Tuesday, June 19, 2012

Sri Angaraka Kavacham - ஸ்ரீ அங்காரக கவசம்

ஸ்ரீ அங்காரக கவசம்
(அங்காரக கவசம் மற்றும் ஸ்தோத்ரம் முதலியவற்றை படிப்பதால் குல தெய்வத்தின் கோபம், பங்காளிகளின் கோபம், வேலையாட்களின் மனஸ்தாபம், ரக்த தோஷம் முதலியவைகள் விலகும். பூமி, வீடு, பொருள், வியாபார லாபம், உத்யோக லாபம் முதலியவைகள் கிடைக்கும். கடன் நிச்சயம் நீங்கும். இந்த ஸ்தோத்ரத்தின் விளக்கவுரையில் கடனில் விடுபட பூஜை முறைகள் கூறப்பட்டிருப்பதை அறியலாம்.)

ஓம் அஸ்ய ஸ்ரீ அங்காரக கவச மஹா மந்த்ரஸ்ய விரூபாக்ஷ ருஷி: | அனுஷ்டுப் சந்த: | அங்காரகோ தேவதா | அம் பீஜம் | ஸம் சக்தி: | ரம் கீலகம் | மம அங்காரக ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே வினியோக:

ந்யாஸம்
ஆம் அங்குஷ்டாப்யாம் நம: | ஈம் தர்ஜனீப்யாம் நம | ஊம் மத்யமாப்யாம் நம: | ஐம் அநாமிகாப்யாம் நம: | ஒளம் கனிஷ்டிகாப்யாம் நம: | அ: கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம: |
ஆம் ஹ்ருதயாய நம: | ஈம் ஸிரஸே ஸ்வாஹா | ஊம் ஸிகாயை வஷட்: | ஐம் கவசாய ஹூம் | ஒளம் நேத்ரத்ரத்ரயாய வௌஷட்  | அ: அஸ்த்ராய பட் | பூர்ப்புவஸ்ஸூவரோமிதி திக்பந்த: |

த்யானம்
நமாம்யங்காரகம் தேவம் ரக்தாங்கம் வரபூஷணம்
சதுர்புஜம் மேஷ வாஹம் வரதம் ச வராக்ருதிம்
ஸக்திஸூல கதா ஹஸ்தம் ஜ்வாலாபுஞ்ஜோர்த்வ கேஸகம்
மேரும் ப்ரதக்ஷிணம் யாந்தம் ஸர்வதைவேஷ்ட ஸித்திதம்

(இங்கு லமித்யாதி மானஸ பூஜை செய்ய வேண்டும்)

கவசம்
அங்காரக: ஸிரோ ரக்ஷேத் முகம் வை தரணீஸூத:
கர்ணெள ரக்தாம்பா பாது நேத்ரே மே ரக்தலோசன:
நாஸிகாம் மே ஸக்திதர: கண்டம் மே பாது பௌமக:
ரக்தமாலீ புஜௌ பாது ஹஸ்தம் ஸூலதரஸ்ததா
சதுர்புஜோ மே ஹ்ருதயம் குக்ஷிரோகாபஹாரக:
கடிம் மே பூஸூத: பாது பாதௌ பௌமஸ்ஸதா மம
ஸர்வாணி யானி சாங்கானி ரக்ஷேத் மே மேஷ வாஹன:

(இங்கும் ந்யாஸம் செய்ய வேண்டும்)

ய இதம் கவசம் நித்யம் ஸர்வசத்ரு வினாஸனம்
பூத ப்ரேதபிஸாசானாம் நாஸனம் ஸர்வ ஸித்திதம்
ஸர்வரோகஹரம் சைவ ஸர்வஸம்பத்ப்ரதம் ஸூபம்
புக்திமுக்தி ப்ரதம் ந்ரூணாம் ஸர்வஸௌபாக்ய வர்த்தனம்
ருண பந்தஹரம் நித்யம் படேச்ச்ரத்தா ஸமன்வித:
அங்காரக ப்ரஸாதேன ஸகாமான் லபதே த்ருவம்
ஸ்தோத்ர பாடம் ஸங்குர்யாத் தேவஸ்யாக்ரே ஸமாஹித
ரக்தகந்தாக்ஷதை: புஷ்பை: தூபதீப குலோதனை:
மங்களம் பூஜயித்வாது மங்களாஹனி பக்தித:
ப்ராம்மணாள் போஜயேத் பஸ்சாத் சதுரோத்வாத சாதவா
அனேன விதினா யஸ்து ஸர்வ ஸம்பத் ப்ரதாயகம்
வ்ரதம் ததேதத்குர்வீத ஸப்தவாரேஷ்வதந்த்ரித:
தஸ்ய ஸஸ்த்ராண்யுத்பலானி வன்ஹிஸ்யாத் சந்த்ரஸீதள:
ந சைவ வ்யதயந்த்யேனம் ம்ருகபக்ஷிக ஜாதய:
மஹாந்ததமஸே ப்ராப்தே மார்த்தாண்டஸ்யோதயா திவ
விலயம் யாந்தி பாபானி ஸதஜன்மார்ஜிதானி வை.

அங்காரக கவசத்தின் அர்த்தம் 
தேவரும், சிவந்த அங்கங்களை உடையவரும், சிறந்த ஆபரணங்களை தரித்தவரும், நான்கு கைகளை உடையவரும், ஆட்டை வாகனமாகக் கொண்டவரும், வரங்களை அளிப்பவரும், சிறந்த சரீரத்தை உடையவரும், சக்தி, சூலம், கதை இவைகளைக் கையில் கொண்டவரும்,  அக்னியின் ஜ்வாலை போன்ற சிகையை உடையவரும், மேரு மலையை ப்ரதக்ஷிணமாகச் சுற்றுகிறவரும், எல்லா தெய்வங்களுக்கும் இஷ்ட சித்தியை அளிப்பவரும் ஆன அங்காரகரை நமஸ்கரிக்கிறேன்.

(அங்காரகனின் பல பெயர்களைக் கூறி தன் அங்கங்களை காக்கும்படி வேண்டுவது)

அங்காரகன் தலையையும், பூமி புத்திரன் முகத்தையும், சிவப்பு வஸ்திரமணிந்தவன் காதுகளையும், சிவந்த கண்களை உடையவன் என் கண்களையும், சக்தி ஆயுதத்தை தரிப்பவன் மூக்கையும், பூமியின் மைந்தன் என் கழுத்தையும், சிவப்பு மாலை தரிப்பவன் கைகளையும்,  அவ்வாறே, சூலத்தை வைத்திருப்பவர் (ன்) கரதலத்தையும், நான்கு கைகளை உடையவன் ஹ்ருதயத்தையும், ரோகத்தைப் போக்குகிறவர் வயிற்றையும், பூமியின் புத்திரன் என் இடுப்பையும், பௌமன் எப்பொழுதும் என் கால்களையும், மேஷ வாகனன் என் எல்லா அங்கங்களையும் ரக்ஷிக்க வேண்டும்.

இக்கவசமானது எல்லா சத்ருக்களையும் நாசம் செய்யும். பூதங்கள், ப்ரேதங்கள், பிசாசுகள் இவைகளை நசிக்கச் செய்யும். எல்லா ஸித்திகளையும் அளிக்கும். எல்லா ரோகங்களையும் போக்க வல்லது. எல்லா ஸம்பத்துக்களையும் அளிக்கும். சுபமானது. போகம், மோக்ஷம் இவைகளை அளிக்கும். மனிதர்களுக்கு எல்லா சௌபாக்யங்களையும் வளர்க்கும். கடனைப் போக்கும்.

எவன் சிரத்தையுடன் கூட இக்கவசத்தை தினந்தோறும் படிக்கிறானோ, அவன் ஸ்ரீ அங்காரகனுடைய ப்ரஸாதத்தால் எல்லா விருப்பங்களையும் அடைகிறான். நிச்சயம் செவ்வாய்க் கிழமையன்று, சிவப்பான சந்தனம், அக்ஷதை, புஷ்பங்கள், தூபம், தீபம், சர்க்கரைப் பொங்கல் இவைகளைக் கொண்டு பக்தியுடன் ஸ்ரீ அங்காரகனை பூஜை செய்து, அந்த தேவனின் முன்னிலையிலேயே இக்கவசத்தை ஒருமைப்பட்ட மனமுள்ளவனாய் படிக்க வேண்டும். பிறகு பிராமண போஜனம் செய்விக்க வேண்டும்.

இம்முறைப்படி ஏழு வாரங்களில் சோம்பலற்றவனாய் எல்லா சம்பத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை எவன் செய்கிறானோ, அவனை எதிர்க்கும் ஆயுதங்கள், நீலோத்பல புஷ்பங்களாகவும், நெருப்பு, சந்திரன் போல் குளிர்ச்சியாகவும் ஆகும். இந்த ஸ்தோத்திரம் பாராயணம் செய்பவனை மிருகங்கள், பக்ஷிகள், யானை முதலியவைகள் துன்புறுத்துவதில்லை. மிக மிக இருட்டு கூடியிருந்தபோதிலும், சூரியனின் உதயத்தால் அது
விலகுவது போல் நூறு ஜன்மங்களில் சேர்ந்த பாபங்களாயினும் ஸ்தோத்திர பாராயணத்தால் நாசத்தை அடைகின்றன.

பதிவில் உள்ள இதர அங்காரக ஸ்தோத்ரம்
ருண விமோசன மங்கள ஸ்தோத்ரம்  - லிங்க் Click here

3 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

செவ்வாயன்று வந்த செம்மையான பதிவு.
மிக அருமையான ஸ்லோகம் தந்தமைக்கு நன்றி.

kshetrayatraa said...

சகோதரியின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Unknown said...

Sirappu

Post a Comment