்ந்த விஜயநகரப் பேரரசின் மன்னர் அச்சுத ராயர் காலத்தில், விஜயநகர பேரரசு அனைத்து செல்வங்களையும் இழந்து கஜானா வெறுமையடைந்தது. மன்னர், ஸ்ரீ வாதிராஜ சுவாமிகளை அணுகி இந்நிலை மாற உதவுமாறு வேண்டினார். 

சுவாமிகளும் அந்நிலை மாற மகத்தான் ஸ்ரீ ஸ்ரீ ஷகுண தர்பண ஸ்தோத்ரத்தை இயற்றி அருளியதோடு அல்லாமல் அதன் பாராயண விதிமுறைகளையும் அருளித் தந்தார்.  மன்னரை இந்த ஸ்தோத்ரத்தோடு மகாலக்ஷ்மீயின் மணாளான ஸ்ரீமந் நாராயணரின் பாதுகாப்பு அரணை வேண்டும் ஸ்ரீ நாராயண கவசத்தையும் சேர்த்து ஒரு மாலை போல் பாராயணம் செய்யுமாறு கூறினார். முதலில் ஸ்ரீ ஸ்ரீ ஷகுண தர்பண ஸ்தோத்ரம், பிறகு நாராயண கவசம் அதன்பின் மறுபடியும் ஸ்ரீ ஸ்ரீ ஷகுண தர்பண ஸ்தோத்ரம் என்ற வரிசையில் பாராயணம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் 1000 முறைகளாவது பாராயணம் செய்ய வேண்டும் என்று மன்னரிடம் கூறினார்.

அரசவையில் இருந்த மற்ற அறிஞர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களின் கருத்துப்படி லக்ஷ்மீ ஹ்ருதயம் என்னும் மற்றுமொரு மகிமை வாய்ந்த மகாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் இதை விட மிகவும் சக்தி வாய்ந்தது. 

ஆதலால், அவர்கள் மன்னரை லக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரத்தை 1000 முறை பாராயணம் செய்யக் கூறினர். ஆனால் பாராயணம் முடிந்த பின்னரும் நாட்டின் நிதி நிலைமையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆகவே திரும்பவும் ஸ்ரீ வாதிராஜ சுவாமிகளிடம் சென்று அருளுமாறு வேண்டி நின்றார். சுவாமிகள் சிரித்துக் கொண்டே, "மன்னா, லக்ஷ்மீ ஹ்ருதயம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம். ஆனால் தேவி மகாலக்ஷ்மீயினால் சாபம் பெற்றது" எனக் கூறி ஸ்தோத்ரம் சாபம் பெற்ற கதையை விவரித்தார்.

ஒரு முறை தேவி மகாலக்ஷ்மீயின் பக்தன் ஒருவன் அன்னையின் அருளை வேண்டி லக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்து வந்தான். அன்னை அவனிடம் இந்த ஜென்மத்தில் செல்வந்தன் ஆவதற்கு அவனது ப்ரார‌ப்த கர்மாவில் இடம் இல்லை என்றதும் அவன் உடனே தனது பெயரை மாற்றிக் கொண்டு, "பெயர் மாற்றம் மறுபிறப்பிற்கு சமானம். ஆதலால், அன்னை அருள்வதற்கு எவ்வித தடையும் இல்லை" என்று வாதிட்டான். அன்னையும் அவனுக்கு இரங்கி சில காலம் செல்வத்தை வழங்கி அருளினாள். ஆனால் அத்தருணத்தில் அன்னையை கட்டிப்போட்ட லக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரத்திற்கு அன்னை சாபம் இட்டதாக கூறினார்.

(இதைப் படிக்கும் அன்பர்கள் உடனடியாக, ஸ்ரீலக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் மகிமை பற்றிய சந்தேகத்திற்கு ஆளாக வேண்டாம். நமது ப்ராரப்த கர்மாவில் இடம் இருப்பின் நிச்சயம் ஸ்ரீலக்ஷ்மீ ஹ்ருதயம் பலனளிக்க வல்லது. மேலும் அவ்வாறு இல்லாவிடினும், அடிப்படை வசதிகளுக்கு குறைவில்லாத செல்வத்தை அம்பிகை அருள்வாள் என்பது நிச்சயம். நமது முன்வினையின் பயனாக, இப்பிறவியில் அபரிமிதமான செல்வத்தை அடைவது கடினம் என்றிருந்தால்  மட்டுமே இது பலனளிப்பது சிரமம் என்பதை மனதில் கொள்க).

ஸ்ரீ வாதிராஜ சுவாமிகளால் விவரிக்கப்பட்ட இக்கதையை கேட்ட அரசனும் மனம் மாறி, ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ ஸ்ரீ ஷகுண தர்பண ஸ்தோத்ரத்தை 1000 முறை பாராயணம் செய்தான். அன்னையின் அருளால் வெகு சில நாட்களிலேயே நிலைமை மாறி செல்வம் குவிந்தது.

மகத்தான இந்த ஸ்தோத்ரத்தை, மேல் சொன்ன பாராயண விதிமுறைப்படி தினமும்  5, 8, 12, 28, 54, 100 அல்லது 1000 முறை ஜபிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

श्री श्रीशगुणदर्पणस्तोत्रम्
या  सुगन्धास्यनासादिनवद्वाराऽखिलेन  या ।
दुराधर्षा सर्वसस्योदयार्थं या करीषिणी  ॥१॥
या नित्यपुष्टा सर्वाड्गै: सौन्दर्यादिगुणैरपि ।
ई॒श्वरीं॑  सर्वभूता॒नां॒  तामि॒होप॑हूये॒  श्रियम्   (श्रीसूक्त १)  ॥२॥
मातर्लक्ष्मि नमस्तुभयं माधवप्रियमानिनि । युवां विश्वस्य पितरावितरेतरयोगिनौ  ॥३॥
"समना" (ब्र.सु.४.२.७) किल मातस्त्‍वममुना ततयोगिनि ।
मम नाथेन देवश्च विमनाश्च न स त्‍वयि  ॥४॥
त्‍वं वेदमानिनि वेदवेद्यः किल स ते प्रियः ।
त्‍वं मूलप्रकृतिर्देवी स चादिपुरुषः किल ॥५॥
यस्त्‍वामुरसि धत्तेऽम्ब  कौस्तुभद्युतिभासिते ।
स त्‍वां नेवाच्युतः सर्वस्यात्यये सत्यपि त्यजेत्  ॥६॥
देवि त्‍वं ललनारत्नं देवोऽसौ पुरुषोत्तमः ।
युवां युवानौ सततं युवयोर्न वयोऽधिकः  ॥७॥
त्‍वं पद्मिनि पद्मवक्‍त्रा पद्माक्षी पद्मविष्टरा 
पद्मद्वयधरा पद्मकोशोद्यत्स्तनशोभना  ॥८॥
पद्महस्ता पद्मपादा पद्मनाभमनः प्रिया 
पद्मोद्म्‍वस्य जननी पद्मा च वरवर्णिनी  ॥९॥
अम्बां पीताम्बरश्रोणीं लम्बालकलसन्मुखिम् 
बिम्बाधरोष्टीं  कस्तूरिजम्बालतिलकां भजे  ॥१०॥
रत्नोद्दीप्तसुमाड्गल्यसुत्रवृत्तशिरोधराम् 
कुण्डलप्रभयोद्दण्‍डगण्‍डमण्डलमण्डिताम्  ॥११॥
कुचकञ्चुकसञ्चारिहारनिष्कमनोहराम् 
काञ्चीकिड्किणिमञ्जीरकड्कणाद्यैरलक्ड्कृताम्  ॥१२॥
सुवर्णमण्डपे रत्नचित्रसिंहासनोत्तमे ।
नमामि हरिणा साकमिन्दिरां कृतमन्दिराम्  ॥१३॥
ब्रह्माद्या बिबुधश्रेष्ठा ब्रह्माण्याद्याः सुराड्गनाः ।
यां पूजयन्ते सेवन्ते सा मां पातु रमा सदा ॥१४॥
सर्वालड्कारभरितौ सर्वज्ञौ सर्वसद्गुणौ ।
शर्वादिसर्वभक्तौघसर्वसर्वस्वदायकौ  ॥१५॥
सुमुखौ सुन्दरतरौ सुनासौ सुखचित्तनू ।
सुराराधितपादाब्‍जौ रमानारायणौ स्तुमः ॥१६॥
चतुष्कपर्दा या देवी चतुरास्यादिभिः स्तुता ।
चतुर्वेदोदितगुणा चतुर्मूर्तेर्हरेः प्रिया  ॥१७॥
घृतप्रतीकां तां नित्यं घृतपूर्णान्नदायिनीम् 
यथेष्टवित्तदात्रिं च नतोऽस्म्यभयदां श्रियम्  ॥१८॥
वादिराजेन रचितं श्रीश्रीशगुणदर्पणम् 
इमं स्तवं पठन्मर्त्‍यः श्रीमान्स्यान्नात्र सशयः  ॥१९॥
॥ इति श्रीमद्वादिराजपूज्यचरणविरचितं श्री श्रीशगुणदर्पण स्तोत्रं सम्पूर्णम्  ॥ 

ஸ்ரீ ஸ்ரீஸ²கு³ணத³ர்பணஸ்தோத்ரம்
யா  ஸுக³ந்தா⁴ஸ்யனாஸாதி³னவத்³வாரா(அ)கி²லேன  யா |
து³ராத⁴ர்ஷா ஸர்வஸஸ்யோத³யார்த²ம்ʼ யா கரீஷிணீ  ||  1 ||
யா நித்யபுஷ்டா ஸர்வாட்³கை³: ஸௌந்த³ர்யாதி³கு³ணைரபி  |
ஈ॒ஸ்²வரீம்ʼ॑  ஸர்வபூ⁴தா॒நாம்ʼ॒  தாமி॒ஹோப॑ஹூயே॒  ஸ்²ரியம்   (ஸ்²ரிஸூக்த 1)  ||  2 ||
மாதர்லக்ஷ்மி நமஸ்துப⁴யம்ʼ மாத⁴வப்ரியமானினி |
யுவாம்ʼ விஸ்²வஸ்ய பிதராவிதரேதரயோகி³னௌ  || 3 ||
"ஸமனா" (ப்³ர.ஸு.4.2.7) கில மாதஸ்த்வமமுனா ததயோகி³னி |
மம நாதே²ன தே³வஸ்²ச விமனாஸ்²ச ந ஸ த்வயி  || 4 ||
த்வம்ʼ வேத³மானினி வேத³வேத்³ய​: கில ஸ தே ப்ரிய​: |
த்வம்ʼ மூலப்ரக்ருʼதிர்தே³வீ ஸ சாதி³புருஷ​: கில  || 5 ||
யஸ்த்வாமுரஸி த⁴த்தே(அ)ம்ப³  கௌஸ்துப⁴த்³யுதிபா⁴ஸிதே |
ஸ த்வாம்ʼ நேவாச்யுத​: ஸர்வஸ்யாத்யயே ஸத்யபி த்யஜேத்  || 6 ||
தே³வி த்வம்ʼ லலனாரத்னம்ʼ தே³வோ(அ)ஸௌ புருஷோத்தம​: |
யுவாம்ʼ யுவானௌ ஸததம்ʼ யுவயோர்ன வயோ(அ)தி⁴க​:  || 7 ||
த்வம்ʼ பத்³மினி பத்³மவக்த்ரா பத்³மாக்ஷீ பத்³மவிஷ்டரா  |
பத்³மத்³வயத⁴ரா பத்³மகோஸோ²த்³யத்ஸ்தனஸோ²ப⁴னா  || 8 ||
பத்³மஹஸ்தா பத்³மபாதா³ பத்³மனாப⁴மன​: ப்ரியா  |
பத்³மோத்³ம்வஸ்ய ஜனனீ பத்³மா ச வரவர்ணினீ  || 9 ||
அம்பா³ம்ʼ பீதாம்ப³ரஸ்²ரோணீம்ʼ லம்பா³லகலஸன்முகி²ம்  |
பி³ம்பா³த⁴ரோஷ்டீம்ʼ  கஸ்தூரிஜம்பா³லதிலகாம்ʼ ப⁴ஜே   || 10 ||
ரத்னோத்³தீ³ப்தஸுமாட்³க³ல்யஸுத்ரவ்ருʼத்தஸி²ரோத⁴ராம்  |
குண்ட³லப்ரப⁴யோத்³த³ண்ட³க³ண்ட³மண்ட³லமண்டி³தாம்  || 11 ||
குசகஞ்சுகஸஞ்சாரிஹாரனிஷ்கமனோஹராம்  |
காஞ்சீகிட்³கிணிமஞ்ஜீரகட்³கணாத்³யைரலக்ட்³க்ருʼதாம்  || 12 ||
ஸுவர்ணமண்ட³பே ரத்னசித்ரஸிம்ʼஹாஸனோத்தமே  |
நமாமி ஹரிணா ஸாகமிந்தி³ராம்ʼ க்ருʼதமந்தி³ராம்  || 13 ||
ப்³ரஹ்மாத்³யா பி³பு³த⁴ஸ்²ரேஷ்டா² ப்³ரஹ்மாண்யாத்³யா​: ஸுராட்³க³னா​: |
யாம்ʼ பூஜயந்தே ஸேவந்தே ஸா மாம்ʼ பாது ரமா ஸதா³  || 14 ||
ஸர்வாலட்³காரப⁴ரிதௌ ஸர்வஜ்ஞௌ ஸர்வஸத்³கு³ணௌ  |
ஸ²ர்வாதி³ஸர்வப⁴க்தௌக⁴ஸர்வஸர்வஸ்வதா³யகௌ  || 15 ||
ஸுமுகௌ² ஸுந்த³ரதரௌ ஸுனாஸௌ ஸுக²சித்தனூ  |
ஸுராராதி⁴தபாதா³ப்³ஜௌ ரமானாராயணௌ ஸ்தும​: || 16 ||
சதுஷ்கபர்தா³ யா தே³வீ சதுராஸ்யாதி³பி⁴​: ஸ்துதா  |
சதுர்வேதோ³தி³தகு³ணா சதுர்மூர்தேர்ஹரே​: ப்ரியா  || 17 ||
க்⁴ருʼதப்ரதீகாம்ʼ தாம்ʼ நித்யம்ʼ க்⁴ருʼதபூர்ணான்னதா³யினீம்  |
யதே²ஷ்டவித்ததா³த்ரிம்ʼ ச நதோ(அ)ஸ்ம்யப⁴யதா³ம்ʼ ஸ்²ரியம்  || 18 ||
வாதி³ராஜேன ரசிதம்ʼ ஸ்ரீஸ்ரீஸ²கு³ணத³ர்பணம்  |
இமம்ʼ ஸ்தவம்ʼ பட²ன்மர்த்ய​: ஸ்ரீமான்ஸ்யான்னாத்ர ஸஸ²ய​:  || 19 ||
||  இதி ஸ்ரீமத்³வாதி³ராஜபூஜ்யசரணவிரசிதம்ʼ ஸ்ரீ ஸ்ரீஸ²கு³ணத³ர்பண ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம்  ||

1. ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியானவள், (ஸ்ரீயந்திரத்தின்) சுகந்த நறுமணம் வீசும் ஒன்பது வாசல்களைக் (த்வாரம்) கடந்த பரப்ரஹ்ம வடிவாக‌ நிறைபவள் ('ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே' ----அபிராமி அந்தாதி).  அதாவது, பரந்த இப்பிரபஞ்சமும், மனித உடலும் ஒரே தத்துவத்தை உணர்த்துகிறது. அண்டத்தில் (பிரபஞ்சத்தில்) உள்ளதே பிண்டத்திலும் (மனித உடலிலும்) என்பது ஆன்றோர் வாக்கு. 

'ஸ்ரீ யந்திரம்' எனப்படும் ஸ்ரீ சக்ரம், பிரபஞ்சத் தத்துவத்தையும் மனித உடலின் அமைப்பையும் ஒரு சேரக் குறிக்கிறது. ஸ்ரீசக்ரம் ஒன்பது ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் மறைப்புகள் என்பது பொருள். இங்கு சுற்றுகள், பிரகாரம்  என பொருள் கொள்ளலாம். ஒன்பது ஆவரணங்களும் தாண்டி, பிந்து ஸ்தானம் எனப்படும்  மத்தியப் புள்ளியில் அம்பிகை கொலு வீற்றிருக்கிறாள். தன்னை உள்ளன்போடு வழிபடும் பக்தர்களின் ஜென்மாந்திர வாசனைகள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் கர்மத் தளைகளாகிய மறைப்புகளின் வாசல்களைத் (த்வாரம்) திறந்து,  பிந்து ஸ்தானமாகிய ஜீவ ப்ரஹ்ம‌ ஐக்கிய நிலையை,  மோக்ஷத்தை அளிப்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியே. 

'நறுமணம் வீசும்' என்றது, ஒன்பது ஆவரணங்களிலும் உறைந்து, சாதகனின் ஆன்ம ஈடேற்றத்துக்கு அருள்புரிந்து உதவும் அன்னையின் பரிவார தேவதைகளின் அருட்சக்தியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். 

ஜீவர்களின் உடலின் பிந்து ஸ்தானமே பிரமரந்திரம் எனப்படும் தலை உச்சி. ஜீவன் முக்தர்களின் வாழ்நாள் நிறையும் போது, பிரமரந்திரம் வழியாகத் தான் உயிர் பயணப்படும் என்பார்கள். பிந்து ஸ்தானத்தில் உறைந்திருக்கும் பரப்ரஹ்ம ஸ்வரூபிணியான அம்பிகையோடு ஏற்படும் ஐக்கியநிலையையே இது குறிக்கிறது.
 
சேதன மற்றும் அசேதன(அறிவுள்ள மற்றும் அறிவற்ற) பொருட்கள் நிரம்பியுள்ள இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டவள், அனைத்தையும் கடந்தவள் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி("ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள்" அபிராமி அந்தாதி). 

பூதேவியின் ஸ்வரூபமாய், இவ்வுலகில் தாவரங்களின் வளர்ச்சிக்கு காரணமாயிருப்பவளும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே.

2. தெய்வீக அழகு நிரம்பிய, அழகிய அங்கங்களுடன் கூடிய திருமேனியை உடையவள் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி. அனைத்து  உயிரினங்களும்  வழிபடும் தேவியான ஸ்ரீமகாலக்ஷ்மீயை என் இல்லத்திற்கு கிருபை கூர்ந்து எழுந்தருளுமாறு அழைக்கிறேன்.

3. தாயே லக்ஷ்மீ,  நீ,  மாதவன் என்னும் திருநாமத்தை உடைய நாராயணனின் அன்புக்கு உகந்தவள். நான் உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இவ்வுலகத்திற்கு நீங்கள் இருவர்தான் தாயும் தந்தையும். உங்கள் இருவரில், ஒருவரிலிருந்து மற்றொருவரைப் பிரிக்கவே இயலாது.

4. அம்மா, நீ உன் மணாளனான ஸ்ரீஹரியுடன், காலம் முதலானவற்றைக் கடந்து, பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து இருப்பதால் உன்னை 'சமனா' என்று அழைக்கின்றனர். ஸ்ரீஹரியானவர் உன் மீது எப்பொழுதும் கோபமே கொள்ள மாட்டார். 


5. தாயே,  நீயே வேதங்கள் அபிமானமாக (ப்ரியமாக)  வழிபடும் தேவியாததால் வேதமானினி. உன் பதியான, ஸ்ரீஹரியே அனைத்திற்கும் மேலான இறைவன். நான்கு வேதங்களும் அவரால்  அருளப்பட்டவையே. அனைத்திற்கும் மூலமாக இருப்பதால் நீயே மூலபிரகிருதியாவாய். மானுடப் படைப்புகளில் புருஷர்களுக்கு மூலமாக ஸ்ரீ ஹரி விளங்குகிறார்.

6. ஸ்ரீ ஹரியாகிய நாராயணர் , கெளஸ்துபம் என்னும் தெய்வீக மணியால் ஒளியூட்டப்பட்ட தம் திருமார்பில் உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார். பிரளய காலத்திலும் அவர் உன்னை விட்டு நீங்காமல் உன்னுடனேயே இருக்கிறார்.  

7. ஓ! தேவி, பெண்களிடையே நீ ஒரு வைரம் போன்றவள். பெண்குலத்துக்கே ஒரு ஆபரணம் போன்றவள் நீ. உன் பதியான ஸ்ரீஹரியே இப்பிரபஞ்சத்தில் முதன்மையானவர்.  நீங்கள் இருவரும் யுகங்களையும், காலங்களையும் கடந்த நிரந்தரமான இளமை உடையவர்கள். நீங்கள் இருவரும் ஒருவரே.  

8. தாயே மஹாலக்ஷ்மி, நீ பத்மம் என்னும் தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டவள். மலர்ந்த தாமரை போன்ற திருமுகம் மற்றும் கண்களை உடையவள்.  நீ அமரும் ஆசனமும் தாமரை மலரே.   நீ உன் திருக்கரங்களில் தாமரை மலரை ஏந்தியருளுகிறாய்.  உன் ஸ்தனங்கள் தாமரை மொட்டுக்கள் போன்றவை. 

9. ஒ மஹாலக்ஷ்மீ, உன் திருக்கரங்களும், திருவடிகளும் தாமரை மலர் போன்று அழகாக இருக்கின்றன. நீயே பத்மநாபரின் ப்ரியமான மனையாள். தாமரை மலரில் உதித்தவரும்,படைப்பையே தொழிலாக் கொண்டவருமான‌ பிரம்ம தேவனின் தாயும் நீயே.  உன்னை 'பத்மா'(தாமரை)  என்னும் திருநாமத்தாலும் அழைப்பர். 

10. மங்களகரமான மஞ்சள் பட்டாடையுடன், பின்னால் அடர்ந்து பரந்து விரிந்த கருங் கூந்தலின் மேல் விழுந்து திரும்பும் சூரியனின் கிரணங்களால் முகம் ஜொலி ஜொலிக்க, பழத்தைப் போன்ற சிவந்த உதடுகளுடன், முன் நெற்றியில் கஸ்தூரி திலகத்துடன் விளங்கும் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மீயை வணங்குகிறேன். 

11. தன் திருச்செவிகளில் அணிந்திருக்கும் காதணிகள் பிரதிபலிக்கும் ஒளியால் கன்னங்கள் பளபளக்க, வைர, வைடூர்யங்கள் பதிக்கப் பெற்று அலங்கரிக்கப்பட்ட  புனிதமான திருமாங்கல்யத்தை அணிந்திருக்கும் தாய்  மகாலக்ஷ்மீயை வணங்குகிறேன். 

12. கழுத்தில் அணிந்திருக்கும் மாலை மேலாடையின் மீது ஊஞ்சலாட,  தங்க ஒட்டியாணம் இடுப்பை அலங்கரிக்க, ஒசை எழுப்பும் மணிகளுடன் கூடிய கொலுசுகளை கணுக்கால்களிலும், வளையல்களை திருக்கரங்களிலும் அணிந்தருளும் அழகே பிறவி எடுத்தாற்போன்ற, அழகான என் தாய் மகாலக்ஷ்மீயை வணங்குகிறேன். 

13. விலை மதிக்க இயலாத‌ ஆபரணங்கள் அணியப்பெற்று, தன் மணாளன் ஸ்ரீ ஹரியுடன் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தருளும் தேவி ஸ்ரீ மகாலக்ஷ்மீயை பய, பக்தியுடன் வணங்குகிறேன்.   

14. நான்முகன், சரஸ்வதி மற்றும் அனைத்து தெய்வீக பெண்மணிகளாலும் வணங்கி துதிக்கப்படும் தேவியே, ரமா என்னும் திருநாமம் கொண்டவளே, என்னை எப்பொழுதும் காத்தருள்வாய். 

15. எப்பொழுதும் சிறந்த ஆடை, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் திவ்ய தம்பதிகளான நீங்கள் இருவரும் அனைத்தும் அறிந்தவர்கள். தெய்வீக பண்புகள் நிரம்பிய நிறை குடமாக திகழ்பவர்கள். ருத்ரர் முதலான அனைத்து பக்தர்களின் பக்திக்கு இரங்கி அவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்தருளுபவர்கள். அத்தகைய ஸ்ரீலக்ஷ்மீ நாராயண தம்பதியை போற்றி வணங்கி பிரார்த்திக்கிறேன். 

16. சிற்பி செதுக்கினாற் போன்ற அழகான மூக்கு முகத்திற்கு மேலும் அழகு சேர்க்க, நித்தமும் பிறவி எடுப்பதைப் போன்ற‌ யெளவன  திருமேனியுடன் கூடியவர்களே ஸ்ரீலக்ஷ்மியும், ஸ்ரீமந் நாராயணரும். அவர்களது தாமரை மலரையொத்த‌ திருவடிகளை அனைத்து தேவர்களும் வழிபடுகின்றனர். அத்தகைய நற்குண ஸ்ரீ நாராயண சமேத தேவி ஸ்ரீ லக்ஷ்மீயை துதித்து வணங்கி பிரார்த்திக்கிறேன். 

17. பரந்து விரிந்துள்ள கூந்தலை நான்கு விதமான பின்னல் அலங்கரிக்க, நான்முகன் மற்றும் அனைத்து தேவர்களாலும் வழிபடப்படும், நான்மறைகளும் போற்றிப் புகழும்,  வாஸூதேவர், சங்கர்ஷணர், ப்ரத்யும்னர் மற்றும்  அனிருத்தர் என்னும் நான்கு ரூபங்களை கொண்ட ஸ்ரீ ஹரியின் அன்புக்கு உரியவளான தேவி லக்ஷ்மீயை துதித்து, வணங்கி பிரார்த்திக்கின்றேன். 

18. பக்தர்களின் இல்லத்தில் எப்பொழுதும் நிரம்பி வழியும் அளவுக்கு தான்யம், நெய், வற்றாத செல்வம் ஆகியவற்றைத் தந்து அவர்களை காத்தருளும் தயை நிரம்பிய தாயான பரமேஸ்வரி தேவி மகாலக்ஷ்மீயை சிரம் தாழ்த்தி, துதித்து, வணங்கிப் பிரார்த்திக்கிறேன்.  

19. ஸ்ரீ ஸ்ரீ வாதிராஜ தீர்த்தரால் அருளப்பட்ட இந்த ஸ்ரீ ஸ்ரீஷகுண தர்பண ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்கள் நிச்சயம் ஸ்ரீ மகாலக்ஷ்மீயின் அருளால் அனைத்து வளங்களும் பெறுவர்.


1 comment:

VL Krishna said...

It is mentioned here jeeva Brahma union which is never as per Madhwacharya's dwaita philosophy and Sri Vadiraja a dwaita saint would never have interpreted as mentioned here. Only taratamya and no ikya even in moksha..

Post a Comment