Sunday, March 7, 2010

அருள்மிகு வெக்காளியம்மன் - பகுதி - 2

அருள்மிகு வெக்காளியம்மன் - பகுதி - 2

வளமுடன் ஒங்கு புகழ் வாழ்வு தர இவ்
உலகி லொருதலம் உண்டோ? தலமுண் (டு)
உறையூர் அதன் பேர் உலகாள் வெக் காளி
இறைவி உகந்த இடம்
இடம் நாடி வந்தோர் இடந்தீரும் போது
தடம் வேறு காணத் தகுமோ? விடமுண்ட
கண்டன் சினங்கொண்ட காலையது நீக்கி நிலை
கொண்டாள் உறையூரில் கூறு
கூறுவார் பக்தர் குறைதீர்ந்த பாங்கினை.
சேருவார் கூட்டமாய்ச் சேவிக்க வாருங்கள்
ஆகும் நலமே அனைத்திலும், ஓடித்தான்
போகும் உமைவிட்டுப் பொய்.
பொய் மருந்தின் பின்னோடிப் போக்குவீர்! கேளுங்கள்
உய் மருந்(து) ஒன்றுண்(டு) உறையூரில் - மெய்யொன்றித்  
தாழ்வுடன் நிறைக்கும் வளம்.

மாதம்              சிறப்பு அபிக்ஷேகம்

சித்திரை          மருக்கொழுந்து - மருவு
வைகாசி          சந்தனம், குங்குமம், பச்சைக்கற்பூரம்,பன்னீர்
ஆனி               மா, பலா, வாழை (முக்கனி)
ஆடி                பால்
ஆவணி           எள்ளுடன் நாட்டுச்சர்க்கரை
புரட்டாசி         அப்பம்
ஐப்பசி             அன்னம்
கார்த்திகை       தீபம்
மார்கழி            பசு நெய்
தை                 தேன்
மாசி                க்ரத கம்பளம்
பங்குனி           பசுந்தயிர்

அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் விழா நாள் தான். இருப்பினும் மாதந்தோறும் சிறப்பு விழாக்களாகக் கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது.
சித்திரை         சித்திரைப் பெருவிழா திருத்தேர் உலா
வைகாசி         கடைசி வெள்ளி - மாம்பழ அபிக்ஷேகம்
ஆனி              மூன்றாம் வெள்ளி - காய்கறி அலங்காரம்
ஆடி                4 வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிக்ஷேக வழிபாடு
ஆவணி           சத சண்டி வேள்வி மற்றும் பெருந்தீப வழிபாடு
புரட்டாசி         நவராத்திரி விழா - அம்பு போடல்
ஐப்பசி            அன்னாபிக்ஷேகம்
கார்த்திகை      தீப விழா சொக்கப்பனை கொளுத்துதல்
மார்கழி           திருப்பள்ளியெழுச்சி வழிபாடு
தை                வெள்ளிக்கிழமைகள் மற்றும் தைப்பூசம் அம்மன் புறப்பாடு
மாசி               கடைசி ஞாயிறு ஏகதின இலட்சார்ச்சனை
பங்குனி         முதல் வெள்ளி மலர் முழுக்கு வழிபாடு மற்றும் சித்திரை பெருவிழா ஆரம்பம்.

பிரார்த்தனைச் சீட்டின் சிறப்பு
" வேண்டும் வரம் தருவாள்" " வெக்காளி துணை வருவாள்"

இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருக்கோயிலில் வழங்கப்படும் பிரார்த்தனைச் சீட்டை வாங்கிக் தங்கள் வேண்டுகோளை எழுதி அம்பாள் திருவடிகளில் வைத்து அம்பாளுக்கு எதிரே உள்ள சூலங்களில் கட்டுகின்றனர். அடியார் குறைகளை அறியாதவளா அம்பாள்?
பிரார்த்தனை நிறைவேறியதும் அடியார்கள் அவள் ஆலயம் வந்து தாங்கள் நேர்ந்து கொண்டதை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

உறையூரில் உள்ள பிற கோயில்கள்
1. 108 திருப்பதிகளில் ஒன்றும் கோழி என்று திருமங்கை ஆழ்வாரால் குறிப்பிடப்பட்டுள்ளதுமான கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்
2. நாயன்மார்களால் பாடப்பெற்ற அ/மி காந்திமதி உடனுறை அய்வண்ண நாதர் திருக்கோயில்
3. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
4. செல்லாண்டியம்மன் திருக்கோயில்
5. குழுமாயி அம்மன் திருக்கோயில்

உறையூரைச் சுற்றிலும் உள்ள முக்கிய திருக்கோயில்கள்
   ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பெற்ற திருத்தலங்கள்
1. திருவரங்கம்
2. உத்தமர் கோயில்
3. திருவெள்ளறை
4. அன்பில்
   
    நாயன்மார்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
1. திருவானைக்கோயில்
2. தாயுமானசுவாமி, உச்சிப்பிள்ளையார் கோயில்
3. உய்யகொண்டான் திருமலை
4. வயலூர்
5. திருஎறும்பியூர்
6. திருநெடுங்களம்
7. திருவாசி
8. திருப்பைஞ்சீலி

   பிரார்த்தனைத் தலங்கள்
1. சமயபுரம்
2. குணசீலம்

மேலும் விவரங்களுக்கு www.vekkaaliammantemple.org 

 Source for above information: திருக்கோயில் தல வரலாறு -  Temple Publication
 

No comments:

Post a Comment