விஜயதசமி ..
விஜயதசமி அன்று எதைத்தொடங்கினாலும் அது வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. இதை நான் எனது முதல் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நண்பரின் தூண்டுகோலில் விஜயதசமி அன்று எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஆரம்பித்து,இதுவரை 88 பதிவுகளுடன் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்.

இரண்டு வருடங்களில் 88 பதிவுகள் என்பது என்னிடம் ஒரு சோம்பல் ஏற்பட்டு இருக்கிறது என்று காண்பிக்கிறது. மேலும் இதுவரை கிட்டதட்ட 4000 பேர் விசிட் செய்திருந்தாலும் பின்னூட்டம் என்பது அரிதாகவே உள்ளது. ஒரு வலைப்பூவிற்கு பின்னூட்டங்கள் அதன் நிறை குறைகளையும், மற்றும் எதிர்பார்ப்புகளையும் அறிவிக்கும் மீடியம் ஆக இருக்கிறது.
இந்த வெற்றித்திருநாளில் வாசகர்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான விஜயதசமி வாழ்த்துக்கள். இத்திருநாளின் நாயகி துர்க்கா தேவியின் சிறப்பருளால் எல்லாவிதமான வளங்களும் உங்கள் இல்லத்தில் பெருகட்டும்.
நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment