பொன் பொழிகள் 50 - Part 3
21. கடவுள் கருணைக்கடலாக இருக்கிறார். அந்தக் கருணைப் பயனை அனுபவிக்க நாம் பயன்படுத்தும் வாளி தான் ரொம்பச் சின்னது.
22. ஒரு பாவத்தை மற்ற மனிதர்கள் மறக்கச் செய்ய பல ஆண்டுகள் கழிவிரக்கம் கொள்ள வேண்டும். ஆனால் கடவுளுக்கு கழிவிரக்கமுள்ள ஒரு துளி கண்ணீர் போதும்.
23. தேவைகள் குறையக் குறையத்தான் தெய்வ நம்பிக்கை வலுப்பெறும்.
24. கடவுளை நேசி; அவர் உன்னுடனேயே தங்கியிருப்பார். கடவுளுக்குப் பணிந்து நட. அவர் தமது ஆழ்ந்த போதனைகளை உனக்குப் புலப்படுத்துவார்.
25. உலகின் ஞானத்தையெல்லாம் பிழித்தெடுத்து இரண்டே சொற்களில் அடக்கிவிடலாம். பொறுத்திரு. நம்பிக்கையுடனிரு.
26. அதிர்ஷ்டத்தில் நிச்சயம் நம்பிக்கை வைக்கலாம். எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அதிர்ஷ்டம் வந்து சேரும்!
27. ஆண்டவன் ஆடையைக் கொடுக்கவில்லைதான். ஆனால், பஞ்சு கொடுத்திருக்கிறார்; நூற்கும் அறிவைத் தந்திருக்கிறார்.
28. கடவுளுக்கு உன் சாதியும் குலமும் அவசியமில்லை; நீ சாதி வேற்றுமை பாராமல் என்ன உதவி செய்திருக்கிறாய் என்பதைத் தான் பார்க்கிறார்.
29. கீழே விழாமலேயே இருப்பதில் பெருமையல்ல. ஆனால் விழுந்த போதெல்லாம் மறுபடி எழுந்து நிற்கிறோமே அதுதான் பெருமை.
30. கடவுள் பறவைக்கு உணவளிக்கிறார்; ஆனால், அதை அதன் கூட்டுக்குள் வைப்பதில்லை.
No comments:
Post a Comment