Sunday, June 17, 2012

Mantratmaha Sri Maruthi Stotra


मन्त्रात्मकं श्रीमारुतिस्तोत्रं
नमो वायुपुत्राय भीमरूपाय धीमते                    |
मस्ते रामदूताय कामरूपाय श्रीमते           | १ |
मोहशोकविनाशाय सीताशोकविनाशिने                |
ग्नाशोकवनायास्तु दग्धलङ्काय वाग्मिने               | २ |
तिनिर्जितवाताय लक्ष्मण प्राणदाय च                 |
नौकसां वरिष्ठाय वशिने वनवासिने                     | ३ |
त्त्वज्ञान सुधासिन्धुनिमग्नाय महीयसे                  |
 आञ्जनेयाय शूराय सुग्रीवसचिवाय ते                 | ४ |
न्ममृत्युभयघ्नाय सर्वक्लेशहराय च                    |
नेदिष्ठाय प्रेतभूतपिशाचभयहारिणे                         | ५ |
यातनानाशनायास्तु नमो मर्कटरूपिणे                 |
क्षराक्षसशार्दूलसर्पवृश्चिक भीह्रते                | ६ |
हाबलाय वीराय चिरंजीविन उद्धते                   |
हारिणे वज्रदेहाय चोल्लङ्घितमहाब्धये               | ७ |
लिनामग्रगण्याय नमो नः पाहि मारुते               |
लाभदोSसि त्वमेवाशु हनुमन् राक्षसान्तक         | ८ |
शो जयं च मे देहि शत्रून् नाशय नाशय                |
स्वाश्रितानामभयदं य एवं स्तौति मारुतिम्              |
हानिः कुतो भवेत्तस्य सर्वत्र विजयी भवेत्        | ९ |
|| इति श्री ह्रत्पुन्दरिकाधिष्ठितश्रीमत्परमहंसपरिव्राजकाचार्य 
श्रीवासुदेवानंदसरस्वतीकृतं मन्त्रात्मकं श्रीमारुतिस्तोत्रं संपूर्णं ||

மந்த்ராத்மகம் ஸ்ரீமாருதி ஸ்தோத்ரம் 
ம் நமோ வாயுபுத்ராய பீமரூபாய தீமதே I
நமஸ்தே ராமதூ³தாய காமரூபாய ஸ்ரீமதே II 1 II
மோஹஸோ²கவினாஸா²ய ஸீதாஸோ²கவினாஸி²னே I
பக்³னாஸோ²கவனாயாஸ்து த³க்³தலங்காய வாக்³மினே II 2 II
க³தினிர்ஜிதவாதாய லக்ஷ்மண ப்ராணதா³ய ச I
வனௌகஸாம் வரிஷ்டா²ய வஸி²னே வனவாஸினே II 3 II
தத்த்வஜ்ஞான ஸுதாஸிந்துனிமக்³னாய மஹீயஸே I
ஆஞ்ஜனேயாய ஸூ²ராய ஸுக்³ரீவஸசிவாய தே II 4 II
ஜன்மம்ருத்யுபயக்னாய ஸர்வக்லேஸ²ஹராய ச I
நேதி³ஷ்டா²ய ப்ரேதபூதபிஸா²சபயஹாரிணே II 5 II
யாதனானாஸ²னாயாஸ்து நமோ மர்கடரூபிணே I
யக்ஷராக்ஷஸஸா²ர்தூ³லஸர்பவ்ருஸ்²சிக பீஹ்ரதே II 6 II
மஹாப³லாய வீராய சிரஞ்ஜீவின உத்³ததே I
ஹாரிணே வஜ்ரதே³ஹாய சோல்லங்கிதமஹாப்³தயே II 7 II
ப³லினாமக்³ரக³ண்யாய நமோ ந​: பாஹி மாருதே I
லாபதோ³Sஸி த்வமேவாஸு² ஹனுமன் ராக்ஷஸாந்தக II 8 II
யஸோ² ஜயம் ச மே தே³ஹி ஸ²த்ரூன் நாஸ²ய நாஸ²ய I
ஸ்வாஸ்²ரிதானாமபயத³ம் ய ஏவம் ஸ்தௌதி மாருதிம் I
ஹானி​: குதோ பவேத்தஸ்ய ஸர்வத்ர விஜயீ பவேத் II 9 II

II இதி ஸ்ரீ ஹ்ரத்புந்த³ரிகாதிஷ்டி²த ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய
ஸ்ரீவாஸுதே³வானந்த³ ஸரஸ்வதீ க்ருதம் மந்த்ராத்மகம்
ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் II

அழகான மந்த்ரபூர்வமான இந்த மாருதி ஸ்தோத்ரம் ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸ்ரீவாஸூதேவானந்த ஸரஸ்வதீ சுவாமிகளால் அருளப்பட்டது. மந்த்ரபூர்வம் என்று அழைக்கப்படுவதற்கு காரணம், இந்த ஸ்தோத்ரத்தின் மூலம் வடமொழி. அதில் ஒவ்வொரு அடியின் தொடக்க வார்த்தைகளை ஒன்றாகச் சேர்த்தால் ஹனுமான் மந்த்ரம் கிடைக்கப் பெறும். அவ்வாறு கிடைக்குப் பெறும் மந்திரம் - " ஓம் நமோ பகவத் ஆஞ்சநேயாய மஹாபலாய ஸ்வாஹா" (சமஸ்கிருதத்தில் - )

என்னால் முடிந்தவரை விளக்கவுரை:

1. வாயுவின் மகனான ஆஞ்சநேயரை வணங்குகிறேன். அவர் நினைத்த மாத்திரத்தில் வேண்டும் உருவை எடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர். அவர் பக்தர்களின் கஷ்டங்களையும், துக்கத்தையும் நீக்கக் கூடியவர். சீதாதேவியின் துக்கத்தை நீக்கியவர். அசோக வனத்தை அழித்து,  லங்கா நகரத்தை எரித்தவர். பேச்சு திறமை வாய்ந்தவர். பராக்கிரமசாலியான ராமதூத அனுமானை வணங்குகிறேன். (1-2)

2. வாயு பகவானை தோற்கடிக்கக் கூடிய வேகத்தில் பறக்கும் சக்தி பெற்றவர். மனோ வேகத்தில் பறக்கக்கூடியவர். சஞ்சீவினி  பர்வதத்தை கொணர்ந்து இளையபிரான் என்று அன்போடு அழைக்கப்பெறும் இலட்சுமணனின் உயிரை காப்பாற்றியவர். வானரங்களின் தலைவர். பஞ்சேந்திரியங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். காடுகளில் வசிப்பவர். ஞானம் மிக்கவர். சுக்ரீவ வானர சேனையின் தளபதி. அத்தகைய பராக்கிரமசாலியான அஞ்சனா தேவியின் மகனான அனுமானை வணங்குகிறன். (3-4)

3. மரண பயத்தை அழித்து பிறப்பு இறப்பு என்னும் மாயச்சக்கரத்திலிருந்து விடுவிக்கக்கூடிய சக்தி பெற்றவர். சங்கடங்களை நீக்கக்கூடியவர். ராமபிரானின் அன்புக்கு பாத்திரமான பக்தர். பூத, பிரேத, பிசாசுகளினால் ஏற்படும் பயத்தை அழிக்கக்கூடியவர். யக்ஷ, அசுர, சிங்கம், பாம்பு மற்றும் இதர விஷ ஜந்து பயங்களிலிருந்தும் விடுதலை அழிப்பவர். அத்தகைய பராக்கிரமசாலியான வானரரூபம் கொண்ட அனுமானை வணங்குகிறேன். (5-6)

4. மஹாசமுத்திரத்தை ஒரு தாவலில் கடந்தவர். பராக்கிரம சக்தியும் ஆற்றலும் பெற்றவர். இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற உடலை கொண்டவர். அத்தகைய பராக்கிரமசாலியான அனுமானை வணங்குகிறேன். ஓ ! ஆஞ்சநேயா, தயைகூர்ந்து என்னை காத்து அருள்வீர். (7-7.5)

5. ஓ! அசுரர்களுக்கு யமனாக விளங்குபவரே!!, தாங்கள் என் எதிரிகளை அழித்து வீரத்தையும் வெற்றியையும் அருள்வீர். (8-8.5)

6. இந்த ஸ்தோத்ரத்தை யார் ஒருவர் தன்னை நம்பியுள்ளவர்களின் நலனுக்காக பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள் ஆவார்கள். அவர்களை வெல்ல யாராலும் இயலாது. (9).

|| JAI SRI RAM JAI JAI JAI SRI HANUMAN JAI JAI HANUMAN JAI HANUMAN ||

இதை தவிர பதிவில் உள்ள ஹனுமான் ஸ்தோத்ரங்கள்
ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்   click here
யந்த்ரோத்தாரக ஹனுமான் ஸ்தவம் Click here
ஆபத்துத்தாரண ஹனுமான் ஸ்தோத்ரம்  Click here
வித்தியாசமான ஹனுமான் வழிபாடு 
Click here

No comments:

Post a Comment