மாருதி (அ) ஹனுமான் வித்தியாசமான வார வழிபாடு முறைகள்
பால மாருதி - ஞாயிறுக்கிழமை வழிபட - உடல் ஆரோக்கியம், கண் நோய்கள், ராகு கிரக தோஷ பரிகாரம்
" ஸர்வ கல்யாண தாதாரம் குமாரம் ப்ருஹ்ம சாரிணம்
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹே "
பவ்ய மாருதி - எல்லா நாட்களும் - சிவப்பு மலர் வைத்து வழிபாடு - செய்கின்ற தொழிலில் வெற்றி, மனத்துன்பங்கள் நிவர்த்தி
" அஸாத்ய ஸாதக ஸ்வாமி அஸாத்யம் தவகிம்வத
ஸ்ரீ ராமதூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் சாதக ப்ரபோ "
தியான மாருதி - வெள்ளிக்கிழமை - குழந்தைகளுக்கு கல்வி விருத்தி, ஒருமுகப்படுத்தல்
" ப்ரிய மாக்யதே தேனீ த்வாம்து பூய ஸபாச நேய
திஷ்ட யா சீவ ஸீதர்மஞ்ஜே ஜயொமே ப்ரதி க்ருஹயதாம் "
யோக மாருதி - திங்கட்கிழமை - மனத்துன்பம் நீங்கும், சந்திர கிரகத்தின் அருள், மன அமைதி, மனத்துய்மை, குடும்பத்தில் ஏற்படும் குழப்பம் நீங்கும்
" அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ருஹ்ம சாரிணம்
துஷ்ட கிரஹ விநாசம் தம் ஹனூமந்த உபாஸ்மஹே "
" புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் "
பஜன மாருதி - புதன் கிழமை - பாப தோஷம் விலகும்
" ஆஞ்ஜநேய ஆஞ்ஜநேய ஆஞ்ஜநேய பாஹிமாம்
ஹனூமந்த ஹனூமந்த ஹனூமந்த ரக்க்ஷமாம் "
வீர மாருதி - வியாழக்கிழமை - எலுமிச்சை பழ மாலை - நிறைந்த கல்வி அறிவு, செல்வச்செழிப்பு, கைவிட்டுப் போன பொருட்களும் கிடைக்கும்
" ஸர்வ யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருஹமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம், மாருதிம் நமத ராக்ஷ சாந்தகம் "
சஞ்சீவி மாருதி - பிரதோஷ காலம் - கரு நீல மலர்களால் அர்ச்சித்து வடை மாலை சுற்றி வழிபட்டால் வியாதிகள் நீங்கி பூரண ஆரோக்கியம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம் "
பக்த மாருதி - சனிக்கிழமை - நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வன்னி இலைகளால் பூஜித்தால் 71/2 சனி, 8 ம் சனி ஆகியவற்றால் ஏற்படும் இன்னல்கள் தீரும். சகல ஆபத்துகளும் நீங்கி, ஆயுள் விருத்தியாகும்.
" ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமுத்பவ
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே "
No comments:
Post a Comment