ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரியின் அருளை வேண்டும் அர்க்கள ஸ்தோத்திரம்
துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே !
வெல்பவளே, மங்களமானவளே! காளீ ! பத்ரகாளி, மண்டை ஓடு உடையாளே ! துர்க்கையே ! பொறுமை, நன்மை தரித்து பராமளிப்பவளே ! ஸ்வாஹா ! ஸ்வதா எனப்படும் உனக்கு நமஸ்காரம்.
2. ஜயத்வம் தேவி சாமுண்டே ஜய பூதார்த்தி ஹாரிணி
ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
ஹே ! சாமுண்டியே ! ஜீவராசிகளின் துன்பத்தை துடைப்பவளே ! எங்கும் நிறைந்தவளே, காளராத்ரியே ! உனக்கு வணக்கம்.
3 மதுகைடப வித்ராவி விதாத்ரூ வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி
மதுகைடபர்களை விரட்டியவளே ! பிரம்மனுக்கு வரத்தை அளித்தவளே ! வணக்கம். வடிவழகைக் கொடு! வெற்றியைக் கொடு ! புகழைக் கொடு! பகைவர்களை விரட்டு.
4. மஹிஷாஸுர நிர்ணாச விதாத்ரி வரதே நம:
ரக்தபீஜவதே தேவி சண்டமுண்ட விநாசினீ ! (ரூபம் தேஹி)
மஹிஷாசுரனின் அழிவை விதித்தவளே ! வரமளிப்பவளே ! ரக்தபீஜனை வதம் செய்தவளே ! சண்டமுண்டர்களை நாசம் செய்தவளே ! வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக் கொடு. பகைவர்களை விரட்டு.
5. சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி
வந்திதாங்க்ரியுகே தேவி ஸர்வ சௌபாக்யதாயினி (ரூபம் தேஹி)
சும்ப நிசும்பர்களையும் தூம்ராக்ஷஸனையும் கொன்றவளே ! ஸகல சௌபாக்யங்களையும் அளிப்பவளே ! தொழுதற்குரிய இருதாள்களுடையாளே ! வடிவழகைக் கொடு! வெற்றியைக் கொடு: புகழைக் கொடு. பகைவர்களை விரட்டு.
6. அசிந்த்ய ரூபசரிதே ஸர்வசத்ரு விநாசினி
நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே (ரூபம் தேஹி)
எண்ணவொண்ணா உருவமும் செயலும் உடையவளே ! சத்ருக்கள் அனைவரையும் அழிப்பவளே ! எப்போதும் பக்தியுடன் பணிபவர்கள் துயர் துடைப்பவளே ! சண்டிகையே ! வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக்கொடு - பகைவர்களை விரட்டு.
7. ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம்த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித !
தேஹி சௌபாக்யம் ஆரோக்யம் தேஹிமே பரமம் ஸுகம் (ரூபம் தேஹி..)
பக்தி பூர்வமாய் உன்னைத் துதிப்பவரின் பிணியைப் போக்குபவளே ! சண்டிகையே ! நல்லதிர்ஷ்டத்தை அளிப்பவளே ! மேலான உன்னை எவர் பக்தியுடன் அர்ச்சிக்கின்றனரோ அவருக்கு இன்பமளி ! வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக்கொடு - பகைவர்களை விரட்டு.
8. விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை
விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம் (ரூபம் தேஹி....)
பகைவர்களின் நாசத்தைச் செய்வாய். உயர்ந்த வலிமையைத் தருவாய். நன்மையை விதிப்பாய். மேலான செல்வத்தை அளிப்பாய்; தாயே வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக்கொடு - பகைவர்களை விரட்டு.
9. ஸுராஸுர சிரோரத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே
வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ்மீவந்தம் ஜனம் குரு (ரூபம் தேஹி...)
தேவர் அவுணர் முடிமணிகள் உராயும் திருவடியாளே ! அறிவுடையவராகவும், புகழுடையாராகவும் திருவுடையாராகவும் அடியாரைச் செய்வாய். வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக்கொடு - பகைவர்களை விரட்டு.
10. ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணதாயமே
சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேஸ்வரி (ரூபம் தேஹி....)
கொடிய அவுணரின் திமிரை அழித்தவளே ! சண்டிகையே! வணக்கம் ! நான்கு கரமுடையவளே; நான்கு முகமுடைய பிரமனால் துதிக்கப்படுபவளே ! பேரிறைவியே ! வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக்கொடு - பகைவர்களை விரட்டு.
11. க்ருஷ்ணேன ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே
ஹிமாசல ஸுதாநாத பூஜிதே பரமேஸ்வரி (ரூபம் தேஹி...)
எப்போதும் பக்தியுடன் திருமாலால் துதிக்கப்படு பவளே ! பனிமலை மகளின் கணவனால் துதிக்கப்படுபவளே ! பேரிறைவியே ! வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக்கொடு - பகைவர்களை விரட்டு.
12. இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேச்வரி
தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி (ரூபம் தேஹி...)
இந்திராணியின் நாயகனால் ஸத்பாவனையுடன் பூஜிக்கப் படுபவளே ! அசுரர்களின் திமிரை அழித்தவளே ! வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக்கொடு - பகைவர்களை விரட்டு.
13. தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோ தயேம்பிகே !
பத்னீம் மனோரமாம் தேஹி மனோவ்ருத்தானு ஸாரிணீம் (ரூபம் தேஹி..)
பக்த ஜனங்களுக்கு பந்தமற்ற இன்பத்தை அளிப்பவளே ! மனக் குறிப்பறிந்து நடக்கக்கூடிய மனதுக்கினிய மனைவியை அளி ! வடிவழகைக் கொடு. வெற்றியைக் கொடு. புகழைக்கொடு - பகைவர்களை விரட்டு.
14. தாரிணீம் துக்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம் (ரூபம் தேஹி...)
கடக்க முடியாத பாவக்கடலை கடக்க உதவுபவளும் நற்குலத்தில் உதித்தவளுமான பத்னியை அளி.
15. இதம் ஸ்தோத்ரம் படித்வாது மஹாஸ்தோத்ரம் படேன்நர: !
ஸது ஸப்த சதீ ஸங்க்யா வரமாப்னோதி ஸம்பதாம் !!
இந்த ஸ்லோகத்தைப் படிப்பவன் மஹா ஸ்தோத்ரம் படித்தவனாகிறான். எழுநூறு எண்ணிக்கை படிப்பதால் சகல ஸம்பத்துக்களும் அடைகிறான்.
2 comments:
There are several spelling mistakes: Please compare and rectify.
ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
ஜயத்வம் தேவி சாமுண்டே ஜய பூதார்த்தி ஹாரிணி
ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
மதுகைடப வித்ராவி விதாத்ரூ வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி
மஹிஷாஸுர நிர்ணாச விதாத்ரி வரதே நம:
ரக்தபீஜவதே தேவி சண்டமுண்ட விநாசினீ
சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி
வந்திதாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸௌபாக்யதாயினி
அசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு விநாசினி
நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே
ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம்த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:
தேஹி ஸௌபாக்கியம் ஆரோக்யம் தேஹிமே பரமம் ஸுகம்
விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை
விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ஸுராஸுர சிரோரத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே
வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ்மீவந்தம் ஜனம் குரு:
ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணதாயமே
சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேஸ்வரி
க்ருஷ்ணேன ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே
ஹிமாசல ஸுதாநாத பூஜிதே பரமேஸ்வரி
இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேஸ்வரி
தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி
தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோ தயேம்பிகே
பத்னீம் மனோரமாம் தேஹி மனோவ்ருத்தானு ஸாரிணீம்
தாரிணீம் துக்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்
இதம் ஸ்தோத்ரம் படித்வாது மஹாஸ்தோத்ரம் படேன்நர:
ஸது ஸப்த சதீ ஸங்க்யா வரமாப்னோதி ஸம்பதாம்
@unknown,
பதிவில் உள்ள குறைகளை சொன்னதற்கும், அதை திருத்த ஏதுவாக சரியான ஸ்தோத்ரத்தை பின்னுட்டத்தில் அளித்ததற்கும் மிக்க நன்றி. பதிவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்துள்ளேன். நீங்கள் சரி பார்க்கலாம்.
Post a Comment