Saturday, April 6, 2013

Sankat Mochan Hanuman Aarti - சங்கடமோசன ஹனுமான் ஆரத்தி

Courtesy :- Google Images
श्री हनुमान जी की आरती
आरती कीजै हनुमान लला की ।
दुष्ट दलन रघुनाथ कला की ॥

जाके बल से गिरिवर काँपे, रोग दोष जाके निकट न झाँके।
अंजनि पुत्र महा बलदायी, संतन के प्रभु सदा सहायी॥
 
आरती कीजै हनुमान लला की ।
दे बीड़ा रघुनाथ पठाये, लंका जाय सिया सुधि लाये ।
लंका सौ कोटि समुद्र सी खाई, जात पवनसुत बार न लाई ॥ 
आरति कीजै हनुमान लला की ।
लंका जारि असुर संघारे, सिया रामजी के काज संवारे ।
लक्ष्मण मूर्छित पड़े सकारे, आन संजीवन प्राण उबारे ॥ 
आरती कीजै हनुमान लला की ।
पैठि पाताल तोड़ि यम कारे, अहिरावन की भुजा उखारे ।
बाँये भुजा असुरदल मारे, दाहिने भुजा संत जन तारे ॥ 
आरति कीजै हनुमान लला की ।
सुर नर मुनि जन आरति उतारे, जय जय जय हनुमान उचारे ।
कंचन थार कपूर लौ छाई, आरती करती अंजना माई ॥ 
आरती कीजै हनुमान लला की ।
जो हनुमान जी की आरति गावे, बसि वैकुण्ठ परम पद पावे ।
आरती कीजै हनुमान लला की। दुष्ट दलन रघुनाथ कला की ॥

ஸ்ரீ ஹனுமான ஜீ கீ ஆரதீ

ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ | 
து³ஷ்ட த³லன ரகு⁴னாத² கலா கீ || 

வாருங்கள். எல்லோரும் நமக்குப் பிரியமான ஸ்ரீஹனுமானுக்கு ஆர‌த்தி செய்வோம். அவர் துஷ்டர்களை அழிப்பவர். ரவிகுல திலகமான ஸ்ரீராமனின் அங்கம் போன்றவர்.

ஜாகே ப³ல் ஸே கி³ரிவர காம்பே, ரோக்³ தோ³ஷ் ஜாகே நிகட ந ஜா²ங்கே | 
அஞ்ஜனி புத்ர மஹா ப³லதா³யீ, ஸந்தன கே ப்ரபு⁴ ஸதா³ ஸஹாயீ || 
....... ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ |

அவரின் (ஸ்ரீஹனுமானின்) வலிமையைக் கண்டு மிகப்பெரிய மலைகளும் நடுங்கும்.  ரோகங்கள் (பிணி), தோஷங்கள் அவரை அண்டாது.  ஸ்ரீஹனுமான், பக்தர்களுக்குப் பெரும் பலத்தை அளித்து காப்பவர்.  சாதுக்கள், ரிஷி, முனிவர்களுக்கு எப்போதும் துணையாக இருந்து சேவை புரிபவர். மஹா பலவானும் அஞ்சனையின் மைந்தனுமான‌ ஸ்ரீஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.

தே³ பீஃ‌டா³ ரகு⁴னாத² படா²யே, லங்கா ஜாய ஸியா ஸுதி⁴ லாயே | 
லங்கா ஸௌ கோடி ஸமுத்³ர ஸீ கா²யீ, ஜாத பவனஸுத பா³ர ந லாயீ || 
...... ஆரதி கீஜை ஹனுமான லலா கீ |

சீதையைத் தேடி வருவதற்காக, ரகுநாதன் தேர்ந்தெடுத்தவர் ஸ்ரீஹ‌னுமானே. தென் திசையின் கோடியில் நின்று ராம நாம ஜபத்தின் மகிமையால் கண் இமைக்கும் நேரத்தில் சமுத்திரத்தை கடந்து, சீதையைக் கண்டறிந்த‌ நற்செய்தியைக் கொணர்ந்த வாயுபுத்ர ஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.
  
லங்கா ஜாரி அஸுர ஸங்கா⁴ரே, ஸியா ராமஜீ கே காஜ ஸம்ʼவாரே | 
லக்ஷ்மண மூர்சி²த பஃ‌டே³ ஸகாரே, ஆன ஸஞ்ஜீவன ப்ராண உபா³ரே ||  ......ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ | 

த‌ன் (ஸ்ரீஹனுமானின்) வாலில், இராவணன் வைத்த தீயால், இலங்கையை தகனம் செய்து, அசுரர்களை அழித்து, 'தன் வினை தன்னைச் சுடும்'  என்று பாடம் புகட்டியதோடு அல்லாமல், ஸ்ரீராமபிரானின் வலிமையையும் அசுர வேந்தன் அறியச் செய்த ராஜதந்திரர், போரில் இளவல் இலக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்து விழுந்த போது, சஞ்சீவீனி மலையை கொணர்ந்து அவர் ப்ராணனைக் காத்தவர். இத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.

பைடி² பாதால தோஃ‌டி³ யம காரே, அஹிராவன கீ பு⁴ஜா உகா²ரே | 
பா³ம் ̐யே பு⁴ஜா அஸுரத³ல மாரே, தா³ஹினே பு⁴ஜா ஸந்த ஜன தாரே || 
....... ஆரதி கீஜை ஹனுமான லலா கீ | 

பாதாளத்தில், யமபுரியிலிருக்கும் சிறையின் வாயிற்கதவுகளை நொறுக்கி, மயில் ராவணனின் கைகளை உடைத்து எறிந்தவர், தனது இடது  கரத்தால் அசுரர்களை அழிப்பவர், தனது வலது  கரத்தால் சாதுக்கள், ரிஷிகள், முனிவர்கள், தனது பக்தர்கள் ஆகியோரைக் காப்பவரான ஸ்ரீராமதூத  ஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.

ஸுர நர முனி ஜன ஆரதி உதாரே, ஜய ஜய ஜய ஹனுமான உசாரே |
கஞ்சன தா²ர கபூர லௌ சா²யீ, ஆரதீ கரதீ அஞ்ஜனா மாயீ ||  
..........ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ | 

தங்க ஆரத்தித் தட்டின் நடுவில் கற்பூர தீபம் ஊஞ்சலாட, அன்னை அஞ்சனா உனக்குச் செய்யும் ஆரத்தியின் அழகைக் காண  தேவர், முனிவர், பக்தர்கள் என்று அனைவரும் கூடி நின்று உன் புகழைப் பாடுகின்றனர்.  "ஜெய் ஜெய் ஜெய் அனுமான்" என்று  அவர்கள் எழுப்பும் நாமகோஷம் எங்கும் நிறைந்து ஒலிக்க, அஞ்சனையின் மைந்தன் ஹ‌னுமானுக்கு நாமும் ஆரத்தி செய்வோம். 

 ஜோ ஹனுமான ஜீ கீ ஆரதி கா³வே, ப³ஸி வைகுண்ட² பரம பத³ பாவே | 
ஆரதீ கீஜை ஹனுமான லலா கீ |  து³ஷ்ட த³லன ரகு⁴னாத² கலா கீ || 

ஹனுமானுக்கு ஆரத்தி செய்பவர்கள், ஸ்ரீராமபிரானாக அவதரித்த ஸ்ரீமந் மஹாவிஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தை அடைந்து மோட்சம் பெறுவர். ஆகவே, வாழ்வின் நற்பேற்றை அளிக்கும் ஸ்ரீஹ‌னுமானுக்கு ஆரத்தி செய்வோம்.

No comments:

Post a Comment