Wednesday, June 13, 2012

Gopika Geetham - கோபிகா கீதம்

கோபிகா கீதம்
(உரை: சேங்காலிபுரம் ப்ரஹ்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்)

ஜயதி தேsதிகம் க்ருஷ்ண ஜன்மனா வ்ரஜ:
ஸ்ரயத இந்திரா க்ருஷ்ண ஸஸ்வதத்ர ஹி !
தயித த்ருஸ்யதாம் க்ருஷ்ண திக்ஷூ தாவகா:
த்வயி த்ருதாஸவ: க்ருஷ்ண த்வாம் விசின்வதே !!

ஓ க்ருஷ்ணா !  தங்கள் பிறப்பினால் ஸ்ரீமஹாலக்ஷ்மி எப்போதும் எங்கள் இடைச்சேரியில் வசிக்கிறாள். அதனால் கோகுலமானது வைகுண்டத்திற்கு மேல் அதிகமாக பிரகாசிக்கிறது. உம்மிடத்தில் உயிரை வைத்துத் திக்குகளில் தேடும் எங்களைப் பார்க்க வேண்டும்.

ஸரதுதாஸயே க்ருஷ்ண ஸாதுஜாதஸத்
ஸரஸிஜோதர க்ருஷ்ண ஸ்ரீமுஷா த்ருஸா !
ஸூரதநாத தே க்ருஷ்ண அஸூல்கதாஸிகா:
வரத நிக்நதோ க்ருஷ்ண நேஹ கிம் வத: !!

ஸம்போகபதியான ஹே க்ருஷ்ணா ! சரத்கால ஓடையில் நன்கு அழகாக மலர்ந்த தாமரைப் புஷ்பத்தின் நடுவிலுள்ள ஸ்ரீயை திருடும் கண்ணினால் சம்பளமில்லாத வேலைக்காரிகளான எங்களைக் கொல்லுவதானது ஹே வரதா ! இது வதமல்லவா !

விஷஜலாப்யயாத் க்ருஷ்ண வ்யாளராக்ஷஸாத்
வர்ஷமாருதாத் க்ருஷ்ண வைத்யுதானலாத் !
வ்ருஷமயாத்மஜாத் க்ருஷ்ண விஸ்வதோ பயாத்
ருஷப தே வயம் க்ருஷ்ண ரக்ஷிதா முஹூ: !!

ச்ரேஷ்டரான ஹே க்ருஷ்ணா ! காளியனின் விஷ ஜலத்தினால் ஏற்பட்ட மரணத்திலிருந்தும், அகாஸூரனிடத்திலிருந்தும், மழை, காற்று, இடி இவைகளிலிருந்தும், அரிஷ்டாசுரன், மயன், வ்யோமாசுரன் இவர்களிடத்திலிருந்தும் இன்னும் எல்லாப் பயத்திலிருந்தும், எங்களை அடிக்கடி காப்பாற்றி விட்டு இப்பொழுது கைவிடக் கூடாதென்று பிரார்த்திக்கின்றனர்.

ந கலு கோபிகா க்ருஷ்ண நந்தனோ பவான்
அகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக் !
விகனஸார்த்திதோ க்ருஷ்ண விஸ்வகுப்தயே
ஸக உதேயிவான் க்ருஷ்ண ஸாத்வதாம் குலே !!

உலக ரக்ஷணத்திற்காக அவதரித்த நீர் பக்தர்களான  எங்களைக் கைவிடக் கூடாதென்று பிரார்த்திக்கின்றனர். ஹே க்ருஷ்ண !  நீர் இடைச்சியான யசோதையின் பிள்ளை அல்ல. எல்லா ஜீவர்களுக்கும் உள்ளிருக்கும் அந்தர்யாமி (புத்தி சாக்ஷி) பிரும்மாவினால் ப்ராத்திக்கப்பட்டு உலக ரக்ஷணத்திற்காக யது குலத்தில் ஏ தோழனே !  நீர் அவதரித்திருக்கிறீர்.

விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே
சரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர்பயாத்
கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்
ஸிரஸி தேஹி ந: க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம் !!

ஹே யதுச்ரேஷ்டா ! ஹே காந்தா ! ஸம்ஸார பயத்தினால் உமது சரணத்தில் சரணமடைந்த பக்தர்களுக்கு அபயப்ரதானம் செய்கிறதும், அபீஷ்டத்திதை கொடுக்கிறதும், ஸ்ரீமகாலட்சுமியின் கையைப் பிடித்ததுமான உமது தாமரை போன்ற கையை எங்கள் சிரஸில் வைக்க வேண்டும்.

வ்ரஜஜனார்திஹன் க்ருஷ்ண வீர யோஷிதாம்
நிஜஜன்ஸ்மய க்ருஷ்ண த்வம்ஸநஸ்மித !
பஜ ஸகே பவத் க்ருஷ்ண கிங்கரீ: ஸ்ம நோ
ஜலருஹானனம் க்ருஷ்ண சாரு தர்ஸய !!

நந்த கோகுலத்திலுள்ள ஜனங்களின் மனக்கவலைகளைப் போக்குகிறவரும், வீரனும், தோழனும், சொந்த ஜனங்களின் கர்வத்தைப் போக்கும் புன்சிரிப்புள்ளவருமான ஹே க்ருஷ்ணா! உமது வேலைக்காரிகளான எங்களிடம் நிச்சயம் வரவேண்டும். பத்மம் போன்ற அழகிய முகத்தை முதலில் ஸ்திரீகளான எங்களுக்குக் காண்பிக்க வேண்டும்.

ப்ரணத்தேஹினாம் க்ருஷ்ண பாபகர்ஸனம்
த்ருணசரானுகம் க்ருஷ்ண ஸ்ரீநிகேதனம்
பணிபணார்பிதம் க்ருஷ்ண தே பதாம்புஜம்
க்ருணு குசேஷூந: க்ருஷ்ண ச்ருந்தி ஹ்ருச்சயம் !!

எந்த ஜாதியாயிருந்தாலும் தன்னை நமஸ்கரிக்கிற பிராணிகளுடைய பாபத்தைப் போக்குகிறதும், பசுக்களுடன் கூட செல்லுகிறதும், மஹாலட்சுமிக்கு இருப்பிடமும், காளியனின் சிரஸ்ஸூக்களில் வைக்கப்பட்டதுமான உமது பாதகமலத்தை எங்கள் ஸ்தனங்களில் வைத்து மனத்தை ஆச்ரயித்த தாபத்தைப் போக்க வேண்டும்

மதுரயா கிரா க்ருஷ்ண வல்குவாக்யயா
புதமனோக்ஞயா க்ருஷ்ண புஷ்கரேக்ஷண !
விதிகரீரிமா: க்ருஷ்ண வீர முஹ்யதீ:
அதரஸீதுனா க்ருஷ்ண ப்யாயயஸ்வ ந: !!

செந்தாமரைக் கண்ணனான ஹே வீரா ! மதுரமும் அழகிய வாக்யங்களுள்ளதும் வித்வான்களுடைய மனத்தையும் கவரக்கூடியதுமான உமது வார்த்தையினால் மோஹத்தையடைந்த தங்கள் வேலைக்காரிகளான எங்களை அதராம்ருதத்தினால் ஆனந்தப்படுத்த வேண்டும்.

தவ கதாம்ருதம் க்ருஷ்ண தப்தஜீவனம்
கவிபிரீடிதம் க்ருஷ்ண கல்மஷாபஹம் !
ஸ்ரவணமங்களம் க்ருஷ்ண ஸ்ரீமதாததம்
புவிக்ருணந்தி தே க்ருஷ்ண பூரிதா ஜனா: !!

உமது பிரிவினால் எங்களுக்கு மரணம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் புண்ய புருஷர்கள் தங்கள் கதாம்ருதத்தைப் பானம் செய்து வைத்து வஞ்சித்து விட்டனர். தாபத்தை அடைந்தவர்களுக்கு உயிர் அளிப்பதும் வ்யாஸ, சுக, வால்மீகி முதலியவர்களால் கொண்டாடப்பட்டதும், கர்மங்களை போக்கக் கூடியதும் கேட்ட மாத்திரத்தினால் மங்களத்தைக் கொடுக்கக் கூடியதும் அஷ்டைச்வர்யத்தைக் கொடுக்கக் கூடியதுமான உமது கதையாகிற அம்ருதத்தை எவர்கள் சொல்லுகிறார்களோ, அல்லது அனுபவிக்கிறார்களோ அந்த மனிதர்கள் ஜன்மாந்திரத்தில் மஹா தானங்களை செய்தவர்களாயிருக்க வேண்டும் அல்லது மஹா தானங்களின் பலன்களை அடைகின்றனர்.

ப்ரஹஸிதம் ப்ரிய க்ருஷ்ண ப்ரேம விக்ஷணம்
விஹரணம் ச தே க்ருஷ்ண த்யானமங்களம் !
ரஹஸி ஸம்விதோ க்ருஷ்ண யா ஹ்ருதி ஸ்ப்ருஹ:
குஹக நோ மன: க்ருஷ்ண  க்ஷோபயந்தி ஹி !!

ஹே ப்ரியா ! ஹே கபட !  உன்னுடைய மந்தஹாஸமும், ப்ரேமை நிரம்பிய பார்வையும் சிந்தித்தால் மங்களத்தைத் தரும். உமது விளையாட்டும், ஹ்ருதயத்தைத் தொடுகின்ற ரஹஸ்யத்திலுள்ள உமது ஸ்ம்க்ஞைகளும் எங்களுடைய மனதைக் கலக்குகின்றன.

சலஸி யத்வ்ரஜாத் க்ருஷ்ண சாரயன் பஸூன்
நளினஸூந்தரம் க்ருஷ்ண நாத தே பதம் !
ஸிலத்ருணாங்குரை: க்ருஷ்ண ஸீததீதி ந:
கலிலதாம் மன: க்ருஷ்ண காந்த கச்சதி !!

ஹே நாதா ! எப்பொழுது நீர் கோகுலமிருந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு புறப்படுகிறீரோ, அப்பொழுது தாமரை போல் அழகான உமது சரணம், சிறு கற்களாலும், புற்களின் நுனிகளாலும், குத்தப்படுமே என்று எங்கள் மனதானது கலங்குகின்றது.

தினபரிக்ஷயே க்ருஷ்ண நீலகுந்தலை:
வனருஹானனம் க்ருஷ்ண பிப்ரதாவ்ருதம் !
கனரஜஸ்வலம் க்ருஷ்ண தர்ஸயன் முஹூ:
மனஸி ந: ஸ்மரம் க்ருஷ்ண வீர யச்சஸி !!

நீர் சாயங்காலத்தில் கறுத்த முன் நெற்றி மயிரினால் சூழப்பட்டதும், அதிகமான கோதூளியினால் மறைக்கப்பட்டதுமான, தாமரை போன்ற முகத்தைத் தரித்துக் கொண்டும், அதை அடிக்கடி காண்பித்துக் கொண்டும், எங்கள் மனதில் இன்பத்தைக் கொடுக்கிறீர்.

ப்ரணதகாமதம் க்ருஷ்ண பத்மஜார்ச்சிதம்
தரணிமண்டனம் க்ருஷ்ண த்யேயமாபதி !
சரணபங்கஜம் க்ருஷ்ண ஸந்தமம் ச தே
ரமண ந: ஸ்தனேஷூ க்ருஷ்ண அர்பயாதிஹன் !!

மனோ வ்யாதியைப் போக்கும் ஹே ரமண ! பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டதும் ஆபத்காலத்தில் அவசியம் த்யானம் பண்ண வேண்டியதும், ஸேவிக்கும் ஸமயத்திலேயே ஸூகத்தைக் கொடுக்கக் கூடியதுமான உமது சரண பங்கஜத்தை எங்களுடைய ஸ்தனங்களில் வைக்க வேண்டும்.

ஸூரதவர்த்தனம் க்ருஷ்ண  ஸோகநாஸனம்
ஸ்வரிதவேணுனா க்ருஷ்ண ஸூஷ்ட்டு சும்பிதம் !
இதரராகவி க்ருஷ்ண ஸ்மாரணம் ந்ருணாம்
விதர வீர ந: க்ருஷ்ண தேsதராம்ருதம் !!

ஹே வீர ! இன்பத்தை விருத்தி செய்வதும் சோகத்தைப் போக்குவதும், சப்திக்கின்ற வேணுவினால் நன்கு முத்தமிடப்பட்டதும் மனிதர்களுக்கு வேறு ஆசைகளை மறக்கச் செய்வதுமான உமது அதராம்ருதத்தை எங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அடதி யத்பவான் க்ருஷ்ண அன்ஹி கானனம்
த்ருடிர்யுகாயதே க்ருஷ்ண  த்வாமபஸ்யதாம்
குடிலகுந்தலம் க்ருஷ்ண ஸ்ரீமுகம் ச தே
ஜட உதீக்ஷதாம் க்ருஷ்ண பக்ஷ்மக்ருதத்ருஸாம் !!

ஒரு க்ஷணம் உம்மைப் பாராமல் போனால் துக்கமும், பார்த்தால் சுகமும் ஏற்படுவதைக் கண்டு ஸர்வ ஸங்க பரித்யாகம் செய்த ஸன்னியாசிகள் போல், உம்மை வந்து நாங்கள் அடைந்தோம். அப்படிப்பட்ட எங்களைக் கைவிடலாகுமா என்று மிகக்கவலையுடன் பிரார்த்திக்கின்றனர். எப்பொழுது நீர் பிருந்தாவனத்தைக் குறித்துப் போகிறீரோ, அப்பொழுது உம்மைப் பாராத பிராணிகளுக்கு அரை க்ஷணமும்கூட யுகம் போல் ஆகிறது. பிறகு சாயங்காலத்தில் வக்ரமான முன் நெற்றி மயிர்களுடன் கூடியிருக்கும் ஸ்ரீமுகத்தை நிமிர்ந்து பார்க்கின்ற எங்களுடைய கண்களுக்கு இமையைச் செய்த பிரம்மா ஜடமாவார்.

பதிஸூதான்வய க்ருஷ்ண  ப்ராத்ருபாந்தவான்
அதிவிலங்க்ய தே க்ருஷ்ண அந்த்யச்யுதாகதா: !
கதிவிதஸ்தவோத் க்ருஷ்ண கீதமோஹிதா:
கிதவ யோஷித: க்ருஷ்ண கஸ்த்யஜேந்நிஸி !!

ஹே அச்யுத !  புருஷன், குழந்தை, வம்சம், கூடப்பிறந்தவர்கள், பந்துக்கள் இவர்களை மீறி உமது சமீபத்தில் நாங்கள் நல்ல கதி ஏற்படுமென்று வந்துவிட்டோம். உமது கானத்தால் மோஹத்தை அடைந்த ஸ்தீரீகளை, எவன் தான் கைவிடுவான்.

ரஹஸி ஸம்விதம் க்ருஷ்ண ஹ்ருச்சயோதயம்
ப்ரஹஸிதானனம் க்ருஷ்ண ப்ரேமவீக்ஷணம் !
ப்ருஹதுர: ஸ்ரியோ க்ருஷ்ண வீக்ஷ்ய தாம தே
முஹூரதிஸ்ப்ருஹா க்ருஷ்ண  முஹ்யதே மன: !!

இன்பத்தைக் கொடுக்கும் ஏகாந்தத்தில் செய்த உமது ஸங்கேத வார்த்தைகளையும், புன்சிரிப்புள்ள முகத்தையும், பிரியமான பார்வையையும், மஹாலட்சுமிக்கு இருப்பிடமான உமது விரிந்த மார்பையும் நினைத்து எங்கள் மனமானது அதிக ஆவல் கொண்டு அடிக்கடி மோஹத்தை அடைகிறது.

வ்ரஜவநௌகஸாம் க்ருஷ்ண வ்யக்திரங்கதே
வ்ருஜின ஹந்த்ரயலம் க்ருஷ்ண விஸ்வமங்களம் !
த்யஜ மனாக்ச ந: க்ருஷ்ண த்வத்ஸ்ப்ரஹாத்மனாம்
ஸ்வஜனஸ்ருத்ருஜாம் க்ருஷ்ண யந்நிஷூதனம் !!

ஹே அங்கா ! உனது ஸ்வரூபத்தைப் பார்ப்பதானது கோகுலத்திலுள்ள பிராணிகளுக்குப் பாபத்தைப் போக்குகிறதாகவும், உலகுக்கு மிகுந்த மங்களகரமானதுமாக இருக்கிறது. உம்மிடம் ஆசை கொண்ட மனதுள்ளவர்களான எங்களுடைய ஹ்ருதய ரோகங்களுக்கு நிவிருத்தியைத் தருகின்ற மருந்து எதுவோ அதைக் கொஞ்சம் தருவீராக. (அதிக ப்ரேமையினால் அழுது கொண்டு சொல்லுகின்றனர்).

யத்தே ஸூஜாத சரணாம்புருஹம் ஸ்த்னேஷூ
பீதா: ஸனை: ப்ரிய ததீமஹி கர்கஸேஷூ !
தேனாடவீமடஸி தத்வ்யததே ந கிம்ஸ்வித்
கூர்பாதிபிர்ப்ரமதி தீர்பவதாயுஷாம் ந: !!

ஹே அழகுள்ள பிரியனே ! எந்த உமது சரணாரவிந்தத்தைக் கடினங்களான எங்களது ஸ்தனங்களில் வைத்தால் நோகுமோ என்று பயந்து மெள்ள வைத்துக் கொள்ளுவோமோ அப்படிப்பட்ட காலினால் காட்டில் சுற்றுகின்றாயே, சின்ன கற்களினால் அந்தச் சரணம் நோகாதோ என்று தங்களையே உயிராகவுடைய எங்களுடைய புத்தியானது கலங்குகிறது.

இதி கோப்ய: ப்ரகாயந்த்ய: ப்ரலபந்த்யஸ்ச சித்ரதா !
ருருது: ஸூஸ்வரம் ராஜன் க்ருஷ்ண தர்ஸனலாலஸா:

ஸ்ரீசுகாச்சார்யாள் இந்த கோபிகைகளின் பக்தியைக் கண்டு மகிழ்ந்து பரீக்ஷித்தை ஓ ராஜன் ! என்று அழைத்துச் சொல்லுகிறார். இம்மாதிரி கோபிகைகள் நல்ல குரலில் உரத்த கானம் செய்த விசித்ரமாய் புலம்பி ஸ்ரீ கோபாலனைக் காண ஆவல் கொண்டு அழுதார்கள்.

தாஸாமாவிரபூச்ச்சௌரி: ஸ்மயமானமுகாம்புஜ: !
பீதாம்பரதா: ஸ்ரக்வீ ஸாக்ஷான்மன்மத மன்மத: !!

ஸ்ரீ பகவான் அந்த கோபிகைகளுக்கு முன்னிலையில் புன்சிரிப்புடன் கூடிய தாமரை போன்ற முகத்துடனும், பீதாம்பரம் தரித்தும், புஷ்பமாலை அணிந்தும், மன்மதன் கூட ஆசைப்படும் ரூபத்துடனும் ஆவிர்பவித்தார்.

தம் விலோக்யாகதம் ப்ரேஷ்டம் ப்ரீத்யுத்புல்ல த்ருஸோsபலா: !
உத்தஸ்த்துர்யுகபத் ஸர்வாஸ்தன்வ: ப்ராணமிவாகதம்

அங்கு ஆவிர்பவித்த அந்த கோபாலனைக் கண்டு கோபிகைகள் ஸ்ந்தோஷத்தால் மலர்ந்த கண்களை உடையவர்களாய் இருந்து கொண்டு உட்கார்ந்து கானம் செய்த இடத்திலிருந்து ஒரே சமயத்தில் எல்லோருமாக உயிர்வந்த சரீரங்கள் போல் துள்ளி எழுந்தார்கள்.

|| கோபிகா கீதம் முற்றிற்று ||

கோபிகா கீதம் ஆங்கிலத்தில் மிக அற்புதமான விளக்கங்களுடன் காண லிங்க்   Gopika-Geetham in English with Explanation
கோபிகா கீதம் மற்றும் சில பாடல்களின் விளக்கங்களை ஆடியோவிற்கான லிங்க் Class_1-Gopika_Geetham Sloka Explanation mp3


No comments:

Post a Comment