Saturday, January 30, 2010

கோளறு பதிகம்


திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்தர் தேவாரம்


கோளறுபதிகம்

 ஸ்ரீ ஜகத்குரு ஆசார்யாள் வாக்கு
[1962 பிப்ரவரி 5, எட்டு கிரஹங்கள் ஒரே ராசியில் கூடின. அப்போது பிரளயமே ஏற்பட்டு உலகம் அழிந்துவிடும் என்று யாவரும் நடுங்கினர். அவ்வமயம், நடமாடும் தெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ச்ரிமத் சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் "அஞ்சேல் அஞ்சேல்" என்று அபயம் தந்தார்கள்.
"மங்கை பாகனை மனத்துள் வைத்துச் சைவ நாயனமாரில் முதல்வரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் திருவாய்மலர்ந்தருளிய கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்யுங்கள். எந்தக் கிரஹமும் ஒரு துன்பமும் செய்யாது; எட்டுக் கிரஹங்கள் அல்ல; இது போன்ற எண்ணாயிரம் கிரஹங்கள் ஒன்று சேர்ந்தாலும் அவை நல்லவாய் நல்லனவே செய்யும். ஒருவருக்கும் ஒரு துன்பமும் உண்டாகாது" என்று அருளினார்கள். ஆகவே இப்பதிகத்தைப் பாராயணம் செய்வதால் உண்டாகும் பெரும்பயனை நான் கூற வேண்டியதில்லை.
   
வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார‌ வர்க்கு மிகவே.                                                    (1)

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ   டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                     (2)
  
உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                    (3)

மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                   (4)

நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                   (5)

வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                   (6)

செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                   (7)

வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                  (8)

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                  (9)

கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.                                                (10)

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.                                         (11)



2 comments:

malarvizhi said...

wow super. yenakku piditha padal.nanri.

kshetrayatraa said...

hi marlarvizhi,

thanks for your comment. keep visiting

kshetrayaatra

Post a Comment