Sunday, February 13, 2011

பொன் பொழிகள் 50 - Part 4

பொன் பொழிகள் 50 - Part 4

31.  எப்போதும் உயிருடன் இருக்கப்போவதாக நினைத்து வேலை செய். இப்போதே இறக்கப் போவதாக நினைத்து உதவி செய்.

32. நம்மை உயர்த்துவது நாம் செய்யும் செயல் அல்ல. அதைச் செய்வதில் நாம் காட்டும் ஆர்வமே!

33. செயலை விதையுங்கள் - பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள் - குணத்தை விதையுங்கள் - உங்கள் எதிர்காலம் உருவாகும்.

34. கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் விட்ட வாளி தானாக மேலே வராது. அந்தக் கயிற்றைப் பற்றி இழுத்தால் தான் வரும்.

35. பல வேலைகளை விரைவாகச் செய்ய ஒரு வழி - ஒரு சமயத்தில் ஒரு வேலையை மட்டும் செய்வது.

36. குறைகளிலெல்லாம் பெரிய குறை - தன்னிடம் இருக்கும் குறையை அறியாதிருப்பதே.

37. உங்கள் பயங்களை இறைவனிடம் சமர்ப்பித்து விடுங்கள். அவரது அருளை மட்டும் உண்மையின் வழி நடக்க வேண்டுங்கள். அவர் அருளே உங்கள் பயங்களை அழித்து உங்களை தைரியமிக்கவராகவும் வெற்றி வீரராகவும் உருவாக்கும்.

38. தன்னம்பிக்கை தான் வெற்றியின் முதல் ரகசியம். உங்களை நீங்கள் உண்மையில் 'வெற்றிகரமான மனிதன்' என்று நம்ப ஆரம்பிக்கும் போது ஒளி பொருந்திய பாதையில் அடி எடுத்து வைப்பதை அறிவீர்கள்.

39. தன்னம்பிக்கை கொண்டவருக்கு உலகத்தின் எல்லா செல்வங்களும் கைக்கெட்டிய தூரத்தில் உள்ளன.

40. முன்னேற்றத்திற்கான முயற்சிகளின் போது உங்களுக்கு எதிராக எல்லா சம்பவங்களும் நடப்பது போல இருந்தால் சரியான வழிகாட்டும்படி பிரார்த்தனை செய்யுங்கள். மீண்டும் பிரகாசமான பாதையில் முன்னேறிச் செல்வீர்கள்.

No comments:

Post a Comment