Tuesday, February 22, 2011

கணபதி தரிசனம்

கணபதி தரிசனம்

கணபதி, விநாயகர், கணேஷ், ஐந்துகரத்தான், ஆனைமுகத்தோன் என்று பல பெயர்களால் குறிப்பிடப்படும் கணபதியை வணங்காதோர் மிக கம்மி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவர். விநாயகர் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுபவர். என் சிறு வயதிலிருந்தே விநாயகர் மீது பக்தியும், ப்ரியமும் அதிகம்.  விநாயகர் பற்றிய புராணக்கதைகள், அவருடைய திருவிளையாட்டு, அருமை பெருமை என எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் என் எண்ணம்,  இந்தியா மற்றும் வெளி நாட்டில் உள்ள விநாயகர் கோயில்கள், தல புராணங்கள், சிறப்பு அம்சங்கள் முதலியவற்றை ஒரு தொகுப்பாக ஆக்குவது. என் எண்ணத்திற்கேற்ப நான் இன்று விநாயகருக்கு உகந்த மிகவும் விஷேசமான நாளான சங்கடஹர சதுர்த்தி நாளில், அவர் பாதம் பணிந்து பயணத்தை தொடங்கியுள்ளேன்.  வரும் வலைப் பதிவுகளில் ஒவ்வொரு தரிசன அனுபவத்தை பார்ப்போம்.

"சங்கட ஹர சதுர்த்தி " கூக்குள் தேடலில் கிடைத்த வலைத்தளங்களில் சிலவற்றை கீழே காணலாம். மேல் விவரம் அறிய அவ்வலைத்தளங்களுக்கு சென்று பார்க்கவும்.

குறிப்பு:
தங்கள் ஊரில் உள்ள (அல்லது தங்களுக்கு தெரிந்த) விநாயகர் கோயில் பற்றிய விவரங்களை ஒரு கட்டுரையாக்கி முடிந்தால் புகைப்படத்துடன் அனுப்பி வைக்கும் படி இப்பதிவினை படிக்கும் அத்தனை வாசகர்களிடமும் பணிவாக வேண்டிக் கொள்கிறேன். எனது மின் அஞ்சல் முகவரி : kshetrayatraa@gmail.com

No comments:

Post a Comment