Monday, May 20, 2013

Sri Siddhi Vinayaka Stotra - ஸ்ரீ சித்தி விநாயக ஸ்தோத்ரம்

Image Courtesy - Google Images
॥ श्री सिद्धिविनायक स्तोत्र ॥

  श्री गणेशाय नमः॥ 
विघ्नेश विघ्नचयखण्डननामधेय श्रीशङ्करात्मज सुराधिपवन्द्यपाद ।
दुर्गामहाव्रतफलाखिलमङ्गलात्मन् विघ्नं ममापहर सिद्धिविनायक त्वम् ॥१॥ सत्पद्मरागमणिवर्णशरीरकान्तिः श्रीसिद्धिबुद्धिपरिचर्चितकुङ्कुमश्रीः।
दक्षस्तने वलयितातिमनोज्ञशुण्डो विघ्नं ममापहर सिद्धिविनायक त्वम् ॥२॥
पाशाङ्कुशाब्‍जपरशूंश्च दधच्चतुर्भिर्दोर्भिश्च शोणकुसुमस्रगुमाङ्गजातः।
सिन्दूरशोभितललाटविधुप्रकाशो विघ्नं ममापहर सिद्धिविनायक त्वम्  ॥३॥
कार्येषु विघ्नचयभीतविरिञ्चिमुख्यैः सम्पूजितः सुरवरैरपि मोदकाद्यैः।
सर्वेषु च प्रथममेव सुरेषु पूज्यो विघ्नं ममापहर सिद्धिविनायक त्वम् ॥४॥
शीघ्राञ्चनस्खलनतुङ्गरवोर्ध्वकण्ठस्थूलोन्दुरुद्रवणहासितदेवसङ्घः।
शूर्पश्रुतिश्च पृथुवर्तुलतुङ्गतुन्दो विघ्नं ममापहर सिद्धिविनायक त्वम् ॥५॥
यज्ञोपवीतपदलंभितनागराजो मासादिपुण्यददृशीकृतऋक्षराजः।
भक्‍ताभयप्रद दयालय विघ्नराज विघ्नं ममापहर सिद्धिविनायक त्वम् ॥६॥
सद्रत्‍नसारततिराजितसत्किरीटः  कौसुम्भचारुवसनद्वय ऊर्जितश्रीः।
सर्वत्रमङ्गलकरस्मरणप्रतापो विघ्नं ममापहर सिद्धिविनायक त्वम् ॥७॥
देवान्तकाद्यसुरभीतसुरार्तिहर्ता विज्ञानबोधेनवरेण तमोपहर्ता।
आनन्दितत्रिभुवनेशु कुमारबन्धो विघ्नं ममापहर सिद्धिविनायक त्वम् ॥८॥

Courtesy - You tube 

 ஸ்ரீ சித்தி விநாயக ஸ்தோத்ரம்

ஸ்ரீ ³ணேஸா² நம​:||  
விக்னேஸ² விக்னசயக²ண்ட³னனாமதே ஸ்ரீஸ²ங்கராத்மஜ 
ஸுராதிபவந்த்³யபாத³ | 
து³ர்கா³மஹாவ்ரதப²லாகி²லமங்க³லாத்மன் விக்னம்ʼ மமாபஹர ஸித்³திவினாயக த்வம் || 1 || 
ஸத்பத்³மராக³மணிவர்ணஸ²ரீரகாந்தி​: ஸ்ரீஸித்³திபு³த்³திபரிசர்சிதகுங்குமஸ்ரீ​:| 
³க்ஷஸ்தனே வலயிதாதிமனோஜ்ஞஸு²ண்டோ³ விக்னம்ʼ மமாபஹர ஸித்³திவினாயக த்வம்  || 2 || 
பாஸா²ங்குஸா²ப்³ஜபரஸூ²ம்ʼஸ்² ³ச்சதுர்பிர்தோ³ர்பிஸ்² ஸோ²ணகுஸுமஸ்ரகு³மாங்க³ஜாத​: | 
ஸிந்தூ³ரஸோ²பிதலலாடவிதுப்ரகாஸோ² விக்னம்ʼ மமாபஹர ஸித்³திவினாயக த்வம்  || 3 || 
கார்யேஷு விக்னசயபீவிரிஞ்சிமுக்²யை​: ஸம்பூஜித​: ஸுரவரைரபி மோத³காத்³யை​: | 
ஸர்வேஷு ப்ரத²மமேவ ஸுரேஷு பூஜ்யோ விக்னம்ʼ மமாபஹர ஸித்³திவினாயக த்வம் || 4 || 
ஸீ²க்ராஞ்சனஸ்க²லனதுங்க³ரவோர்த்வகண்ட²ஸ்தூ²லோந்து³ருத்³ரவணஹாஸிததே³வஸங்க⁴​:  | 
ஸூ²ர்பஸ்²ருதிஸ்² ப்ருʼது²வர்துலதுங்க³துந்தோ³ விக்னம்ʼ மமாபஹர ஸித்³திவினாயக த்வம் || 5 || 
யஜ்ஞோபவீதபத³லம்பிநா³ராஜோ மாஸாதி³புண்யத³த்³ருʼஸீ²க்ருʼதருʼக்ஷராஜ​: | 
க்தாபயப்ரத³ ³யாலய விக்னராஜ விக்னம்ʼ மமாபஹர ஸித்³திவினாயக த்வம் || 6 || 
ஸத்³ரத்னஸாரததிராஜிதஸத்கிரீட​:  கௌஸும்பசாருவஸனத்³வய ஊர்ஜிதஸ்ரீ​: | 
ஸர்வத்ரமங்க³லகரஸ்மரணப்ரதாபோ விக்னம்ʼ மமாபஹர ஸித்³திவினாயக த்வம் || 7 || 
தே³வாந்தகாத்³யஸுரபீதஸுரார்திஹர்தா விஜ்ஞானபோ³தேனவரேண தமோபஹர்தா | 
ஆநந்தி³ த்ரிபுவனேஸு² குமாரப³ந்தோ⁴  விக்னம்ʼ மமாபஹர ஸித்³திவினாயக த்வம் || 8 ||

========================================================================
1. விக்னேசுவரரே,  பெருகி வரும் தடைகளை நீக்குவதில் வல்லவரே!  நன்மையே செய்கிற சங்கரரின் புதல்வரே! தேவர்களின் தலைவனான இந்திரனால் வணங்கப் பெறுகின்ற‌ திருவடிகளை உடையவரே!  துர்க்கா தேவியை உத்தேசித்துச் செய்யப்படுகிற உயர்ந்த‌ விரதத்திற்குரிய பலனைத் தருபவரே ! மங்கள வடிவானவரே ! என் கஷ்டங்களை  நீக்குவீராக!!!.


2. சிறந்த பத்மராகம் போன்ற அழகிய திருமேனியை உடையவரும், சித்தி புத்தி தேவியரால் ஒளி பொருந்திய குங்குமப்பூ பூசப்பட்டவரும், மார்பில் அழகாக வளைந்துள்ள துதிக்கையைக் கொண்டருளுபவருமான சித்தி விநாயகரே ! எனக்கு நேரும் தடைகளை (கஷ்டங்களை) போக்குங்கள்.

3. நான்கு திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், தாமரை, கோடரி ஏந்தி,  சிறந்த‌ மலர்களாலான மாலையை அணிந்து, சிந்தூரப் பொட்டால் அழகு பெற்ற நெற்றியில் பிறைச்சந்திரனை சூடிய‌ உமையின் குமாரரான சித்தி விநாயகரே! எனது கஷ்டங்களைப்  போக்குவீர்.

4. தாங்கள் செய்யும்  செயல்களில் ஏற்பட்ட தடைகளைக் கண்டு அஞ்சிய‌ பிரம்மா முதலிய தேவர்களால், (அத்தடைகள் நீங்க) கொழுக்கட்டை முதலியவை சமர்ப்பித்து வழிபடப்பட்டவரும் எல்லா இடங்களிலும், பணிகளிலும் முதலில் பூஜிக்கப்படுபவருமான விநாயகரே! எனது கஷ்டங்களைப் போக்குவீராக!!!!.

5.  வேகமான நடைபயிலுதல்,  நடையில் தடை ஏற்பட்டுத் தவறுதல், பெரும்பிளிறலைச் செய்தல், துதிக்கையைக் கழுத்துக்கு மேல் உயர்த்துதல், பெருச்சாளியை விரட்டுதல் முதலிய லீலைகளைப் புரிந்து தேவர்களை நகைக்கச்  செய்பவரும்,  முறம் போன்ற காதுகளையும் வட்டமான பெருத்த திருவயிறையும் உடைய விநாயகரே ! என் கஷ்டங்களை நீக்கி அருள்வீர்.

6. நாகராஜனைப் பூணூலாக அணிந்தவரும், சதுர்த்தி, மாதப்பிறப்பு ஆகிய தினங்களில் சந்திரனை தரிசிப்பதால்  நற்பலன் தருபவரும், மேலும் பக்தர்களின் அச்சத்தை நீக்குபவருமான விக்னராஜரே! தயையின் இருப்பிடமான விநாயகரே ! என்  கஷ்டங்களை  நீக்குவீராக.


7.  சிறந்த ரத்தினங்களால் ஆன கிரீடத்தைத் தரித்த‌வரும், மிகவும் அழகாக, இரு பட்டாடைகளை அணிந்தவரும், நினைத்த மாத்திரத்தில் எங்கும், யாவருக்கும் மங்களங்களை அருள்பவருமான‌ சித்தி விநாயகரே ! என் கஷ்டங்களை நீக்கி அருள்வீராக.


8. தேவாந்தகன் முதலிய அரக்கர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை நீக்கியவரும், திவ்ய ஞானத்தை உபதேசிப்பதனால் அஞ்ஞான இருளைப் போக்கடிப்பவரும்,  மூவுலகிற்கும் நாதனான சிவ பெருமானை ஆனந்திக்கச் செய்பவரும், முருகனின் சகோதரருமான சித்தி விநாயகரே! எம் கஷ்டங்களை நீக்கி அருளுங்கள்.

No comments:

Post a Comment