Saturday, July 16, 2011

பத்ம புராணத்தில் பிருஹஸ்பதியால் செய்யப்பட்ட ஸரஸ்வதி ஸ்தோத்திரம்

பத்ம புராணத்தில் பிருஹஸ்பதியால் செய்யப்பட்ட ஸரஸ்வதி ஸ்தோத்திரம்
வித்யாலாபத்தையும், வாக்சாமர்த்தியத்தையும் ஐஸ்வர்யத்தையும், ராஜ ஸம்மானத்தையும் கொடுக்கும்

ஸரஸ்வதீம் நவஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்திதாம்                  |
கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரயாஸ்தபதாம்           ||

சேதனர்களின் ஹிருதயத்தில் இருப்பவளாயும், பிரம்மாவின் கண்டத்தில் இருப்பவளாயும், எப்பொழுதும் சந்திரனுக்கு ப்ரியமுள்ளவளாயும், பிரகாசிக்கும் ஸ்ரீ சரஸ்வதீ தேவியை நமஸ்கரிக்கின்றேன்.

மதிதாம் வரதாம் ஸூத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்                     |
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸ காரிணீம்        ||

ஸூப்ரகாஸாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்                     |
ஸூக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸூபாங்காம் ஸோபனப்ரதாம்   ||

பத்மோபவிஷ்டாம் குண்டலீனீம் ஸூக்லவர்ணாம் மனோரமாம்       |
ஆதித்யமண்டலமே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்                      ||

நல்லறிவைக் கொடுப்பவளாயும், உயர்ந்தவைகளைக் கொடுப்பவளாயும், பரிசுத்தையாயும், கையில் வீணாவாத்யத்துடன் அபீஷ்டங்களை கொடுப்பவளாயும், ஐம், ஐம், ஹ்ரீம், ஹ்ராம் என்ற மந்திரத்தில் ப்ரியமுள்ளவளாயும், குத்ஸித புத்தி உள்ளவர்களை நாசம் செய்பவளாயும், நல்ல ப்ரகாசத்துடன் கூடியவளாயும், யாதொரு பிடிப்பில்லாதவளாயும், அஞ்ஞானமாகிற இருட்டைப் போக்கிறவளாயும், வெண்மையாயும், மோக்ஷ புருஷார்த்தத்தை கொடுப்பவளாயும், மிக்க அழகியவளாயும், சோபமான அங்கங்களோடு கூடியவளாயும், மங்களத்தைக் கொடுப்பவளாயும், தாமரையில் இருப்பவளாயும், அழகிய கர்ணாபரணத்தோடு கூடியவளாயும், வெண்மை நிறமுள்ளவளாயும், மனதிற்கு ஸந்தோஷத்தை அளிப்பவளாயும், ஸூர்ய மண்டலத்தில் இருப்பவளாயும் ஸ்ரீ விஷ்ணுவுக்கு ப்ரியையாயும் உள்ள ஸரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கின்றேன்.  (2 - 4)

இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா                       |
ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸரதிந்து ஸமர்ரபாம்                             ||

இம்மாதிரி ஒரு மாத காலம் மகாத்மாவான ஸ்ரீ ப்ருஹஸ்பதி பகவானால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட சரத்கால சந்திரனுக்கொப்பான காந்தியோடு கூடிய ஸ்ரீ வாக்தேவியானவள் தன்னை நிஜரூபத்துடன் காக்ஷி அளித்தாள்

ஸரஸ்வத்யுவாச
வ்ரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸிவர்த்ததே

ப்ருஹஸ்பதி:
வரதா யதி மே தேவி ஸம்யக்ஞானம் ப்ரயச்ச மே

ஸரஸ்வதீ
இதம் தே நிர்மலம் க்ஞானம் அக்ஞான திமிராபஹம்
ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தௌதி ஸம்யக் வேதவிதோ நர:

ஸ்ரீ ஸரஸ்வதி கூறுவதாவது:
உன்னுடைய மனதில் இருக்கும் அபீஷ்டத்தை வேண்டிக்கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

ஸ்ரீ ப்ரஹஸ்பதி பிரார்த்திப்பதாவது
என்னுடைய மனோரதத்தைப் பூர்த்தி செய்யக் கூடிய ஹே தேவி ! எனக்கு நல்ல ஞானத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.

லபதே பரமம் க்ஞானம் மம துல்ய பராக்ரமம் ! 
திரிஸந்த்யம் ய: படேந்நித்யம் யுஸ்த்விதம்
ஜபதே ஸதா தேஷாம் கண்டே ஸதா வாஸம்
கரிஷ்யாமி ந ஸம்ஸய:

ஸரஸ்வதியின் அனுக்கிரஹம்
அஞ்ஞானமாகிற இருளைப் போக்கக்கூடிய ஸ்வச்சமான ஞானத்தை உனக்குக் கொடுத்தேன். நான்கு வேதம் அறிந்தவன்.
இந்த ஸ்தோத்திரத்தால் என்னை நன்கு ஸ்துதி செய்தால் என் ஞானத்திற்கு ஒப்பான பரம உத்தம ஞானத்தை அடைகிறான். ப்ரதி தினம் மூன்று காலங்களிலும் இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் செய்கிறவர்களின் கண்ட தேசத்தில் நான் ஸம்சயமின்றி வாஸம் செய்கிறேன்.

No comments:

Post a Comment