Monday, April 1, 2013

Sankat Mochan Hanuman Ashtak - ஸங்கட மோசன ஹனுமான் அஷ்டகம்

Courtesy - Google Images
गोस्वामी तुलसीदास कृत संकटमोचन हनुमानाष्टक
मत्तगयन्द छन्द
 बाल समय रबि भक्षि लियो तब, तीनहुँ लोक भयो अँधियारो ।
ताहि सों त्रास भयो जग को, यह संकट काहु सों जात न टारो ॥
देवन आन करि बिनती तब, छाँड़ि दियो रबि कष्ट निवारो ।
को नहिं जानत है जग में कपि, संकटमोचन नाम तिहारो ॥ 1 ॥
बालि की त्रास कपीस बसै गिरि, जात महाप्रभु पंथ निहारो ।
चौंकि महा मुनि शाप दिया तब, चाहिय कौन बिचार बिचारो ॥
के द्विज रूप लिवाय महाप्रभु, सो तुम दास के शोक निवारो ।
को नहिं जानत है जग में कपि, संकटमोचन नाम तिहारो ॥ 2 ॥
अंगद के संग लेन गये सिय, खोज कपीस यह बैन उचारो ।
जीवत ना बचिहौ हम सो जु, बिना सुधि लाय इहाँ पगु धारो ॥
हेरि थके तट सिंधु सबै तब, लाय सिया-सुधि प्राण उबारो ।
को नहिं जानत है जग में कपि, संकटमोचन नाम तिहारो ॥ 3 ॥
रावन त्रास दई सिय को सब, राक्षसि सों कहि शोक निवारो ।
ताहि समय हनुमान महाप्रभु, जाय महा रजनीचर मारो ॥
चाहत सीय अशोक सों आगि सु, दै प्रभु मुद्रिका शोक निवारो ।
को नहिं जानत है जग में कपि, संकटमोचन नाम तिहारो ॥ 4 ॥
बाण लग्यो उर लछिमन के तब, प्राण तजे सुत रावण मारो ।
लै गृह बैद्य सुषेन समेत, तबै गिरि द्रोण सु बीर उपारो ॥
आनि सजीवन हाथ दई तब, लछिमन के तुम प्राण उबारो ।
को नहिं जानत है जग में कपि, संकटमोचन नाम तिहारो ॥ 5 ॥
रावण युद्ध अजान कियो तब, नाग कि फाँस सबै सिर डारो ।
श्रीरघुनाथ समेत सबै दल, मोह भयो यह संकट भारो ॥
आनि खगेस तबै हनुमान जु, बंधन काटि सुत्रास निवारो ।
को नहिं जानत है जग में कपि, संकटमोचन नाम तिहारो ॥ 6 ॥
बंधु समेत जबै अहिरावन, लै रघुनाथ पाताल सिधारो ।
देबिहिं पूजि भली बिधि सों बलि, देउ सबै मिति मंत्र बिचारो ॥
जाय सहाय भयो तब ही, अहिरावण सैन्य समेत सँहारो ।
को नहिं जानत है जग में कपि, संकटमोचन नाम तिहारो ॥ 7 ॥
काज किये बड़ देवन के तुम, वीर महाप्रभु देखि बिचारो ।
कौन सो संकट मोर गरीब को, जो तुमसों नहिं जात है टारो ॥
बेगि हरो हनुमान महाप्रभु, जो कछु संकट होय हमारो ।
को नहिं जानत है जग में कपि, संकटमोचन नाम तिहारो ॥ 8 ॥
॥ दोहा ॥
लाल देह लाली लसे, अरू धरि लाल लंगूर ।
बज्र देह दानव दलन, जय जय जय कपि सूर ॥
॥ इति संकटमोचन हनुमानाष्टक सम्पूर्ण ॥


கோ³ஸ்வாமீ துலஸீதா³ஸ க்ருʼத  ஸங்கடமோசன ஹனுமான் அஷ்டகம்

மத்தக³யந்த³ ச²ந்த³

பா³ல ஸமய ரவி³ ப⁴க்ஷி லியோ தப்³, 
தீனஹு(ங்) ̐ லோக ப⁴யோ அந்தி⁴யாரோ | 

தாஹி ஸோ(ங்)ʼ த்ராஸ ப⁴யோ ஜக³ கோ, 
யஹ் ஸங்கட காஹு ஸோ(ம்)ʼ ஜாத ந டாரோ || 

தே³வன ஆன கரி பி³னதீ தப்³, 
சா²ண்‌டி³  தி³யோ ரவி³ கஷ்ட நிவாரோ | 

கோ நஹி(ங்)ʼ ஜானத் ஹை ஜக்³ மே(ங்)ʼ கபி, 
ஸங்கட மோசன நாம திஹாரோ || 1 || 

பா³லி கீ த்ராஸ் கபீஸ ப³ஸை கி³ரி, 
ஜாத மஹாப்ரபு⁴ பந்த² நிஹாரோ | 

சௌ(ங்)கி மஹா முனி ஸா²ப் தி³யா தப்³, 
சாஹிய கௌன் பி³சார பி³சாரோ || 

கை த்³விஜ ரூப லிவாய மஹாப்ரபு⁴, 
ஸோ தும் தா³ஸ் கே ஸோ²க நிவாரோ | 

கோ நஹி(ங்)ʼ ஜானத் ஹை ஜக³ மே(ங்)ʼ கபி, 
ஸங்கட மோசன நாம திஹாரோ || 2 || 


அங்க³த³  கே ஸங்க³  லேன க³யே ஸிய, 
கோ²ஜ் கபீஸ யஹ் பை³ன் உசாரோ | 

ஜீவத நா ப³சி ஹௌ ஹம் ஸோ ஜு, 
பி³னாஸுதி⁴ லாயே இஹா(ங்) ̐ பகு³ தா⁴ரோ || 

ஹேரி த²கே தட ஸிந்து⁴ ஸபை³ தப்³, 
லாய ஸியா-ஸுதி⁴ ப்ராண உபா³ரோ | 

கோ நஹி(ங்)ʼ ஜானத் ஹை ஜக³ மே(ங்)ʼ கபி, 
ஸங்கட மோசன நாம திஹாரோ || 3 || 


ராவண் த்ராஸ் த³யீ ஸிய கோ ஸப்³, 
ராக்ஷ்ஸி ஸோ(ங்)ʼ கஹி ஸோ²க நிவாரோ | 

தாஹி ஸமய ஹனுமான மஹாப்ரபு⁴, 
ஜாய மஹா ரஜனீசர மாரோ || 

சாஹத் ஸீய அஸோ²க் ஸோ(ங்)ʼ ஆகி³ ஸு, 
தை³ ப்ரபு⁴ முத்³ரிகா ஸோ²க் நிவாரோ | 

கோ நஹி(ங்)ʼ ஜானத் ஹை ஜக³ மே(ங்)ʼ கபி, 
ஸங்கட மோசன நாம திஹாரோ || 4 || 


பா³ண் லக்³யோ உர லசி²மன கே தப்³, 
ப்ராண் தஜே ஸுத ராவண மாரோ | 

லை க்³ருʼஹ வை³த்³ய ஸுஷேன ஸமேத், 
தபை³ கி³ரி த்³ரோன ஸு பீ³ர உபாரோ || 

ஆனி ஸஜீவன் ஹாத்² த³யீ தப்³, 
லசி²மன் கே தும் ப்ராண உபா³ரோ | 

கோ நஹி(ங்)ʼ ஜானத் ஹை ஜக³ மே(ங்)ʼ கபி, 
ஸங்கட மோசன நாம திஹாரோ || 5 || 


ராவண் யுத்³த⁴ அஜான கியோ தப்³, 
நாக்³  கே பா²ஃ(ங்க்) ̐ஸ் ஸபை³ ஸிர் டா³ரோ | 

ஸ்ரீரகு⁴னாத² ஸமேத ஸபை³ த³ல, 
மோஹ ப⁴யோ யஹ் ஸங்கட் பா⁴ரோ || 

ஆனி க²கே³ஸ் தபை³ ஹனுமான் ஜு, 
ப³ந்த⁴ன காடி ஸுத்ராஸ் நிவாரோ | 

கோ நஹி(ங்)ʼ ஜானத் ஹை ஜக³ மே(ங்)ʼ கபி, 
ஸங்கட மோசன நாம திஹாரோ || 6 || 


ப³ந்து⁴ ஸமேத ஜபை³ அஹிராவண், 
லை ரகு⁴னாத² பாதாள் ஸிதா⁴ரோ | 

தே³பி³ஹி(ங்)ʼ பூஜி ப⁴லீ வி³தி⁴ ஸோ(ங்)ʼ ப³லி, 
தே³வு ஸபை³ மிலி மந்த்ர வி³சாரோ || 

ஜாய ஸஹாய ப⁴யோ தப்³  ஹீ, 
அஹி-ராவண ஸைன்ய ஸமேத ஸம் ̐ஹாரோ | 

கோ நஹி(ங்)ʼ ஜானத் ஹை ஜக³ மே(ங்)ʼ கபி, 
ஸங்கட மோசன நாம திஹாரோ || 7 || 


காஜ் கியே ப³‌ட³ தே³வன கே தும், 
வீர் மஹாப்ரபு⁴  தே³கி²  பி³சாரோ | 

கௌன் ஸோ ஸங்கட் மோர் க³ரீப்³  கோ, 
ஜோ தும்ஸோ(ங்)ʼ நஹி(ங்)ʼ ஜாத ஹை டாரோ || 

பே³கி³ ஹரோ ஹனுமான மஹாப்ரபு⁴, 
ஜோ கசு² ஸங்கட ஹோய் ஹமாரோ | 

கோ நஹி(ங்)ʼ ஜானத் ஹை ஜக³ மே(ங்)ʼ கபி, 
ஸங்கட மோசன நாம திஹாரோ || 8 || 

||  தோ³ஹா || 

லால் தே³ஹ் லாலீ லஸே, அரூ த⁴ரி லால் லங்கூ³ர் | 

வ³ஜ்ர தே³ஹ் தா³னவ த³லன், ஜெய் ஜெய் ஜெய் கபி ஸூர் || 

||  இதி ஸங்கடமோசன ஹனுமானாஷ்டகம் ஸம்பூர்ணம் ||

  
தாங்கள் பாலகனாக இருந்த பொழுது, வானத்தில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் சூரியனை உண்ணுவதற்கேற்ற கனி என்று நினைத்து, பிடித்து விழுங்கியதால், மூவுலகும் இருளில் மூழ்கி தத்தளித்தது. இதிலிருந்து மீண்டு வர ஒருவருக்கும் வழி தெரியவில்லை. உலகமே அந்தகாரத்தில் மூழ்கியது. அனைத்து தேவர்களும் தங்களை வணங்கித் தொழுதனர். உடனே விழுங்கிய சூரிய தேவரை விடுவித்து அவர்களின் கஷ்டத்தை நீக்கியதோடு அல்லாமல் உலகத்திற்கே தாங்கள் ஒளி ஏற்றினீர்கள். இவ்வுலகில் சங்கடங்கள் வரும் பொழுது அதிலிருந்து மீட்க சங்கட மோசன ஹனுமந்தா  தங்களையன்றி வேறு யார் உளர்!! 

சுக்ரீவன், வாலியின் தாக்குதலுக்கு அஞ்சி, ஒரு ரிஷியின் சாபத்தினால் வாலி வரஇயலாத‌ ரிஷ்யமுக பர்வதத்தில் வசித்து வந்த போது, அவருக்கு உற்ற தோழனாகவும், மந்திரியாகவும் தாங்களே உதவி புரிந்து வந்தீர்கள். இராமபிரானும், லக்குவனும் சீதையைத் தேடும் வழியில் ரிஷ்யமுக பர்வதத்தை கடக்கும் பொழுது, அந்தணன் வேடத்தில் ஸ்ரீராமனை சந்தித்து, அவர் அந்தப் பகுதிக்கு வந்தத‌ன் நோக்கம் அறிந்து கொண்டீர்கள். ஸ்ரீராமனுக்கு சுக்ரீவனுடன் நட்பு ஏற்படுத்தி, வாலி வதத்திற்கு வழி வகுத்தீர்கள். நாடு, மனைவி, மக்கள், உற்றார், உறவினர் எல்லாவற்றையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்திருந்த சுக்ரீவனுக்கு இழந்த அனைத்தையும் ஸ்ரீராமனின் உதவியால் பெற்றுத் தந்து மகிழ்வான வாழ்வு அளித்தீர்கள். இவ்வுலகில் சங்கடங்கள் வரும் பொழுது அதிலிருந்து மீட்க சங்கட மோசன ஹனுமந்தா, தங்களையன்றி வேறு யார் உளர்!! 

வானர ராஜன் சுக்ரீவனின் ஆணையின்படி அன்னை சீதையைத் தேடி, இளவரசன் அங்கதன் தலைமையில் வானர சேனை தென் திசை நோக்கி கிளம்பியது. 'அன்னையை தேடி கண்டுபிடியுங்கள்!!. அன்னை சீதை பற்றிய விவரம் அறியாமல் திரும்பினால், யாருக்கும் உயிர் தப்பாது’ என்ற சுக்ரீவனின் சொல் அனைவர் மனத்திலும் ரீங்காரிமிட்டுக் கொண்டு இருந்தது. தேடலின் முடிவில் சமுத்திரக்கரையில் அனைவரும் தளர்ந்து சோர்ந்து அமர்ந்து போது, ஜாம்பவானின் ஊக்கத்தால், சமுத்திரத்தைக் கடந்து இலங்கையின் அசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த அன்னை சீதையைக் கண்டு, அனைவரின் வாழ்வினையும் காத்து அருளினீர்கள் . இவ்வுலகில் சங்கடங்கள் வரும் பொழுது அதிலிருந்து மீட்க சங்கட மோசன ஹனுமந்தா  தங்களையன்றி வேறு யார் உளர்!! 

அசோகவனத்தில் சீதையை சிறை வைத்த ராவணன்,  அன்னையின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தினான். காவலுக்கு இருந்த ராக்ஷஸிகளிடம் தன் அருமை பெருமையை சீதையிடம் சொல்லி சம்மதிக்க வைத்து தன் சோகத்திற்கு விடுதலை அளிக்குமாறு கட்டளையிட்டிருந்தான். அதனால் அவர்கள் ராவணன் அளித்த துணிவுடன், அன்னைக்குச் சகலவிதத்திலும் துன்பம் அளிக்க தொடங்கினர். அச்சமயத்தில் ராமதூதனாக தோன்றி அனைவருக்கும் பெருத்த சேதத்தை  விளைவித்தாய். சீதா தேவி மிகுந்த மன வேதனையுடன் அசோகமரத்தினிடம் அக்னியை தந்து தன்னை ஆட்கொள்ளுமாறு வேண்டிய தருணத்தில் மனமகிழ்ச்சியை அளிக்கும் தாரக மந்திரமான பிராட்டியின் பிராண நாதனின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டே தோன்றி, ஸ்ரீராமனின் கணையாழியைத் தந்து அன்னையின் சோகத்தை நீக்கி மனமகிழ்ச்சியைத் தந்தாய். இவ்வுலகில் சங்கடங்கள் வரும் பொழுது அதிலிருந்து மீட்க சங்கட மோசனா ஹனுமந்தா  தங்களையன்றி வேறு யார் உளர்!! 

ஸ்ரீராம இராவண யுத்தத்தின் போது, இராவணனின் மைந்தனான இந்திரஜித் விடுத்த பாணம், இலக்குவனின் மார்பைத் தாக்கியதால், அவர் மூர்ச்சையடைந்து விழ, அதைக் கண்டு ஸ்ரீராமன் கோதண்டத்தை கீழே போட்டுவிட்டு லக்குவனை தன் தொடையில் தாங்கி அழ, வானர சேனையே ஸ்தம்பித்தது. உணர்வுகளின் தாக்கமான அந்தச் சூழ்நிலையிலும் மதி இழக்காமல், சமயோசிதமாகச் செயல்பட்டு, ஜாம்பவான் அளித்த வைத்திய ஆலோசனைப்படி துரோண பர்வதத்தில் உள்ள சஞ்சீவினி மலையையே பெயர்த்து எடுத்து வந்து, லக்ஷ்மணனின் உயிர் காத்த சிரஞ்சீவி ஆஞ்சநேயா, இவ்வுலகில் சங்கடங்கள் வரும் பொழுது அதிலிருந்து மீட்க சங்கட மோசன ஹனுமந்தா  தங்களையன்றி வேறு யார் உளர்!! 

இராவணன் நடத்திய மாயப்போரில், அவன்  விடுத்த நாகாஸ்திரம் எண்ணற்ற நாகங்களைக் கக்கியது. அவற்றின் விஷத்தின் தாக்கத்தால் ஸ்ரீராமன் உள்பட சகலரும் கட்டுண்டு மூர்ச்சையடைந்து வீழ்ந்தபோது, ராமசேனை செய்வதறியாது திகைத்து நின்றது. அத்தருணத்தில் ஞானகுண சாகரமான தாங்கள் கருடனை நோக்கி பிரார்த்திக்க‌, கருடனும் ஒடோடி வந்து தன் பிரபுவான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் மாய தளைக்கட்டுகளை உடைத்து எறிந்தார். யுத்தகளமே ஸ்ரீ ராம் ஜெய் ராம், ஜெய ஜெய ராம் என்று ஆர்ப்பரித்து எழுந்து நின்றது. இவ்வுலகில் சங்கடங்கள் வரும் பொழுது அதிலிருந்து மீட்க சங்கட மோசன ஹனுமந்தா    தங்களையன்றி வேறு யார் உளர்!

அஹிராவணன் (தமிழில் மயில் இராவணன்), ஸ்ரீராமன், லக்குவன் இருவரையும் மயக்கத்தில் ஆழ்த்தி, சிறையெடுத்துக் கொண்டு போய், பாதாளச் சிறையில் வைத்து, அவர்களைத் தான் வழிபடும் தேவிக்கு பலி கொடுத்து வரம் பெற நினைத்திருந்த போது, மனம், வாக்கு, செயலால்  தங்களைத் தியானிக்கும் பக்தர்களைத் தாங்கள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவித்து அருள்வது போல்,  ஸ்ரீராமன்  தங்களைத் தியானித்த மறுகணத்தில் அஹிராவணனின் சேனை மற்றும் மாயக்கோட்டையை அழித்து அஹிராவணனை ஸம்ஹரித்து ராம, லக்ஷ்மணரை விடுவித்த வானர வீரா ! இவ்வுலகில் சங்கடங்கள் வரும் பொழுது அதிலிருந்து மீட்க சங்கட மோசன ஹனுமந்தா   தங்களையன்றி வேறு யார் உளர் !

தேவர்களுக்காக மிக மிகப் பெரிதான சாதனைகளை புரிந்தவரே! வீராதி வீரா, மஹானுபாவா ! உங்களின் கருணாகடாக்ஷத்தை இந்த சிறிய பக்த‌னை அல்லல் படுத்தும் சங்கடங்களின் மீதும் காட்டி அருளுங்கள். இந்த பக்தனுக்கு நேர இருக்கும் அனைத்து அபாயங்களிலிருந்தும்  தூர விலக்கிக் காத்தருளுங்கள். இவ்வுலகில் சங்கடங்கள் வரும் பொழுது அதிலிருந்து மீட்க சங்கட மோசன ஹனுமந்தா  தங்களையன்றி வேறு யார் உளர்  !
 
திருமேனியெங்கும் செந்தூரம் பூசியவரே, 
நீண்ட வாலின் நுனியில் சிவப்பு மணி தாங்கியவரே, 
அசுரர்களை அழிக்கும் வஜ்ரம் போன்ற உடற்கட்டை உடையவரே, 
வானர வீரா உன் திருநாமத்திற்கு வணக்கம்.

2 comments:

Jobs said...

நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

Unknown said...

It is Excellent

Post a Comment