Friday, August 3, 2012

Sri Raghavendra Swamy Aradhana - ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆராதனை

ஹரி சர்வோத்தம வாயு ஜீவோத்தம


பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை இவ்வருடம் ஆகஸ்ட் 3, 4 மற்றும் 5 ம் தேதியில் கொண்டாடுப்படுகிறது.

ஆகஸ்ட் 3 - வெள்ளிக்கிழமை - பூர்வ ஆராதனை
ஆகஸ்ட் 4 - சனிக்கிழமை - மத்திய ஆராதனை
ஆகஸ்ட் 5 - ஞாயிற்றுக்கிழமை - உத்தர ஆராதனை

ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை, பக்தர்களால் இந்தியாவிலும் மற்றும் வெளி நாட்டிலும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடங்கள், மிருத்திகா ப்ருந்தாவனம் உள்ள இடங்களில் வசிக்கும் பக்தர்கள் ஆராதனையில் கலந்து கொள்வதோடு முடிந்த மட்டும் ராகவேந்திர சுவாமிகளுக்கு சேவை (SEVA) செய்வதும் குரு ராஜரின் அனுபூதியையும் அருளாசிகளையும் பெற்றுத்தரும்.  ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சேவை பற்றி மேல் விவரம் அறிய இங்கு சொடுக்கவும்.

மேல் குறிப்பிட்ட லிங்க்-ல் சாஸ்த்ரோக்தமாக குரு ராயருக்கு சேவை செய்வது எப்படி என்று விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அப்படி செய்ய இயலாதவர்களுக்காக சில எளிய சேவை முறைகளும் கூறப்பட்டுள்ளது.  நம்பிக்கையுடனும், பக்தியுடனும், மிக்க சிரத்தையுடனும் அவற்றை பின்பற்றினால் குரு ராயரின் அன்புக்கு பாத்திரமாவது நிச்சயம்.

1. ஆசனத்தில் நிலையாக அமர்ந்து ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்தோத்ரத்தை 108 முறை படிப்பது
2. எங்கெல்லாம் ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளதோ அங்கு சென்று பிருந்தாவனத்திற்கு அடிமேல் அடி வைத்து அடிப்பிரதட்சிணம் செய்தல். ஒவ்வொரு பிரதட்சிணத்தின் முடிவிலும் குருராயருக்கு நமஸ்காரம் செய்தல்.
3. உருளு சேவை அதாவது அங்க பிரதட்சிணம். பிருந்தாவனத்தை சுற்றி அங்கப்ரதட்சணம் செய்தல். இது ஆடவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
4. குரு ராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டே ஸ்ரீகுரு ராகவேந்திர ஸ்தோத்ரத்தை 108 முறை ஜபிப்பது.
5. மத்வ பக்தி இலக்கியங்களை படிப்பது...சுதா, பரிமளா, ஸ்ரீமத்வ விஜயம், ஸ்ரீராகவேந்திர விஜயம் போன்றவை அவற்றில் சில.

ஸ்தோத்ர பதிவில் ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்தோத்ரமும், ஸ்ரீ ராகவேந்திர மங்களாஷ்டகமும் உள்ளது. அவற்றிற்கான லிங்க்


ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை தினத்தில் குரு ராயருக்கு நம்மால் இயன்ற அளவிற்கு சேவையை அர்ப்பணித்து அவரின் அருளாசி பெற்று வாழ்வில் பூரண நலமோடும், வளமோடும் வாழ்வோம்.

ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ

No comments:

Post a Comment