Tuesday, April 19, 2011

ஸ்ரீ ஆர்த்திஹர நாராயணாஷ்டகம்


ஸ்ரீ ஆர்த்திஹர நாராயணாஷ்டகம்

வர்த்ஸல்யாதபயப்ரதானஸமயா தார்தார்திநிர்வாபணாத்
ஒளதார்யாதகஷோணாதகணித ச்ரேய: பதப்ராபணாத் |
ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஜகதாமேதேSபவன்ஸாக்ஷிண:
ப்ரஹ்லாதச்ச விபீஷணச்ச கரிராட் பாஞ்சல்யஹல்யா த்ருவ: ||

அன்பாலும் அபயம் என்ற ப்ரதிஜ்ஞையாலும் கவலையடைந்தவர்களின் கஷ்டத்தைப் போக்குவதாலும் மிக்க கொடையாளியாய் இருப்பதாலும் பாபத்தைப் போக்குவதாலும் மிகச் சிறந்த பதவியை அளிப்பதாலும், உலகில் ஸ்ரீ லக்ஷ்மீபதியான ஸ்ரீ நாராயணன் ஒருவனே ஸேவிக்கத் தகுந்தவன் என்பதற்கு பிரஹ்லாதன், விபீஷணன், கஜேந்திரன், திரௌபதி, அஹல்யை, துருவன் இவர்களே ஸாக்ஷிகளாக உள்ளனர்.

ப்ரஹ்லாதாஸ்தி யதீச்வரோ வத ஹரி: ஸர்வத்ர மே தர்சய
ஸ்தம்பே சைவமிதி ப்ருவன் தமஸூரம் தத்ராவிராஸீத்த்ரி:  |
வக்ஷஸ்தஸ்ய விதாரயன் நிஜநகைர் வாத்ஸல்யமாபாதயன்
ஆர்த்தத்ராணபராயண: ஸ: பகவான் நாராயணோ மே கதி:   ||

'ஒ ப்ரஹ்லாத !  ஹரியான நாராயணன் எங்கும் இருப்பானேயாகில் இந்தத் தூணில் இருக்கிறானா ? சொல். எனக்குக் காட்டுவாயாக " என்று அசுரன் கூறியதும் அந்தத் தூணில் ஸ்ரீவிஷ்ணு (நரசிம்ம மூர்த்தியாய்) அவதரித்து அந்த ஹிரண்ய கசிபுவின் மார்பைப் பிளந்து பிரஹ்லாதனிடத்தில் அன்பைக் காட்டியவரும் கவலை கொண்டவர்களை ரக்ஷிக்க மிக வேகம் கொண்டவரும் பகவானுமான ஸ்ரீ நாராயணனே எனக்கு கதி.

ஸ்ரீ ராமசந்திர விபீஷணோ S ய மனகோ ரக்ஷோபயாதாகத:
ஸூக்ரீவானய பாலயைனமதுனா பௌலஸ்த்யமேவாகதம் !
இத்யுக்த்வா S பயமஸ்ய ஸர்வவிகிதம் யோ ராகவோ தத்தவான்
ஆர்த்தத்ராணபராயண: ஸ பகவான் நாராயணோ மே கதி:    ||

' ஹே ஸ்ரீ ராமா ! குற்றமற்ற இந்த விபீஷணன் ராவணனிடத்தில் பயம் கொண்டு இங்கு வந்துள்ளான். தாங்கள் காக்க வேண்டும்.' என்று கூறிய சுக்ரீவனைப் பார்த்து ஸ்ரீ ராமன் 'ஹே சுக்ரீவ! ராவணனே வந்திருந்தாலும் அவனை அழைத்து வா' என்று கூறி எந்த ராகவன் யாவரும் அறியும்படி, அபயம் அளித்தாரோ, கவலை கொண்டவர்களை ரக்ஷிக்க மிக வேகம் கொண்டவரும் பகவானுமான அந்த ஸ்ரீ நாராயணனே எனக்குக் கதி.

நக்ரத்ரஸ்தபதம் ஸமுத்ருதகரம் ப்ரம்மாதயோ போ ஸூரா:
பால்யந்தாமிதி தீனவாக்யகரிணம் தேவேஷ்வசக்தேஷூ ய: |
மாபைஷீரிதி யஸ்ய நக்ரஹனனே சக்ராயுத: ஸ்ரீதர :
ஆர்த்தத்ராண பராயண: ஸ பகவான் நாராயணோ மே கதி:   ||

முதலையால் பிடிக்கப்பட்ட கால்களை உடையவனும் உயரே தூக்கப்பட்ட கையை உடையவனும் ' ஒ! பிரம்மா முதலிய தேவர்களே என்னைக் காப்பாற்ற வேண்டும் ' என்று மிக தைன்யமாக கூறுகின்றவனுமான கஜேந்திரனை ரக்ஷிக்க தேவர்கள் சக்தியற்றவர்களாக ஆனபொழுது எந்த கஜேந்திரனுடைய காலைப்பிடித்த முதலையைக் கொல்லுவதற்காக ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் சக்ராயுதத்தைக் கையில் தரித்துக் கொண்டு 'பயப்படாதே!' எனக் கூறிக் கொண்டு வந்தாரோ அப்படிப்பட்ட ஆர்த்தர்களைக் காக்கும் பகவானான ஸ்ரீ நாராயணனே எனக்குக் கதி.

போ க்ருஷ்ணாச்யுத! போ க்ருபாலய! ஹரே போ பாண்டவானாம் ஸகே
க்வாஸி ! க்வாஸி ! ஸூயோதனாதபஹ்ருதாம் போ ரக்ஷ ! மாமாதூராம் !
இத்யுக்தோ S க்ஷய வஸ்த்ர ஸம்ப்ருததனும் யோ பாலயத் த்ரௌபதீம்
ஆர்த்தத்ராண பராயண: ஸ பகவான் நாராயணோ மே கதி:   ||

'ஒ கிருஷ்ணா ! ஒ அச்யுத ! ஒ கருணைக்கு இருப்பிடமே ! ஹரே ! ஒ பாண்டவர்களுக்குத் தோழனே ! தாங்கள் எங்கு இருக்கிறீர்கள்? எங்கே இருக்கிறீர்கள்? துர்யோதனனால் சபையில் இழுக்கப்பட்டு துயரமடைந்த என்னைக் காக்க வேண்டும் ' இவ்விதம் அழைக்கப்பட்ட எவர் திரௌபதியை நிறைந்த வஸ்திரங்களுள்ளவளாகச் செய்து காப்பாற்றினாரோ அப்படிப்பட்ட ஸ்ரீ பகவான் என்னைக் காக்கட்டும்.

யத்பாதாப்ஜநகோதகம் த்ரிஜகதாம் பாபௌகவித்வம்ஸனம்
யன்நாமாம்ருதபூரகம் ச பிபதாம் ஸம்ஸாரஸந்தாரகம்    |
பாஷாணோ S பி யதங்க்ரிபத்ம ரஜஸா சாபான்முனேர் மோசித:
ஆர்த்தத்ராண பராயண: ஸ பகவான் நாராயணோ மே கதி:   ||

எவனுடைய சரணகமலத்தின் நக ஜலமானது மூவுலகத்தினுடைய பாபக் குவியல்களை அடியோடு நாசமாக்குகின்றதோ எந்த பகவன் நாமாம்ருத் பிரவாஹத்தைப் பானம் செய்கிறவர்களுக்கு ஜனன மரண துக்கம் விலகுமோ கௌதம முனியின் சாபத்தால் கல்லாக  இருந்த அகல்யையானவள் ராமாவதாரம் செய்த எந்த பகவானுடைய பாத தூளியால் சாபத்திலிருந்து விடுபட்டாளோ அப்படிப்பட்ட ஸ்ரீ பகவான் என்னைக் காக்கட்டும்.

பித்ரா ப்ராதரமுத்தமாஸனகதம் சௌத்தானபாதிர்த்ருவ:
த்ருஷ்ட்வா  தத்ஸமமாருருக்ஷூரத்ருதோ மாத்ராவமானம் கத:  |
யம் கத்வா சரணம் யதாப தபஸா ஹேமாத்ரிஸிம்ஹாஸனம்
ஆர்த்தத்ராண பராயண: ஸ பகவான் நாராயணோ மே கதி:   ||

தகப்பனோடு ஸிம்மாஸனத்தில் அமர்ந்திருந்த தம்பியை உத்தானபாதனின் பிள்ளையான துருவன் கண்டு அவனுடன் தானும் ஸமமாக ஏற ஆசையுள்ளவனாய்  தகப்பனால் எடுக்காமலும் தாயினால் அவமதிக்கப்பட்டும் எவரை சரணமாக அடைந்து ஸ்ரீ பகவானை குறித்து தவம் செய்து எந்த மேருவில் உள்ள துருவ ஸ்தானத்தை அடைந்தானோ அப்படிப்பட்ட ஸ்ரீ பகவான் என்னைக் காக்கட்டும்.

ஆர்த்தா விஷண்ணா: சிதிலாச்ச பீதா: கோரேஷூச வ்யாதிஷூ வர்த்தமானா:  |
ஸங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த து:கா ஸூகினோ பவந்து  ||

மனக்கவலை கொண்டவர்கள், துக்கம் கொண்டவர்கள், சொத்தை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், மிகக் கொடூரமான வியாதியுள்ளவர்கள், "நாராயண" என்ற  சப்தத்தை மாத்திரம் உறக்கச் சொல்லி துக்கங்களிலிருந்து விடுபட்டு ஸூகமுள்ளவர்களாக ஆகிறார்கள்.

||இதி ஸ்ரீ கூரேசஸ்வாமி விரசிதம் ஸ்ரீஆர்த்திஹர நாராயணாஷ்டகம் ஸம்பூர்ணம்||

இதனைப் பாராயணம் செய்வதால் மனக்கவலை, சத்ரு பயம், கடன் முதலிய கஷ்டங்கள் நீங்கி, ஸகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment