Tuesday, August 7, 2012

Tara Sakthi Stotra - தாரிணி சத நாம ஸ்தோத்ரம்

Devi Tara
तारा शक्ति स्तोत्र​
तारीणी तरला तन्वी तारा तरुण वल्लरी । तीर रुपा तरश्यामा तनुक्षीण पयोधरा ॥
तुरिया तरला तीव्र गमना नीलवाहिनी । उग्रतारा जया चण्डी श्रीमदेक जटाशिवा ॥
तरुणी शाम्भवी छिन्न्माला भद्रतारिणी । उग्रा चोग्रप्रभा नीला कृष्णा नील सरस्वती ॥
द्वितिया शोभिनी नित्य नवीना नित्य नूतना । चण्डिका विजयाराध्य देवी गगन वाहिनी ॥
अट्टहास्या करालास्या चरास्या दितिपूजिता । सगुणा सगुणाराध्या हरीन्द्र देव पूजिता ॥
रक्क्त प्रिया रक्ताक्षी रुधिरासवभूषिता । बलप्रिया बलिरता दुर्गा बलबती बला ॥
बलप्रिया बलरता बलराम प्रपूजिता ।  अर्ध्दकेशेश्‍वरी केशा केशवेश विभूषिता ॥
पद्ममाला च  पद्माक्षी  कामाख्या गिरिनन्दिता । दक्षिणा चैव दक्षा दक्षजा दक्षिणेतरा ॥
वज्रपुष्प प्रिया रक्तप्रिया कुसुमभूषिता । माहेश्‍वरी महादेवप्रिया पद्मविभूषिता ॥
इ‌‍ड़ा पिंगला चैव सुषुम्ना प्राणरुपिणी । गांधारी पंचमी पंचानना दि वरि पूजिता ॥
इत्येतत् कथितं देवि रहस्यं परमाद्रुतम्  । श्रुत्वा मोक्षमवाप्नोति तारादेव्याः प्रसादतः ॥
यः इदं पठति स्तोत्रं तारास्तुति रहस्यकम् । सर्वसिध्दि युतो भूत्वा विहरेत क्षितिमंडले ॥
तस्मैवं मंत्रसिध्दिः स्यान्मम सिध्दिरनुत्तमा । भवत्येवं महाभागे सत्यं सत्यं संशयः ॥
मन्दे म‍ड्गलवारे यः पठेन्निशि संयतः । तस्मैव मंत्रसिध्दिः स्मादगानयत्मं लभेत्तुसः ॥
श्रध्दया‌ऽनध्दया वापि पठेन्तारारहस्यकम् । अचिरनैव कालेन जीवन्मुक्तः शिवो भवेत ॥
सहस्रावर्त्तनाद्देवी पुरश्‍चर्या फ़लं लभेत । एवं सतत युक्ता ये ध्यायन्तस्त्वामुपासते 

தாரா ஸ²க்தி ஸ்தோத்ர​

தாரீணீ தரலா தன்வீ தாரா தருண வல்லரீ |
 
White Tara
தீர ருபா தரஸ்²யாமா தனுக்ஷீண பயோத⁴ரா ||

துரியா தரலா தீவ்ர க³மனா நீலவாஹினீ |

உக்³ரதாரா ஜயா சண்டீ³ ஸ்ரீமதே³க ஜடாஸி²வா ||

தருணீ ஸா²ம்ப⁴வீ சி²ன்ன்மாலா ச ப⁴த்³ரதாரிணீ |

உக்³ரா சோக்³ரப்ரபா⁴ நீலா க்ருʼஷ்ணா நீல ஸரஸ்வதீ ||

த்³விதியா ஸோ²பி⁴னீ நித்ய நவீனா நித்ய நூதனா |

சண்டி³கா விஜயாராத்⁴ய தே³வீ க³க³ன வாஹினீ ||

அட்டஹாஸ்யா கராலாஸ்யா சராஸ்யா தி³திபூஜிதா |

ஸகு³ணா ஸகு³ணாராத்⁴யா ஹரீந்த்³ர தே³வ பூஜிதா ||

ரக்த ப்ரியா ச ரக்தாக்ஷீ ருதி⁴ராஸவபூ⁴ஷிதா |

ப³லப்ரியா ப³லிரதா து³ர்கா³ ப³லப³தீ ப³லா ||

ப³லப்ரியா ப³லரதா ப³லராம ப்ரபூஜிதா |

அர்த்⁴த³கேஸே²ஸ்²வரீ கேஸா² கேஸ²வேஸ² விபூ⁴ஷிதா ||

பத்³மமாலா ச பத்³மாக்ஷீ காமாக்²யா கி³ரினந்தி³தா |

த³க்ஷிணா சைவ த³க்ஷா ச த³க்ஷஜா த³க்ஷிணேதரா ||

வஜ்ரபுஷ்ப ப்ரியா ரக்தப்ரியா குஸுமபூ⁴ஷிதா |

மாஹேஸ்²வரீ மஹாதே³வப்ரியா பத்³மவிபூ⁴ஷிதா ||

இ‌ஃ‌டா³ ச பிங்க³லா சைவ ஸுஷும்னா ப்ராணரூபிணீ |

கா³ந்தா⁴ரீ பஞ்சமீ பஞ்சானனா தி³ வரி பூஜிதா ||

இத்யேதத் கதி²தம்ʼ தே³வி ரஹஸ்யம்ʼ பரமாத்³ருதம்  |

ஸ்²ருத்வா மோக்ஷமவாப்னோதி தாராதே³வ்யா​: ப்ரஸாத³த​: ||

ய​: இத³ம்ʼ பட²தி ஸ்தோத்ரம்ʼ தாராஸ்துதி ரஹஸ்யகம் |

ஸர்வஸித்⁴தி³ யுதோ பூ⁴த்வா விஹரேத க்ஷிதிமண்ட³லே ||

தஸ்மைவம்ʼ மந்த்ரஸித்⁴தி³​: ஸ்யான்மம ஸித்⁴தி³ரனுத்தமா |

ப⁴வத்யேவம்ʼ மஹாபா⁴கே³ ஸத்யம்ʼ ஸத்யம்ʼ ந ஸம்ʼஸ²ய​: ||

மந்தே³ மட்³க³லவாரே ச ய​: படே²ன்னிஸி² ஸம்ʼயத​: |

தஸ்மைவ மந்த்ரஸித்⁴தி³​: ஸ்மாத³கா³னயத்மம்ʼ லபே⁴த்துஸ​: ||

ஸ்²ரத்⁴த³யா‌(அ)நத்⁴த³யா வாபி படே²ந்தாராரஹஸ்யகம்  |

அசிரனைவ காலேன ஜீவன்முக்த​: ஸி²வோ ப⁴வேத ||

ஸஹஸ்ராவர்த்தனாத்³தே³வீ புரஸ்²சர்யா ஃபலம் லபே⁴த |

ஏவம்ʼ ஸதத யுக்தா யே த்⁴யாயந்தஸ்த்வாமுபாஸதே ||


வாழ்க்கையில் அதி அற்புத உன்னத நிலையை அடைய விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவது தாரா தேவி வழிபாடு.  ஞானத்தை அருளும் அன்னையின்  உக்ர ஸ்வரூப வெளிப்பாடே தாரா தேவி.

அகால மரணத்தையும், கெட்ட நிகழ்வுகளையும் விலக்கி, புத்தி, ஞானம், சக்தி, வலிமை, வெற்றி, பூர்ணத்துவம் பெற தாரா தேவியின் அருள் நிச்சயம் தேவை. அளவில்லாத செல்வ செழிப்பையும், அதிசயத்தக்க வியாபார விருத்தியையும் அருளுவதில் தாரா தேவி வழிபாடு மிக முக்கியமானது.

முண்டமாலா தந்திரம் என்னும் நூலிலிருந்து  எடுக்கப்பட்ட இந்த தாரிணி சத நாம ஸ்தோத்ரம், தேவியின் பலவித ரூபங்களின் பெருமைகளை உரையாடலாக (சம்வாதம்) விவரணம் செய்யும் வடிவில் பாடலாக இடம் பெற்றுள்ளது.

பகவதி தேவி தாரா, தன்னுடைய பக்தர்கள் பிறவிப் பெருங்கடலை (பவசாகரம்) கடக்க உதவுபவள்,  (சஞ்சலா) அழகிய கண்களை (நய‌னங்களை) உடையவள், எப்பொழுதும் இளமை நிரம்பிய தோற்றமுடையவள், அனைத்துயிர்க்கும் உதவுபவள், சௌம்யத்தை கொண்டவள், நறுமணம் வீசும் திருமேனியைக் கொண்டவள்.  பகவதி தேவியம்மையாகிய  தாரா ! உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

(மோக்ஷ ஸ்வரூபா) முக்தியின் வடிவானவளே, (கதிமயி ) யாவருக்கும் கதியாக விளங்கும் தாயே, (ஸர்வத்ர கமனஷீலா), நீல நிறக் கண்களை உடையவளே, வானத்தில் ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போல நிலையான வெற்றியை அளிப்பவளே, (குரோத ஸ்வரூபா) (பகைவருக்கு) கோபம் நிரம்பியவளாகக் காட்சியளிப்பவளே, உன்னை நினைத்துத் துதித்த‌ கணத்தில் நன்மை அளிப்பவளே,   பகவதி தேவியம்மே தாரா ! உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

நிறைந்த யௌவனத்தையுடையவள், சிவ ஸ்வரூபமாக விளங்குபவள், சத்ருகளின் (எதிரிகளின்) ஆணவத்தை அடக்குபவள், சுகமான வாழ்க்கைப் பாதையில் தனது பக்தர்களை அழைத்துச் செல்பவள், உக்ரமானவள், தீப்த யுக்த, பகவான் ஸ்ரீகிருஷ்ணரை போன்று அடர்ந்த நீல நிற தேகத்தை கொண்டதால் நீல சரஸ்வதி என அழைக்கப்படுபவள்,  பகவதி தேவியம்மே தாரா !  உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

(அத்யந்த ஷோபாமயி) சோபையுடன் திகழ்பவளே, (நித்ய நவீனா) நித்தமும் புது வடிவத்தில் தோற்றம் அளிப்பவளே!  எதிரிகளுக்கு பயத்தை அளிக்கும் ரூபம் கொண்டவள் (சத்ரு பய ஸ்வரூபா), பக்தர்களுக்கு வெற்றியை அளிப்பவளே (விஜயப் ப்ரதாயினி), வானமண்டலத்தில் சஞ்சரிப்பவள்,  பகவதி தேவியம்மே தாரா !  உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

சத்ருக்களை நடுநடுங்க வைக்கும் கர்ஜனை செய்பவள் (பயங்கர் கர்ஜினி), எதிரிகளுக்கு பயத்தை அளிக்கும் முகத்தை உடையவள் (பயாவஹ் முஹ் வாலீ), அனைத்து ஜீவராசிகளும் மற்றும் தேவர்களும் பூஜிக்கும் குணவதி (ஜீவ் பூஜிதா, தேவ் பூஜிதா, குணவதி), அனைத்து உயிரினங்களும் ஆராதிக்கும் தேவி (ஜீவ ஆராதித்ய தேவினி), விஷ்ணு, இந்திரன் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களாலும் போற்றி பூஜிக்கப்படுபவள் (விஷ்ணு பூஜிதா, இந்திர பூஜிதா, தேவ பூஜிதா),  பகவதி தேவியம்மே தாரா!  உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

எதிரிகளின் குருதியை பானம் செய்பவள்.  கோபாக்னியில் சிவந்த கண்களை கொண்டவள், உதிரம், மாமிச பலியை விரும்பி ஏற்பவள், சத்ருக்களை பலியாகக் கொள்பவள், துர்க்கா ஸ்வரூபிணி, பலம் மற்றும் அனேக கலைகளையும் உள்ளடக்கிய பகவதி தேவியம்மே தாரா ! உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

தன்னைப் பூஜிப்பவர்களுக்கு அளவில்லாத நன்மைகளை அளித்திடுபவள், பக்தருக்கு நன்மை தரும் செயல்களைச் செய்பவள், பலராமரால் பூஜிக்கப்பட்டவள் (பலராம பூஜிதா), அழகிய கூந்தலோடு கூடிய முகத் தோற்றத்தை உடையவள்,  பகவதி தேவியம்மே தாரா!  உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

தாமரை மலர்களாலான  மாலையை அணிந்தவள், தாமரை மலர்களை ஒத்த அழகிய  விழிமலர்களை  உடையவள், காமாக்யா என்னும்  திருநாமம் கொண்டவள், மலைகளின் மீது ஒய்வு கொள்பவள்,  தன்னை ஆராதிப்பவர்களுக்கு அளவில்லாத பெருஞ்செல்வத்தை அளிப்பவள், ஒப்புவமையில்லாத   புத்தி சூட்சுமத்தைக் கொண்டவள்,  பகவதி தேவியம்மே தாரா!  உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

வஜ்ரத்தை போல வலிமையான தேகத்தைக் கொண்ட‌வரான சிவபெருமானின் மீது மையல் கொள்பவள், தனது தாகத்தை எதிரிகளின் ரத்தத்தால் தணிப்பவள், நறுமணம் வீசும் மலர்களால் தன்னை அலங்கரிப்பதில் பிரியமுடையவள். சிவ ஸ்வரூபிணி, பகவான் சிவபெருமானின் ப்ரியத்திற்கு உரியவள், பக்தர்களுக்கு பெரும் செல்வத்தை  அளிப்பதால் லக்ஷ்மீ ஸ்வரூபமாகவும் திகழ்பவள், இத்தகைய மகிமையுடைய‌ பகவதி தேவியம்மே தாரா!  உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

இடா, பிங்கலா மற்றும் சூக்ஷ்மணா (சுழிமுனை) நாடிகளுக்கு பிராணனை அளிப்பவள்,  அஷ்டகந்த நறுமணத்தால் நிறைந்த பஞ்ச பூத ஸ்வரூபிணி, சிம்ம வாகனத்தில் பவனி வரும் தேவி,  தசமஹாவித்யா தேவியரில் அத்யந்த உக்ரத்தையும், தேஜஸையும் கொண்டவள்.  பகவதி தேவியம்மே தாரா !  உனக்கு எனது அளவில்லாத நமஸ்காரம்.

பகவதி தாரா தேவியின் ரகசிய மயமான இந்த சரித்திரத்தை கேட்பவர்கள் பகவதி தாரா தேவியின் கிருபா கடாக்ஷம் கிடைக்கப் பெற்று மோக்ஷப்பிராப்தியை அடைவார்கள்.

பகவதி தாரா தேவியின் ரகசியமயமான இந்த ஸ்தோத்ரத்தை யார் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் செவிமடுக்கிறார்களோ அவர்களுக்கு சகலவிதமான சித்திகளும் கிடைக்கப் பெற்று இப்பூவுலகில் வளத்தோடும், பரிபூர்ண திருப்தியோடும் வாழ்வர்.

சனி மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு நேரங்களில் நீராடி, அந்தரங்க சுத்தியோடு இந்த ஸ்தோத்ரத்தை ஜபிப்பதால், மந்த்ர சித்தி அமையப்பெறும். நம்பிக்கையோடும், பக்தியோடும் சிரத்தையாக இந்த ஸ்தோத்ரத்தை நித்யமும் பாராயணம் செய்பவர் ஜீவன் முக்தியை அருளும் சிவபெருமானின் கிருபையினால் சிவ ஸ்வ‌ரூபத்தை(சாரூபம்) விரைவில் அடைவர். இந்த ஸ்தோத்ரத்திற்கு புரச்சரணம் செய்து பாராயணம் செய்பவர் சிவஸ்வரூபமாகவே வாழ்ந்து முக்தியை எட்டுவர்.

பூஜைகளிலே தாரா சக்தி தேவியின்  பூஜை மிகவும் சர்வசக்தி  வாய்ந்தது. தாரா சத நாம ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு நாமமும்  வியாகரணத்தின் மூல எழுத்தாக (மூல பீஜம்) இதிகாச நிகழ்வுகளின் அறிவினை அளிக்கும் சக்தி வாய்ந்தது. தாரா தேவி  தன்னைப் பூஜிப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைபவள். ஆகையால் இந்த ஸ்தோத்ர பாராயணமும், தாரா சக்தி தேவி பூஜையும், சக்தி வழிபாடு செய்யும் அனைவரும் (சாக்தர்கள்) கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

செவ்வாய்க்கிழமையிலிருந்து தொடங்கியோ அல்லது அஷ்டமி திதியிலிருந்து ஆரம்பித்தோ 11 நாட்கள் தினமும் 5 முறை சிரத்தையாக ஜபித்தால் ஸ்தோத்ர சித்தி கிடைக்கப் பெறும்.

தாரா தேவி ஸ்தோத்ரம் அனைவரும் பாராயணம் செய்யக்கூடிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக க்ருஹஸ்தர்கள் நிச்சயமாக பாராயணம் செய்தால், தாரா தேவியின் கிருபையினால், வாழ்க்கையில் வினைப்பயனால்  ஏற்படும் இன்னல்கள், துன்பங்கள், தோல்விகள் யாவற்றிலிருந்தும் மீண்டு வெற்றிகரமாகவும் வளமாகவும் வாழலாம்.

இந்த ஸ்தோத்ரத்தை சிரத்தையாக ஜபித்து, தீவிர சாதகர்கள் சிலர், தாரா தேவியை பிரத்யட்சமாக நேரில் காணும் (பிம்பவத் ரூப தர்சன்) பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர்.

அம்பிகையை நித்தமும் போற்றிடும் சாக்தர்கள் அனைவரும், இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, தாராதேவியின் அருட்கடாக்ஷத்தால், வேண்டும் வளங்களையும் நலங்களையும்  பெற்றுயர்ந்திட‌ தேவியைப் பிரார்த்திக்கிறேன்.

2 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

மிக அற்புதமான ஸ்தோத்திரப் பதிவு. அம்பிகையின் அபூர்வப் படங்களும் மிக அருமை. மிக்க நன்றி.

kshetrayatraa said...

நன்றி சகோதரி. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Post a Comment