Thursday, February 24, 2011

28 வ‌ரி இராம‌காதை (சுந்த‌ர‌காண்ட‌ம் ப‌டித்த ப‌ல‌னைத் த‌ரும்)



28 வ‌ரி இராம‌காதை (சுந்த‌ர‌காண்ட‌ம் ப‌டித்த‌ ப‌ல‌னைத் த‌ரும்)
இதை இய‌ற்றிய‌வ‌ர் டாக்ட‌ர். கீதா சுப்பிர‌ம‌ணிய‌ன். 

வில்ல‌து ஏந்தி வ‌ந்தாய்
வ‍ன்ப‌கை த‌ன்னை வென்றாய் !
க‌ல்ல‌து பெண்ணாக‌ச் செய்தாய் !
க‌னிந்த‌தோர் அன்பில் நின்றாய் !
வில்ல‌து வ‌ளைத்து அங்கே
மிதிலையின் ம‌க‌ளை ம‌ண‌ந்தாய் !
சொல்ல‌து ஒன்றே யென்றாய் !
த‌ந்தையின் வாக்கு ஏற்றாய் !
த‌ம்பிக்கு தேச‌ம் த‌ந்தாய் !
தியாக‌மே உருவாயானாய் !
ப‌ஞ்சென‌ பாத‌ம‌மைந்த‌
ந‌ங்கையாம் சீதையுட‌னே
த‌ம்பியான‌ இல‌க்குவ‌ன் தொட‌ர‌
சுடுவ‌ன‌ம் விரும்பிப் புகுந்தாய் !
ராவ‌ண‌ன் க‌வ‌ர்ந்து சென்ற‌
பைந்தொடி சீதை த‌ன்னை
அஞ்ச‌னை புத்ர‌ன் துணையால்
செருவென்று மீட்டு வ‌ந்தாய் !
சிவ‌ன‌வ‌ன் பாத‌ம் தொழுது
சிந்தையில் ம‌கிழ்வு கொண்டு
அயோத்தி மீண்டு வ‌ந்து
ப‌ட்ட‌த்து அர‌ச‌னானாய் !
பார் புக‌ழ் சீதாராமா !
ப‌ரிவுடை ப‌ர‌ந்தாமா !
சீருட‌ன் எம்மைக் காப்பாய் !
சிந்தையைத் தெளிய‌ச் செய்வாய்
கார் பொழி வெள்ள‌ம் போல‌க்
க‌ருணையும் மிகுத்துத் த‌ருவாய் !

ஆதாரம்: தமிழ் இதழில் படித்தது. நினைவுக்கு எட்டின வரை குமுதம் சினேகிதி என்று நினைக்கிறேன். அந்த இதழுக்கு நன்றிகள் பல‌.

No comments:

Post a Comment