Monday, February 14, 2011

பொன் பொழிகள் 50 - Part 5

பொன் பொழிகள் 50 - Part 5

41. நாம் புறக்கணிக்கும் ஒவ்வொரு கடமையும் நாம் தெரிந்து கொள்ளத்தவறிய ஓர் உண்மையைப் புலப்படுத்தக்கூடியது.

42. பூட்டுகள் தயாரிக்கப்படும்போதே  சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரச்னை உருவாகும் போதும் தீர்வும் உருவாகி விடுகிறது.

43. உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் இடைஞ்சலைக் கண்டால் உடனே ஒதுங்கி விடாதீர்கள். ஒவ்வொரு தடையும் இன்னொரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தித்தர வழிகாட்டுகிறது என்று நம்புங்கள். நீங்கள் வெற்றிகரமாக புதுப்புதுக் கற்பனைகளுடன் செயல்பட முடியும்.

44. இறைவன் ஒருவர் தான் முடிவுகளைத் தருபவர். அதை அவரிடம் விட்டு விட்டு எல்லா வேலைகளையும் செய். எப்போதும் வேலை செய்து கொண்டே இரு.

45. உளி படாத கல், சிலை ஆவதில்லை; உழைப்பில்லாமல் கனவு நனவாவதில்லை.

46. இறைவனின் ஆசியைப் பெற எளியோர்களுக்கு சேவை செய்வதே சிறந்த வழி. அவர்களிடம் தாராளமாக நடந்து கொள்ளுங்கள்.

47. மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். மனவலிமை உள்ளவர்கள் சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்கிறார்கள்.

48. நம்பிக்கையும் செயலுமே வாழ்க்கையின் பலமும் நோக்கமும் ஆகும். உறுதியான தெய்வ நம்பிக்கையும், அசையாத காரியச் சிந்தனையும் எக்காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கும்.

49. எந்த மருத்துவ முறைகளாலும் தீர்க்கப்படாத நோய் இறைவனது திருநாமமாகிய மருந்தால் தீர்க்கப்பட்டுவிடும். இறைவனுடைய பேரருளுக்கும் பெருங்கருணைக்கும் பிரார்த்தனை செய்யுங்கள்.

50. ஒரு சிறிய மெழுகுவர்த்தி கூடத் தன்னால் இயன்ற தூரம் வரை ஒளி வீசுகிறது. உங்களது ஒரே ஒரு நல்ல செயல்கூட ஒளி வீசிப் பிரகாசிக்கும்.
 

No comments:

Post a Comment