Monday, October 10, 2011

மார்கண்டேய ரிஷி அருளிய ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்


ஸ்ரீ மஹா மிருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்
(இது மார்க்கண்டேயரால் இயற்றப்பட்டது. யமபயம் நீங்கும். துர்ஸ்வப்னம் பலிக்காது. எதிரிகள் நாசமடைவார்கள். குரு மறைவுஸ்தானத்திலிருந்து குரு தசை, குரு புக்தி மோசமாயிருப்பவர்கள் தினமும் இதைப் படிப்பது நல்லது.)

ஸ்ரீ கணேசாய நம: ஓம் அஸ்ய ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ர மந்த்ரஸ்ய ஸ்ரீ மார்கண்டேய ருஷி: | அனுஷ்டுப் சந்த: | ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜயோ தேவதா || கௌரீ சக்தி: | மம ஸர்வாரிஷ்ட ஸமஸ்த ம்ருத்யு ஸாந்த்யர்த்தம் ஸகலைச்வர்ய ப்ராப்த்யர்த்தம் ஜபே விநியோக: | அத த்யானம் ||

1. சந்த்ரார் காக்நி விலோசனம் ஸ்மிதமுகம் பத்மத் வயாந்த ஸ்திதம்
    முத்ராபாஸ்ம்ருகாக்ஷ ஸூத்ர விலஸத் பாணிம் ஹிமாம் ஸூப்ரபம்
    கோடீந்து ப்ரகலத் ஸூதாப்லுததனும் ஹாராதி பூஷோஜ்வலம்
    காந்தம் விஸ்வ விமோஹனம் பஸூபதிம் ம்ருத்யுஞ்ஜயம் பாவயேத்

   (சந்திரன், சூரியன்,  அக்னி இவர்களை விழிகளாகக் கொண்டவனும், மந்தகாசமான வதனம் உடையவனும், இரண்டு தாமரை மலர்களில் அமர்ந்தவனும், சின்முத்திரை, பாசம், மான், ருத்ராட்ச மாலை இவைகளால் பிரகாசிக்கின்ற கைகளை உடையவனும், சந்திரனைப் போன்ற ஒளி படைத்தவனும், கோடி சந்திர மண்டலங்களிலிருந்து பெருகுகின்ற அமிர்த தாரைகளால் நனைந்திருப்பவனும், முத்தாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், அழகனும், உலகங்களை மோகிக்கஸ் செய்பவனும், பசுபதியும், காலனை ஜெயித்தவனுமான பரமசிவனைத் தியானிக்க வேண்டும்.)

2.  ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்ட உமாபதிம்
     நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

    (பாபம் செய்தவர்களுக்கு துக்கத்தைக் கொடுப்பவனும், அஞ்ஞானத்தை அழிப்பவனும், அழிவற்றவனும், கருநீலமான கழுத்தை உடையவனும், உமா தேவியின் மணாளனுமான மகாதேவனை சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய  முடியும்? )

3. காலகண்டம் கால மூர்த்திம் காலஜ்ஞம் கால நாசனம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

   (நஞ்சை கழுத்தில் வைத்திருப்பவனும், கால ரூபியும், காலத்தை உணர்த்துபவனும், யமனை சம்கரித்தவனுமான தேவ தேவனை நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய  முடியும்? )
  
4.  நீலகண்ட விரூபாக்ஷம் நிர்மலம் விமல ப்ரபம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

    (நீலமான கழுத்தை உடையவனும், மூன்று கண்களைக் கொண்டவனும், நிர்மலனும், சுத்தமான காந்தி உடையவனுமான    தேவனை சிரசு பூமியில் பட நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய முடியும்.? )

5. வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(வாமதேவனும் மகாதேவனும் உலகங்களை ரட்சிப்பவனும், எல்லா உலகங்களுக்கும் குருவுமான தேவனை சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கின்றேன். எங்களை யமன் என்ன செய்ய முடியும். ? )
  
6. தேவ தேவம் ஜகன்னாதம் தேவேஸம் வ்ருஷபத்வஜம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(தேவர்களுக்கெல்லாம் தெய்வமும், ஜகங்களில் தலைவனும்,  தேவர்களால் பூஜிக்கப்படுபவனும், விருஷக் கொடி உடையவனுமான ஈசனைத் தலையால் நமஸ்கரிக்கின்றேன். எங்களைக் காலன் என்ன செய்ய முடியும் ? )

7. கங்காதரம் மஹாதேவம் ஸர்வாபரண பூஷிதம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(சிரசில் கங்கையைத் தாங்கியவனும், மகாதேவனும், சகலவிதமான ஆபரணங்களையும் அணிந்து ஜ்வலிப்பவனும் (பார்வதி, மீனாட்சி திருமண சமயங்களில்) ஆன தேவர் தலைவனை நமஸ்கரிக்கும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும் ? )

8. அநாத: பரமானந்தம் கைவல்ய பததாயினம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(காலங்களுக்கு அப்பாற்பட்ட பரமானந்த வடிவமும்,  மோட்சத்தைத் தரக்கூடியவருமான பரமேஸ்வரனை நமஸ்கரிக்கும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்)

9. ஸ்வர்கா பவர்கதாதாரம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(சொர்க்க வாசத்தையும், முக்தியையும் கொடுக்கின்றவரும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்கின்றவருமான தேவாதி தேவனைத் தஞ்சமெனக் கொண்டவர்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்.? )

10. உத்பத்தி ஸ்திதி ஸ்ம்ஹார கர்த்தா ரஞ்சேஸ்வரம் குரும்
   நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(பிறப்பு, வளர்ப்பு, மரணம் ஆகியவற்றை நடத்துகின்றவனும், ஐச்வர்யத்தை உடையவரும், குருவான தட்சிணாமூர்த்தியானவனுமான ஈஸ்வரனைப் பணியும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்.? )

11. மார்கண்டேய க்ருதம் ஸ்தோத்ரம்ய: படேத் ஸிவ ஸந் நிதௌ
      தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி நாக்னி ஸௌரபயம் க்வசித்

(மார்கண்டேயரால் செய்யப்பட்ட இந்த ஸ்லோகத்தை சிவசன்னதியில் ஏகாக்ர சிந்தையுடன் படிக்கிறவர் குடும்பத்தில் அகால மரணம் சம்பவிக்காது. நெருப்பு, கள்வர்கள் என்ற சம்சார துக்கங்களும் ஏற்படாது.)

12. ஸதா வர்த்தம் ப்ரகர்த்தவ்யம் ஸங்கடே கஷ்ட நாசனம்
      ஸூசிர்பூத்வா படேத் ஸ்தோத்ரம் ஸர்வஸித்தி ப்ரதாயகம்

(தாங்க முடியாத  அபாய காலத்தில் நூறு முறை படித்தால் ஆபத்து நீங்கி விடும். மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும். இடையூறு ஏற்படும் காரியங்களும் தடை நீங்கிப் பூரணமாகும்.)

13.  ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ த்ராஹிமாம் ஸரணாகதம்
      ஜன்ம ம்ருத்யு ஜரா ரோகை: பீடிதம் கர்ம பந்தனை

(ஓ, யமனை ஜெயித்தவனே !  மஹா தேவனே ! கர்மாவின் விளைவுகளான பிறப்பு, வியாதி, முதுமை,  இறப்பு இவைகளில் சிக்கித் தவிக்கும் என்னை, உன்னைச் சரணமடைந்த காரணத்திற்காகவாவது காத்தருள வேண்டும்.)

14.  தாவகஸ்த்வத் கத்ப்ராண ஸ்த்வச் சித்தோஹம் ஸதாம்ருட
      இதி விஞ்ஞாப்ய தேவேஸம் த்ரியம்ப காக்யம் மனும் ஜபேத்

(சுகத்தை அளிப்பவரே ! நான் எனது உயிரையும், மனதையும் உங்களிடம் கொடுத்துவிட்டேன். "நான் உங்களது சொந்தம்" எனக் கூறி " ஓம் நமசிவாய" என முடிந்தவரை ஜபிக்க வேண்டும்.

15.  நம: சிவாய ஸாம்பாய ஹராய பரமாத்மனே
      ப்ரண தக்லேஸ நாஸாய யோகினாம் பதயே நம:

(தேவிக்குப் பாதி உடலைத் தந்தவனும், பாபங்களை அழிப்பவனும், சரணமடைந்தவர்களின் மனக் கவலையைப் போக்குகின்றவனும்,  ஞானிகளுக்குப் பதியுமான  பரமேஸ்வரனை நமஸ்கரிக்கின்றேன்.)

No comments:

Post a Comment